Tuesday, 30 August 2016

வயிறு பிரச்சினையே வராது.

லலலலலலலலலலலலலலலலல வயிறு பிரச்சினையே வராது. அதிக அளவு நீர்ச்சத்துள்ள காய்கறிகளான பூசணிக்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய் போன்றவற்றை அவசியம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பழங்களில் தர்ப்பூசணி(Watermelon), பப்பாளி(Papaya) சிறந்தது. இவை உடலில் உள்ள நீரின் அளவை சமநிலையில் வைத்திருக்கும். காரமான உணவு வகைகளைத் தவிர்த்தல் நலம். புரதச் சத்துள்ள உணவு வகைகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், முளைக்கட்டிய பயறு வகைகள். காய்கறிகள் அடங்கிய சாலட்(Salad) செய்வதாக இருந்தால் அதில் பாதாமை சேர்த்துக் கொள்ளலாம், பாதாம் அதிகளவு புரதச் சத்தை உள்ளடக்கி இருக்கிறது. இது பழ சாலட்டுக்கும் பொருந்தும். குளிர்ந்த பால், இளநீர், நீர் மோர் மற்றும் பிரெஷ் பழச்சாறுகளை அருந்தினால் வியர்வையால் இழந்த சக்தியை மீண்டும் பெறலாம். குளிர்ச்சி தரும் புதினா கீரை வகைகளில் புதினா(Mint leaves) அதிக குளிர்ச்சி தரக்கூடியது. அதனால் கோடையில் அடிக்கடி புதினா துவையல், புதினா சட்னி செய்து சாப்பிடுங்கள். வயிறு பிரச்சினையே வராது.

No comments:

Post a Comment