Thursday, 15 September 2016

சங்கீதம் 119 :101-110

கர்த்தருடைய வசனத்தை நீ காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் உன் கால்களை விலக்கு. அவர் உனக்குப் போதித்திருக்கிறபடியால், நீ அவருடைய நியாயங்களை விட்டு விலகாதே. அவருடைய வார்த்தைகள் உன் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள், உன் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும். அவரது கட்டளைகளால் உணர்வடைந்தாய், ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுத்துவிடு. அவருடைய வசனம் உன் கால்களுக்குத் தீபமும், உன் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. அவருடைய நீதி நியாயங்களைக்காத்து நடப்பேன் என்று ஆணையிடு, அதை நிறைவேற்று. நீ மிகவும் உபத்திரவப்படுகிறாய், கர்த்தர், அவருடைய வசனத்தின்படியே உன்னை உயிர்ப்பிப்பார். கர்த்தர், உன் வாயின் உற்சாகபலிகளை அங்கீகரித்து, அவரது நியாயங்களை உனக்குப் போதிப்பார். உன் பிராணன் எப்பொழுதும் உன் கையில் இருக்கிறது, ஆனாலும் அவருடைய வேதத்தை மறவாதே. துன்மார்க்கர் உனக்குக் கண்ணிவைக்கிறார்கள், ஆனாலும் நீஅவருடைய கட்டளைகளை விட்டு வழி தவறாதே. சங்கீதம் 119 :101-110

No comments:

Post a Comment