Friday, 26 August 2016

சங்கீதம் 109 :5,11-20

நன்மைக்குப் பதிலாக உனக்குத் தீமைசெய்கிறவன், உன் சிநேகத்துக்குப் பதிலாக உன்னைப் பகைக்கிறவனுக்கு. கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்வானாக, அவன் பிரயாசத்தின் பலனை அந்நியர் பறித்துக்கொள்ளக்கடவர்கள். அவனுக்கு ஒருவரும் இரக்கங்காண்பியாமலும், அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்குத் தயவுசெய்யாமலும் போவார்களாக. அவன் சந்ததியார் நிர்மூலமாகக்கடவர்கள், இரண்டாந்தலைமுறையில் அவன் பேர் அற்றுப்போகும். அவன் பிதாக்களின் அக்கிரமம் கர்த்தருக்கு முன்பாக நினைக்கப்படும், அவன் தாயின் பாவம் நீங்காமலிருக்கும். அவைகள் நித்தமும் கர்த்தருக்கு முன்பாக இருக்கும், அவர்கள் பேர் பூமியிலிராமல் நிர்மூலமாகும். அவன் தயைசெய்ய நினையாமல், சிறுமையும் எளிமையுமானவனைத் துன்பப்படுத்தி, மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினான். சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும், அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனுக்குத் தூரமாய் விலகிப்போம். சாபத்தை அவன் தனக்கு அங்கியாக உடுத்திக்கொண்டான், அது அவன் உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், அவன் எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும். அது அவன் மூடிக்கொள்ளுகிற வஸ்திரமாகவும், நித்தமும் கட்டிக்கொள்ளுகிற கச்சையாகவும் இருக்கும். இதுதான் உன்னை விரோதிக்கிறவர்களுக்கும், உன் ஆத்துமாவுக்கு விரோதமாய்த் தீங்கு பேசுகிறவர்களுக்கும் கர்த்தரால் வரும்பலன். சங்கீதம் 109 :5,11-20

No comments:

Post a Comment