Blog Archive
-
▼
2016
(788)
-
▼
August
(85)
- உடலுக்கு சக்தி
- வீட்டுக்குறிப்பு
- சங்கீதம் 116 :1-9
- சைபர் கிரைம்
- வீட்டுக்குறிப்பு
- வயிறு பிரச்சினையே வராது.
- தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 115 :2-18
- மனித கடத்தல்
- தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 113 :1-9
- சங்கீதம் 112 :1-10
- தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 112 :1-10
- கொய்யா பழம்
- மீன்
- வீட்டுக்குறிப்பு
- தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- உணவுகட்டுப்பாடு
- வீட்டுக்குறிப்பு
- வீட்டுக்குறிப்பு
- வடமாநில கொள்ளைக் கும்பல்
- வீட்டுக்குறிப்பு
- சங்கீதம் 109 :21-31
- தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- வீட்டுக்குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்ப
- சங்கீதம் 109 :5,11-20
- கசப்புச் சுவை:
- வீட்டுக்குறிப்பு
- உணவு அளவு
- தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 107 :10-22
- தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 107 :1-9
- தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- முட்டையின் மகிமை
- எல்லைப் பிரச்சனை!
- தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 106 :37-48
- ஆப்பிள் பழம்
- வீட்டுக்குறிப்பு
- ரேசன் கடைகள்
- அழகிய பொருட்கள்
- ஒரு நல்ல இதயம் நாள்தோறும் சிறப்பாய் இயங்க 27 வழிகள...
- தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- உடற்கழிவுகளை வெளியேற்றும் உடற்பயிற்சி
- சங்கீதம் 106 :25-36
- வீணாகும் உணவு தாணியங்கள்!
- சங்கீதம் 106 :13-24
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- அறையை மேலும் பிரகாசமாக்க
- எப்போதெலாம் உடற் பயற்சி செய்ய கூடாது
- முட்டை
- வாக்குதத்தம்
- தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- கிராமங்களின் வளர்ச்சி!
- சங்கீதம் 106 :1-12
- உணவு வகைகள்
- வீட்டுக்குறிப்பு
- கடைசி கால விசுவாசிகளுக்காக!
- இந்தியதேசம்
- சங்கீதம் 105 :39-45
- துளசி
- உன்னத உணவுகள
- தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- நீதிபதிகள் பற்றாக்குறை!
- பட்டாணி
- சங்கீதம் 105 :24-38
- இன்றய வாக்குத்தத்தம்
- இன்றய வாக்குத்தத்தம்
- சங்கீதம் 105 :11-23
- புதிய பர்னிச்சர்
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சிகரெட்-உயிர்க்கொல்லி
- சப்போட்டா பழம்
- சங்கீதம் 105 :1-11
- தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- மீனவர் பிரச்சனை!
- சங்கீதம் 104 :1-12
- அவரைக்காய்
- "தினம் ஒரு ஜெபக்குறிப்பு"
- சங்கீதம் 100 :1-5
- செம்பருத்தி பூ
-
▼
August
(85)
Total Pageviews
Friday, 19 August 2016
முட்டையின் மகிமை
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! முட்டையின் மகிமை உங்களுக்கு செல்போன் "ஹச்" தெரிந்திருக்கும். வைட்டமின் "ஹெச்" தெரியுமா? தெரிய வாய்ப்பில்லை. ஏனென்றால் மருத்துவ உலகமே இப்போதுதான் இந்த வைட்டமினின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளது. இத்தனைக்கும் இந்த வைட்டமின் கண்டுபிடிக்கப்பட்டது 1916-ம் ஆண்டில்! ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பேட்மேன் எனும் அறிவியலாளர்தான் இதனைக் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பில் ஒரு சுவாரசியம் உண்டு. ஜெர்மன் நாட்டில் 1900-ம் ஆண்டு வாக்கில் நாடு முழுவதும் கோழிக்குஞ்சுகளுக்கும் எலிகளுக்கும் திடீரென்று தோலில் பல்வேறு அழற்சி நோய்கள் உண்டாயின. இது ஒரு சத்துக்குறைவு நோய் என்று மட்டும் ஆரம்பத்தில் புரிந்தது. அவற்றுக்குப் பல சத்துணவுகளைக் கொடுத்துப் பார்த்தார், பேட்மேன். இறுதியில் வேகவைத்த கோழிமுட்டைகளைக் கொடுத்ததும் அந்தத் தோல் நோய்கள் சரியாயின. உடனே கோழிமுட்டையை ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். கோழிமுட்டையின் வெள்ளைக் கருவில் உள்ள ஒரு வகை வைட்டமின்தான் இதற்குக் காரணம் என்பதை பேட்மேன் உறுதி செய்தார். ஜெர்மன் மொழியில் ஏஹன்ற் என்றால் "தோல்" என்று பொருள். ஆகவே, அந்த வார்த்தையின் முதல் எழுத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இதற்கு "வைட்டமின்-ஹெச்" என்று பெயரிட்டார். நோய்வாய்ப்பட்ட கோழிக்குஞ்சுகளுக்கு முட்டை தந்து நோயைக் குணப்படுத்துவதற்குச் செலவு அதிகமானதால் இந்த வைட்டமினைத் தனியாகப் பிரிக்க முடியுமா என யோசித்தார் பேட்மேன். அவரால் இயலவில்லை. அவரைத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்த கோர்க் எனும் அறிவியலாளர் 1930-ல் முட்டையின் கருவிலிருந்து இந்த வைட்டமினைப் பிரித்தெடுத்து வெற்றி கண்டார். இதனைத் தொடர்ந்து 1940-ல் மனிதனின் கல்லீரலில் இது உள்ளது என்பதும் தெரியவந்தது. இறுதியாக 1943-ம் ஆண்டில் அமெரிக்காவில் இந்த வைட்டமினைச் செயற்கையாகவும் தயாரிக்கத் தொடங்கினர். காலப்போக்கில் ஆங்கில அகரவரிசையில் இருந்த எல்லா வைட்டமின்களுக்கும் புதிய பெயர்கள் சூட்டப்பட்டபோது, வைட்டமின்-ஏ "ரெட்டினால்" என்றும் வைட்டமின்-சி "அஸ்கார்பிக் அமிலம்" என்றும் புதிய பெயர்களைப் பெற்றபோது, வைட்டமின்-ஹெச் "பயாட்டின்" என்ற நாமகரணத்தைப் பெற்றது. பயாட்டின் விலங்குகளுக்கு மட்டுமன்றி மனித இனத்திற்கும் தேவைப்படுகின்ற முக்கியமான வைட்டமின் என்பது இருபதாம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில்தான் மருத்துவர்களுக்குப் புரிந்தது. தண்ணீரில் கரையும் வைட்டமின் வகையைச் சேர்ந்த இது, வைட்டமின் "பி" தொகுப்பில் உள்ள எட்டு முக்கிய வைட்டமின்களில் ஒன்று. உடலில் கார்பாக்சிலேஸ் நொதிகளுடன் இணைந்து இது செயலாற்றுகிறது. உணவில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச் சத்துகள் உடலில் பல்வேறு வேதிமாற்றங்களை அடைவதற்கு இந்த வைட்டமின் அவசியம். கார்போஹைட்ரேட்டிலிருந்து கிளைக்கோஜனைத் தயாரிப்பதற்கும், இரும்புச்சத்தும் புரதச்சத்தும் இணைந்து "ஹீமோகுளோபின்" எனும் நிறமிப் பொருள் உருவாவதற்கும் இது தேவைப்படுகிறது. புரதச்சத்திலிருந்து அமினோ அமிலங்களைத் தயாரிக்கவும், கொழுப்பிலிருந்து கொழுப்பு அமிலங்களைத் தயாரித்து, உடலின் எலும்பு வளர்ச்சிக்கும் தசை வளர்ச்சிக்கும் முறைப்படி விநியோகிக்கவும் துணைபுரிவது இந்த வைட்டமின்தான். ஆரோக்கியமான முடி வளர்ச்சி மற்றும் நக வளர்ச்சிக்குத் தேவையான நொதிகளைத் தருவதும், ரத்தத்திலும் பிற உடல் அணுக்களிலும் வேதிவினைகள் நடக்கும்போது அங்கு தேவைப்படுகின்ற கரியமில வாயுவைச் சுமந்து செல்வதும் இதுவே. உணவின் வளர்சிதைமாற்றப் பணிகள் பலவற்றில் இது துணைநொதியாகச் செயலாற்றி உடலுக்குச் சக்தியைத் தருகிறது; அது மட்டுமல்லாமல் அதிகப்படியாக உள்ள சக்தியைத் தசைகளில் சேமித்து வைக்கிறது. இவை அனைத்தும் முன்பே கண்டறியப்பட்ட உண்மைகள். அண்மைக்கால ஆராய்ச்சியின்படி கர்ப்பிணிகளுக்கு பயாட்டின் வைட்டமின் மிகவும் அத்தியாவசியமானது என்று கண்டறியப்பட்டுள்ளது. "சாதாரணமாக நடுத்தர வயதில் உள்ளோருக்கு இந்த வைட்டமின் நாளொன்றுக்கு 150 முதல் 200 மைக்ரோகிராம் வரை தேவைப்படுகிறது. கர்ப்ப காலத்தில் இதன் தேவை நாளொன்றுக்கு 300 மைக்ரோகிராம் என்று அதிகரிக்கிறது. இந்த அளவு கண்டிப்பாகக் குறையக் கூடாது. அப்படிக் குறைந்தால் கருவில் வளரும் குழந்தைக்குப் பிறவியிலேயே ஊனம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டாகிவிடும்" என்று "அமெரிக்கன் ஜெர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷன்" ஓர் ஆய்வு அறிக்கையில் உறுதிபடக் கூறியுள்ளது. குறிப்பாக, குழந்தைகளுக்குப் பிறவியிலேயே உதடு, அண்ணம் ஆகியவற்றில் பிளவு ஏற்படுவதற்கு இந்த வைட்டமின் பற்றாக்குறை முக்கியக் காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது. அடுத்து, வளர்ச்சி குறைந்த கை, கால்களுடன் குழந்தை பிறப்பதற்கும் முதுகுத்தண்டின் அடிப்பாகத்தில் முதுகெலும்பு பிளவுபடுவதற்கும் இந்த வைட்டமின் பற்றாக்குறை ஒரு காரணமாக இருக்கலாம் என்பதும் அமெரிக்காவில் ஓர் ஆராய்ச்சியில் கண்டறியப்பட்ட முடிவாகும். கர்ப்ப காலத்தில் பயாட்டின் மருந்து சாப்பிட்டவர்களின் குழந்தைகளுக்கு இந்த ஊனம் ஏற்படுகின்ற வாய்ப்பு மிகவும் குறைந்துள்ளது என்பதும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சரி, பயாட்டின் அளவு குறைவாக உள்ளது என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? இதற்கு ஒரு சிறுநீர்ப் பரிசோதனை உள்ளது. கர்ப்பிணியின் சிறுநீரில் 3-ஹைட்ராக்சி ஐசோவெளிரிக் அமிலம் அளவுக்கு மீறி வெளியேறுகிறது என்றால் அவருக்கு பயாட்டின் அளவு குறைந்துள்ளது என்று பொருள். மேலும் பயாட்டின் பற்றாக்குறை உள்ள கர்ப்பிணிகளுக்கு கடுமையான தசைவலி உண்டாகும்; அடிக்கடி உடல் களைப்படையும்; உளச்சோர்வு உண்டாகும்; ரத்தசோகை ஏற்படும்; தலைமுடி உதிரும்; நகத்தில் வெள்ளைக்கோடுகள் காணப்படும். நாம் சாதாரணமாக உண்கின்ற அரிசி, கோதுமை, ஓட்ஸ் போன்ற தானியங்களிலும், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, சோயா, வேர்க்கடலை போன்ற பருப்பு வகையிலும், பால், இறைச்சி, முட்டை, கல்லீரல், காளான், காலிஃபிளவர் ஆகியவற்றிலும் பயாட்டின் நமக்குத் தேவையான அளவுக்கு உள்ளது. ஆகவே சரிவிகித உணவைச் சரியான அளவில் சாப்பிடும் கர்ப்பிணிகளுக்கு இந்தப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை. வழக்கமாக கர்ப்பிணிகள் தாய்க்கும் சேய்க்குமாகச் சேர்த்து இரண்டு மடங்கு உணவு உண்ண வேண்டும். ஆனால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் மசக்கை காரணமாக வாந்தி மற்றும் தலைச்சுற்றல் வருமென்பதால் 50 விழுக்காடு கர்ப்பிணிகள் சத்துள்ள உணவுகளைத் தேவையான அளவுக்கு உண்பதில்லை. இதனால் இவர்களுக்குப் பயாட்டின் அளவு குறைந்துவிடுகிறது. இன்னொன்று, நம் சிறுகுடலில் உள்ள நன்மை தரும் பாக்டீரியாக்கள் இந்த வைட்டமினைச் சிறிதளவு தயாரிக்கின்றன. அதே வேளையில் கர்ப்பிணிகள் சளி, இருமல், தடுமம் போன்ற தொல்லைகளுக்கு மருத்துவரை ஆலோசிக்காமல் தாங்களாவே நுண்ணுயிர்கொல்லி மருந்துகளை வாங்கி அடிக்கடி சாப்பிட்டால் சிறுகுடலில் உள்ள இந்த பாக்டீரியங்கள் அழிந்துவிடும். பயாட்டின் வைட்டமின் இவர்களுக்குக் கிடைக்காமல் போகும். இறுதியாக ஒன்று, பச்சை முட்டை சாப்பிட்டால் உடலுக்கு அதிகமாகச் சத்து கிடைக்கும் என்று ஒரு நம்பிக்கை நம்மிடம் உள்ளது. ஆனால், ஆபத்தும் அதில்தான் உள்ளது. முட்டையின் வெள்ளைக்கருவில் "அவிடின்" எனும் புரதப் பொருள் உள்ளது. இது பயாட்டினோடு இணையும் போது சிறுகுடலில் பயாட்டின் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது. அதேநேரத்தில் முட்டையை வேகவைத்துவிட்டால் அந்த வெப்பத்தில் அவிடின் செயலற்றுப் போய்விடும். முட்டையில் உள்ள பயாட்டின் சத்து முழுமையாக உடலில் சேரும். ஆகவே கர்ப்பிணிகள் வேகவைத்த முட்டையைச் சாப்பிடுவதே நல்லது. -
Subscribe to:
Post Comments (Atom)
About Me
Search This Blog
Popular Posts
-
281 புன்னகை ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்ற ஒன்று நடப்பட்டது. ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வா...
-
307 என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள். ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க. ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்தில...
-
ஜேம்ஸ் பரேசர் சீனாவின் தென்மேற்குப் பகுதிக்கு தனது இருபத்திரண்டாவது வயதில...
Labels
- Christian Missionary History
- 1015 ஏமி கார்மைக்கேல் அம்மையாரின் வரலாறு
- 1016 கிளாடிஸ் அயில்வார்ட் 1902 -
- 1017 பண்டித இராமாபாய் 1858 - 1922
- 1018 ஃபேனி க்ராஸ்பி 1820 - 1915
- 1019 காரி டென் பூம் 1892 - 1983
- Christian Message
- Christian Missionary History
- Health
- Prayer
- Tamil Bible Verse
- Tamil Bible Versev
- Tamil Christian Photos
- நீதிமௌழிகள்
No comments:
Post a Comment