Monday, 29 August 2016

சங்கீதம் 112 :1-10

நீ கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிரு அப்போழுது நீ பாக்கியவானாய் இருப்பாய். உன் சந்ததி பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும். ஆஸ்தியும் ஐசுவரியமும் உன் வீட்டிலிருக்கும், உன்னுடைய நீதி என்றைக்கும் நிற்கும். செம்மையானவனுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும், அவன் இரக்கமும், மன உருக்கமும், நீதியுமுள்ளவன். இரங்கிக் கடன்கொடுத்து, தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான், நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன். துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான், அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும். அவன் இருதயம் உறுதியாயிருக்கும், அவன் தன் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காணுமட்டும் பயப்படாதிருப்பான். வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும், அவன் கொம்பு மகிமையால் உயர்த்தப்படும். துன்மார்க்கன் அதைக் கண்டு மனமடிவாகி, தன் பற்களைக் கடித்துக் கரைந்து போவான், துன்மார்க்கருடைய ஆசை அழியும். சங்கீதம் 112 :1-10

No comments:

Post a Comment