Monday, 15 August 2016

உணவு வகைகள்

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ உணவு வகைகள் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் எவை தெரியுமா? கீரைவகைகள், பழவகைகள், வாழைப்பூ, வாழைத்தண்டு, சேம்புத்தண்டு, புடலைங்காய், முருங்கைக்காய், வெங்காயத்தண்டு, பீன்ஸ், பலாக்காய், பலாப்பழ விதை, பயறுவகைகள், ஓட்ஸ் போன்றவைகள். கொழுப்புச்சத்து குறைந்த உணவுகள் எவை? தோல் நீக்கிய கோழி இறைச்சி, முட்டையின் வெள்ளைக்கரு, ஆடை நீக்கிய பால், மோர், சிறிய வகை மீன். கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கும் உணவுகள் பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டும். இறைச்சி வகைகள், முட்டையின் மஞ்சள் கரு, பால், வெண்ணை, நெய், பாலாடைக்கட்டி, பேக்கரி உணவுகள், வறுத்த- பொரித்த உணவுகள், ஊறுகாய் வகைகளில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறது. ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் அதிகமாக இருக்கும் உணவுகள் எவை? கீரைவகைகள், கேரட், பூசணிக்காய், பப்பாளி, இனிப்பு வகைக்கிழங்குகள், மாங்காய், ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய், கொய்யா, முளைவிட்ட பயறுவகைகள், பாதாம், ஈரல், ஈஸ்ட், பால், முட்டை, தானியங்கள், கடல் உணவுகள், வெங்காயம், இஞ்சி, மஞ்சள், பூண்டு, ஓட்ஸ், சோயா பீன்ஸ், கிரீன் டீ, மிளகு, கருவாப்பட்டை, கடுகு, சேனைக் கிழங்கு. இந்த நேரத்தில் புற்று நோயை வரவழைக்கும் உணவுகளைப்பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளவேண்டியது அவசியம். நைட்ரோசமைன் எனப்படும் பொருள் அதிகமாக அடங்கி இருக்கும் பேக்கிங் பவுடர், அஜினோமோட்டோ, சாஸ் வகைகள், சுட்டது அல்லது பொரித்த இறைச்சி, மீன் வகைகள் போன்றவைகள் தவிர்க்கப்படுவது மிக நல்லது. மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் எண்ணை, செயற்கை இனிப்புகள், செயற்கை உணவு நிறப்பொடி வகைகள் போன்றவைகளும் தவிர்க்கப்பட வேண்டும். உப்பை அதிகம் பயன்படுத்தக்கூடாது. பிராய்லர் கோழி, அதன் முட்டை போன்றவைகளையும் தவிர்க்க வேண்டும் என்று டாக்டர்கள் குறிப்பிடுகிறார்கள்.

No comments:

Post a Comment