Friday, 9 September 2016

சங்119:41-50

கர்த்தருடைய வாக்கின்படி, அவரது தயவும் , இரட்சிப்பும் உனக்கு வரும். அப்பொழுது உன்னை நிந்திக்கிறவனுக்கு உத்தரவு சொல்லு. அவருடைய வசனத்தையையே நம்பியிரு. சத்திய வசனம் முற்றிலும் உன் வாயினின்று நீங்கவிடாதே, அவருடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திரு நீ எப்பொழுதும் என்றைக்கும் அவரது வேதத்தைக் காத்துக்கொள். நீ கர்த்தருடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால், விசாலத்திலே நடப்பாய். நீ கர்த்தருடைய சாட்சிகளைக் குறித்து, ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசு. நீ பிரியப்படுகிற அவரது கற்பனைகளின்பேரில் மனமகிழ்ச்சியாயிரு. நீ பிரியப்படுகிற அவரது கற்பனைகளுக்குக் கையெடு அவரது பிரமாணங்களைத் தியானி. கர்த்தர் உன்னை நம்பப்பண்ணின வசனத்தை உனக்காக நினைத்தருளுவார். அதுவே உன் சிறுமையில் உனக்கு ஆறுதல், அவருடைய வாக்கு உன்னை உயிர்ப்பித்தது. சங்கீதம் 119 :41-50

No comments:

Post a Comment