Tuesday, 30 August 2016

சைபர் கிரைம்

இந்தியாவில் சைபர் கிரைம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியா முழுவதும் 2011ம் ஆண்டு 13ஆயிரத்து 301குற்றங்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக நடைப் பெற்றிருக்கின்றன. 2012ம் ஆண்டு, 22ஆயிரத்து 60ஆக இந்த குற்றங்கள் மேலும் அதிகரித்திருக்கின்றன. 2014ம் ஆண்டில், ஒரு லட்சத்து 49ஆயிரத்து, 254குற்றங்களும். 2015ம் ஆண்டில் 3லட்சமாக அதிகரித்துள்ளது. இளைய சமுதாயம், இணையதளங்களை ஆரோக்கிய நிலையில் பயன் படுத்த வேண்டு மென்று, தேசியமனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் கவலை தெரிவித்துள்ளார். நமது தேசத்தில் அதிகரித்துவரும் சைபர் கிரைம் எனப்படும் இணையதள குற்றங்கள் முற்றிலும் கட்டுப் படுத்தப் பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். இணைய தளங்களை பொதுமக்களும், குழந்தைகளும் ஆரோக்கியமான நிலையில் பயன்படுத்தப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். மக்கள் தொகையினைக் காட்டிலும், மக்களிடமுள்ள ஸ்மார்ட் செல்போன்களின் எண்ணிக்கை அதிகம். செல்போன்களை தவறுகளுக்கு இடந்தராதிருக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

No comments:

Post a Comment