Friday, 12 August 2016

சிகரெட்-உயிர்க்கொல்லி

தென்கிழக்கு ஆசியாவில், தொடர்ந்து புகையிலை ஓர் உயிர் கொள்ளியாகத்தான் இருக்கிறது. புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவோர். ஒரு மணி நேரத்தில் 150பேர் வரை இறக்கிறார்கள். இந்தியா உட்பட 11நாடுகளில், 24.60 கோடிபேர் சிகரெட். பீடி குடிக்கிறார்கள். 29கோடி பேர் இதர புகை இலைகளைப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு ஆண்டும்.13 லட்சம் பேரை இந்த புகையிலை பொருட்கள் கொல்லுகின்றன என்று, உலகசுகாதார கழகத்தின் தென் கழக்கு ஆசியா பிராந்திய இயக்குனர் தெரிவித்துள்ளார் உயர் வருவாய் நாடுகளில், சிரெட் பிடிப்போர் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஆனால், வளரும் நாடுகளை நம்பித்தான், சிகரெட் கம்பெனிகளே செயல் படுகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார் புகையிலை மற்றும் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள மக்கள் விடுதலை பெற ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். விளையாட்டாகவும், நன்பர்களோடு சேர்ந்து பழகியபிறகு இளைஞர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இதற்கு அடிமையாகி விடுகின்றனர். இந்நிலைமாறிடவும், மிகைப்படுத்தும் விளம்பரங்கள், சிகரட் பிடிக்கத் தூண்டும் சினிமா காட்சிகளின் மூலமாகவும், சிகரெட் விற்பனை அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரதுறை தகுந்த நடவடிக்கை எடுத்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். போதை வெறியைத் தூண்டும் ஆவிகள் கட்டப்பட, உயிரிழப்புகள் இல்லாதிருக்க பாரத்தோடும் கண்ணீரோடும் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

No comments:

Post a Comment