Monday, 29 August 2016

மீன்

நநநநநநநநநநநநஒநநநநநநநநநநந மீன் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றில் இல்லாத சத்துக்களே இல்லை தானே. ஆனாலும், அசைவ உணவை எடுத்துக் கொண்டால், மீன் உணவில் இருக்கும் "ஒமேகா 3 ஃபேட் ஆசிட்(Omega-3 Fatty Acids)" என்பது அரிய மருத்துவ குணம் வாய்ந்தது. உலகம் முழுக்க உள்ள மருத்துவ நிபுணர்கள், இதை சொல்லி வருகின்றனர். வாரத்துக்கு ஒரு முறையோ, இரு முறையோ சாப்பிட்டால் கூட போதும், இருதயம் இரும்பாகத்தான் இருக்கும். இருதய பாதிப்பு கூட பயந்து ஓடிவிடும். சிறிய வயதில் ஆஸ்துமா உள்ளவர்கள், மீன் சாப்பிட்டால், ஆஸ்துமா பறந்துவிடும். மீன் உணவுகளை எப்படி சாப்பிட்டாலும், அதன் மருத்துவ குணம் போய் விடுவதில்லை. எந்த வகை கேன்சரும் வராமல் பாதுகாக்கும். ரத்த அடைப்பு, ரத்த ஓட்டம் பாதிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. மூளை, கண்களுக்கு மிக நில்லது. வயதானவர்களுக்கு அல்சீமர்ஸ்(Alzheimer"s) உட்பட மறதி நோய் வரக்கூடும். அதை தடுக்க மீன் உணவு தான் நல்லது. சர்க்கரை நோய், டிப்ரஷன்(Depression) உள்ளவர்களுக்கும் மீன் உணவு தான் நல்லது. எந்த வகை மீனிலும், 500 மில்லி கிராம் முதல் 1500 மில்லி கிராம் வரை ஒமேகா 3 ஃபேட் ஆசிட்(Omega-3 Fatty Acids) உள்ளது. ஆனால், நம் உடலுக்கு தேவை, 200 முதல் 600 மில்லிகிராம் வரை தான். அதனால் வாரம் ஒரு முறை மீன் உணவு சாப்பிட்டால் கூட நல்லது தான். மீன் எண்ணெய் தோய்த்த இரண்டு பிரெட் துண்டில் 27 மில்லி கிராம், மீன் எண்ணெய் தோய்த்த முட்டையில் 200 மில்லி கிராம், தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால், அதில் 40 மில்லி கிராம் என்ற அளவில் ஒமேகா ஆசிட் உள்ளது. கேப்சூலை விட... இப்போதெல்லாம் எதற்கும் மாத்திரையை விழுங்குவது தான் பேஷனாகி விட்டது. மீன் என்றாலே, ஙே...என்று விழிக்கும் சைவ உணவினர் பலரும், இருதய பலத்துக்காக, ஒமேகா 3 ஃபேட் ஆசிட்(Omega-3 Fatty Acids) உள்ள கேப்சூல் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகின்றனர். ஆனால், இதில் ஒமேகா ஆசிட் சத்துக்கள் இருக்கிறது என்றாலும், இதை விட மீன் உணவில் தான் பல மடங்கு ஒமேகா ஆசிட் உள்ளது. அதனால், மீன் உணவு சாப்பிடுவது தான் நல்லது. பிறந்த குழந்தைகள் சில, உரிய வயது ஆகியும் நடக்காது. அதுபோல சரிவர பேச்சு வராது. அப்படியிருக்கும் குழந்தைகளுக்கு மீன் உணவு மிக நல்லது. நல்ல பலன் கிடைக்கும். தசைகள், மூட்டு வலி போன்றவற்றுக்கும் மீன் நல்ல மருந்து. மற்ற உணவு வகைகளை விட, மீனில் தான் அதிகமான மெர்க்குரி என்ற பாதரசம் உள்ளது. இது உடலுக்கு கெடுதல். ஸ்வார்டு பிஷ், மர்லின் ரே, ஜெம் பிஷ், லிங், ஆரஞ்சு ரக்பி, சதர்ன் ப்ளூ பிஷ் போன்ற மீன்களில் பாதரசம் அதிகம் உள்ளது. அதனால், அதிகமாகவும் மீன் உணவு சாப்பிடுவது என்பதும் சரியல்ல. மேலும், அசுத்த தண்ணீரில் மீன் பிடித்து அதை உணவாக சமைத்து சாப்பிடுவதால் பயனில்லை. மீன்(Fish) உணவு சமைக்கும் போது, அதன் அடர்த்தியான பாகங்களை வேக வைக்கும் போது, ஒரு சென்டிமீட்டர் அடர்த்தி என்றால், மூன்று முதல் நான்கு சென்டிமீட்டர் வரை அடர்த்தி உள்ள பாகத்தை 20 நமிடம் வரை வேக வைக்க வேண்டும். அப்போது தான் நல்லது.

No comments:

Post a Comment