Monday, 19 September 2016

மசித்த ஆப்பிள்...

மசித்த ஆப்பிள்... குழந்தைகளுக்கு ஜீரண சக்தி சற்று குறைவு என்பதால் பழங்களை அப்படியே கொடுப்பது சரியாகாது. எனவே சற்று நேரம் வேகவைத்த பழங்களை நன்கு மசித்து கொடுக்கலாம். உதாரணத்திற்கு ஆப்பிள்... ஆப்பிளை நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதனை ஒரு கிண்ணத்தில் மூழ்கும் அளவிற்கு நீர் விட்டு 5 நிமிட நேரம் வேக விடவும். வெந்த ஆப்பிளின் சதைப் பகுதியை மட்டும் ஸ்பூனில் எடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும். அதில் தேவைக்கேற்ப சர்க்கரை, பால் விட்டு குழந்தைகளுக்கு ஊட்டவும். சத்தானதாகவும், செரிமானத்திற்கு ஏற்றதாகவும் இது அமையும். தினமும்... காய்கறி... அன்றாட சாப்பாட்டில் காய்கறி இடம் பிடிக்கட்டும். உங்கள் உடல்வாகை கட்டுக் கோப்பாக வைக்க உதவும் பட்டியலில் காய்கறிகள் முக்கிய இடம் பிடிக்கிறது. முதலில் நேரம் தவறாமல் சாப்பிடப் பழகுங்கள். தினமும் குறிப்பிட்ட அளவை சாப்பிடப் பழகுங்கள். அதாவது ஒருநாள் நன்றாக பசிக்குது என்பதற்காக அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். இடையில் பசி எடுக்கும்போது... வீணாக சிப்ஸ், பீட்சா என கண்டதையும் வாங்கி சாப்பிடாதீர்கள். பசி எடுக்கும்போதே பழங்கள், ஜூஸ் என்று சாப்பிடுங்கள். அசைவ உணவு வகைகளை தேர்ந்தெடுத்து குறைந்த அளவில் சாப்பிடுவது நல்லது. அதாவது சிக்கன், மட்டன் வகை உணவுகளில் கொழுப்பு, எண்ணை தவிர்த்து, வேகவைத்து சாப்பிடலாம். மீன் வகையில் பொரித்த, வறுத்த அயிட்டங்களை தவிர்க்கலாம்.

No comments:

Post a Comment