Saturday, 27 August 2016

உணவுகட்டுப்பாடு

றறறறறறறறறறறறறறறறறறறறறற உணவுகட்டுப்பாடு இப்போதெல்லாம் பெரும்பாலான பேர் விருந்து என்றால் கன்னாபின்னா என்று சாப்பிட்டு மூச்சு விடக்கூட திணறுவதை காண முடிகிறது. இப்படிப்பட்டவர்கள் வயிறு முட்ட சாப்பிட்ட பிறகும் கூட ஸ்வீட், பாயாசத்தையும், ஆசை ஆசையாக உள்ளே தள்ளி விடுகிறார்கள். அவர்கள் சாப்பிட்ட ஒரு லட்டு அதில் உள்ள நெய் அல்லது எண்ணை, சர்க்கரை, பாயாசத்தில் உள்ள வெல்லம் அல்லது சர்க்கரை, தேங்காய், முந்திரி என்று ஒட்டு மொத்தமாக ஜீரணமாக 6 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. கொலஸ்ட்ரால், நீரிழிவு பிரச்சினை, போன்றவற்றால் உணவுக் கட்டுப்பாட்டுடன் இருப்பவர்கள் ஒரு வாக் சென்று வந்தால் உடம்பு சிறிது லேசானது போல் இருக்கும். ஆகவே பெரும்பாலும் மாலை 6 மணிக்கு மேல் இனிப்பு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. 6 மணி, 8 மணி நேரத்திற்கு முன்பாகவே நாம் தூங்கி விடுவதால் சாப்பிட்ட உணவில் உள்ள கொலஸ்ட்ராலுக்கு கரைய வேலை இல்லாமல் நம் உடல் டெபாசிட் ஆகி விடுகிறது. பகலில் பலமான விருந்து சாப்பிட்டு மீண்டும் இரவிலும் ஒரு நல்ல ருசியான சாப்பாடு கிடைத்தால் ஒரு பிடி பிடித்து விடலாம் என்று நினைப்பது நல்லதல்ல. இரவு பட்டினியாகப் படுத்தாலும் அடுத்த நாள் காலையில் இருந்தே பட்டினியாக இருப்பதும் தவறு. அடுத்த நாள் பட்டினி இருந்தாலும் முதல்நாள் இரவு சாப்பிட்ட அதிக அளவு கொலஸ்ட்ரால் விடிவதற்குள் உடலில் தங்கி விடுவதால் அது அடுத்த நாள் பட்டினியால் குறையாது. அதனால் நாள் முழுக்க சரிவிகித உணவு சாப்பிடுவதால் மட்டுமே ஆரோக்கியமாக இருக்க வாய்ப்புண்டு. உணவுகட்டுப்பாடு இல்லாதவர்கள் கூட தங்கள் உடல் நலம் காக்க சமநிலையான உணவு முறையைப் பின்பற்றுவது நல்லது. அடிக்கடி வயிறு வலிக்கிறதே என்று உருண்டு புரளும் பெண்கள் இனியாவது விருந்தை கொஞ்சமா டேஸ்ட் பண்ணுங்க சரிதானே!

No comments:

Post a Comment