Sunday, 14 August 2016

கடைசி கால விசுவாசிகளுக்காக!

==||===|<<<|||||================= கடைசி கால விசுவாசிகளுக்காக! நற்கிரியை செய்கிறதற்கு கிறிஸ்துவுக்குள் தங்களை ஆயத்தபடுத்தி, தேவனுடைய அன்பை வெளிபடுத்திட, நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருக்க, செய்யதக்கவர்களுக்கு செய்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் பிதாவாகிய தேவனை அறிந்து கொள்வதற்கான ஞானத்தையும். தெழிவையும் கொடுக்கிற பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெபற்றுக் கொள்ள ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் ஒவ்வொரு விசுவாசிகளுக்கும் பிரகாசமுள்ள மனக்கண்களை கர்த்தர் கொடுக்கும்படிக்கு ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் தேவர்களல்லாதவர்களுக்கு திருபவும் அடிமைகள் ஆகாதிருக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் பெலனற்றதும், வெறுமையானதுமான அந்த வழிப்பாடுகளுக்குள் மறுபடியும் விரும்பிச் செல்லவைக்கும் மாறுபாடுள்ள இருதயம் விசிவாசிகளுக்குள் வராதிருக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் சத்தியத்திற்கு கிழ்படியாதபடிக்கு எதிர்கிற போராடுகிற ஆவிகள் கட்டப்பட, கள்ள உபதேசங்களை, மாறுபாபாடான தர்க்கங்களை, விவாதங்களை. குழப்பங்களை உண்டாக்குகிற ஆவிகள் கட்டப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் நல் விஷயத்தில் வைராக்கியம் பாராட்ட, பிடிவாதம் இல்லாதிருகக, ஆவிக்கும் மாம்சத்திற்கும் இடையே ஏற்படும் போராட்டத்தை. பரிசுத்த ஆவியானவரின் பெலத்தினால் ஜெயித்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நீதி கிடைக்குமென்று, ஆவியைக்கொண்டு விசுவாசத்தினலே நம்பிக்கையோடே காத்திருக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் கிறிஸ்து இயேசுவின் மேலுள்ள அன்பினாலே ஒருவர்க்கொருவர் ஊழியம் செய்ய ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் நமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளுக்கேற்றபடி யாவருக்கும் விசேஷமாக உடன் விசுவாசக் குடும்பத்தாருக்கு நன்மை செய்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் விசிவாசிகளை கெடுக்கிற, கோள் சொல்லுகிற ஆவிகள், வன்கண் எரிச்கல், பொறாமை, பிரிவினை உண்டாக்குகிற ஆவிகள் கட்டப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் கர்த்தரையும் வசனத்தையும் விசுவாசிக்கக் கூடாதபடிக்கு போராடும் அவிசுவாசம், அற்ப விசிவாசம் சந்தேகம் அழிக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் கசப்பான வேர் யாருடைய இருதயத்திலும் காணப்படாதபடிக்கு ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

No comments:

Post a Comment