Thursday, 11 August 2016

மீனவர் பிரச்சனை!

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<< மீனவர் பிரச்சனை! இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளான இலங்கை பாகிஸ்தான் கடற்பகுதியில், மீனவர்கள் எல்லையைத் தாண்டும் போது, கடற்படையால் தாக்கப்படுவது, கைதுசெய்யப்படுவதும் அடிக்கடி நடக்கிறது. இதற்கு சரியானத் தீர்வு கிடைக்க, மத்தியஅரசு பேச்சுவார்த்தை நடத்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லையைத் தாண்டி செல்லாதிருக்க, மன்னார் வளைகடா பகுதியில் நம் எல்லைக்குள்ளே அதிக மீன்கள் கிடைக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். தவறுதலாக எல்லையை தாண்டியதால், இலங்கை சிறையிலிருக்கும் மீனவர்கள் விடுவிக்கப்பட, அவர்களது மீன்பிடி படகு மீட்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். பாகிஸதான் நாட்டு மீனவர்கள் நம் எல்லைக்குள் வராதிருக்க, நமது நாட்டு மீனவர்கள், அரபிக்கடலின் எல்லையை தாண்டாதிருக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். இந்தியா-பாகிஸ்தான், இந்தியா-இலங்கை மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைத்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

No comments:

Post a Comment