Tuesday, 20 September 2016

சங்கீதம் 119 :151-160

கர்த்தர் சமீபமாயிருக்கிறார், அவரது கற்பனைகளெல்லாம் உண்மை. அவருடைய சாட்சிகளை என்றென்றைக்கும் நிற்க ஸ்தாபித்தார் என்பதை, அவைகளால் நீ நெடுநாளாய் அறிந்திருக்கிறாய். உன் உபத்திரவத்தைப்பார்த்து, உன்னை விடுவிப்பார், அவரது வேதத்தை மறவாதே. உனக்காக அவர் வழக்காடி உன்னை மீட்டுக்கொள்ளுவார், அவருடைய வார்த்தையின்படியே உன்னை உயிர்ப்பிப்பார். இரட்சிப்பு துன்மார்க்கருக்குத் தூரமாயிருக்கிறது, அவர்கள் கர்த்தருைடைய பிரமாணங்களைத் தேடார்கள். கர்த்தருடைய இரக்கங்கள் மிகுதியாயிருக்கிறது, அவரது நியாயங்களின்படி உன்னை உயிர்ப்பிப்பார். உன்னைத் துன்பப்படுத்துகிறவர்களும் உன்னை விரோதிக்கிறவர்களும் அநேகர், ஆனாலும் கரர்த்தருடைய சாட்சிகளை விட்டு விலகாதே அவரது வசனத்தைக் காத்துக்கொள்ளாத துரோகிகளை நீ கண்டபோது, உனக்கு அருவருப்பாயிருந்தது. இதோ, கர்த்தருடைய கட்டளைகளை நேசிக்கிறாய், கர்த்தர் அவரது கிருபையின்படி உன்னை உயிர்ப்பிப்பார். கர்த்தருடைய வசனம் சமூலமும் சத்தியம், அவருடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம். சங்கீதம் 119 :151-160

No comments:

Post a Comment