Tuesday, 27 September 2016

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு புதிய பகுதியாக தினம் ஒரு ஜெபக்குறிப்பு அறிமுகமாகிறது ஜெப வீரர்கள் இதனை மனதில் கொண்டு, அந்தந்த நாளில் அந்தந்தக் காரியத்திற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்"இந்தியாவின் விஞ்ஞானிகள் உலகின் தலைசிறந்தவர்களாக திகழ" ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ???????????????????????????

சங்கீதம் 122 :1-9

மமமமமம்்மயமமமமமமமமமமமமம்்்்்்்ாரரரரலலலலல கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று உனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தாய். எருசலேமின் வாசல்களில் உன் கால்கள் நிற்கலாயிற்று. எருசலேம் இசைவிணைப்பான நகரமாய்க் கட்டப்பட்டிருக்கிறது. அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக் கர்த்தருடைய ஜனங்களாகிய கோத்திரங்கள் கர்த்தரின் நாமத்தை ஸ்தோத்திரிப்பதற்குப் போகும். அங்கே தாவீதின் வம்சத்தாருடைய சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது. எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள், எருசலேமை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்கள். உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக. உன் சகோதரர் நிமித்தமும் உன் சிநேகிதர் நிமித்தமும், உன்னில் சமாதானம் இருப்பதாக . உன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தினிமித்தம் அவர்களுக்கு நன்மையுண்டாகத் தேடுவாயாக. சங்கீதம் 122 :1-9

Sunday, 25 September 2016

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு புதிய பகுதியாக தினம் ஒரு ஜெபக்குறிப்பு அறிமுகமாகிறது ஜெப வீரர்கள் இதனை மனதில் கொண்டு, அந்தந்த நாளில் அந்தந்தக் காரியத்திற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்"இந்தியாவின் வாழும் திருநங்கையர் எல்லோரும் இரட்சிக்கப்பட" ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ???????????????????????????

சங்கீதம் 123 :1-4

பரலோகத்தில் வாசமாயிருக்கிற, கர்த்தரிடத்திற்கு உன் கண்களை ஏறெடுத்துப்பார். இதோ, வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், வேலைக்காரியின் கண்கள் தன் எஜமாட்டியின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், உன் கண்கள் அவரை நோக்கியிருக்கட்டும். கர்த்தர், உனக்கு இரங்குவார், நீ நிந்தனையினால் மிகவும் நிறைந்திருக்கிறாய். சுகஜீவிகளுடைய நிந்தனையினாலும், அகங்காரிகளுடைய இகழ்ச்சியினாலும், உன் ஆத்துமா மிகவும் நிறைந்திருக்கிறது. சங்கீதம் 123 :1-4

வெயிட் போடுவதற்கு:

வெயிட் போடுவதற்கு: வெயிட் போடலேன்னு, கேக், ஐஸ்கிரீம், பீட்சா போன்ற சமாச்சாரங்களை இளம் வயதினர் சாப்பிடுவதுண்டு. இது பின்னாளில் கெடுதலாக அமையும். வயதுக்கு ஏற்ற எடை இல்லாவிட்டால், தானாக காட்டிக்கொடுத்து விடும். அப்போது பசியெடுக்காது; சோர்வு வரும். அப்போது டாக்டரிடம் போய் "செக் அப்" செய்வது தான் நல்லது. மற்றபடி, பாலாடைக்கட்டி, இனிப்பு தயிர், பருப்பு வகைகள், கடலைகள், பேரீச்சை, வாழை, ஆப்பிள் போன்றவை சாப்பிட்டு வரலாம். அதுவே போதுமான

வட்டுக்குறிப்பு

?????????????????????? வீட்டுக்குறிப்பு டீக்கரையைப் போக்க சீனியை உபயோகிக்கலாம். வெள்ளைத் துணிகளில் உள்ள கரையைப் போக்க தண்­ணீரில் ப்ளீச்சிங் பவுடரைக் கரைத்து உபயோகிக்கலாம்.

Saturday, 24 September 2016

சங்கீதம் 121 :1-8

உனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக உன் கண்களை ஏறெடுத்துப்பார். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து உனக்கு ஒத்தாசை வரும். கர்த்தர் உன் காலைத் தள்ளாடவொட்டார், உன்னைக் காக்கிறவர் உறங்கார். இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை. கர்த்தர் உன்னைக் காக்கிறவர், கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார். பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார், அவர் உன் ஆத்துமாவைக் காப்பார். கர்த்தர் உன் போக்கையும் உன்வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார் சங்கீதம் 121 :1-8

Thursday, 22 September 2016

காலை சிற்றுண்டி

காலையில் சாப்பிடும் உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்கவே கூடாது; எட்டு அல்லது பத்து மணி நேரம் இடைவெளிக்கு பின், உடலுக்கு "பெட்ரோலாக" தேவைப்படும் உணவு அது. காலை உணவு முறையை "பிரேக் பாஸ்ட்" என்று கூறுவர். "பாஸ்ட்"டை (உண்ணாதிருத்தலை) "பிரேக்" (துண்டிப்பது) பண்ணுவது என்று அர்த்தம். முதல் நாள் இரவு சாப்பிட்டபின், தூங்கி எழுந்திருக்கும் போது, பல மணி நேரம், சாப்பிடாமல் உடல் இயங்குகிறது. அதனால் அதற்கு, சத்துக்கள் தேவைப்படுகிறது. காலையில் சாப்பிடாமல், மதிய உணவு சாப்பிடலாம் என்று எண்ணுவது சரியல்ல. பத்து மணி நேரத்தையும் தாண்டி பட்டினி போடுவது, உடலில் உள்ள முக்கிய சத்துக்கள் குறைபாடு ஏற்படக் காரணமாகி விடும். என்ன சாப்பிடணும்? காலையில் எழுந்தவுடன் காபி, பால் போன்ற பானங்கள் சாப்பிட்டு விட்டு, உணவு அல்லது சிற்றுண்டி சாப்பிடுவோர் பலர் உள்ளனர். சிலர், காலையில், ழுமு உணவு சாப்பிட்டு விட்டு, மதியம் சாதாரண அளவில் சாப்பிட்டு, இரவு டிபன் சாப்பிடுகின்றனர். ஆனால், காலை உணவை தவிர்ப்போரும் உண்டு. இவர்களுக்கு தான் பாதிப்பு வரும். குறிப்பாக, வீட்டு, ஆபீஸ் வேலை பார்க்கும் பெண்களுக்கு காலை உணவு மிக முக்கியம். அதை தவிர்த்தால், அவர்களுக்கு பல கோளாறுகள் வர வாய்ப்பு அதிகம். உணவு என்றால்..... உடலுக்கு தேவைப்படும் சத்துக்களை தருவது தான் உணவு. கார் போன்றது உடல். கார் ஓட பெட்ரோல் தேவைப்படுவது போல, உடல் சிறப்பாக இயங்க எரிசக்தி தேவை. அந்த எரிசக்தியை தருவது சத்துக்கள் தான். அந்த சத்துக்களை நாம் உணவில் இருந்து தான் பெற வேண்டும். காலை உணவு சாப்பிட்டால், அது சிற்றுண்டியாக இருந்தாலும், உணவாக இருந்தாலும், உடலுக்கு முழு எரிபொருளை தருகிறது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், மயக்கம், சோர்வு, தலைவலி, மூட்டு பாதிப்பு வராமல் இருக்கவும், காலை உணவு மிக முக்கியம். இரும்புச் சத்து பெண்களுக்கு இரும்புச்சத்து மிக முக்கியம், நாம் சாப்பிடும் உணவு மூலம் அது கிடைத்தால், மனது மற்றும் உடல் ரீதியாக திடத்தன்மை ஏற்படுகிறது. காலை உணவில், மக்காச்சோள உணவை சேர்த்துக்கொள்ளலாம். "கார்ன்பிளேக்ஸ்" போன்ற பாக்கெட் உணவுகளை பின்பற்றினால், இரும்புச் சத்து கிடைக்கும். இந்தியாவில், 90 சதவீத பெண்கள், இரும்புச்சத்து குறைபாடுடன் உள்ளனர். அவர்களுக்கு காலை உணவு கைகொடுக்கும் மக்காச்சோளம் உட்பட தானிய வகை உணவுகள் மிக நல்லது. உடலுக்கும், மூளைக்கும் வலுவை தரும். ஸ்லிம்மாக முடியும் காலை உணவு சாப்பிட்டு வந்தால், உடல் எடை சீராக இருக்கும். அதனால், "ஸ்லிம்"மை தொடர்ந்து பாதுகாத்து வரலாம். ஆனால், பலரும் காலை உணவை தவிர்த்தால் "ஸ்லிம்"மாக முடியும் என்று நினைக்கின்றனர். இது தவறு. காலை உணவை தவிர்த்தால், மதிய வேளையில் அதிகமாக சாப்பிட தூண்டப்படுகிறது. அதனால் எந்த உணவாக இருந்தாலும், அதிகமாக சாப்பிட்டு கொலஸ்ட்ரால் ஏறியும் விடுகிறது. காலை உணவில், புரோட்டீனும், நார்ச்சத்தும் அதிகம் தேவை. அப்படிப்பட்ட தானிய வகை உணவை சேர்த்துக் கொள்ளலாம். இதில் எரிசக்தியை வெளிப்படுத்தும் வைட்டமின் "பி" ஆன்டி ஆக்சிடென்டாக உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை உள்ளன. நீண்ட வாழ்நாள் காலை உணவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீண்ட நாள் வாழலாம். அதற்கேற்ப, உடலுக்கு தேவையான அனைத்துச் சத்துக்களும் கிடைத்துவிடுகின்றன. பாக்கெட், உணவு வகைகள், இப்போது கொழுப்பு நீக்கப்பட்ட நிலையில் விற்பனை செய்யப்படுகின்றன. சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம், சாப்பாடாகவும் காலை உணவை சாப்பிடலாம். எது நல்ல உணவு? காலை உணவில் பலவகை உண்டு. தானிய வகை சத்துக்களாக சமைத்து சிற்றுண்டியாக சாப்பிட்டாலும், முழு உணவாக சாப்பிட்டாலும் நல்லது தான். ஆனால், முதல் நாள் சமைத்ததை மறுநாள் பயன்படுத்துவது கூடாது. அதனால், உடலுக்கு சத்துக்கள் கிடைக்காது. முழு அளவில் சத்துக்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும். ருசிக்கு ருசி காலை உணவில் எல்லா சத்துக்களும் இருக்க வேண்டுமானால், தானிய வகை உணவு, பானங்கள், யோகர்ட், பால் உணவு போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவுடன் பழங்களையும் சேர்த்துக் கொண்டால், உடலுக்கு இன்னும் நல்லது. காலை உணவை சாப்பிட்டவுடன், ஓய்வு எடுப்பது தவறான பழக்கம். வேலைக்கு போகாத பெண்கள் என்றால், காலாற நடக்கலாம்; ஏதாவது வேலையில் இறங்கலாம். வேலைக்கு போவோராக இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால், உட்கார்ந்தபடி பல மணி நேரம் ஒரே வேலையை செய்யக் கூடாது. உடலை இயக்கும் வண்ணம் அரை மணிக்கு ஒரு முறை நடக்க வேண்டும்; குறைந்தபட்சம் நாற்காலியை விட்டு எழுந்திருக்க வேண்டும். மாற்றக்கூடாது சிலர் காலை சிற்றுண்டி சாப்பிடுவர்; சிலர் முழு உணவு சாப்பிடுவர். ஒவ்வொருவருக்கும் இது மாறுபடும். ஆனால், இந்த பழக்கத்தை திடீரென மாற்றக்கூடாது. மாற்றினால், உடலுக்கு பாதிப்பு தான் அதிகம்.

வீீட்டுக்குறிப்பு

?????????????????????? வீட்டுக்குறிப்பு நீலம் கலந்த நீரில் பாத்திரம், கண்ணாடி, பாட்டில் முதலியவற்றைக் கழுவினால் பளிச் என்று இருக்கும்.

சங்கீதம் 119 :161-170

பிரபுக்கள் காரணமில்லாமல் உன்னைத் துன்பப்படுத்துகிறார்கள், ஆனாலும் உன் இருதயம் கர்த்தருடைய வசனத்திற்கே பயப்படுகிறது. மிகுந்த கொள்ளையுடைமையைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, நீ கர்த்தருடைய வார்த்தையின்பேரில் மகிழுகிறாய். பொய்யைப் பகைத்து அருவருக்கிறாய், கர்த்தருடைய வேதத்தையோ நேசிக்கிறாய். கர்த்தருடைய நீதிநியாயங்களினிமித்தம், ஒருநாளில் ஏழுதரம் கர்த்தரைத் துதிக்கிறாய். கர்த்தருடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு, அவர்களுக்கு இடறலில்லை. கர்த்ததருடைய இரட்சிப்புக்கு நீ காத்திருந்து, அவருடைய கற்பனைகளின்படி செய்வாயாக. உன் ஆத்துமா கர்த்தரது சாட்சிகளைக் காக்கும், அவைகளை நீ மிகவும் நேசிக்கிறாய். கர்த்தரது கட்டளைகளையும் அவரது சாட்சிகளையும் காத்து நடக்கிறாய், உன் வழிகளெல்லாம் கர்த்தருக்கு முன்பாக இருக்கிறது. உன் கூப்பிடுதல் கர்த்தரது சந்நிதியில் வரட்டும், அவரது வசனத்தின்படியே உன்னை உணர்வுள்ளவனாக்குவார். உன் விண்ணப்பம் கர்த்தரது சந்நிதியில் வருவதாக, அவரது வார்த்தையின்படி உன்னை விடுவித்தருளுவார். சங்கீதம் 119 :161-170

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு புதிய பகுதியாக தினம் ஒரு ஜெபக்குறிப்பு அறிமுகமாகிறது ஜெப வீரர்கள் இதனை மனதில் கொண்டு, அந்தந்த நாளில் அந்தந்தக் காரியத்திற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்"இந்தியாவின் நதிகள் இணைக்கப்படுவதற்காக எடுக்கப்படுகிற திட்டங்கள் செயல் படுத்தப்பட" ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ???????????????????????????

சங்கீதம் 119 :171-176

கர்த்தருடைய பிரமாணங்களை அவர் உனக்குப் போதிக்கும்போது, உன் உதடுகள் அவரது துதியைப் பிரஸ்தாபப்படுத்தட்டும். அவரது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள், ஆதலால், உன் நாவு அவருடைய வசனத்தை விவரித்துச்சொல்லட்டும். நீ கர்த்தருடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டபடியால், அவரது கரம் உனக்குத் துணையாயிருப்பதாக. கர்த்தருடைய இரட்சிப்பின்மேல் ஆவலாயிருக்கிறாய், அவருடைய வேதம் உன் மனமகிழ்ச்சி. உன் ஆத்துமா பிழைத்திருந்து கர்த்தரை துதிக்கக்கடவது, அவரது நியாயத்தீர்ப்புகள் உனக்கு உதவியாயிருப்பதாக. காணாமற்போன ஆட்டைப்போல வழிதப்பிப்போனாய், கர்த்தர் உன்னைத் தேடுவார், அவரது கற்பனைகளை நீ மறவாதே. சங்கீதம் 119 :171-176

Wednesday, 21 September 2016

ஹார்ட் அட்டாக்

ஹார்ட் அட்டாக் கேள்விப்படும்போது பயங்கரமா தான் இருக்கும். ஹார்ட் அட்டாக் வந்துட்டதால, அதோட எல்லாமே முடிஞ்சு போச்சுன்னு நினைச்சு, வாழ்க்கையை வெறுக்க வேண்டியதில்லை. ரெண்டு, மூணு முறை அட்டாக் வந்து பிழைச்சு, நிறைய காலம் ஆரோக்கியமா வாழறவங்களும் இருக்காங்க. வந்ததை நினைச்சு பயப்படாம, அடுத்து எப்படி இருக்கணும், அதுக்கு என்ன சாப்பிடணும், எப்படி சாப்பிடணும்னு தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம். இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம்? நீரிழிவு உள்ளவங்க, சிறுநீரகக் கோளாறு உள்ளவங்க, சிகரெட் பழக்கமுள்ளவங்க, உடல் பருமனானவங்க, மொனோபாஸ் கடந்தவங்க, எப்போதும் டென்ஷனா இருக்கிறவங்க, எந்த வேலையும் செய்யாம உடல் இயக்கமே இல்லாதவங்க, ஏற்கனவே குடும்பத்துல யாருக்காவது இதய நோய்கள் இருக்கிறவங்க... இவங்க எல்லாம் ஜாக்கிரதையா இருக்கிறது நல்லது. இதய நோய்க்கான அறிகுறி நெஞ்சு வலியாதான் இருக்கணும்ணு அவசியமில்லை. அடிக்கடி தலைவலி, தலை சுற்றல், பார்வைத் தடுமாற்றம், ஞாபகமறதி, மூச்சு விடறதால சிரமம், தோள்பட்டை வலி.... இதுல எது இருந்தாலும், அது இதய நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம்னு உடனே டாக்டரை பார்க்கிறது அவசியம். சிகிச்சை, உடற்பயிற்சி... இது எல்லாத்தையும் விட முக்கியம் உணவு. அமெரிக்கால எல்லா உணவுகள்லயும் "டிரான்ஸ்ஃபேட்"னு சொல்லப்படற அடர்த்தி குறைவான மிதக்கும் கொழுப்பு இருக்காங்கிறதை பேக்கிங் லேபிள்ல போடணும்னு சட்டம் இருக்கு. நம்மூர்ல அப்படி எதுவும் இல்லாதது பெரிய குறை. எதை சாப்பிடலாம், எது கூடாதுங்கிற விழிப்புணர்வு இல்லாம, கண்டதையும் சாப்பிட்டு நோய்களை விலை கொடுத்து வரவழைச்சுக்கறோம். சாப்பாட்டு விஷயத்துல ரொம்ப முக்கியமா கவனிக்க வேண்டியது ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், சில வகை உணவுகளை சமைக்கிறபோதே, சத்துகள் ஆக்சிஜனோட சேர்ந்து ஆவியாகி வெளியேறிவிடும். அதைத் தடுக்க ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அவசியம். கிரீன் டீ, பழங்கள், காய்கறிகள்ல இந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமா இருக்கு. உடம்புல கொழுப்பு அதிகமா இருக்கிறப்ப, ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் தங்காது. கூடவே நச்சுப் பொருளும் சேர்ந்து உண்டாக்கிற கோளாறுகள்ல இதய நோயும் ஒன்று. காய்கறிகளும் பழங்களும் எல்லாருக்கும் அவசியம்னு சொல்ல இது இன்னொரு காரணம். இதயம் பலவீனமானவங்க தவிர்க்க வேண்டிய உணவுகள் மீன் தவிர அத்தனை அசைவ உணவுகளையும். ஒரு முட்டைல 210 மி.கி. கொலஸ்ட்ரால் இருக்கிறதால, அது கூடவே கூடாது. பேக்கிங் பவுடர் சேர்த்துச் செய்தவை, நெய், வெண்ணெய், சீஸ், தேங்காய், காபி, டீ, உருளைக்கிழங்கு சிப்ஸ், டின்ல அடைச்ச உணவுகள், தக்காளி சாஸ் கெட்ச்சப், ஃப்ரோஸன் உணவுகள் - அதாவது உறைநிலை உணவுகள், அஜினோமோட்டோ இந்த எதுவும் வேண்டாம். "ஊறுகாயும் அப்பளமும் இருந்தா போதும்... வேற எதுவும் வேணாம்"னு சாப்பிறவங்க பலர். இந்த ரெண்டையும் போல ஆபத்தானது வேற இல்லை. காரணம், அதுல சேர்க்கப் படற உப்பு. அந்தக் காலத்துல அப்பளம் நல்லா விரிஞ்சு பொரியணும்னு பிரண்டை சாறு விடுவாங்க. இப்ப அதுக்குப் பதில் சோடியம். ஊறுகாயும் அதே மாதிரிதான். அதிக உப்பு ரத்தக்கொதிப்பை அதிகமாக்கி, இதய நலனைப் பாதிக்கும். சாப்பிடக்கூடிய உணவுகள்: கீரை, முழு தானியங்கள், காய்கறிகள், அசைவத்துல மீன் மட்டும் (அதுல உள்ள ஒமோக 3 கொழுப்பு அமிலம் இதயத்துக்கு நல்லது) ஓட்ஸ், பூண்டு, சின்ன வெங்காயம். தினசரி சமையல்ல சாதாரண புளிக்குப் பதிலா கொடப்புளி உபயோகிக்கலாம். கோக்கம்னு சொல்லப்படற கொடப்புளியை எந்தவித குழம்புலயும் சேர்க்கலாம். ரத்தத்துல கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி, இதயத்தைப் பாதுகாத்து, உடல் எடையையும் குறைக்கும் இது. கொழுப்பு குறைஞ்சாலே, இதயம் உள்ளிட்ட அத்தனை உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்.

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு புதிய பகுதியாக தினம் ஒரு ஜெபக்குறிப்பு அறிமுகமாகிறது ஜெப வீரர்கள் இதனை மனதில் கொண்டு, அந்தந்த நாளில் அந்தந்தக் காரியத்திற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்"இந்தியாவின் தொழில் துறை வளர்ச்சி அடைய" ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ???????????????????????????

Tuesday, 20 September 2016

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு புதிய பகுதியாக தினம் ஒரு ஜெபக்குறிப்பு அறிமுகமாகிறது ஜெப வீரர்கள் இதனை மனதில் கொண்டு, அந்தந்த நாளில் அந்தந்தக் காரியத்திற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்"இந்தியாவின் வணிக வளம் பெருக" ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ???????????????????????????

வீட்டுக்குறிப்பு

?????????????????????? வீட்டுக்குறிப்பு தேங்காய் எண்ணெயில் சுத்தமான உப்புக் கல்லைப் போட்டு வைப்பதால், பல நாட்கள் கெடாமல் இருக்கும்.

சங்கீதம் 119 :151-160

கர்த்தர் சமீபமாயிருக்கிறார், அவரது கற்பனைகளெல்லாம் உண்மை. அவருடைய சாட்சிகளை என்றென்றைக்கும் நிற்க ஸ்தாபித்தார் என்பதை, அவைகளால் நீ நெடுநாளாய் அறிந்திருக்கிறாய். உன் உபத்திரவத்தைப்பார்த்து, உன்னை விடுவிப்பார், அவரது வேதத்தை மறவாதே. உனக்காக அவர் வழக்காடி உன்னை மீட்டுக்கொள்ளுவார், அவருடைய வார்த்தையின்படியே உன்னை உயிர்ப்பிப்பார். இரட்சிப்பு துன்மார்க்கருக்குத் தூரமாயிருக்கிறது, அவர்கள் கர்த்தருைடைய பிரமாணங்களைத் தேடார்கள். கர்த்தருடைய இரக்கங்கள் மிகுதியாயிருக்கிறது, அவரது நியாயங்களின்படி உன்னை உயிர்ப்பிப்பார். உன்னைத் துன்பப்படுத்துகிறவர்களும் உன்னை விரோதிக்கிறவர்களும் அநேகர், ஆனாலும் கரர்த்தருடைய சாட்சிகளை விட்டு விலகாதே அவரது வசனத்தைக் காத்துக்கொள்ளாத துரோகிகளை நீ கண்டபோது, உனக்கு அருவருப்பாயிருந்தது. இதோ, கர்த்தருடைய கட்டளைகளை நேசிக்கிறாய், கர்த்தர் அவரது கிருபையின்படி உன்னை உயிர்ப்பிப்பார். கர்த்தருடைய வசனம் சமூலமும் சத்தியம், அவருடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம். சங்கீதம் 119 :151-160

சத்தான உணவு

ஏதாவது உடல்நிலை பாதிப்பு என்று டாக்டரிடம் போனால், "மருந்து தர்றேன்; முதல்ல, நன்றாக சாப்பிடுங்க; உடலில் சத்துக்களே இல்லை" என்பார். சத்தான உணவு என்றால் என்ன? ரத்தம், எலும்பு, தசைகள், தோல், நரம்புகளுடன் பின்னிப்பிணைந்த இதயம், மூளை, கல்லீரல், நுரையீரல், குடல், சிறுநீரகம் போன்றவை கொண்டது தான் உடல். அந்த உடலுக்கு சீரான ரத்த ஓட்டம் கிடைத்தால், பல உறுப்புகளுக்கு சத்துக்கள் கிடைக்கும். வைட்டமின், புரோட்டீன், கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் கிடைத்தால் தான் உறுப்புகள் முழுமையாக இயங்கும். எந்த வியாதியும் அண்டாது. சத்தான உணவு கிடைக்கவில்லை என்பதற்கான அறிகுறிகள்: எப்போது பார்த்தாலும் சோர்வு, பலவீனம். வீட்டில் சாதாரண வேலையை கூட செய்ய முடியாமல் சோர்வு. உடல் எடை அதிகரிப்பது அல்லது குறைவது. சரியான தூக்கம் வராதிருப்பது. எப்போதும் மன அழுத்தம். கவனக்குறைவு அதிகம். ஜீரணம் ஆவதில் அடிக்கடி சிக்கல். மலச்சிக்கல் ஏற்படுவது. அடிக்கடி எரிச்சல் படுவது. தோல்பகுதி வறண்டு இருப்பது. சொறி, சிரங்கு ஏற்படுவது. வாய், உதடு வறண்டு போவது. நகங்கள் திடமாக இல்லாமல், எளிதில் உடைவது. தலைமுடி கொட்டுவது அதிகரிப்பு. உடலில் தண்ணீர் வற்றியது போல உணர்வு. எதையும் நினைவில் வைத்திருக்க முடியாத நிலை. சாப்பாட்டை பற்றிய கவனம் இல்லாமை. கண்டபடி கொழுப்பு உணவுகளை சாப்பிடுவது. இவ்வளவு அறிகுறிகளை கவனித்தாலே, உடலுக்கு சத்தான உணவு சாப்பிடவில்லை என்பதை உறுதிபடுத்திக் கொள்ளலாம். சத்துக்கள் கிடைக்காத நிலையில், அடுத்து நோய்கள் அணிவகுக்கும் என்பதை உணர வேண்டும். இப்போதுள்ள இளைய தலைமுறையினருக்கு "லைப் ஸ்டைல்" மாறி விட்டது. சாட், பீட்சா போன்ற "ஜங்க் புட்" உணவுகளை தான் சாப்பிடுகின்றனர். "ஜங்க்" என்றால் குப்பை என்று பொருள். அப்படியானால், குப்பை உணவு என்று தானே அர்த்தம். அதனால், "ஜங்க் புட் (Junk Food)" வகைகளை வார இறுதியில் சாப்பிட்டு, மற்ற நாட்களில் காய்கறி, பழங்கள் கொண்ட உணவு முறையை கடைபிடிக்க வேண்டும். அதுபோல, "பிரஷ் ஜூஸ்" சாப்பிடலாம்; பாட்டில் பானங்களை கைவிடலாம். பாட்டில் பானங்கள், பாக்கெட் நொறுக்குத் தீனிகள், சாட் உணவுகளை குறைத்துக் கொண்டாலே, எதிர்காலத்தில் சர்க்கரை, இதய நோய் வராமல் தவிர்த்து விடலாம். காலை உணவு அவசியம்! ஆரோக்கியமான வாழ்விற்கு காலை உணவு அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். உடல் பருமனாவதைத் தவிர்த்து, மெலிதான உடல் அமைப்புடன் வாழ, காலை உணவு அவசியம் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட, 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளிடம் ஆய்வு செய்ததில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. அடிக்கடி காலை உணவை சாப்பிடாமல் மட்டம் போடும் குழந்தைகள், உடல் எடை அதிகரித்து குண்டாகி விடுகிறார்கள். காலை உணவு சாப்பிடும் குழந்தைகளின் பசி, ஒரு கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்பதால், அளவுக்கு அதிகமாக சாப்பிட மாட்டார்கள். காலை உணவை சாப்பிடாமல், காலி வயிற்றுடன் இருக்கும் குழந்தைகள் மதிய உணவை ஒரு கை பார்ப்பதாலும், பசி அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாது போவதாலும் பருமனான உடல் அமைப்பை பெற்று விடுவார்கள். அதோடு காலை உணவில், கொழுப்பு குறைவாக கலந்திருக்கும் என்பதும் எடைக் குறைப்பிற்கு காரணமாகி விடுகிறது. எனவே ஆரோக்கியத்தை விரும்பும் குழந்தைகள் காலை உணவை மறக்கக்கூடாது என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர். - உணவே மருந்து download from http://bit.ly/1OeJioY

வீட்டுக்குறிப்பு

?????????????????????? வீட்டுக்குறிப்பு தேங்காய் எண்ணெயில் சுத்தமான உப்புக் கல்லைப் போட்டு வைப்பதால், பல நாட்கள் கெடாமல் இருக்கும்.

Monday, 19 September 2016

திருப்பூர் மாவட்டத்திற்காக!

திருப்பூர் மாவட்டத்திற்காக! தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு மட்டுமின்றி, வெளிமாநிலத் தொழிலாளர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஆடை தயாரிப்பு தொழிலில் வேலைவாய்ப்புத் தரும் இடமாக திருப்பூர் மாவட்டம் உள்ளது. திருப்பூரில் உள்ள சுமார் 2,000 ஏற்றுமதி நிருவனங்கள் மற்றும் 5,000 உள்ளாடை தயாரிப்பு நிருவனங்களுக்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். உபதொழில் நிருவணங்களுக்காக, இங்கு பணியாற்றும் 4லட்சம் தொழிலாளர்களுக்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். மேலும் வடமானிலங்களான பீகார், சண்டிஸ்கர், அசாம், ஒடிசா, ராஜஸ்தான், மேற்குவங்கம் உள்ளிட்ட மானிலங்களை சேர்ந்த தொழிளாலர்களால், குற்றங்கள் ஏதும் நடக்காதபடிக்கு கருத்தாக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். பலவித தீவிரவாதிகள் இங்கு தப்பி வந்து வேலை செய்வதும், இங்குள்ள நிலவரங்களை அறிந்து, தகவல் தருவதும் போலிசாரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இப்படிபட்ட "ஸ்விப்பர் செல்கள்" கண்டுபிடிக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

சங்கீதம் 119 :121-130

நீ நியாயமும் நீதியும் செய், கர்த்தர் உன்னை ஒடுக்குகிறவர்களுக்கு உன்னை ஒப்புக்கொடுக்கமாட்டார். கர்த்தர் உனக்கு நன்மையாகத் துணைநிற்பார், அகங்காரிகள் உன்னை யொடுக்கவொட்டமாட்டார். கர்த்தருடைய இரட்சிப்புக்கும் அவரது நீதியின் வார்த்தைக்கும் காத்திருக்கிறதினால் உன் கண்கள் பூத்துப்போகிறது. உன்னை அவரது கிருபையின்படியே நடத்தி, அவரதது பிரமாணங்களை உனக்குப் போதிபபார். நீ அவரது அடியேன், அவருடைய சாட்சிகளை நீ அறியும்படி உன்னை உணர்வுள்ளவனாக்குவார். நீதியைச் செய்யச் கர்த்தருக்கு வேளைவந்தது, அவர்கள் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை மீறினார்கள். ஆதலால் நீ பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாய் கர்த்தருடைய கற்பனைகளில் பிரியப்படு. எல்லாவற்றைப்பற்றியும் கர்த்தர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுத்துவிடு. கர்த்தருடைய சாட்சிகள் அதிசயமானவைகள், ஆகையால் உன் ஆத்துமா அவைகளைக் கைக்கொள்ளட்டும். கர்த்தருடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும். சங்கீதம் 119 :121-130

சங்கீதம் 119 :131-140

கர்த்தருடைய கற்பனைகளை நீ வாஞ்சிக்கிறபடியால், உன் வாயை ஆவென்றுதிறந்து அவைகளுக்கு ஏங்குவாயாக. கர்த்ததருடைய நாமத்தை நேசிக்கிறவர்களுக்கு வழங்கும் நியாயத்தின்படியே உன்னை நோக்கிப்பார்த்து, கர்த்தர் உனக்கு இரங்குவார். கர்த்தருடைய வார்த்தையிலே உன் காலடிகளை நிலைப்படுத்து, ஒரு அநியாயமும் உன்னை ஆளவொட்டாதிருப்பார். மனுஷர் செய்யும் இடுக்கத்துக்கு உன்னை விலக்கி விடுவித்தருளுவார், அப்பொழுது நீ அவருடைய கட்டளைகளைக் காத்துக்கொள்ளுவாய். உன் மேல் அவரது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணி, அவரது பிரமாணங்களை உனக்குப் போதிப்பார். கர்த்தருடைய வேதத்தை மனுஷர் காத்துநடவாதபடியால், உன் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது. கர்த்தர் நீதிபரர், அவரது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள். கர்த்தர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள். உன் சத்துருக்கள் கர்த்தருடைய வசனங்களை மறந்தபடியால், உன் பக்திவைராக்கியம் உன்னைப் பட்சிக்கிறது. கர்த்தருடை வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, நீ அதில் பிரியப்படுகிறாய். சங்கீதம் 119 :131-140

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு புதிய பகுதியாக தினம் ஒரு ஜெபக்குறிப்பு அறிமுகமாகிறது ஜெப வீரர்கள் இதனை மனதில் கொண்டு, அந்தந்த நாளில் அந்தந்தக் காரியத்திற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார"இந்தியாவில் காடுகள் பாதுகாக்கப்பட" ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ???????????????????????????

"ஒவ்வாமை"

நம் அன்றாட வாழ்வில் அனைவரும் ஒரு முறையேனும் உபயோகிக்கும் வார்த்தை "ஒவ்வாமை" (Allergy). இது ஏற்படுவதற்கான காரணங்களையும் அதைப் போக்குவதற்கான சில வழிமுறைகளையும் காண்போம். எப்படி ஏற்படுகிறது? ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய பொருட்களை ஆங்கிலத்தில் (Allergen) என்றழைக்கின்றனர். இந்த அலர்ஜென் தோல் மூலமாக நேரடியாகவோ, இதர உடல் உறுப்புகளின் மூலமாகவோ உடம்பினுள் சென்றடைந்ததும், இரத்த ஓட்டத்தின் மூலமாக திசுக்களைச் சென்றடையும். நம் உடம்பின் எந்த பாகமும் ஒவ்வாமையினால் தாக்கப்படலாம். ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடியப் பொருட்கள்: தூசு, மகரந்தம், அழகு சாதனப் பொருட்கள், விலங்குகளின் முடி, விஷச் செடிகள், மருந்து வகைகள், தடுப்பூசிகள் மற்றும் பலவகையான உணவுப் பொருட்கள். உணவுப் பொருட்களில் தோடம் பழங்கள், செம்புற்று பழங்கள், பால், முட்டை, கோதுமை, மீன், கடல் வாழ் உணவு வகைகள், இனிப்பு வகைகள் மற்றும் தக்காளி அதிக அளவில் ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடியவை. வெப்பம், குளிர், சூரிய ஒளி போன்ற இயற்கை சூழ்நிலைகளும் ஒவ்வாமைக்குக் காரணிகளாக அமைகின்றன. சுத்திகரிக்கப்பட்ட உணவுவகைகள் அதிகமாக உட்கொள்ளுதல் மூலமாகவும் ஒவ்வாமை ஏற்படக்கூடும். அவ்வாறு சுத்திகரிக்கப்படும் பொருட்கள் பலவேறு ரசாயனங்கள் மிகுந்து காணப்படுவதே இதன் காரணமாகும். உணர்ச்சி வசப்படுதல் மற்றும் உளவியல் அழுத்தம் காரணங்களாலும் ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. ஒவ்வாமையினால் ஏற்படும் தொல்லைகள்: தலைவலி, மைக்ரெய்ன், தலைசுற்றல், நமைச்சல், மனஅழுத்தம், மனக்கவலை, காய்ச்சல், சளி, வயிற்றுபோக்கு, வாந்தி, முகம் மற்றும் கண்கள் வீங்குதல், ஆஸ்துமா போன்றவை ஒவ்வாமை ஏற்பட்டதற்கான அறிகுறிகள். ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்கள் வெவ்வேறு மனிதர்களிடம் வெவ்வேறு விதமாக தாக்கும் தன்மை கொண்டவை. ஒவ்வாமை போக்குவதற்கான சில வழிமுறைகள்: 1. 500 கிராம் கேரட் சாறு மட்டுமாக அல்லது கேரட், பீட்ரூட் மற்றும் வெள்ளரி, இம்மூன்று காய்கறிச் சாறுகளின் கலவை ஒவ்வாமையைக் கட்டுப்படுத்த உதவும் இம்மூன்று காய்கறிச் சாறுகள் அளவு விகிதம் கீழ்கண்டவாறு அமையவேண்டும்: 500 கிராம் - கேரட் சாறு 100 கிராம் - பீட்ரூட் சாறு 100 கிராம் - வெள்ளரிக்காய் சாறு தினமும் ஒருமுறை கேரட் சாறோ அல்லது மூன்று காய்கறிகளின் சாறின் கலவையையோ அருந்துவதன் மூலம் ஒவ்வாமையைப் போக்கலாம். பலவகையான உணவுப் பொருட்கள், அஜீரணக் கோளாறு, ஆஸ்துமா மற்றும் தோல் உரிதல் போன்ற ஒவ்வாமைகளை நாள்தோறும் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழங்கள் உட்கொள்ளுதல் மூலமாகப் போக்கலாம். வாழைப்பழத்தின் மூலமாக ஒவ்வாமைக்குள்ளாவோர் இதனைத்தவிர்ப்பது நன்று! 2. வைட்டமின்கள் அ, இ, உ சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்கள் மூலம் ஒவ்வாமையைப் போக்கலாமென்று ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளார்கள். ஆப்பிள், பப்பாளி, தர்பூசணி, அன்னாசி, மாம்பழம், வாழைப்பழம், கேரட், காலிப்ளவர், சோளம், வெள்ளரி, வெங்காயம், பச்சைப்பட்டாணி, சர்க்கரை வள்ளி கிழங்கு போன்றவற்றில் வைட்டமின் "இ" நிறைந்துள்ளது. வைட்டமின் "அ" நிறைந்துள்ளவை தர்பூசணி, மாம்பழம், கேரட், பச்சைப்பட்டாணி, பீட்ருட் மற்றும் பூசணிக்காய் ஆகும். 3. நிறைய குடிநீர் அருந்துதல் மூலம் மற்றும் ரசாயன முறைகளில் பக்குவப்படுத்தப்படாத உணவுப் பொருட்களை உட்கொள்ளுதல் மூலமாகவும் ஒவ்வாமையைப் போக்கலாம். 4. நாள்தோறும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலமாகவும் மற்றும் 30 நிமிடங்கள் சூரிய வெளிச்சம் நம் உடலில் படுவதன் மூலமாகவும் ஒவ்வாமையைப் போக்கலாம். 5. நம் வீடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களை சுத்தமாகப் பராமரிப்பதன் மூலமும் ஒவ்வாமை ஏற்படுதலைத் தவிர்க்கலாம். 6. பூண்டு ஆஸ்துமாவினால் அவதிப்படுபவர்களுக்கு நல்ல மருந்தாக உதவுகின்றது. ஆஸ்துமாவின் ஆரம்ப நாட்களில் அவதிப்படுபவர்கள், பாலோடு பூண்டை நன்றாக கொதிக்கவைத்தப்பின் அருந்துவதால் நல்ல நிவாரணம் பெற முடியும். 7. பால் அல்லது குடிநீருடனோ அல்லது தனியாகவோ தேனை அருந்துவதால் சுவாசம் சீர்பட்டு ஒவ்வாமையினால் ஏற்படும் ஆஸ்துமா கோளாறு நீங்கும். 8. வெளியில் சென்று வந்தவுடன் நன்றாக குளிப்பதால் தூசு மற்றும் மகரந்த துகள்கள் ஏற்படுத்தும் ஒவ்வாமையைத் தவிர்க்கலாம்.

வீட்டுக்குறிப்பு

?????????????????????? வீட்டுக்குறிப்பு புளியை நீண்ட நாட்கள் வைத்துக் கொள்ள பானையில் போட்டு வைக்கவும். பானையின் அடியில், புளியைப் போட்டு அதன் மேல் கொஞ்சம் உப்பைத் தூவினால் புளி கெடாமல் இருப்பதோடு, காய்ந்து போகாமலும் இருக்கும்.

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு புதிய பகுதியாக தினம் ஒரு ஜெபக்குறிப்பு அறிமுகமாகிறது ஜெப வீரர்கள் இதனை மனதில் கொண்டு, அந்தந்த நாளில் அந்தந்தக் காரியத்திற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார"இந்தியாவில் புதைந்துள்ள ஆசீர்வாதங்கள் முற்றிலும் பயன்படுத்தப்பட" ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ???????????????????????????

மசித்த ஆப்பிள்...

மசித்த ஆப்பிள்... குழந்தைகளுக்கு ஜீரண சக்தி சற்று குறைவு என்பதால் பழங்களை அப்படியே கொடுப்பது சரியாகாது. எனவே சற்று நேரம் வேகவைத்த பழங்களை நன்கு மசித்து கொடுக்கலாம். உதாரணத்திற்கு ஆப்பிள்... ஆப்பிளை நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதனை ஒரு கிண்ணத்தில் மூழ்கும் அளவிற்கு நீர் விட்டு 5 நிமிட நேரம் வேக விடவும். வெந்த ஆப்பிளின் சதைப் பகுதியை மட்டும் ஸ்பூனில் எடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும். அதில் தேவைக்கேற்ப சர்க்கரை, பால் விட்டு குழந்தைகளுக்கு ஊட்டவும். சத்தானதாகவும், செரிமானத்திற்கு ஏற்றதாகவும் இது அமையும். தினமும்... காய்கறி... அன்றாட சாப்பாட்டில் காய்கறி இடம் பிடிக்கட்டும். உங்கள் உடல்வாகை கட்டுக் கோப்பாக வைக்க உதவும் பட்டியலில் காய்கறிகள் முக்கிய இடம் பிடிக்கிறது. முதலில் நேரம் தவறாமல் சாப்பிடப் பழகுங்கள். தினமும் குறிப்பிட்ட அளவை சாப்பிடப் பழகுங்கள். அதாவது ஒருநாள் நன்றாக பசிக்குது என்பதற்காக அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். இடையில் பசி எடுக்கும்போது... வீணாக சிப்ஸ், பீட்சா என கண்டதையும் வாங்கி சாப்பிடாதீர்கள். பசி எடுக்கும்போதே பழங்கள், ஜூஸ் என்று சாப்பிடுங்கள். அசைவ உணவு வகைகளை தேர்ந்தெடுத்து குறைந்த அளவில் சாப்பிடுவது நல்லது. அதாவது சிக்கன், மட்டன் வகை உணவுகளில் கொழுப்பு, எண்ணை தவிர்த்து, வேகவைத்து சாப்பிடலாம். மீன் வகையில் பொரித்த, வறுத்த அயிட்டங்களை தவிர்க்கலாம்.

குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் பழக்கம்

மமமமமமமமமமமமமமமமமமமமமமா்்்்்்்்மமமமமமமம குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் பழக்கம் புது ஜீவனை பிரசவித்து இந்த உலகத்திற்கு அதனை அறிமுகப்படுத்தும் தாய்தான், அதற்கு முதல் உணவைப் புகட்டுகிறாள். அது, தாய்ப்பால். உயிரோடு, தன்உணர்வோடு கலந்த உணவை ஊட்டும் தாய், மாதங்கள் பல கடந்த பின்பு உடலில் இருந்து குழந்தையைப் பிரித்து, புதுப்புது ருசியை அறிமுகம் செய்கிறாள். குழந்தைக்காக ஒவ்வொரு காய்கறியையும் பார்த்து பார்த்து வாங்கி, எதிலெல்லாம் என்னென்ன சத்து இருக்கிறது என்பதை உணர்ந்து, அதை ருசியோடு சமைத்துக் கொடுக்கிறாள். என்னதான் சத்து இருந்தாலும், எவ்வளவுதான் அது சுவையாக இருந்தாலும் "இதோ சமைத்து வைத்திருக்கிறேன். எடுத்து சாப்பிடு" என்று தாய் கூறுவதில்லை. சாப்பிடுவதற்கான சூழ்நிலை, மனநிலை, சுற்றுச்சூழல் போன்றவை குழந்தைக்கு ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்காக நிலாவைக்காட்டி, பறவைகள்-பிராணிகளைக் காட்டி, பாட்டுப்பாடி, கதைகள் சொல்லி தாய் உணவூட்டுகிறார். இது தாய்மையின் இன்றியமையாத பண்பு. வீடு எதனால் அமைக்கப்பட்டது? என்ற கேள்வியை உங்களிடம் கேட்டால், செங்கல், சிமெண்ட், இரும்பு... என்ற கட்டுமானப் பொருட்களால் ஆனது என்று பதிலளித்தால், பதில் சரி. ஆனால் அவை அனைத்தும் உயிரற்றவை. அன்பு என்ற உயிர் அதனுள் இருந்தால் மட்டுமே வீடு வீடாக அமையும். இல்லாவிட்டால் கல்லறைக்கும்-வீட்டிற்கும் வித்தியாசம் இருக்காது. இப்போது பெரும்பாலான வீடுகள், நவீன சவுகரியமான கல்லறைகள் போலத்தான் இருந்து கொண்டிருக்கின்றன. உணவு எதனால் அமைகிறது? என்ற கேள்வியைக் கேட்டால், "பிரியாணியில் இந்தெந்த பொருட்கள் எல்லாம் சேர்கிறது. ஜாங்கிரியில் இந்தெந்த பொருளெல்லாம் சேர்க்கப்படுகிறது" என்பது அதற்கான தத்துவார்த்தமான பதில் அல்ல. இத்தனை பொருட்களையும் கலந்தால் ஒரு உணவு தயாராகிவிடும் என்பது உண்மைதான். ஆனால் அந்த உணவு சரியான நேரத்தில், சரியான சூழலில் அன்போடும், பாசத்தோடும் பரிமாறப்பட வேண்டும். அப்படியானால்தான் உடலுக்கும், மனதுக்குக்கும் பலன் தருவதாக அந்த உணவு அமையும். வீட்டிற்கும், உணவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. குடும்பமே ஒன்றாவதற்கு வீடு ஒரு கூடு போல் இருப்பது இன்றும் தொடர்கிறது. ஆனால் உணவை ஒன்று கூடி உண்ணும் விஷயத்தில் பழைய காலத்திற்கும் இப்போதைக்கும் நிறைய வேறுபாடு. முன்பெல்லாம் பசியை தாங்கிக்கொண்டு ஒருவருக்காக இன்னொருவர் காத்திருப்பதும், எல்லோரும் வந்த பின்பு ஒன்றாக அமர்ந்து உண்ணுவதும் பாசத்தின் மிகப்பெரிய வெளிப்பாடாக இருந்தது. குழந்தை பசிக்கிறது என்று தாயிடம் சொன்னாலும், "அப்பா வரட்டும். அது வரை பொறுத்திருப்போம்" என்று தாய் காத்திருப்பார். குழந்தை பசிக்கிறது என்று சொல்லும் அதே நேரத்தில் தனது பசியையும் தாயார் உணர்ந்திருக்கவே செய்வார். அதே பசி கணவருக்கும் இருக்கும் என்பதும் அவளுக்குத் தெரியும். கணவர் என்ற ஒருவருக்காக தானும், குழந்தையும் பசியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆயினும் பசியை போக்குவது மட்டுமே உணவின் நோக்கம் அல்ல, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும்போதுதான் உணவின் முழுமையை உணர்ந்து கொள்ள முடியும் என்று தாய்மார்கள் நம்பினார்கள். ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் குடும்பக்காட்சி ஒன்றை உங்கள் மனக்கண் முன்னே கொண்டு வந்து பாருங்கள். மனைவி, கணவருக்கு உணவைப் பரிமாறும்போது, "இது உங்களுக்கு ரொம்ப பிடிக்குமேன்னு வாங்கிவந்து, லேசா வதக்கி டேஸ்டா பண்ணியிருக்கேன். சாப்பிட்டு பாருங்க..." என்பாள். "எனக்காகவே சிரத்தை எடுத்து பண்ணியிருக்கே. உனக்கு கொஞ்சம் காரம் தூக்கலா இருக்கணுமே. உனக்காக இன்னும் கொஞ்சம் காரம் சேர்த்திருக்கலாமே.."" என்று பதிலுக்கு கணவர் சொல்வார். "அம்மா நீங்க சமைத்து ரொம்ப களைத்து போயிருப்பீங்க.. நீங்களும் உட்காருங்க நான் எல்லோருக்கும் பரிமாறுகிறேன்.." என்பான், மகன். இப்படி ஒருவருக்கொருவர் அன்பால் போட்டி போடும் போது, அங்கே அன்னியோன்யம் உருவாகும். அதற்கு முன்புவரை அவர்களுக்குள் ஏதாவது மனவிலகல் இருந்திருந்தாலும், ஒன்றாக இருந்து உணவருந்தும் போது அந்த நெருக்கடி மறைந்து நெருக்கம் தோன்றியிருக்கும். ஹோட்டலில் கூட இப்படி ஒன்றாகச் சாப்பிடலாமே! என்று நீங்கள் கேட்கலாம். நான்கு பேர்களைக் கொண்ட உங்கள் குடும்பம் ஹோட்டல் மேஜையைச் சுற்றி உட்காருகிறது. என்னென்ன பொருட்கள் கலந்தது, யார் தயாரித்தது, யாருக்காக தயாரித்தது, எப்படி தயாரித்தது... எதுவுமே தெரியாது. ஆனால் நீங்கள் கேட்ட பெயருள்ள உணவு உங்கள் முன்னால் இருக்கும். அங்கே சாப்பாட்டு போட்டி நடந்து கொண்டிருப்பது போல் பலரும் பலவிதத்தில் உண்டு கொண்டிருப்பார்கள். நீங்களும் அந்த வேகத்திற்கு தக்கபடி உண்டுவிட்டு, எழுந்து போவீர்கள். அங்கே உங்களுக்கு பேச நேரம் இருக்காது. உங்கள் உணர்வுகளை பங்கிட்டுக்கொள்ள வாய்ப்பும் இருக்காது. அங்கே பசி மட்டுமே ஆறும். அன்பு மேம்பாடென்று எதுவும் இருக்காது. பிரச்சினைகள் நிறைந்த இரண்டு குடும்பத்தினரை ஒன்றாக்க விரும்பும் மூன்றாவது குடும்பத்தார், இரு குடும்பத்தினரையும் அழைத்து விருந்து வைப்பது கிராமத்து வழக்கம். உணவருந்திக் கொண்டே பேசும்போது முக்கியமான பிரச்சினைகள்கூட எளிதாகி, தீர்வை நோக்கிச் சென்று கொண்டிருக்கும். இப்போது எத்தனை குடும்பங்களில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள்? 18.6 சதவீத குடும்பங்களில் மட்டுமே தினமும் ஒரு நேரம் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள். வாரத்தில் ஒரு நாள் மட்டும் ஒரு நேரம் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது 22.1 சதவீதம்பேர். மாதத்தில் ஒரு தடவை ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறவர்கள் 53 சதவீதம் பேர். நாளடைவில் இந்த சதவீதத்திலும் பெரும் சரிவு ஏற்பட்டுவிடும் போல் தெரிகிறது. ஒன்றாக இருந்து உண்டால்தான் உறவுகளை மேம்படுத்த முடியும் என்பதை உலகமே புரிந்து கொண்டதால் இப்போது உலகநாடுகள் பலவற்றில் "பேம்லி மீல்ஸ்" திட்டம் வலியுறுத்தப்பட்டுவருகிறது. அமெரிக்காவில் இதை பெரிய அளவில் பிரபலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நாளைய வாழ்க்கையை வெற்றிகரமாக்க இன்றே திட்டமிட்டு செயல்பட வேண்டியவர்களாக இருப்பவர்கள் டீன்ஏஜினர். இந்த இளம்பருவத்தினர்தான் உணவில் அதிக அளவில் அலட்சியமாக இருந்து உடலைக் கெடுத்துக் கொள்கிறார்கள். வீட்டில் உணவருந்துவதே தேவையா என்ற கேள்வியுடன் இவர்கள் இருந்து கொண்டிருப்பதால், சாப்பாடு மட்டுமின்றி ஆரோக்கியமும் இரண்டாம் பட்சமாகி விடுகிறது. ஒன்றாக உணவருந்தும் பழக்கத்தை ஏற்படுத்தினால் இவர்கள் சமச்சீரான சத்துக்கள் கொண்ட உணவை, சரியான நேரத்தில் சாப்பிடும் சூழ்நிலை உருவாகும். இளம் பெண்களிடம் "பிரேக் பாஸ்ட் ஸ்கிப்பிங்" என்ற காலை உணவை தவிர்க்கும் பழக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. காலையில் கல்லூரி செல்லும் மாணவிகளும், வேலைக்கு செல்லும் பெண்களும் காலை உணவைத் தவிர்ப்பதை ஒரு "நவீன கால நாகரீகம்" போல் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் ஏற்படும் உடல்பாதிப்புகள் இன்று நாளை அல்ல... பிற்காலத்தில்தான் முழுமையாகப் புரியத் தொடங்கும். குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் இவர்களும் சரியான நேரத்திற்கு சாப்பிட்டு விடுவார்கள். ஒரு குடும்பமே ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்போது உணவை மட்டுமல்ல, மனதையும் பங்கிடுகிறோம். பேசுவதற்கு நேரமில்லாமல் போய்விடுவதாலும், ஒருவரைப் பற்றி இன்னொருவர் தவறாகப் புரிந்து கொள்வதாலும்தான் பெரும்பாலான குடும்பங்களில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் போது பல்வேறு விஷயங்கள் பற்றி பேசுகிறோம். ஒருவர் மீது இருக்கும் குறைபாட்டையும் எடுத்து வைப்போம். அதன் மூலம் பிரச்சினைகள் சுமூகமாக களையப்படும். மனபாரம் குறைந்து, மகிழ்ச்சி பெருகும். - உணவே மருந்து download from http://bit.ly/1OeJioY

குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் பழக்கம்

மமமமமமமமமமமமமமமமமமமமமமா்்்்்்்்மமமமமமமம குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் பழக்கம் புது ஜீவனை பிரசவித்து இந்த உலகத்திற்கு அதனை அறிமுகப்படுத்தும் தாய்தான், அதற்கு முதல் உணவைப் புகட்டுகிறாள். அது, தாய்ப்பால். உயிரோடு, தன்உணர்வோடு கலந்த உணவை ஊட்டும் தாய், மாதங்கள் பல கடந்த பின்பு உடலில் இருந்து குழந்தையைப் பிரித்து, புதுப்புது ருசியை அறிமுகம் செய்கிறாள். குழந்தைக்காக ஒவ்வொரு காய்கறியையும் பார்த்து பார்த்து வாங்கி, எதிலெல்லாம் என்னென்ன சத்து இருக்கிறது என்பதை உணர்ந்து, அதை ருசியோடு சமைத்துக் கொடுக்கிறாள். என்னதான் சத்து இருந்தாலும், எவ்வளவுதான் அது சுவையாக இருந்தாலும் "இதோ சமைத்து வைத்திருக்கிறேன். எடுத்து சாப்பிடு" என்று தாய் கூறுவதில்லை. சாப்பிடுவதற்கான சூழ்நிலை, மனநிலை, சுற்றுச்சூழல் போன்றவை குழந்தைக்கு ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்காக நிலாவைக்காட்டி, பறவைகள்-பிராணிகளைக் காட்டி, பாட்டுப்பாடி, கதைகள் சொல்லி தாய் உணவூட்டுகிறார். இது தாய்மையின் இன்றியமையாத பண்பு. வீடு எதனால் அமைக்கப்பட்டது? என்ற கேள்வியை உங்களிடம் கேட்டால், செங்கல், சிமெண்ட், இரும்பு... என்ற கட்டுமானப் பொருட்களால் ஆனது என்று பதிலளித்தால், பதில் சரி. ஆனால் அவை அனைத்தும் உயிரற்றவை. அன்பு என்ற உயிர் அதனுள் இருந்தால் மட்டுமே வீடு வீடாக அமையும். இல்லாவிட்டால் கல்லறைக்கும்-வீட்டிற்கும் வித்தியாசம் இருக்காது. இப்போது பெரும்பாலான வீடுகள், நவீன சவுகரியமான கல்லறைகள் போலத்தான் இருந்து கொண்டிருக்கின்றன. உணவு எதனால் அமைகிறது? என்ற கேள்வியைக் கேட்டால், "பிரியாணியில் இந்தெந்த பொருட்கள் எல்லாம் சேர்கிறது. ஜாங்கிரியில் இந்தெந்த பொருளெல்லாம் சேர்க்கப்படுகிறது" என்பது அதற்கான தத்துவார்த்தமான பதில் அல்ல. இத்தனை பொருட்களையும் கலந்தால் ஒரு உணவு தயாராகிவிடும் என்பது உண்மைதான். ஆனால் அந்த உணவு சரியான நேரத்தில், சரியான சூழலில் அன்போடும், பாசத்தோடும் பரிமாறப்பட வேண்டும். அப்படியானால்தான் உடலுக்கும், மனதுக்குக்கும் பலன் தருவதாக அந்த உணவு அமையும். வீட்டிற்கும், உணவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. குடும்பமே ஒன்றாவதற்கு வீடு ஒரு கூடு போல் இருப்பது இன்றும் தொடர்கிறது. ஆனால் உணவை ஒன்று கூடி உண்ணும் விஷயத்தில் பழைய காலத்திற்கும் இப்போதைக்கும் நிறைய வேறுபாடு. முன்பெல்லாம் பசியை தாங்கிக்கொண்டு ஒருவருக்காக இன்னொருவர் காத்திருப்பதும், எல்லோரும் வந்த பின்பு ஒன்றாக அமர்ந்து உண்ணுவதும் பாசத்தின் மிகப்பெரிய வெளிப்பாடாக இருந்தது. குழந்தை பசிக்கிறது என்று தாயிடம் சொன்னாலும், "அப்பா வரட்டும். அது வரை பொறுத்திருப்போம்" என்று தாய் காத்திருப்பார். குழந்தை பசிக்கிறது என்று சொல்லும் அதே நேரத்தில் தனது பசியையும் தாயார் உணர்ந்திருக்கவே செய்வார். அதே பசி கணவருக்கும் இருக்கும் என்பதும் அவளுக்குத் தெரியும். கணவர் என்ற ஒருவருக்காக தானும், குழந்தையும் பசியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆயினும் பசியை போக்குவது மட்டுமே உணவின் நோக்கம் அல்ல, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும்போதுதான் உணவின் முழுமையை உணர்ந்து கொள்ள முடியும் என்று தாய்மார்கள் நம்பினார்கள். ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் குடும்பக்காட்சி ஒன்றை உங்கள் மனக்கண் முன்னே கொண்டு வந்து பாருங்கள். மனைவி, கணவருக்கு உணவைப் பரிமாறும்போது, "இது உங்களுக்கு ரொம்ப பிடிக்குமேன்னு வாங்கிவந்து, லேசா வதக்கி டேஸ்டா பண்ணியிருக்கேன். சாப்பிட்டு பாருங்க..." என்பாள். "எனக்காகவே சிரத்தை எடுத்து பண்ணியிருக்கே. உனக்கு கொஞ்சம் காரம் தூக்கலா இருக்கணுமே. உனக்காக இன்னும் கொஞ்சம் காரம் சேர்த்திருக்கலாமே.."" என்று பதிலுக்கு கணவர் சொல்வார். "அம்மா நீங்க சமைத்து ரொம்ப களைத்து போயிருப்பீங்க.. நீங்களும் உட்காருங்க நான் எல்லோருக்கும் பரிமாறுகிறேன்.." என்பான், மகன். இப்படி ஒருவருக்கொருவர் அன்பால் போட்டி போடும் போது, அங்கே அன்னியோன்யம் உருவாகும். அதற்கு முன்புவரை அவர்களுக்குள் ஏதாவது மனவிலகல் இருந்திருந்தாலும், ஒன்றாக இருந்து உணவருந்தும் போது அந்த நெருக்கடி மறைந்து நெருக்கம் தோன்றியிருக்கும். ஹோட்டலில் கூட இப்படி ஒன்றாகச் சாப்பிடலாமே! என்று நீங்கள் கேட்கலாம். நான்கு பேர்களைக் கொண்ட உங்கள் குடும்பம் ஹோட்டல் மேஜையைச் சுற்றி உட்காருகிறது. என்னென்ன பொருட்கள் கலந்தது, யார் தயாரித்தது, யாருக்காக தயாரித்தது, எப்படி தயாரித்தது... எதுவுமே தெரியாது. ஆனால் நீங்கள் கேட்ட பெயருள்ள உணவு உங்கள் முன்னால் இருக்கும். அங்கே சாப்பாட்டு போட்டி நடந்து கொண்டிருப்பது போல் பலரும் பலவிதத்தில் உண்டு கொண்டிருப்பார்கள். நீங்களும் அந்த வேகத்திற்கு தக்கபடி உண்டுவிட்டு, எழுந்து போவீர்கள். அங்கே உங்களுக்கு பேச நேரம் இருக்காது. உங்கள் உணர்வுகளை பங்கிட்டுக்கொள்ள வாய்ப்பும் இருக்காது. அங்கே பசி மட்டுமே ஆறும். அன்பு மேம்பாடென்று எதுவும் இருக்காது. பிரச்சினைகள் நிறைந்த இரண்டு குடும்பத்தினரை ஒன்றாக்க விரும்பும் மூன்றாவது குடும்பத்தார், இரு குடும்பத்தினரையும் அழைத்து விருந்து வைப்பது கிராமத்து வழக்கம். உணவருந்திக் கொண்டே பேசும்போது முக்கியமான பிரச்சினைகள்கூட எளிதாகி, தீர்வை நோக்கிச் சென்று கொண்டிருக்கும். இப்போது எத்தனை குடும்பங்களில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள்? 18.6 சதவீத குடும்பங்களில் மட்டுமே தினமும் ஒரு நேரம் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள். வாரத்தில் ஒரு நாள் மட்டும் ஒரு நேரம் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது 22.1 சதவீதம்பேர். மாதத்தில் ஒரு தடவை ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறவர்கள் 53 சதவீதம் பேர். நாளடைவில் இந்த சதவீதத்திலும் பெரும் சரிவு ஏற்பட்டுவிடும் போல் தெரிகிறது. ஒன்றாக இருந்து உண்டால்தான் உறவுகளை மேம்படுத்த முடியும் என்பதை உலகமே புரிந்து கொண்டதால் இப்போது உலகநாடுகள் பலவற்றில் "பேம்லி மீல்ஸ்" திட்டம் வலியுறுத்தப்பட்டுவருகிறது. அமெரிக்காவில் இதை பெரிய அளவில் பிரபலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நாளைய வாழ்க்கையை வெற்றிகரமாக்க இன்றே திட்டமிட்டு செயல்பட வேண்டியவர்களாக இருப்பவர்கள் டீன்ஏஜினர். இந்த இளம்பருவத்தினர்தான் உணவில் அதிக அளவில் அலட்சியமாக இருந்து உடலைக் கெடுத்துக் கொள்கிறார்கள். வீட்டில் உணவருந்துவதே தேவையா என்ற கேள்வியுடன் இவர்கள் இருந்து கொண்டிருப்பதால், சாப்பாடு மட்டுமின்றி ஆரோக்கியமும் இரண்டாம் பட்சமாகி விடுகிறது. ஒன்றாக உணவருந்தும் பழக்கத்தை ஏற்படுத்தினால் இவர்கள் சமச்சீரான சத்துக்கள் கொண்ட உணவை, சரியான நேரத்தில் சாப்பிடும் சூழ்நிலை உருவாகும். இளம் பெண்களிடம் "பிரேக் பாஸ்ட் ஸ்கிப்பிங்" என்ற காலை உணவை தவிர்க்கும் பழக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. காலையில் கல்லூரி செல்லும் மாணவிகளும், வேலைக்கு செல்லும் பெண்களும் காலை உணவைத் தவிர்ப்பதை ஒரு "நவீன கால நாகரீகம்" போல் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் ஏற்படும் உடல்பாதிப்புகள் இன்று நாளை அல்ல... பிற்காலத்தில்தான் முழுமையாகப் புரியத் தொடங்கும். குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் இவர்களும் சரியான நேரத்திற்கு சாப்பிட்டு விடுவார்கள். ஒரு குடும்பமே ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்போது உணவை மட்டுமல்ல, மனதையும் பங்கிடுகிறோம். பேசுவதற்கு நேரமில்லாமல் போய்விடுவதாலும், ஒருவரைப் பற்றி இன்னொருவர் தவறாகப் புரிந்து கொள்வதாலும்தான் பெரும்பாலான குடும்பங்களில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் போது பல்வேறு விஷயங்கள் பற்றி பேசுகிறோம். ஒருவர் மீது இருக்கும் குறைபாட்டையும் எடுத்து வைப்போம். அதன் மூலம் பிரச்சினைகள் சுமூகமாக களையப்படும். மனபாரம் குறைந்து, மகிழ்சி பெருகும்

வீட்டுக்குறிப்பு

?????????????????????? வீட்டுக்குறிப்பு மாங்காய், எலுமிச்சம்பழம் போன்றவற்றை நீண்ட நாட்கள் பாதுகாக்க வேண்டுமாயின் நறுக்கி, வெயிலில் காய வைத்து வற்றல் போல் உலர்த்திக் கொள்ளவும். பின் எப்போது ஊறுகாய் வேண்டுமோ அப்போது வெந்நீரில் ஊற வைத்து ஊறுகாய் மாதிரி தாளித்து உபயோகிக்கலாம்.

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு புதிய பகுதியாக தினம் ஒரு ஜெபக்குறிப்பு அறிமுகமாகிறது ஜெப வீரர்கள் இதனை மனதில் கொண்டு, அந்தந்த நாளில் அந்தந்தக் காரியத்திற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார"இந்தியாவின் இயற்கை வளங்களை கொள்ளையாட எத்தனிக்கிற கயவர்கள் மனம் திரும்ப" ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ???????????????????????????

சங்கீதம் 119 :141-150

நீ சிறியவனும் அசட்டை பண்ணப்பட்டவனுமாயிருக்கிறாய், ஆனாலும் கர்த்தருடைய கட்டளைகளை மறவாதே. கர்த்தருடைய நீதி நித்திய நீதி, அவருடைய வேதம் சத்தியம். இக்கட்டும் நெருக்கமும் உன்னைப் பிடித்தது, ஆனாலும் கர்த்தருடைய கற்பனைகள் உன் மனமகிழ்ச்சி. கர்த்தருடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும், உன்னை உணர்வுள்ளவனாக்கும், அப்பொழுது நீ பிழைத்திருப்பாய். நீ முழு இருதயத்தோடு கூப்பிடு. கர்த்தர் உன் ஜெபத்தைக்கேட்பார், அவருடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவாயாக. நீ கர்த்தரை நோக்கிக் கூப்பிடு. அவர் உன்னை இரட்சிப்பார், அப்பொழுது நீ அவருடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவாய். அதிகாலையில் நீ எழுந்து சத்தமிடு.கர்த்தருடைய வசனத்துக்குக் காத்திருப்பாயாக. கர்த்தருடைய வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த ஜாமங்களுக்குமுன்னே உன் கண்கள் விழித்துக்கொள்ளட்டும். கர்த்தருடைய கிருபையின்படி உன் சத்தத்தைக் கேட்பார், கர்த்தருடைய நியாயத்தின்படி உன்னை உயிர்ப்பிப்பார். தீவினையைப் பின்பற்றுகிறவர்கள் சபிக்கிறார்கள், அவர்கள் கர்த்தருடைய வேதத்துக்குத் தூரமாயிருக்கிறார்கள். சங்கீதம் 119 :141-150

Saturday, 17 September 2016

பாதுகாப்பு வீரர்களுக்காக!

தததததததததததததததததததததததததததததததததததததததத பாதுகாப்பு வீரர்களுக்காக! நமது நாட்டில் மிகப்பெரிய இரானுவப் படை செயல் பட்டு வருகிறது. நமதுதேச எல்லையை இரவு பகல் பாராது அவர்கள் பாதுகாத்து வருகிறார்கள். நமது நாட்டின் முப்படை தளபதிகளுக்காக, இராணுவவீரர்களுக்காக, அவர்கள் குடும்பங்களுக்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். பலராணுவ விரர்கள் குடும்பத்தைவிட்டு பிரிந்திருப்பதால், மன உளைச்சளுக்கு ஆளாகியுள்ளனர் சிலர் தற்கெலையும் செய்துள்ளனர். இதற்கு தீர்வு உண்டாக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். இராணுவ வீரர்கள் பணிசெய்கிற இடத்தில், தேவபாதுகாப்பு இருக்க, எதிரிகளின் சூழ்ச்சிகளுக்கு விலக்கி, பாதுகாக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். கப்பற்படையின் ரோந்து பணிகளுக்காக, கடற்கரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். விமானப்படை வீர்களுக்காக, அனைத்து விமானிகளுக்காக, விமான விபத்துக்கள் தவிர்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். புதிய ரக கருவிகள், ஆயுதங்கள், எதிரிகளை முறியடிக்கும் திறன்படைத்த பீரங்கிகள் வாங்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். படைவீரர் மத்தியில் ஜெபிக்கிறவர்கள் எழும்பிட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

நமது உடலில் உள்ள வெப்பத்தை வெளியேற்ற

அப்பாடா... என்னா வெயில் என எல்லோருமே கூறும் அளவு, சுட்டெரிக்கும் கத்தரி வெயில் தொடங்கி விட்டது. இந்த வெயிலில் உங்கள் உடல் நலனை சீராக வைத்திருக்க, என்ன சாப்பிடலாம் என்ன சாப்பிடக்கூடாது என ஒரு அட்டவணை உருவாக்கிக் கொள்வோமா? ஒவ்வொரு சீஸனுக்கும் ஏற்ற வகையில் நமக்கு பழங்கள் கிடைக்கின்றன. பழங்களும் பச்சைக்காய்கறிகளும் அதிக அளவில் உணவில் சேர்க்க வேண்டியது மிகவும் முக்கியம். இவற்றிலுள்ள மினரல்களும் விட்டமின்களும் நமது உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும், அதுமட்டுமல்ல இதில் உள்ள நீர்ச் சத்தும் உடலுக்கு குளுமையை அளிக்கும். இவை நமது உடலில் உள்ள வெப்பத்தை வெளியேற்ற உதவும். நிறைய தண்ணீர் குடியுங்கள். தாகமே இல்லையென்றாலும், நிறையத் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இந்த சம்மருக்கு முக்கியமான தாரகமந்திரம் குறைவாக சாப்பிட்டு நிறைவாக வாழுங்கள். சரி பழம், பச்சைக்காய்கறி சாப்பிட வேண்டும் என்று பார்த்தோம், எந்த பழம், காய் என்று பார்ப்போமா? பழங்களில் பெரிக்கள் - ஸ்ட்ராபெரி, ப்ளூபெரி, ப்ளாக்பெரி, கூஸ்பெரி, ராஸ்ப்பெரி, பப்பாளி, மாம்பழம், கிர்ணிப்பழம், தர்பூசணி, ஆப்பிள், செர்ரி, காய்கறிகளில் பாகற்காய், கோஸ், காலிப்ளவர், வெள்ளரிக்காய், பீன்ஸ், புதினா போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். ஆல்கஹால் உள்ள பானங்கள், சாப்ட் டிரிங்ஸ் குடிப்பதை தவிருங்கள், ப்ரெஷ் ஜூஸ் குடிக்கத் தொடங்குங்கள். மிகவும் குளிர்ச்சியாக பானம் அருந்துவதை தவிருங்கள். அவ்வாறு குடிப்பது அந்த நேரத்திற்கு குளிர்ச்சியை ஏற்படுத்தினாலும் உடல் நலத்துக்கு கெடுதலையே விளைவிக்கும். லெமன் ஜூஸ், இளநீர் குடியுங்கள். "மோர் பெருக்கி நெய்யுருக்கி" என்பார்கள், நீர்த்த மோர் குடியுங்கள். சர்க்கரை அதிகம் சேர்த்துக்கொள்ளாதீர்கள். வடை, அப்பளம், சமோசா, சிப்ஸ், பஜ்ஜி போன்ற எண்ணெய் பண்டங்களையும் தவிருங்கள். சூடான, மசாலா உணவுப்பதார்த்தங்களை அறவே தவிருங்கள். உணவில் சாலட் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் தேனும், அரை ஸ்பூன் எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் குடித்து வந்தால் உடல் குளிர்ச்சியாகி ஆரோக்கியம் கிடைக்கும்.

வீட்டுக்குறிப்பு

?????????????????????? வீட்டுக்குறிப்பு பயறு வகைகளை சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து கிளறி வைப்பதால் அவை பல நாட்கள் வரை புழுத்துப் போகாமல் இருக்கும்.

வீட்டுக்குறிப்பு

பயறு வகைகளை சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து கிளறி வைப்பதால் அவை பல நாட்கள் வரை புழுத்துப் போகாமல் இருக்கும்.

Friday, 16 September 2016

சங்கீதம் 119 :111-120

கர்த்தருடைய சாட்சிகளை நித்திய சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறாய், அவைகளே உன் இருதயத்தின் மகிழ்ச்சி. முடிவுபரியந்தம் இடைவிடாமல் கர்த்தருடைய பிரமாணங்களின்படிசெய்ய உன் இருதயத்தைச் சாய்த்துக்கொள். வீண் சிந்தனைகளை நீ வெறுத்து, கர்த்தருடைய வேதத்தில் பிரியப்படு. உன் மறைவிடமும் உன் கேடகமும் கர்த்தரே, கர்த்தருடைய வசனத்துக்குக் காத்திருக்கிறாய். பொல்லாதவர்கள், உன்னைவிட்டு அகன்றுபோவார்கள், உன் தேவனுடைய கற்பனைகளை நீ கைக்கொள்ளுவாய். நீ பிழைத்திருப்பதற்கு கர்த்தருடைய வார்த்தையின்படி உன்னை ஆதரித்தருளுவார், உன் நம்பிக்கை விருதாவாய்ப்போக உன்னை வெட்கத்திற்கு உட்படுத்தமாட்டார். உன்னை கர்த்தர் ஆதரித்தருளுவார், அப்பொழுது நீீ இரட்சிக்கப்பட்டு, எக்காலமும் கர்த்தருடைய பிரமாணங்களின்பேரில் நோக்கமாயிருப்பாய். கர்த்தருடைய பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற யாவரையும் கர்த்தர் மிதித்துப்போடுவார், அவர்களுடைய உபாயம் வெறும் பொய்யே. கர்த்தர் பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரையும் களிம்பைப்போல அகற்றிவிடுவார், ஆகையால் கர்த்தருடைய சாட்சிகளில் பிரியப்படு. கர்த்தருக்குப் பயப்படும் பயத்தால் உன் உடம்பு சிலிர்க்கிறது, கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறாய். சங்கீதம் 119 :111-120

கலோரி

அதென்ன கலோரி... ஏதோ புதுசா எல்லாம் சொல்றாரே டாக்டர் என்று பலரும் எண்ணலாம். உடல் எடை கூடிவிட்டால், சில கிலோ எடையை குறைக்க வேண்டுமானால், முதலில் அதற்கு கலோரியை குறைக்க வேண்டும். அதுக்காகத்தான், நம்மில் சிலர், உடற்பயிற்சி, ட்ரெட்மில், வாக்கிங் என்று என்னவெல்லாமோ செய்கின்றனர். அப்படி கலோரிக்களை "எரிக்க எரிக்க"த்தான் உடலில் எடை குறையும். நீங்களும் "ஸ்லிம்"மாக இருக்க முடியும். சரி, கலோரி (Calorie) என்றால் என்ன தெரியுமா? கலோரி என்பது உடலுக்கு தேவைப்படும் எரிசக்தி. அதாவது, உடலில் சீரான இயக்கத்துக்கு இந்த கலோரியும் முக்கிய பங்கை செலுத்துகிறது. வியர்வை சிந்தி வேலை செய்வோருக்கு அதிகமாகவும், "சீட்"டில் உட்கார்ந்து வேலை செய்வோருக்கு குறைவாகவும் தேவைப்படும். கர்ப்பிணிப் பெண்கள் உட்பட சில பெண்களுக்கு என்று இவ்வளவு கலோரி என்று கணக்கு உண்டு. "டீன் ஏஜ்" வரை கலோரி கணிசமாக தேவை தான். ஆனால், நாற்பது வயதை தாண்டிவிட்டால், உடல் எடை கூடிவிட்டால், "அடடா, கொழுப்பு கூடிவிட்டதே" என்று கலோரியை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கலோரி என்றால், எங்கிருந்தும் கிடைக்கவில்லை. நாம் உண்ணும் உணவில் இருந்து தான் கிடைக்கிறது. நாம் உண்ணும் உணவுகளில் கார்போஹைட்ரேட் மூலம் 50 முதல் 60 சதவீதம் வரை கலோரி கிடைக்கிறது. புரோட்டீன் மூலம் 20 சதவீதம், கொழுப்பு மூலம் 15 முதல் 20 சதவீதம் கிடைக்கிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு நாளுக்கு 300 கலோரி தினமும் அதிகமாக வேண்டும். மற்றவர்களுக்கு வயதுக்கு, உடல் உழைப்புக்கு ஏற்ப கலோரி தேவைப்படுகிறது. உதாரணமாக 16 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு தினமும் கலோரி தேவை, அவர்கள் முழு உடல் எடைக்கு 2200 கலோரி தேவை. ஆனால், உடல் எடை கூடிவிட்டது என்று தெரியும் போது, கலோரியை குறைக்க என்ன செய்யலாம் என்று டாக்டர்களிடம் தான் கேட்க வேண்டும். ஒருவருக்கு எவ்வளவு கலோரி தினமும் தேவைப்படுகிறது என்பதை "ஹாங்ஸ் பெனடிக்ட் பார்முலா"படி டாக்டர்கள் முடிவு செய்கின்றனர். உடலுக்கு கலோரியும் தேவை, உடல் எடையும் கூடிவிடக்கூடாது என்ற அடிப்படையில் இந்த கலோரி நிர்ணயம் செய்யப்படுகிறது. * உணவு வகைகளில் கார்போஹைட்ரேட் (Carbohydrates) , புரோட்டீன், கொழுப்புகள் ஆகியவற்றில் இருந்து கலோரி கிடைக்கிறது. * உடலின் எரிசக்தியான கலோரி (Calorie), பல வகை இயக்கங்களுக்கும் தேவை என்றாலும், அது அதிகமாகிவிட்டால், கொழுப்பாக மாறிவிடும். * புரோட்டீன் (protein), கார்போஹைட்ரேட்டின் ஒரு கிராமில் நான்கு கலோரி (Calorie) உள்ளது. கொழுப்பில் தான் அதிக கலோரி, அதாவது, ஒன்பது கலோரி உள்ளது. * நீங்கள் சாப்பிடும் முறை, அதனால், உடல் கூடுவது, உடல் உழைப்பு போன்றவற்றால், குறிப்பிட்ட அளவுக்கு மேல் உடலில் கலோரியை சேர்க்கக் கூடாது. சேர்ப்பதால் தான் கொழுப்பு கூடி, உடல் எடை கூடுகிறது. * ஒருவருக்கு எடை கூடிவிட்டது என்றால், அதை போக்க கலோரியை "எரிக்க" வேண்டும். உடற் பயிற்சி, ட்ரெட் மில், வாக்கிங் என்று வியர்வை சிந்தி தான் உடலில் "கொழுப்பாக தேங்கிய" கலோரியை எரிக்க முடியும். * ஒருவர் ஒரு பவுண்ட் எடையை குறைத்துள்ளார் என்றால், 3500 கலோரியை எரித்து இருக்கிறார் என்று அர்த்தம். உடற்பயிற்சியால், ஒரு வாரத்தில் இதை செய்ய முடியும். அதனால், உங்கள் உடல் இயக்கத்துக்கு தேவையான கலோரிகளை சீராக பராமரிக்க வேண்டும். அப்படி பராமரிக்க சீரான உணவுப் பழக்கங்கள் தேவை. அதிக கலோரி உள்ள உணவுகளாக சாப்பிட்டால், அதிக கலோரி சேர்ந்து, அதிக கொழுப்பு சேரும். அப்படி கொழுப்பு சேர்ந்தால், அப்புறம் கேட்கவே வேண்டாமே, ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி என்று தொடருமே. எந்த ஜூசில் அதிக கலோரி? காபி, டீ, ஜூஸ் சாப்பிடுவதில் தவறே இல்லை. ஆனால், அடிக்கடி அதிக கலோரி உள்ள ஜூஸ் சாப்பிடுவதும் கூடாது. அதுவும், எடை கூடிவிட்டது என்று தெரிந்தும், அதிக கலோரி உள்ள பானங்களை விழுங்கினால், அப்புறம் கொழுப்பு குவிந்துவிடும். ஆப்பிள் ஜூஸ் - 55 திராட்சை ஜூஸ் - 55 மாம்பழ ஜூஸ் - 58 ஆரஞ்சு ஜூஸ் - 44 பைனாப்பிள் ஜூஸ் - 52 கரும்பு ஜூஸ் - 36 தக்காளி ஜூஸ் - 17 தேங்காய் பால் - 76 இளநீர் - 24 காபி (ஒரு கப்) - 98 டீ (ஒரு கப்) - 79 கோக்கோ (ஒரு கப்) - 213 பசும்பால் - 65 ஸ்கிம் மில்க் - 35 தயிர் - 51 "ப்ரைடு" உணவுகளா? "டீன்" பெண்ணே உஷார் நீங்கள் ஆணா, பெண்ணா, டீன் ஏஜா, அடிக்கடி "ப்ரைடு" அயிட்டங்கள் வெளுத்துக்கட்டுவீர்களா? ஆண்களாக இருந்தால், அவர்களுக்கு ஐம்பதை தாண்டியவுடன் சர்க்கரை, ரத்த அழுத்தம் என்று தான் வரும். ஆனால் பெண்களுக்கு, அவர்கள் திருமணத்துக்கு பின்னர் "வேலையை" காட்டிவிடுமாம். இதை அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழக பொதுசுகாதார ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றனர். அவர்கள் சொல்லும் சில எச்சரிக்கை தகவல்கள்: * சில "ப்ரைடு" உணவு வகைகளில் அதிக கொழுப்பு உள்ளது. இது ஆரோக்கியமற்ற கொழுப்பு. ஆண்களை விட பெண்களை தான் அதிகம் பாதிக்கும். * இதை "டிரான்ஸ் ஃபேட்" என்பர். ப்ரைடு ரைஸ் (Fried rice) , ப்ரைடு சிக்கன் (Fried chicken), குக்கீஸ், பாஸ்ட்சுஸ் போன்றவற்றில் இருக்கும். இது ரத்த நாளங்களில் பதிந்து சுருக்கிவிடும். * கருப்பை தொடர்பான மலட்டுத் தன்மையை இந்த "ப்ரைடு" உணவுகளால் ஏற்படும் "டிரான்ஸ் பேட்" எனப்படும் கொழுப்பு அதிகரிக்கும். * வெறும் இரண்டு சதவீதம் அளவுக்கு இந்த கொழுப்பு சேர்ந்தால் போதும், அதனால் இரண்டு மடங்கு மலட்டுத் தன்மை

வீட்டுக்குறிப்பு

?????????????????????? வீட்டுக்குறிப்பு பட்டுச் சேலையை கடையிலிருந்து வாங்கி வந்தபடி அட்டைப் பையில் வைக்காமல் துணிப் பையில் வைக்கலாம்.

மயக்கமருந்தும் வேதாகமமும்!

மயக்கமருந்தும் வேதாகமமும்! மயக்கமருந்தை (Chloroform) கண்டுப்பிடித்த ஜேம்ஸ் சிம்சன் (இவரின் காலம் 1811-1870) என்ற விஞ்ஞானி (Edinburgh University) எடின்பர்க் யூனிவர்சிட்டியில் மகப்பேறு துறையில் பணியாற்றி வந்தார். இவரின் காலத்தில் அறுவை சிகிச்சை எல்லாம் நாலைந்து பேர் பிடித்து கொள்ள அய்யோ அம்மா என்ற கூக்குரலுடன் தான் நடக்கும். இது இவரின் மனதில் மிகுந்த வேதனையாக கொடுத்து கொண்டு இருந்தது. ஒரு நாளில் நமது பரிசுத்த வேதாகமத்தை திறந்து வாசித்துக் கொண்டிருந்தார்.. அவரின் கண்களுக்கு ஒரு வசனம் பளிச்சென்று அவரின் மூளையில் மின்னிற்று. ஆதியாகமம் 2ம் அதிகாரம் 21,22 வசனங்களில்... கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரை வரப் பண்ணினார்... அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து.... மனுஷியாக உருவாக்கி.... என்ற இந்த வார்த்தைகளை வாசித்தவுடன் அவர் உள்ளத்தில் ஒரு கேள்வி எழுந்தது.. தேவன் அயந்த நித்திரையை ஆதாமுக்கு வரவழைத்து விலா எலும்பில் ஒன்றை எடுக்கும்போது அவனுக்கு வலி தெரியவில்லையென்றால் அந்த அயர்ந்த நித்திரையில் அர்த்தம் என்ன ?? என்று யோசிக்க ஆரம்பித்தார். அதன் விளைவு 1847ல் (CHLOROFORM) குளோரோபோம் என்ற மயக்க மருந்தை கண்டுபிடித்தார்.. நமது வேதம் விஞ்ஞான ரீதியானது மட்டுமல்ல, அநேக விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கும் வித்திட்டுள்ளது என்றால் அது மிகையல்ல... ☘ அல்லேலுயா! ☘

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு புதிய பகுதியாக தினம் ஒரு ஜெபக்குறிப்பு அறிமுகமாகிறது ஜெப வீரர்கள் இதனை மனதில் கொண்டு, அந்தந்த நாளில் அந்தந்தக் காரியத்திற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார"இந்தியாவில் உணவு பற்றாக் குறை முற்றிலும் அகல" ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ???????????????????????????

டாஸ்மார்க் கடைகள் மூடல்

மமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமம டாஸ்மார்க் கடைகள் மூடல் தமிழகத்தில் புதிய அரசு ஆட்சிக்கு வந்தவுடன், 6,800 கடைகளில், முதற்கட்டமாக 500 டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்டது. அதைத் தொடர்ந்து, கோயில், பள்ளி, கல்லூரி, பஸ் நிலையம், குடியிருப்பு பகுதிகள் உள்ள கடைகளும் மூட ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த ஐகோர்ட் உத்தரவின் படி, 1,000 ககைள் மூடப்படலாம் எனத் தெரிகிறது. இதற்காக கருத்தாக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். குடிவெறி, மதுபாணம் இல்லாத தமிழகமாக நமது மானிலம் மாறிட கண்ணீரோடு ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். குடிவெறியினால் நடக்கும் கொலைகள், அராஜகங்கள், துன்மார்க்கங்கள் ஒழிய ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

Thursday, 15 September 2016

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு புதிய பகுதியாக தினம் ஒரு ஜெபக்குறிப்பு அறிமுகமாகிறது ஜெப வீரர்கள் இதனை மனதில் கொண்டு, அந்தந்த நாளில் அந்தந்தக் காரியத்திற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார"இந்தியாவில் வாழும் வெளி நாட்டவரின் பாதுகாப்பிற்காக" ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ???????????????????????????

சங்கீதம் 119 :101-110

கர்த்தருடைய வசனத்தை நீ காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் உன் கால்களை விலக்கு. அவர் உனக்குப் போதித்திருக்கிறபடியால், நீ அவருடைய நியாயங்களை விட்டு விலகாதே. அவருடைய வார்த்தைகள் உன் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள், உன் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும். அவரது கட்டளைகளால் உணர்வடைந்தாய், ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுத்துவிடு. அவருடைய வசனம் உன் கால்களுக்குத் தீபமும், உன் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. அவருடைய நீதி நியாயங்களைக்காத்து நடப்பேன் என்று ஆணையிடு, அதை நிறைவேற்று. நீ மிகவும் உபத்திரவப்படுகிறாய், கர்த்தர், அவருடைய வசனத்தின்படியே உன்னை உயிர்ப்பிப்பார். கர்த்தர், உன் வாயின் உற்சாகபலிகளை அங்கீகரித்து, அவரது நியாயங்களை உனக்குப் போதிப்பார். உன் பிராணன் எப்பொழுதும் உன் கையில் இருக்கிறது, ஆனாலும் அவருடைய வேதத்தை மறவாதே. துன்மார்க்கர் உனக்குக் கண்ணிவைக்கிறார்கள், ஆனாலும் நீஅவருடைய கட்டளைகளை விட்டு வழி தவறாதே. சங்கீதம் 119 :101-110

வீட்டுக்குறிப்பு

?????????????????????? வீட்டுக்குறிப்பு பட்டுப்புடவைகளை வருடக் கணக்கில் தண்­ணீரில் நனைக்காமல் வைக்கக்கூடாது. 3 மாதத்திற்கு ஒரு முறையாவது தண்­ணீரில் அலசி நிழலில் உலர விட்டு அயர்ன் செய்து வைக்க வேண்டும். அயர்ன் செய்யும் போது ஜரிகையைத் திருப்பி அதன் மேல் மெல்லிய துணி விரித்து அயர்ன் .செய்ய வேண்டும். நேரடியாக அயர்ன் செய்ய கூடாது.

Wednesday, 14 September 2016

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு புதிய பகுதியாக தினம் ஒரு ஜெபக்குறிப்பு அறிமுகமாகிறது ஜெப வீரர்கள் இதனை மனதில் கொண்டு, அந்தந்த நாளில் அந்தந்தக் காரியத்திற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார"இந்தியாவில் இன வெறிக்கு எதிரான சட்டங்கள் சீர் செய்யப்பட" ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ???????????????????????????

சங்கீதம் 119 :91-100

கர்த்ததருடைய வேதம் உன் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், உன் துக்கத்திலே அழிந்துபோயிருப்பாய். நீ ஒருபோதும் கர்த்தருடைய கட்டளைகளை மறக்காதே, அவைகளால் அவர் உன்னை உயிர்ப்பித்தார். நீ கர்த்தருடையவன், அவர் உன்னை இரட்சிப்பார், அவருடைய கட்டளைகளை ஆராய்ந்து பார். துன்மார்க்கர் உன்னை அழிக்க காத்திருக்கிறார்கள், நீ கர்த்தருடைய சாட்சிகளைச் சிந்தித்துக்கொண்டிரு. சகல சம்பூரணத்திற்கும் எல்லையைக் கண்டாய், அவருடைய கற்பனையோ மகா விஸ்தாரம். கர்த்தருடைய வேதத்தில் நீ எவ்வளவு பிரியமாயிருக்கிறாய்! நாள்முழுதும் அது உன் தியானம். கர்த்தருடைய கற்பனைகளைக் கொண்டு உன்னை உன் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறார், அவைகள் என்றைக்கும் உன்னுடனே இருக்கிறது. அவருடைய சாட்சிகள் உன் தியானமாயிருக்கிறபடியால், உனக்குப் போதித்தவர்களெல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறாய். கர்த்தருடைய கட்டளைகளை நீ கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைப்பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறாய். சங்கீதம் 119 :91-100

வீட்டுக்குறிப்பு

?????????????????????? வீட்டுக்குறிப்பு எக்காரணம் கொண்டும் பட்டுச் சேலையை சூரிய ஒளியில் வைக்கக் கூடாது, சோப்போ அல்லது சோப் பவுடரோ உபயோகித்து துவைக்கக் கூடாது. வெறும் தண்ணீ­ர் விட்டு அலசினாலே போதுமானது. ஏதாவது கறை பட்டுவிட்டால் உடனே தண்ணீ­ர் விட்டு அலச வேண்டும். எண்ணெய் கறையாக இருந்தால் அந்த இடத்தில் மட்டும் விபூதியைத் தடவி 5, 10 நிமிடங்கள் வைத்திருந்து பின்பு தண்ணீ­ர் விட்டு அலச வேண்டும்.

Tuesday, 13 September 2016

ஊட்டச்சத்து

ககககககககககககககககமமகஊகககககககககககககக ஊட்டச்சத்து ஊட்டச்சத்துக்களில் இரண்டு முக்கியமான பிரிவுகள் உள்ளன. ஒன்று, கொழுப்புச் சத்துக்கள், புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட்கள் அடங்கிய பெரிய பிரிவாகும். இரண்டாவது வைட்டமின்கள், கனிச்சத்துகள் அடங்கிய சிறிய பிரிவாகும். நம் உடலின் செல்கள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு வைட்டமின்கள் மிக முக்கியமானதாகும். செல்கள் வளர்ச்சியிலும், பழுதை சரி செய்வதிலும் வைட்டமின்களுக்கு பங்கு உண்டு. ஒரு குறிப்பிட்ட வைட்டமினை தினமும் நமக்கு தேவையான அளவு எடுத்துக் கொள்ளவில்லை என்றால் நம் ஆரோக்கியம் சீர்குலைகிறது. உடலின் வளர்ச்சிக்கு மற்றும் மாற்றங்களுக்கு வைட்டமின்கள் கட்டாயத் தேவையாகும். ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இன்றியமையாத வைட்டமின்கள் இருவகைப்படும். அவை: கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் - 13, நீரில் கரையும் வைட்டமின்கள் - 27. வைட்டமின் -"ஏ", "டி", "இ" மற்றும் வைட்டமின் "கே" ஆகியவை நம் உடலின் ஜீரண சக்திக்கு தேவையான கொழுப்புச் சத்துக்களை கொழுப்பில் கரையும் வைட்டமின்களாக மாற்றுகிறது. பி-காம்ப்ளெக்ஸீம், வைட்டமின் - "சி" யும் நீரில் கரையும் வைட்டமின்களாகும். இந்த வைட்டமின் தன்னுடைய தூய்மையான வடிவத்தில் வெளிர் மஞ்சள் நிற கலவையாக இருக்கும். நாம் உட்கொள்ளும் உணவிலிருந்து பெரும் பகுதி "கெரோடின்" என்ற வைட்டமின் "ஏ" ஊட்டச்சத்துக்களை வைட்டமின் "ஏ" வாக மாற்றும் சக்தி கொண்டது நம் உடல். நம் உணவுப் பழக்கவழக்கங்களின் முக்கியமான ஒரு உறுப்பாக திகழும் இந்த வைட்டமின்கள் எதற்காக இவ்வளவு முக்கியமானது என்பதை கீழே காணலாம்:- எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியம். உடலின் சருமத்தையும், கூந்தலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இரவு நேரங்களிலும், மங்கலான வெளிச்சத்திலும், சாதாரணமாக பார்க்க வைட்டமின் உதவுகிறது. என்று மேலும் பல குணங்களைக் கொண்டது இந்த வைட்டமின்கள். வைட்டமினின் வகைகள் மற்றும் அவற்றின் ஆற்றல்கள்:- முட்டை, பால் - புரதச் சத்துக்கள், பச்சைக் காய்கறிகள், மஞ்சள் - ஆரஞ்சு நிறப்பழங்கள், மாம்பழம், கேரட் ஆகியவற்றில் வைட்டமின் "ஏ" சத்து அதிகம் கிடைக்கும். "தியாமைன்" என்று அழைக்கப்படும் வைட்டமின்களின் மிகப்பெரும் பிரிவு வைட்டமின் "பி"-காம்ப்ளெக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. வைட்டமின் "பி1" என்பது வைட்டமின் "பி" பிரிவுகளிலேயே மிகவும் முக்கியமானது. சரியான அளவு வைட்டமின் "பி-1" எடுத்துக் கொண்டால் நம் உடலின் அனைத்துப் பகுதிகளும் சரியாக இயங்கும். ரொட்டி உள்ளிட்ட அனைத்து கோதுமை உணவுகள், கோதுமை சாதம், மீன் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றில் வைட்டமின் "பி" சத்துக்கள் ஏராளம். "பி-2" என்ற "ரிபோஃப்ளேவின்" வாய், நாக்கு மற்றும் நம் உடல் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. நம் உடலுக்குத் தேவையான சக்தியை உருவாக்க மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்களிலிருந்து சக்தியை வெளியிட, பல்வேறு என்சைம்களுடன் கூட்டு சேர்ந்து, சக்தி உற்பத்தியில் செல்கள் ஆக்சிஜனை பயன்படுத்த, இந்த வைட்டமின் "பி" பெரிதும் உதவுகிறது. பால், வெண்ணை, முட்டை, பச்சைக்காய்கறிகள், கோதுமை, தானியத்திலிருந்து பெறப்பட்ட மாவு வகைகள், ஆகியவற்றில் இந்த "பி-2" சத்து அதிகம். அடுத்ததாக வைட்டமின் "பி" பிரிவில் முக்கியமானது "நியாசின்" என்ற "பி" வைட்டமின். இது ஜீரண மற்றும், நரம்பு அமைப்புகளை பாதுகாக்க உதவுகிறது. ஆரோக்கியமான சருமப் பாதுகாப்பிற்கும் இந்த வைட்டமின் பயன்படுகிறது. மேலும் பெருங்குடல், சிறுகுடல், வாய், நாக்கு இவற்றின் "சளிச்சவ்வில்" ஏற்படும் வீக்கத்திலிருந்து இந்த வைட்டமின் "பி-நியாசின்" பாதுகாப்பு அளிக்கிறது. மீன், காய்ந்த பீன்ஸ்களில் "நியாசின்" அதிகமாகக் கிடைக்கிறது. வைட்டமின் "பி-2" செல்களின் மரபியல் சார்ந்த வளர்ச்சிக்கு பெரிதும் தேவைப்படும் வைட்டமின். எலும்பின் உள்ளே இருக்கும் மெல்லிய கொழுப்பில் சிவப்பணு செல்களின் வளர்ச்சியை ஏற்படுத்த இது பெரிதும் உதவும் வைட்டமினாகும். ரத்தத்தில் இருக்கும் வைட்டமின் "பி" ரத்த சோகையை தடுக்கிறது வைட்டமின் "பி-12". இது இறைச்சி, மீன், முட்டை, ஈஸ்ட் மற்றும் பால் புரதப் பொருட்களில் பெரிதும் காணப்படுகிறது. வைட்டமின் "டி" தவிர மற்றவை எல்லாமே தாவர உணவிலிருந்தே நமக்கு கிடைக்கும். -

வீட்டுக்குறிப்பு

?????????????????????? வீட்டுக்குறிப்பு விலை அதிகம் கொடுத்து வாங்கும் பட்டுச் சேலையை தரமாகப் பராமரிக்க வேண்டும். விசேஷங்களுக்குச் சென்று வந்தவுடன் பட்டுச் சேலையை களைந்து உடனே மடித்து வைக்கக் கூடாது. நிழலில் காற்றாட 2, 3 மணி நேரம் உலர விட வேண்டும். அல்லது கையினால் அழுத்தித் தேய்த்து மடித்து வைக்கவும்.

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு புதிய பகுதியாக தினம் ஒரு ஜெபக்குறிப்பு அறிமுகமாகிறது ஜெப வீரர்கள் இதனை மனதில் கொண்டு, அந்தந்த நாளில் அந்தந்தக் காரியத்திற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார"இந்தியாவில் மத வெரியை தூண்டுகிற மதத்தீவிரவாதிகள் இரட்சிக்கப்பட" ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ???????????????????????????

திராட்சைப் பழரசம்

னனனனனனனனனனனனனனனனனனன திராட்சைப் பழரசம் "கிரேக்கத்துல "கடவுளின் பானம்"னு சொல்வாங்க கிரேப் ஜூஸை. அநேகமாக மனிதனுக்கு அறிமுகமான முதல் ஜூஸ் இதுவாகத்தான் இருக்கும். ஏன்னா, கி.மு. 1000-ம் ஆண்டிலேயே கிரேப் ஜூஸ் (Grape juice) தயாரிச்சிருக்காங்களாம்!". திராட்சை ரசத்தின் மேன்மைகளைப் பார்ப்போம். * இரண்டு கிளாஸ் திராட்சைப் பழரசம் குடிப்பது, ஐந்து பிளேட் பச்சைக் காய்கறிகளை உண்பதற்குச் சமம். * ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்; ரத்தம் கிளாட் ஆவதை, அதாவது, ஆங்காங்கே உறைவதைத் தடுக்கும். * திராட்சைப் பழரசத்தை சோடா, கோலாக்களுக்கு பதிலாக அருந்துவது அத்தனை ஆரோக்கியம்! தினமும் மதிய உணவுக்குப் பின் 200 மில்லி கிரேப் ஜூஸ் குடிப்பது நல்லது! * ஒரு கிளாஸ் கிரேப் ஜூஸில் 80 சதவிகிதம் தண்ணீரும், 60 சதவிகிதம் கலோரிகளும் இருக்கும். நார்ச்சத்து அதிகமுள்ள இதனை "டயட்"டில் இருப்பவர்கள் தயங்காமல் குடிக்கலாம். * "ரெஸ்வெரட்ரால் (Resveratrol)" எனப்படும் ஒரு வகை இயற்கை அமிலம் கிரேப் ஜூஸில் அபரிமிதமாக உள்ளது. இந்த அமிலம் கேன்சர் செல்களின் வளர்ச்சியை முடக்குவதுடன், தேவை இல்லாத கட்டிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது. * பெண்களுக்குச் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கிரேப் ஜூஸ் (Grape juice) கட்டுப்படுத்துவதால், மார்பகப் புற்று நோய்க்கான அபாயம் குறைக்கப்படுகிறது. ஆகையால், எல்லோரும் திராட்சைப் பழரசம் அருந்தி, முக்கியமாக சுத்தமான திராட்சைப் பழங்களின் மூலம் தயாரிக்கப்படும் பழரசத்தை அருந்தி, ஆரோக்கியமா இருங்க!

கஞ்சா சாக்லேட்

கககககககககககககககககககககஉககககககககககக கஞ்சா சாக்லேட் பள்ளி அருகே சாக்லேட் போன்று கஞ்சா விற்கும் அளவிற்கு நிலைமை மோசமாகி வருகிறது. வடசென்னைப் பகுதியிலும், எழும்பூர், தரமணி, கிண்டி, சைதாபேட்டை, அடையாறு, திருவள்ளிகேணி, புற நகர் பகுதிகளான மதுரவாயல், பூந்தமல்லி, வண்டலூர், சோழிக்க நல்லூர் உள்ளிட்ட இடங்களில் தடையின்றி கஞ்சா சாக்லேட் விற்கப் படுகிறது. மேற்கு மாவட்டங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. போதை என்ற சாத்தானிடம் சிக்கி மாணவர் சமுதாயம் சீரழிவதை அரசு அனுமதிக்கக்கூடாது. என்று ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். இதைத்தடுக்க பள்ளிக் கல்வித்துறையும் திவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

வீட்டுக்குறிப்பு

?????????????????????? வீட்டுக்குறிப்பு வெள்ளி நகைகள் மற்றும் பாத்திரங்கள் பளபளக்க அவற்றை ஜாடியில் சில நிமிடங்கள் ஊறவைத்து குளிர்ந்த தண்ணீ­ரில் கழுவினால் போதுமானது.

சங்கீதம் 119 :71-80

நீ உபத்திரவப்பட்டது உனக்கு நல்லது, அதினால் கர்த்தருடைய பிரமாணங்களைக் கற்றுக்கொண்டாய். அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், கர்த்தர் விளம்பின வேதமே உனக்கு நலம். கர்த்தருடைய கரங்கள் உன்னை உண்டாக்கி, உன்னை உருவாக்கிற்று, அவருடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள உன்னை உணர்வுள்ளவனாக்கியது. நீ அவருடைய வசனத்திற்குக் காத்திருக்கிறபடியால், கர்த்தருக்குப் பயந்தவர்கள் உன்னைக் கண்டு சந்தோஷப்படுவார்கள். கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும், உண்மையின்படி உன்னை உபத்திரவப்படுத்தினாரென்றும் அறிவாய். கர்த்தர் உனக்குக் கொடுத்த அவரது வாக்கின்படி, அவரது கிருபை உன்னைத் தேற்றுவதாக. நீ பிழைத்திருக்கும்படிக்கு அவரது இரக்கங்கள் உனக்குக் கிடைப்பதாக, அவருடைய வேதம் உன் மனமகிழ்ச்சி. அகங்காரிகள் உன்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போவார்களாக, நீயோ கர்த்தருடைய கட்டளைகளைத் தியானி. கர்த்தருக்குப் பயந்து, அவரது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் உன்னண்டைக்குத் திரும்புவார்கள். நீ வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, உன் இருதயம் அவரது பிரமாணங்களில் உத்தமமாயிருக்கக்கடவது. சங்கீதம் 119 :71-80

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு புதிய பகுதியாக தினம் ஒரு ஜெபக்குறிப்பு அறிமுகமாகிறது ஜெப வீரர்கள் இதனை மனதில் கொண்டு, அந்தந்த நாளில் அந்தந்தக் காரியத்திற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார். "இந்தியாவில் செயல்படுகிற தீவிரவாத இயக்கங்கள் தடை செய்யப்பட" ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ???????????????????????????

ஊட்டச்சத்து

ககககககககககககககககமமகஊகககககககககககககக ஊட்டச்சத்து ஊட்டச்சத்துக்களில் இரண்டு முக்கியமான பிரிவுகள் உள்ளன. ஒன்று, கொழுப்புச் சத்துக்கள், புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட்கள் அடங்கிய பெரிய பிரிவாகும். இரண்டாவது வைட்டமின்கள், கனிச்சத்துகள் அடங்கிய சிறிய பிரிவாகும். நம் உடலின் செல்கள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு வைட்டமின்கள் மிக முக்கியமானதாகும். செல்கள் வளர்ச்சியிலும், பழுதை சரி செய்வதிலும் வைட்டமின்களுக்கு பங்கு உண்டு. ஒரு குறிப்பிட்ட வைட்டமினை தினமும் நமக்கு தேவையான அளவு எடுத்துக் கொள்ளவில்லை என்றால் நம் ஆரோக்கியம் சீர்குலைகிறது. உடலின் வளர்ச்சிக்கு மற்றும் மாற்றங்களுக்கு வைட்டமின்கள் கட்டாயத் தேவையாகும். ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இன்றியமையாத வைட்டமின்கள் இருவகைப்படும். அவை: கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் - 13, நீரில் கரையும் வைட்டமின்கள் - 27. வைட்டமின் -"ஏ", "டி", "இ" மற்றும் வைட்டமின் "கே" ஆகியவை நம் உடலின் ஜீரண சக்திக்கு தேவையான கொழுப்புச் சத்துக்களை கொழுப்பில் கரையும் வைட்டமின்களாக மாற்றுகிறது. பி-காம்ப்ளெக்ஸீம், வைட்டமின் - "சி" யும் நீரில் கரையும் வைட்டமின்களாகும். இந்த வைட்டமின் தன்னுடைய தூய்மையான வடிவத்தில் வெளிர் மஞ்சள் நிற கலவையாக இருக்கும். நாம் உட்கொள்ளும் உணவிலிருந்து பெரும் பகுதி "கெரோடின்" என்ற வைட்டமின் "ஏ" ஊட்டச்சத்துக்களை வைட்டமின் "ஏ" வாக மாற்றும் சக்தி கொண்டது நம் உடல். நம் உணவுப் பழக்கவழக்கங்களின் முக்கியமான ஒரு உறுப்பாக திகழும் இந்த வைட்டமின்கள் எதற்காக இவ்வளவு முக்கியமானது என்பதை கீழே காணலாம்:- எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியம். உடலின் சருமத்தையும், கூந்தலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இரவு நேரங்களிலும், மங்கலான வெளிச்சத்திலும், சாதாரணமாக பார்க்க வைட்டமின் உதவுகிறது. என்று மேலும் பல குணங்களைக் கொண்டது இந்த வைட்டமின்கள். வைட்டமினின் வகைகள் மற்றும் அவற்றின் ஆற்றல்கள்:- முட்டை, பால் - புரதச் சத்துக்கள், பச்சைக் காய்கறிகள், மஞ்சள் - ஆரஞ்சு நிறப்பழங்கள், மாம்பழம், கேரட் ஆகியவற்றில் வைட்டமின் "ஏ" சத்து அதிகம் கிடைக்கும். "தியாமைன்" என்று அழைக்கப்படும் வைட்டமின்களின் மிகப்பெரும் பிரிவு வைட்டமின் "பி"-காம்ப்ளெக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. வைட்டமின் "பி1" என்பது வைட்டமின் "பி" பிரிவுகளிலேயே மிகவும் முக்கியமானது. சரியான அளவு வைட்டமின் "பி-1" எடுத்துக் கொண்டால் நம் உடலின் அனைத்துப் பகுதிகளும் சரியாக இயங்கும். ரொட்டி உள்ளிட்ட அனைத்து கோதுமை உணவுகள், கோதுமை சாதம், மீன் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றில் வைட்டமின் "பி" சத்துக்கள் ஏராளம். "பி-2" என்ற "ரிபோஃப்ளேவின்" வாய், நாக்கு மற்றும் நம் உடல் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. நம் உடலுக்குத் தேவையான சக்தியை உருவாக்க மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்களிலிருந்து சக்தியை வெளியிட, பல்வேறு என்சைம்களுடன் கூட்டு சேர்ந்து, சக்தி உற்பத்தியில் செல்கள் ஆக்சிஜனை பயன்படுத்த, இந்த வைட்டமின் "பி" பெரிதும் உதவுகிறது. பால், வெண்ணை, முட்டை, பச்சைக்காய்கறிகள், கோதுமை, தானியத்திலிருந்து பெறப்பட்ட மாவு வகைகள், ஆகியவற்றில் இந்த "பி-2" சத்து அதிகம். அடுத்ததாக வைட்டமின் "பி" பிரிவில் முக்கியமானது "நியாசின்" என்ற "பி" வைட்டமின். இது ஜீரண மற்றும், நரம்பு அமைப்புகளை பாதுகாக்க உதவுகிறது. ஆரோக்கியமான சருமப் பாதுகாப்பிற்கும் இந்த வைட்டமின் பயன்படுகிறது. மேலும் பெருங்குடல், சிறுகுடல், வாய், நாக்கு இவற்றின் "சளிச்சவ்வில்" ஏற்படும் வீக்கத்திலிருந்து இந்த வைட்டமின் "பி-நியாசின்" பாதுகாப்பு அளிக்கிறது. மீன், காய்ந்த பீன்ஸ்களில் "நியாசின்" அதிகமாகக் கிடைக்கிறது. வைட்டமின் "பி-2" செல்களின் மரபியல் சார்ந்த வளர்ச்சிக்கு பெரிதும் தேவைப்படும் வைட்டமின். எலும்பின் உள்ளே இருக்கும் மெல்லிய கொழுப்பில் சிவப்பணு செல்களின் வளர்ச்சியை ஏற்படுத்த இது பெரிதும் உதவும் வைட்டமினாகும். ரத்தத்தில் இருக்கும் வைட்டமின் "பி" ரத்த சோகையை தடுக்கிறது வைட்டமின் "பி-12". இது இறைச்சி, மீன், முட்டை, ஈஸ்ட் மற்றும் பால் புரதப் பொருட்களில் பெரிதும் காணப்படுகிறது. வைட்டமின் "டி" தவிர மற்றவை எல்லாமே தாவர உணவிலிருந்தே நமக்கு கிடைக்கும். -