Saturday, 24 September 2016

சங்கீதம் 121 :1-8

உனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக உன் கண்களை ஏறெடுத்துப்பார். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து உனக்கு ஒத்தாசை வரும். கர்த்தர் உன் காலைத் தள்ளாடவொட்டார், உன்னைக் காக்கிறவர் உறங்கார். இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை. கர்த்தர் உன்னைக் காக்கிறவர், கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார். பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார், அவர் உன் ஆத்துமாவைக் காப்பார். கர்த்தர் உன் போக்கையும் உன்வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார் சங்கீதம் 121 :1-8

No comments:

Post a Comment