Wednesday, 10 August 2016

சங்கீதம் 104 :1-12

உன் ஆத்துமா, கர்த்தரை ஸ்தோத்தரிக்கட்டும், உன் தேவனாகிய கர்த்தர், மிகவும் பெரியவராயிருக்கிறார், மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்துகொண்டிருக்கிறார். ஒளியை வஸ்திரமாகத் தரித்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறார். அவரது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மச்சுப்பாவி, மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய செட்டைகளின்மேல் செல்லுகிறார். அவருடைய தூதர்களைக் காற்றுகளாகவும், அவருடைய ஊழியக்காரரை அக்கினிஜூவாலைகளாகவும் செய்கிறார். பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதை ஸ்தாபித்தார். அதை வஸ்திரத்தினால் மூடுவதுபோல ஆழத்தினால் மூடினார், பர்வதங்களின்மேல் தண்ணீர்கள் நின்றது. அவைகள் அவரது கண்டிதத்தால் விலகியோடி, அவரது குமுறலின் சத்தத்தால் விரைந்துபோயிற்று. அவைகள் மலைகளில் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, அவர் அவைகளுக்கு ஏற்படுத்தின இடத்தில் செல்லுகிறது. அவைகள் திரும்பவும் வந்து பூமியை மூடிக்கொள்ளாதபடி கடவாதிருக்கும் எல்லையை அவைகளுக்கு ஏற்படுத்தினார். அவர் பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை வரவிடுகிறார், அவைகள் மலைகள் நடுவே ஓடுகிறது. அவைகள் வெளியின் ஜீவன்களுக்கெல்லாம் தண்ணீர் கொடுக்கிறது அங்கே காட்டுக்கழுதைகள் தங்கள் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளுகிறது. அவைகளின் ஓரமாய் ஆகாயத்துப்பறவைகள் சஞ்சரித்து, கிளைகள்மேலிருந்து பாடுகிறது. சங்கீதம் 104 :1-12

No comments:

Post a Comment