Monday, 29 August 2016

சங்கீதம் 113 :1-9

அல்லேலூயா, நீ, துதி, கர்த்தருடைய நாமத்தைத் துதி. இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தருடையநாமம் ஸ்தோத்திரிக்கப்படக்கடவது. சூரியன் உதிக்கும் திசைதொடங்கி அது அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக. கர்த்தர் எல்லா ஜாதிகள் மேலும் உயர்ந்தவர், அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது. உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமானமானவர் யார்? அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார். அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார், எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார். மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கப் பண்ணுகிறார். அல்லேலூயா. சங்கீதம் 113 :1-9

No comments:

Post a Comment