Monday, 29 August 2016

மனித கடத்தல்

றறறறறறறறறறறறறறறனறறறறறற மனித கடத்தல் மதுரையிலுள்ள ஒரு காப்பகத்தில் இருந்த பச்சிளம் ஆண் குழந்தை 5லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. சென்னையில் பள்ளிக்கு சிறுவர்களை ஏற்றிச் செல்லும் வேன் போன்று வந்து, குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, 2 சிறுவர்களை மர்மநபர்கள் கடத்திச் சென்று, 30லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டி யுள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர், ஈரோடு சென்னி மலையில் கூலி வேலைக்கு சென்றார். அங்கு, ஆயிரம் ரூபாய்க்காக தனது 5வயது மகளை அடகாக கொடுத்துவிட்டு தலைமறைவானார். பெற்றோர் குழந்தையை மீட்க திரும்பி வரவில்லை. பெண் தெழிலதிபரை அவரது கார் டிரைவர் மற்றும் சிலர் கடத்தி, 20கோடி ரூபாய் கேட்டதுடன், குழந்தைகளையும் கொன்று விடுவோம் என்று மிரட்டி நகை மற்றும் பணத்தை பறித்தனர். இன்றைய காலகட்டங்களில், பணத்துக்காக, பள்ளி மாணவர்களை கடத்தல், தொழிலதிபர்களை கடத்தல் நடந்து வருகிறது. இது தடுக்கப்பட, இப்பேர்பட்ட கும்பல்கள் கண்டுபிடிக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். வறுமையன் காரணமாக, பெற்றோரே குழந்தைகளை விற்கவும், அடகு வைக்கவும் இருக்கிற இந்த அவல நிலை மாறிட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். இதற்கு காரணமான பணஆசை என்கின்ற பொல்லாத ஆவியை கட்டி ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

No comments:

Post a Comment