Monday, 15 August 2016

கிராமங்களின் வளர்ச்சி!

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ கிராமங்களின் வளர்ச்சி! கிராமங்களின் வளர்ச்சிதான் இந்தியாவின் வளர்ச்சி என்கிறார் பரதமர் மோடி. விவசாய தொழில் அபிவிருத்தியே, கிராம வளர்ச்சிக்கு துனை புரியும். தமிழகத்தில் மட்டும் 12லட்சம் கிணறுகள், 40லட்சம் ஆழ் குழாய் கிணறுகள் உள்ளன. இதில் 60% கிணறுகள் வறண்டு போய் உள்ளன. 5ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட ஒரு கிராமத்தில், ஒரு மணி நேரத்திற்கு ஒரு அங்குலம் அளவு மழை பெய்தாலே, அந்த கிராமத்திற்கு 5லட்சம் லிட்டர் தண்ணீர கிடைக்கும் என்கிறது ஒரு ஆய்வு. நம் நாட்டில், 56% மக்கள் விவசாயத்தையே நம்பியுள்ளனர். நமது நாட்டில் குறைந்து வரும் விவசாய தொழிலுக்கும், விவசாயிகளுக்கும் புத்துயிர் அளிக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாடு முழுவதும் மழை நீர் சேமிப்பு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, பொதுமக்களுக்கு உண்டாக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். மழையின்றி பாதிக்கப் பட்டுள்ள மத்திய பிரதேசம், உத்திர யிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா மற்றும் ஒரிசா மாநிலங்களில் அதிக மழை பெய்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். மிகுந்த வறட்சியால் பாதிக்கப் பட்டுள்ள மகாராஷ்டிரா மானிலத்தில் வறட்சி நீங்கிட, விவசாயிகள் தற்கொலைகள் தடுக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

No comments:

Post a Comment