Tuesday, 30 August 2016

சங்கீதம் 115 :2-18

உங்களுடைய தேவன் இப்பொழுது எங்கே என்று புறஜாதிகள் சொல்லுகிறார்கள் உங்களுடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார், தமக்குச் சித்தமானயாவையும் செய்கிறார். புறஜாதியாருடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. அவைகளுக்குக் காதுகளிருந்தும்கேளாது, அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. அவைகளுக்குக் கைகளிருந்தும்தொடாது, அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது, தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிற யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள். இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு, அவரே உனக்குத் துணையும் உனக்குக் கேடகமுமாயிருக்கிறார். ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை நம்புங்கள், அவரே உங்களுக்குத் துணையும் உங்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார். கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள், அவரே உங்களுக்குத் துணையும் உங்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார். கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார், இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார். கர்த்தருக்குப் பயப்படுகிற பெரியோரையும் சிறியோரையும் ஆசீர்வதிப்பார். கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார். வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். வானங்கள் கர்த்தருடையவைகள், பூமியையோ மனுபுத்திரருக்குக்கொடுத்தார். மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள். நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். அல்லேலூயா. சங்கீதம் 115 :2-18

No comments:

Post a Comment