Friday, 26 August 2016

சங்கீதம் 109 :21-31

ஆண்டவராகிய கர்த்தர் அவரது நாமத்தினிமித்தம் உன்னை ஆதரித்து, அவரது கிருபை நலமானதினால், உன்னை விடுவித்தருளுவார். நீ சிறுமையும் எளிமையுமானவன், உன் இருதயம் உனக்குள் குத்துண்டிருக்கிறது. சாயும் நிழலைப்போல் அகன்று போனாய், வெட்டுக்கிளியைப்போல் பறக்கடிக்கப்படுகிறாய். உபவாசத்தினால் உன் முழங்கால்கள் தளர்ச்சியடைகிறது, உன் மாம்சம் புஷ்டியற்று உலர்ந்து போகிறது. நீ அவர்களுக்கு நிந்தையானாய், அவர்கள் உன்னைப் பார்த்து, தங்கள் தலையைத் துலுக்குகிறார்கள். உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சகாயம்பண்ணுவார், அவரது கிருபையின்படி உன்னை இரட்சிப்பார். இது அவரது கரம் என்றும், கர்த்தராகிய தேவன் இதைச் செய்தார் என்றும், அவர்கள் அறிவார்கள். அவர்கள் சபித்தாலும், கர்த்தர் ஆசீர்வதிப்பார், அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போவார்கள், அவரது அடியான் மகிழக்கடவன். உன் விரோதிகள் இலச்சையால் மூடப்பட்டு, தங்கள் வெட்கத்தைச் சால்வையைப்போல் தரித்துக் கொள்ளுவார்கள். கர்த்தரை நீ உன் வாயினால் மிகவும் துதித்து, அநேகர் நடுவிலே அவரைப் புகழுவாயாக. ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களினின்று எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்கும்படி அவர் அவன் வலதுபாரிசத்தில் நிற்பார். சங்கீதம் 109 :21-31

No comments:

Post a Comment