Wednesday, 31 August 2016

உடலுக்கு சக்தி

சுறுசுறுப்பாய் செயல்பட வேண்டுமா? நின்றாய் சாப்பிடுங்க நறைய தண்ணீர் குடிங்க! நீங்கள் விரைவில் சோர்வு அடைகிறீர்களா? உங்களால் எந்த வேலையையும் ஈடுபாட்டுடன் செய்ய முடியாமல் சலிப்பு தோன்றுகிறதா? இதற்கு காரணம் உணவு முறை மற்றும் சில பழக்க வழக்கங்கள் தான். இதோ உங்களுக்காகவே சில டிப்ஸ்: * தினசரி உணவில் தானியங்களை சேர்த்துக் கொள்ளுங்கள். நார்ச்சத்துள்ள தானியங்கள் உடலுக்கு சக்தி அளித்து, மன அழுத்தத்தை போக்குகிறது. * வேளை தவறாமல் உணவு அருந்துங்கள். ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு அவசியம். இடையிடையே ஆரோக்கியமான நொறுக்குத் தீனியையும் சாப்பிடலாம். * காலையில் எழுந்தவுடன் ஆடை இல்லாத பால் ஒரு டம்ளர் அருந்துங்கள். டீ(Tea), காபி(Coffee) போன்ற பானங்களை அருந்துவதை தவிர்த்திடுங்கள். அவை உறக்கத்திற்கு கேடு விளைவிக்கும். * இறைச்சி, பாலாடைக் கட்டி, இனிப்பு வகைகள் ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு தான் ஏற்படும். நார்த்தங்காய், எலுமிச்சை(Lemon), காய்கறிகள், அவரை, பீன்ஸ்(Beans) போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் எளிதில் ஜீரணமாகும். * பெரும்பாலான பெண்களுக்கு இரத்த சோகை காரணமாக, சோர்வு உண்டாகலாம். இதற்கு இரும்புச் சத்து அதிகம் உள்ள பச்சைக் காய்கறிகள், வாழைப்பழம் மற்றும் இரும்புச் சத்தை தக்க வைத்துக் கொள்ளும் வைட்டமின் "சி"(Vitamin-C) உள்ள உணவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். * தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் அளவு தண்ணீர் அருந்த வேண்டும். தண்ணீர் உடலில் உள்ள நச்சுத் தன்மையை வெளியேற்றி, உடலுக்கு சக்தி அளிக்கிறது

வீட்டுக்குறிப்பு

?????????????????????? வீட்டுக்குறிப்பு பட்டு மற்றும் டிசைனர் புடவைகளை பீரோவில் அடுக்கும் போது, நியூஸ் பேப்பர் சுற்றி, இடையில் உலர்ந்த வேப்பங்கொழுந்தையோ அல்லது வசம்புத்துண்டையோ வைத்து அடுக்கி விட்டால் பூச்சி, கறையான் போன்றவை கிட்டவே நெருங்காது.

சங்கீதம் 116 :1-9

கர்த்தர் உன் சத்தத்தையும் உன் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூரு. அவர் தமது செவியை உனக்குச் சாய்த்தபடியால், நீ உயிரோடிருக்குமளவும் அவரைத் தொழுதுகொள். மரணக்கட்டுகள் உன்னைச் சுற்றிக்கொண்டது, பாதாள இடுக்கண்கள் உன்னைப் பிடித்தது, இக்கட்டையும் சஞ்சலத்தையும் அடைந்தாய். அப்பொழுது நீ கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு: கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும் என்று கெஞ்சு. கர்த்தர் கிருபையும் நீதியுமுள்ளவர், நம்முடைய தேவன் மனஉருக்கமானவர். கர்த்தர் கபடற்றவர்களைக் காக்கிறார், நீ மெலிந்துபோனாய், அவர் உன்னை இரட்சித்தார். உன் ஆத்துமா! கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், அதின் இளைப்பாறுதலுக்குத் திரும்பட்டும். கர்த்தர்! உன் ஆத்துமாவை மரணத்துக்கும், உன் கண்ணைக் கண்ணீருக்கும், உன் காலை இடறுதலுக்கும் தப்புவித்தார். நீ கர்த்தருக்கு முன்பாக ஜீவனுள்ளோர் தேசத்திலே நட. சங்கீதம் 116 :1-9

Tuesday, 30 August 2016

சைபர் கிரைம்

இந்தியாவில் சைபர் கிரைம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியா முழுவதும் 2011ம் ஆண்டு 13ஆயிரத்து 301குற்றங்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக நடைப் பெற்றிருக்கின்றன. 2012ம் ஆண்டு, 22ஆயிரத்து 60ஆக இந்த குற்றங்கள் மேலும் அதிகரித்திருக்கின்றன. 2014ம் ஆண்டில், ஒரு லட்சத்து 49ஆயிரத்து, 254குற்றங்களும். 2015ம் ஆண்டில் 3லட்சமாக அதிகரித்துள்ளது. இளைய சமுதாயம், இணையதளங்களை ஆரோக்கிய நிலையில் பயன் படுத்த வேண்டு மென்று, தேசியமனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் கவலை தெரிவித்துள்ளார். நமது தேசத்தில் அதிகரித்துவரும் சைபர் கிரைம் எனப்படும் இணையதள குற்றங்கள் முற்றிலும் கட்டுப் படுத்தப் பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். இணைய தளங்களை பொதுமக்களும், குழந்தைகளும் ஆரோக்கியமான நிலையில் பயன்படுத்தப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். மக்கள் தொகையினைக் காட்டிலும், மக்களிடமுள்ள ஸ்மார்ட் செல்போன்களின் எண்ணிக்கை அதிகம். செல்போன்களை தவறுகளுக்கு இடந்தராதிருக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

வீட்டுக்குறிப்பு

?????????????????????? வீட்டுக்குறிப்பு ஜன்னல்களின் கண்ணாடிப் பகுதி அழுக்காக இருக்கிறதா? பழைய நியூஸ் பேப்பரை எடுத்து தண்ணீரில் நனைத்து, ஜன்னல் கண்ணாடி முழுவதும் மறையும்படி விரித்து ஒட்டி, சில நிமிடங்களுக்குப் பிறகு எடுத்து, துணியால் துடைத்து விட்டால் உங்க வீட்டுக் கண்ணாடி பளபளக்கும்.

வயிறு பிரச்சினையே வராது.

லலலலலலலலலலலலலலலலல வயிறு பிரச்சினையே வராது. அதிக அளவு நீர்ச்சத்துள்ள காய்கறிகளான பூசணிக்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய் போன்றவற்றை அவசியம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பழங்களில் தர்ப்பூசணி(Watermelon), பப்பாளி(Papaya) சிறந்தது. இவை உடலில் உள்ள நீரின் அளவை சமநிலையில் வைத்திருக்கும். காரமான உணவு வகைகளைத் தவிர்த்தல் நலம். புரதச் சத்துள்ள உணவு வகைகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், முளைக்கட்டிய பயறு வகைகள். காய்கறிகள் அடங்கிய சாலட்(Salad) செய்வதாக இருந்தால் அதில் பாதாமை சேர்த்துக் கொள்ளலாம், பாதாம் அதிகளவு புரதச் சத்தை உள்ளடக்கி இருக்கிறது. இது பழ சாலட்டுக்கும் பொருந்தும். குளிர்ந்த பால், இளநீர், நீர் மோர் மற்றும் பிரெஷ் பழச்சாறுகளை அருந்தினால் வியர்வையால் இழந்த சக்தியை மீண்டும் பெறலாம். குளிர்ச்சி தரும் புதினா கீரை வகைகளில் புதினா(Mint leaves) அதிக குளிர்ச்சி தரக்கூடியது. அதனால் கோடையில் அடிக்கடி புதினா துவையல், புதினா சட்னி செய்து சாப்பிடுங்கள். வயிறு பிரச்சினையே வராது.

தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு புதிய பகுதியாக தினம் ஒரு ஜெபக்குறிப்பு அறிமுகமாகிறது ஜெப வீரர்கள் இதனை மனதில் கொண்டு, அந்தந்த நாளில் அந்தந்தக் காரியத்திற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார். "இந்தியாவின் பொருளாதாரம் உயர" ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ???????????????????????????

சங்கீதம் 115 :2-18

உங்களுடைய தேவன் இப்பொழுது எங்கே என்று புறஜாதிகள் சொல்லுகிறார்கள் உங்களுடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார், தமக்குச் சித்தமானயாவையும் செய்கிறார். புறஜாதியாருடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. அவைகளுக்குக் காதுகளிருந்தும்கேளாது, அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. அவைகளுக்குக் கைகளிருந்தும்தொடாது, அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது, தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிற யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள். இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு, அவரே உனக்குத் துணையும் உனக்குக் கேடகமுமாயிருக்கிறார். ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை நம்புங்கள், அவரே உங்களுக்குத் துணையும் உங்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார். கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள், அவரே உங்களுக்குத் துணையும் உங்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார். கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார், இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார். கர்த்தருக்குப் பயப்படுகிற பெரியோரையும் சிறியோரையும் ஆசீர்வதிப்பார். கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார். வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். வானங்கள் கர்த்தருடையவைகள், பூமியையோ மனுபுத்திரருக்குக்கொடுத்தார். மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள். நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். அல்லேலூயா. சங்கீதம் 115 :2-18

Monday, 29 August 2016

மனித கடத்தல்

றறறறறறறறறறறறறறறனறறறறறற மனித கடத்தல் மதுரையிலுள்ள ஒரு காப்பகத்தில் இருந்த பச்சிளம் ஆண் குழந்தை 5லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. சென்னையில் பள்ளிக்கு சிறுவர்களை ஏற்றிச் செல்லும் வேன் போன்று வந்து, குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, 2 சிறுவர்களை மர்மநபர்கள் கடத்திச் சென்று, 30லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டி யுள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர், ஈரோடு சென்னி மலையில் கூலி வேலைக்கு சென்றார். அங்கு, ஆயிரம் ரூபாய்க்காக தனது 5வயது மகளை அடகாக கொடுத்துவிட்டு தலைமறைவானார். பெற்றோர் குழந்தையை மீட்க திரும்பி வரவில்லை. பெண் தெழிலதிபரை அவரது கார் டிரைவர் மற்றும் சிலர் கடத்தி, 20கோடி ரூபாய் கேட்டதுடன், குழந்தைகளையும் கொன்று விடுவோம் என்று மிரட்டி நகை மற்றும் பணத்தை பறித்தனர். இன்றைய காலகட்டங்களில், பணத்துக்காக, பள்ளி மாணவர்களை கடத்தல், தொழிலதிபர்களை கடத்தல் நடந்து வருகிறது. இது தடுக்கப்பட, இப்பேர்பட்ட கும்பல்கள் கண்டுபிடிக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். வறுமையன் காரணமாக, பெற்றோரே குழந்தைகளை விற்கவும், அடகு வைக்கவும் இருக்கிற இந்த அவல நிலை மாறிட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். இதற்கு காரணமான பணஆசை என்கின்ற பொல்லாத ஆவியை கட்டி ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு புதிய பகுதியாக தினம் ஒரு ஜெபக்குறிப்பு அறிமுகமாகிறது ஜெப வீரர்கள் இதனை மனதில் கொண்டு, அந்தந்த நாளில் அந்தந்தக் காரியத்திற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார். "இந்திய திருச்சபைகளில் காணப்படுகிற ஜாதி துவேஷங்கள் முற்றிலும் ஒழிக்கப்பட" ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ???????????????????????????

சங்கீதம் 113 :1-9

அல்லேலூயா, நீ, துதி, கர்த்தருடைய நாமத்தைத் துதி. இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தருடையநாமம் ஸ்தோத்திரிக்கப்படக்கடவது. சூரியன் உதிக்கும் திசைதொடங்கி அது அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக. கர்த்தர் எல்லா ஜாதிகள் மேலும் உயர்ந்தவர், அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது. உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமானமானவர் யார்? அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார். அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார், எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார். மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கப் பண்ணுகிறார். அல்லேலூயா. சங்கீதம் 113 :1-9

சங்கீதம் 112 :1-10

நீ கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிரு அப்போழுது நீ பாக்கியவானாய் இருப்பாய். உன் சந்ததி பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும். ஆஸ்தியும் ஐசுவரியமும் உன் வீட்டிலிருக்கும், உன்னுடைய நீதி என்றைக்கும் நிற்கும். செம்மையானவனுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும், அவன் இரக்கமும், மன உருக்கமும், நீதியுமுள்ளவன். இரங்கிக் கடன்கொடுத்து, தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான், நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன். துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான், அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும். அவன் இருதயம் உறுதியாயிருக்கும், அவன் தன் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காணுமட்டும் பயப்படாதிருப்பான். வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும், அவன் கொம்பு மகிமையால் உயர்த்தப்படும். துன்மார்க்கன் அதைக் கண்டு மனமடிவாகி, தன் பற்களைக் கடித்துக் கரைந்து போவான், துன்மார்க்கருடைய ஆசை அழியும். சங்கீதம் 112 :1-10

தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு புதிய பகுதியாக தினம் ஒரு ஜெபக்குறிப்பு அறிமுகமாகிறது ஜெப வீரர்கள் இதனை மனதில் கொண்டு, அந்தந்த நாளில் அந்தந்தக் காரியத்திற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார். "இந்தியாவில் பெருகும் லஞ்சம், ஊழல் முற்றிலுமாய் அழிக்கப்பட" ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ???????????????????????????

சங்கீதம் 112 :1-10

நீ கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிரு அப்போழுது நீ பாக்கியவானாய் இருப்பாய். உன் சந்ததி பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும். ஆஸ்தியும் ஐசுவரியமும் உன் வீட்டிலிருக்கும், உன்னுடைய நீதி என்றைக்கும் நிற்கும். செம்மையானவனுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும், அவன் இரக்கமும், மன உருக்கமும், நீதியுமுள்ளவன். இரங்கிக் கடன்கொடுத்து, தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான், நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன். துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான், அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும். அவன் இருதயம் உறுதியாயிருக்கும், அவன் தன் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காணுமட்டும் பயப்படாதிருப்பான். வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும், அவன் கொம்பு மகிமையால் உயர்த்தப்படும். துன்மார்க்கன் அதைக் கண்டு மனமடிவாகி, தன் பற்களைக் கடித்துக் கரைந்து போவான், துன்மார்க்கருடைய ஆசை அழியும். சங்கீதம் 112 :1-10

கொய்யா பழம்

மீன்

நநநநநநநநநநநநஒநநநநநநநநநநந மீன் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றில் இல்லாத சத்துக்களே இல்லை தானே. ஆனாலும், அசைவ உணவை எடுத்துக் கொண்டால், மீன் உணவில் இருக்கும் "ஒமேகா 3 ஃபேட் ஆசிட்(Omega-3 Fatty Acids)" என்பது அரிய மருத்துவ குணம் வாய்ந்தது. உலகம் முழுக்க உள்ள மருத்துவ நிபுணர்கள், இதை சொல்லி வருகின்றனர். வாரத்துக்கு ஒரு முறையோ, இரு முறையோ சாப்பிட்டால் கூட போதும், இருதயம் இரும்பாகத்தான் இருக்கும். இருதய பாதிப்பு கூட பயந்து ஓடிவிடும். சிறிய வயதில் ஆஸ்துமா உள்ளவர்கள், மீன் சாப்பிட்டால், ஆஸ்துமா பறந்துவிடும். மீன் உணவுகளை எப்படி சாப்பிட்டாலும், அதன் மருத்துவ குணம் போய் விடுவதில்லை. எந்த வகை கேன்சரும் வராமல் பாதுகாக்கும். ரத்த அடைப்பு, ரத்த ஓட்டம் பாதிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. மூளை, கண்களுக்கு மிக நில்லது. வயதானவர்களுக்கு அல்சீமர்ஸ்(Alzheimer"s) உட்பட மறதி நோய் வரக்கூடும். அதை தடுக்க மீன் உணவு தான் நல்லது. சர்க்கரை நோய், டிப்ரஷன்(Depression) உள்ளவர்களுக்கும் மீன் உணவு தான் நல்லது. எந்த வகை மீனிலும், 500 மில்லி கிராம் முதல் 1500 மில்லி கிராம் வரை ஒமேகா 3 ஃபேட் ஆசிட்(Omega-3 Fatty Acids) உள்ளது. ஆனால், நம் உடலுக்கு தேவை, 200 முதல் 600 மில்லிகிராம் வரை தான். அதனால் வாரம் ஒரு முறை மீன் உணவு சாப்பிட்டால் கூட நல்லது தான். மீன் எண்ணெய் தோய்த்த இரண்டு பிரெட் துண்டில் 27 மில்லி கிராம், மீன் எண்ணெய் தோய்த்த முட்டையில் 200 மில்லி கிராம், தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால், அதில் 40 மில்லி கிராம் என்ற அளவில் ஒமேகா ஆசிட் உள்ளது. கேப்சூலை விட... இப்போதெல்லாம் எதற்கும் மாத்திரையை விழுங்குவது தான் பேஷனாகி விட்டது. மீன் என்றாலே, ஙே...என்று விழிக்கும் சைவ உணவினர் பலரும், இருதய பலத்துக்காக, ஒமேகா 3 ஃபேட் ஆசிட்(Omega-3 Fatty Acids) உள்ள கேப்சூல் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகின்றனர். ஆனால், இதில் ஒமேகா ஆசிட் சத்துக்கள் இருக்கிறது என்றாலும், இதை விட மீன் உணவில் தான் பல மடங்கு ஒமேகா ஆசிட் உள்ளது. அதனால், மீன் உணவு சாப்பிடுவது தான் நல்லது. பிறந்த குழந்தைகள் சில, உரிய வயது ஆகியும் நடக்காது. அதுபோல சரிவர பேச்சு வராது. அப்படியிருக்கும் குழந்தைகளுக்கு மீன் உணவு மிக நல்லது. நல்ல பலன் கிடைக்கும். தசைகள், மூட்டு வலி போன்றவற்றுக்கும் மீன் நல்ல மருந்து. மற்ற உணவு வகைகளை விட, மீனில் தான் அதிகமான மெர்க்குரி என்ற பாதரசம் உள்ளது. இது உடலுக்கு கெடுதல். ஸ்வார்டு பிஷ், மர்லின் ரே, ஜெம் பிஷ், லிங், ஆரஞ்சு ரக்பி, சதர்ன் ப்ளூ பிஷ் போன்ற மீன்களில் பாதரசம் அதிகம் உள்ளது. அதனால், அதிகமாகவும் மீன் உணவு சாப்பிடுவது என்பதும் சரியல்ல. மேலும், அசுத்த தண்ணீரில் மீன் பிடித்து அதை உணவாக சமைத்து சாப்பிடுவதால் பயனில்லை. மீன்(Fish) உணவு சமைக்கும் போது, அதன் அடர்த்தியான பாகங்களை வேக வைக்கும் போது, ஒரு சென்டிமீட்டர் அடர்த்தி என்றால், மூன்று முதல் நான்கு சென்டிமீட்டர் வரை அடர்த்தி உள்ள பாகத்தை 20 நமிடம் வரை வேக வைக்க வேண்டும். அப்போது தான் நல்லது.

வீட்டுக்குறிப்பு

?????????????????????? வீட்டுக்குறிப்பு வீட்டுக்குள் செயற்கை செடிகளை வைக்கும்போது மணலுக்குப் பதிலாக செய்தித்தாள்களை கிரிக்கெட் பந்துகள் போல சுருட்டி, பூந்தொட்டியில் போட்டு விடுங்கள். மேலே சிறு சிறு கற்கள் போட்டு நிரப்பினால் தொட்டி அதிக கனமிருக்காது.

தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு புதிய பகுதியாக தினம் ஒரு ஜெபக்குறிப்பு அறிமுகமாகிறது ஜெப வீரர்கள் இதனை மனதில் கொண்டு, அந்தந்த நாளில் அந்தந்தக் காரியத்திற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார். "இந்தியாவில் புகையிலையினால் உண்டாகிற மாசு, முற்றிலும் கட்டுப்படுத்தப் பட, அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்க" ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ???????????????????????????

Saturday, 27 August 2016

உணவுகட்டுப்பாடு

றறறறறறறறறறறறறறறறறறறறறற உணவுகட்டுப்பாடு இப்போதெல்லாம் பெரும்பாலான பேர் விருந்து என்றால் கன்னாபின்னா என்று சாப்பிட்டு மூச்சு விடக்கூட திணறுவதை காண முடிகிறது. இப்படிப்பட்டவர்கள் வயிறு முட்ட சாப்பிட்ட பிறகும் கூட ஸ்வீட், பாயாசத்தையும், ஆசை ஆசையாக உள்ளே தள்ளி விடுகிறார்கள். அவர்கள் சாப்பிட்ட ஒரு லட்டு அதில் உள்ள நெய் அல்லது எண்ணை, சர்க்கரை, பாயாசத்தில் உள்ள வெல்லம் அல்லது சர்க்கரை, தேங்காய், முந்திரி என்று ஒட்டு மொத்தமாக ஜீரணமாக 6 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. கொலஸ்ட்ரால், நீரிழிவு பிரச்சினை, போன்றவற்றால் உணவுக் கட்டுப்பாட்டுடன் இருப்பவர்கள் ஒரு வாக் சென்று வந்தால் உடம்பு சிறிது லேசானது போல் இருக்கும். ஆகவே பெரும்பாலும் மாலை 6 மணிக்கு மேல் இனிப்பு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. 6 மணி, 8 மணி நேரத்திற்கு முன்பாகவே நாம் தூங்கி விடுவதால் சாப்பிட்ட உணவில் உள்ள கொலஸ்ட்ராலுக்கு கரைய வேலை இல்லாமல் நம் உடல் டெபாசிட் ஆகி விடுகிறது. பகலில் பலமான விருந்து சாப்பிட்டு மீண்டும் இரவிலும் ஒரு நல்ல ருசியான சாப்பாடு கிடைத்தால் ஒரு பிடி பிடித்து விடலாம் என்று நினைப்பது நல்லதல்ல. இரவு பட்டினியாகப் படுத்தாலும் அடுத்த நாள் காலையில் இருந்தே பட்டினியாக இருப்பதும் தவறு. அடுத்த நாள் பட்டினி இருந்தாலும் முதல்நாள் இரவு சாப்பிட்ட அதிக அளவு கொலஸ்ட்ரால் விடிவதற்குள் உடலில் தங்கி விடுவதால் அது அடுத்த நாள் பட்டினியால் குறையாது. அதனால் நாள் முழுக்க சரிவிகித உணவு சாப்பிடுவதால் மட்டுமே ஆரோக்கியமாக இருக்க வாய்ப்புண்டு. உணவுகட்டுப்பாடு இல்லாதவர்கள் கூட தங்கள் உடல் நலம் காக்க சமநிலையான உணவு முறையைப் பின்பற்றுவது நல்லது. அடிக்கடி வயிறு வலிக்கிறதே என்று உருண்டு புரளும் பெண்கள் இனியாவது விருந்தை கொஞ்சமா டேஸ்ட் பண்ணுங்க சரிதானே!

வீட்டுக்குறிப்பு

?????????????????????? வீட்டுக்குறிப்பு எப்போதாவது பயன்படுத்தும் ஃபிளாஸ்க்குகள், ஹாட் பேக்குகள், வாடை அடிக்கும் டப்பாக்கள் போன்றவற்றின் உள்ளே பேப்பரை சுருட்டி வைத்து விட்டால், சில நாட்கள் கழித்துத் திறந்தாலும் நாற்றம் இருக்காது.

வீட்டுக்குறிப்பு

?????????????????????? வீட்டுக்குறிப்பு துணிக்கு நீலம் போடும்போது நீலம் கரைத்து ஜலத்தில் சிறிது வாஷிங் சோடாவை கலந்து கொண்டால் நீலம் திட்டுத் திட்டாகவோ அல்லது புளூ புளூவாகவோ துணியைப் பற்றாது.

Friday, 26 August 2016

வடமாநில கொள்ளைக் கும்பல்

வடமாநில கொள்ளைக் கும்பல் இந்தியாவில் குறிப்பாக வடமாநிலங்களில் மக்களின் ஏ.டி.எம் மற்றும் வங்கி அக்கவுண்ட்களிலிருந்து பணத்தைத் திருடுவது மற்றும் மோசடி செய்து பரிசு விழுந்துள்ளது என்று சொல்லி எஸ்.எம்.எஸ் அனுப்பி ஏமாற்றுவது, எப்படியாவது முகவரியைத் தெரிந்து கொண்டு பரிசு பொருட்கள் அனுப்புவது போல பார்சல் அனுப்பி ஏமாற்றுவது போன்ற மோசடி செயல்களில் ஈடுபடுவது நடந்து வருகிறது.தற்போது இந்த கும்பல், தென் மானிலங்களிலும் தங்கள் கைவரிசையை காட்ட ஆரம்பித்துள்ளது. போன் மூலமாக, மிஸ்டு கால் கொடுத்து பொதுமக்களை ஏமாற்றி, எ.டி.எம் மின் நம்பரை கேட்டுவாங்கும் கும்பல்கள் பிடிபட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.உ பொதுமக்கள் யாரும் ஏமாற்றப் படாதிருக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். அடிக்கடி பணவர்த்தனை செய்யும் அக்கவுண்ட் நம்பர்களைஹேங்கிங் செய்து ஆசை வார்த்தை கூறும் நபர்களிடம் ஏமாந்துவிடாதிருக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

வீட்டுக்குறிப்பு

இலையுதிர் காலத்தில் பழுத்து உதிரும் வேப்பம் இலைகளை சேகரித்து எடுத்து தூள் செய்து நெருப்பில் போட்டால் புகை நெடி தாளாமல் கொசுக்கள் ஓடி விடும்.

சங்கீதம் 109 :21-31

ஆண்டவராகிய கர்த்தர் அவரது நாமத்தினிமித்தம் உன்னை ஆதரித்து, அவரது கிருபை நலமானதினால், உன்னை விடுவித்தருளுவார். நீ சிறுமையும் எளிமையுமானவன், உன் இருதயம் உனக்குள் குத்துண்டிருக்கிறது. சாயும் நிழலைப்போல் அகன்று போனாய், வெட்டுக்கிளியைப்போல் பறக்கடிக்கப்படுகிறாய். உபவாசத்தினால் உன் முழங்கால்கள் தளர்ச்சியடைகிறது, உன் மாம்சம் புஷ்டியற்று உலர்ந்து போகிறது. நீ அவர்களுக்கு நிந்தையானாய், அவர்கள் உன்னைப் பார்த்து, தங்கள் தலையைத் துலுக்குகிறார்கள். உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சகாயம்பண்ணுவார், அவரது கிருபையின்படி உன்னை இரட்சிப்பார். இது அவரது கரம் என்றும், கர்த்தராகிய தேவன் இதைச் செய்தார் என்றும், அவர்கள் அறிவார்கள். அவர்கள் சபித்தாலும், கர்த்தர் ஆசீர்வதிப்பார், அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போவார்கள், அவரது அடியான் மகிழக்கடவன். உன் விரோதிகள் இலச்சையால் மூடப்பட்டு, தங்கள் வெட்கத்தைச் சால்வையைப்போல் தரித்துக் கொள்ளுவார்கள். கர்த்தரை நீ உன் வாயினால் மிகவும் துதித்து, அநேகர் நடுவிலே அவரைப் புகழுவாயாக. ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களினின்று எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்கும்படி அவர் அவன் வலதுபாரிசத்தில் நிற்பார். சங்கீதம் 109 :21-31

தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு புதிய பகுதியாக தினம் ஒரு ஜெபக்குறிப்பு அறிமுகமாகிறது ஜெப வீரர்கள் இதனை மனதில் கொண்டு, அந்தந்த நாளில் அந்தந்தக் காரியத்திற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார். "இந்தியாவின் மாசு கட்டுப் பாட்டு வாரியம் சீராய் செயல்பட" ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ???????????????????????????

வீட்டுக்குறிப்பு

?????????????????????? வீட்டுக்குறிப்பு புடவையில் வைத்து தைக்கும் ஜம்கியை ஒரு ரப்பர் பந்தில் வைத்து குண்டூசியால் பந்து முமுவதும் குத்தி அதை டேபிள் மேல் பேப்பர் வெயிட்டாக வைத்தால் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.

தினம் ஒரு ஜெபக்குறிப்ப

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு புதிய பகுதியாக தினம் ஒரு ஜெபக்குறிப்பு அறிமுகமாகிறது ஜெப வீரர்கள் இதனை மனதில் கொண்டு, அந்தந்த நாளில் அந்தந்தக் காரியத்திற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார். "இந்தியாவின் கழிவுநீர் மேலான்மை சிறப்பாக செயல்பட்டு, தூய்மையான இந்தியா உருவாக" ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்" ???????????????????????????

சங்கீதம் 109 :5,11-20

நன்மைக்குப் பதிலாக உனக்குத் தீமைசெய்கிறவன், உன் சிநேகத்துக்குப் பதிலாக உன்னைப் பகைக்கிறவனுக்கு. கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்வானாக, அவன் பிரயாசத்தின் பலனை அந்நியர் பறித்துக்கொள்ளக்கடவர்கள். அவனுக்கு ஒருவரும் இரக்கங்காண்பியாமலும், அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்குத் தயவுசெய்யாமலும் போவார்களாக. அவன் சந்ததியார் நிர்மூலமாகக்கடவர்கள், இரண்டாந்தலைமுறையில் அவன் பேர் அற்றுப்போகும். அவன் பிதாக்களின் அக்கிரமம் கர்த்தருக்கு முன்பாக நினைக்கப்படும், அவன் தாயின் பாவம் நீங்காமலிருக்கும். அவைகள் நித்தமும் கர்த்தருக்கு முன்பாக இருக்கும், அவர்கள் பேர் பூமியிலிராமல் நிர்மூலமாகும். அவன் தயைசெய்ய நினையாமல், சிறுமையும் எளிமையுமானவனைத் துன்பப்படுத்தி, மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினான். சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும், அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனுக்குத் தூரமாய் விலகிப்போம். சாபத்தை அவன் தனக்கு அங்கியாக உடுத்திக்கொண்டான், அது அவன் உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், அவன் எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும். அது அவன் மூடிக்கொள்ளுகிற வஸ்திரமாகவும், நித்தமும் கட்டிக்கொள்ளுகிற கச்சையாகவும் இருக்கும். இதுதான் உன்னை விரோதிக்கிறவர்களுக்கும், உன் ஆத்துமாவுக்கு விரோதமாய்த் தீங்கு பேசுகிறவர்களுக்கும் கர்த்தரால் வரும்பலன். சங்கீதம் 109 :5,11-20

Thursday, 25 August 2016

கசப்புச் சுவை:

\(:::::\\\\\\\\\\\\\<<<<\\\\\\\\\ கசப்புச் சுவை: கசப்புச் சுவை நாக்கின் ருசியின்மையைப் போக்கும். உடலில் நஞ்சு, கிருமி, மயக்கம், வயிற்றுப் பிரட்டல், காய்ச்சல், எரிச்சல், நாவறட்சி, தோல் வியாதி, அரிப்பு போன்ற நோய்களை நீக்கும். வயிற்றில் ஜீரண சக்தியைத் தூண்டும். உடலிலுள்ள தோஷங்களையும், மலங்களையும் வழித்து வெளியேற்றும். தாய்ப்பால், தொண்டை இவற்றைச் சுத்தம் செய்யும். மலம், கபம், சிறுநீர், பித்தம் இவற்றை உலரச் செய்யும். மஞ்சள், பாகற்காய், மணத்தக்காளி ஆகியவை கசப்புச் சுவை கொண்டவை. அளவுக்கு மீறினால் தாதுக்கள், பலம் இவற்றைக் குறைத்து விடும். மயக்கம், சோர்வு, தலை சுற்றல், வாத நோய், வரட்டுத் தன்மை, சொரசொரப்பு ஆகியவற்றை உண்டாக்கும். காரம்: உடலில் கபத்தைக் குறைக்கும். ஜீரண சக்தியை வளர்க்கும். புண்களை ஆற்றும். உடலைச் சுத்தப்படுத்தி புலன்களைத் தெளியச் செய்யும். உறைந்த ரத்தத்தை உடைக்கும். வீக்கம், பருமன், கிருமி நோய், தொண்டை நோய், நஞ்சு, தோல் நோய், அரிப்பு இவற்றைத் தணிக்கும். பெருங்காயம், சுக்கு, மிளகு, கடுகு, துளசி, வெற்றிலை போன்றவை காரச் சுவையுள்ள பொருட்கள். அதிகம் உட்கொண்டால் நாவறட்சி, மயக்கம், வெறி, வாந்தி, உடல் களைப்பு, விந்து உலர்தல், நடுக்கம், தலைசுற்றல், உடலை இளகச் செய்தல் போன்றவை ஏற்படும். கை & கால்கள், விலாப் பக்கம், முதுகு, இடுப்புப் பகுதிகளில் வாயுவின் சீற்றத்தை உண்டுபண்ணி, குத்தல் வலி, சுருக்கம், உடைப்பது போன்ற வலியை உண்டாக்கும். துவர்ப்பு: கடுக்காய், அருகம்புல், நாவல், அத்தி, ஆல், இலந்தை, பாக்கு, விளாங்காய் ஆகியவை துவர்ப்புச் சுவை கொண்டவை. கபம், பித்தம், ரத்தம் ஆகிய மூன்றில் ஏற்படும் தோஷங்களை அழிக்க வல்லது. குளிர்ச்சி வீரியமுடையது. ஜீரணிப்பது கடினம். தோலின் நிறத்தை சரி செய்யும். புண்களை ஆற்றும். உடலில் அதிக வறட்சியை ஏற்படுத்தும். மலத்தைக் கட்டுப்படுத்தும். இதை அதிகம் உபயோகித்தால், நா வறட்சி, வயிற்றுப் பொருமல், கால்கள் தடித்து அசைவற்றிருப்பது, இளைப்பு, பாரிச வாயு ஆகிய நோய்களைத் தோற்றுவிக்கும். ஆண்மையையும் அழிக்கும். இனிப்பு, புளிப்பு, உப்பு ஆகியவை உணவிலும், கசப்பு, காரம், துவர்ப்பு ஆகியவை சிகிச்சையிலும் முதலிடம் வகிக்கின்றது

Wednesday, 24 August 2016

வீட்டுக்குறிப்பு

?????????????????????? வீட்டுக்குறிப்பு இன்பில்ட்காட் என்னும் மேற்புறம் திறந்தால் உள்ளே அதிக இடம் கொண்ட கட்டில்களை படுக்கை அறையில் போட்டு விட்டால் அதிகப்படி தலையணை போர்வைகளை அதில் ஒளிக்கலாம்.

உணவு அளவு

முன்பெல்லாம் ஓட்டல்கள் நிறைய இருக்காது. அப்படியே இருந்தாலும், தோசை, இட்லி, பொங்கல் என்று நம்மூர் சமாச்சாரங்கள் தான் கிடைக்கும். அதெல்லாம் நம் வயிற்றைப் பதம் பார்த்ததும் இல்லை. ஆனால், இப்போது... வாயில் நுழையாத பெயர்களில் உணவுப் பண்டங்கள், அதை ஆசையாக வாங்கிச் சாப்பிடும் பெருமிதத்தில், நாம் உயிர் வாழ முக்கிய பங்காற்றி வரும் பெருங்குடலை மறந்தே விடுகிறோம். "இழு இழு"வென இழுத்து கஷ்டப்பட்டு வாயில் போட்டு ருசியாய் சுவைப்பது போல பாவனை செய்தபடி சாப்பிடும் பொருட்கள் அனைத்தும் நம் குடலையும் "இழுஇழு"வென இழுத்து விடும். ஆனால், இதைப் பற்றி நமக்கு சிந்தனையே இருக்காது. வயிறு வலிக்குது என்று அலறுவோம். வயிறு வலிக்கு மாத்திரை போட்டு தற்காலிக நிவாரணம் கண்டுவிட்டு, அடுத்த வேளைக்கு மீண்டும் "இழுஇழு..." என்ன வாழ்க்கை இது? நாம் எவ்வளவு உணவு உண்ண வேண்டும், எதை உண்ண வேண்டும்? நாம் எப்போதும் அளவறிந்து உணவு உட்கொள்ள வேண்டும். அளவு இரண்டு விஷயங்களைப் பொறுத்துள்ளது. ஒன்று உடலின் ஜீரண சக்தி; மற்றொன்று உண்ணும் உணவின் தன்மை. உடலில் ஜீரண சக்தி எப்படி இருக்கிறது என்பதை முக்கியமாக கவனித்த பிறகே உணவு உட்கொள்ள வேண்டும். உட்கொள்ளும் உணவு செரிப்பதற்கு எளிதானதா, கடினமானதா என்பதைப் பொறுத்தும் உணவின் அளவு மாறுபடும். உணவு உட்கொள்வதால், வயிற்றிலுள்ள ஜீரணப்பை கெட்டு விடக்கூடாது. இருதயப் பகுதியில் அடைப்போ, விலாப்பக்கங்கள் புடைக்கவோ கூடாது. வயிறு புடைக்கும் அளவுக்கு உணவை உட்கொள்ளக் கூடாது. அளவாக உண்டால், புலன்களுக்குத் திருப்தியையும், வலுவையும் ஊட்டும்; வயிற்றுப் பசியையும், தாகத்தையும் அடக்கும். நிற்பது, அமர்வது, தூங்குவது, நடப்பது, மூச்சை இழுப்பது, மூச்சை வெளி விடுவது, சிரிப்பது, உரையாடுவது போன்ற செயல்களை நாம் சுகமாகச் செய்தால் உண்ட உணவின் அளவு கூடவோ, குறையவோ இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம். மாலையில் உண்ட உணவு காலைக்குள்ளும், காலையில் உண்ட உணவு மாலைக்குள்ளும் ஜீரணமாக வேண்டும். இப்படி உட்கொண்டால், உடலில் பலம், நிறம், சீரான உடல் வளர்ச்சி, உடல் அமைப்பு, ஆகியவற்றைப் பெற்று பயன் அடையலாம். எளிதில் ஜீரணமாகாதா உணவுப் பொருட்களை வயிற்றில் அரை பங்கு உட்கொண்டு நிறுத்தி விட வேண்டும். இனிப்புச் சுவையுள்ள உணவுப் பண்டங்கள், நெய்யில் சமைத்த பொருட்கள் இப்படிப்பட்ட உணவு வகைகளை மேலே குறிப்பிட்ட அளவுக்கு மிகுதியாக உண்பது உடலுக்கு நல்லதல்ல. ஜீரணத்திற்கு எளிதான பொருட்கள் இயற்கையாகவே வயிற்றில் ஜீரண சக்தியைத் தூண்டக் கூடியவை. தவறி அதிகமாக உட்கொண்டாலும் தீமையை ஏற்படுத்தாது. கடினமான உணவுப் பொருட்கள் இவற்றுக்கு எதிரிடையானவை. எனினும் அதிக ஜீரண சக்தியை உடையவர்களுக்கும், தினந்தோறும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் இவை கெடுதலை விளைவிக்காது. உணவை மிகக் குறைவாகவோ, அதிகமாகவோ உண்ணக் கூடாது. குறைந்த அளவில் உணவை உட்கொண்டால், பலம், நிறம், வளர்ச்சி, மனம், அறிவு, புலன்கள் இவை அழிந்து விடும். உணவைக் குறைத்தால் மலச்சிக்கல் உண்டாகும். ஆண்மை, ஆயுள் குறையும். அதிகஅளவில் உட்கொண்டால் வாயு, பித்தம், கபம் ஆகியவற்றை அதிகப்படுத்தி விடுகிறது. ஜீரணசக்தி குன்றி பல நோய்கள் உருவாகி விடும். எனவே, தினமும் உண்ணும் உணவு அளவுக்குக் குறையாமலும், அதிகமாகாமலும் இருக்க வேண்டும். நீங்கள் எப்படி? ஒரு கரண்டி பாயசம் வீணாகப் போகிறதே என்று நினைத்து வயிற்றுக்குள் கொட்டுபவரா? -

தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு புதிய பகுதியாக தினம் ஒரு ஜெபக்குறிப்பு அறிமுகமாகிறது ஜெப வீரர்கள் இதனை மனதில் கொண்டு, அந்தந்த நாளில் அந்தந்தக் காரியத்திற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார். "இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழுள்ள மக்கள் அனைவரும் சாபம் நீங்கி ஆசீர்வதிக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்" ???????????????????????????

Saturday, 20 August 2016

சங்கீதம் 107 :10-22

தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உன்னதமானவருடைய ஆலோசனையை அசட்டைபண்ணினவர்கள், அந்தகாரத்திலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து, ஒடுக்கத்திலும் இரும்பிலும் கட்டுண்டு கிடந்தார்கள். அவர்களுடைய இருதயத்தை கர்த்தர் வருத்தத்தால் தாழ்த்தினார், சகாயரில்லாமல் விழுந்துபோனார்கள். தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார். அந்தகாரத்திலும் மரணஇருளிலுமிருந்து அவர்களை வெளிப்படப்பண்ணி, அவர்கள் கட்டுகளை அறுத்தார். கர்த்தர் வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்தாரென்று, அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக. நிர்மூடர் தங்கள் பாதகமார்க்கத்தாலும் தங்கள் அக்கிரமங்களாலும் நோய்கொண்டு ஒடுங்கிப்போகிறார்கள். அவர்கள் ஆத்துமா சகல போஜனத்தையும் அரோசிக்கிறது, அவர்கள் மரணவாசல்கள் பரியந்தம் சமீபிக்கிறார்கள். தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சிக்கிறார். அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார். அவர்கள் கர்த்தரை அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து, ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி, அவருடைய கிரியைகளை ஆனந்த சத்தத்தோடே விவரிப்பார்களாக. சங்கீதம் 107 :10-22

தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு புதிய பகுதியாக தினம் ஒரு ஜெபக்குறிப்பு அறிமுகமாகிறது ஜெப வீரர்கள் இதனை மனதில் கொண்டு, அந்தந்த நாளில் அந்தந்தக் காரியத்திற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார். "இந்தியாவில் காணப்படும் மூடநம்பிக்கைகள் முற்றிலும் வேரறுக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்" ???????????????????????????

Friday, 19 August 2016

சங்கீதம் 107 :1-9

நீ கர்த்தரைத் துதி , அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. கர்த்தரால் சத்துருவின் கைக்கு நீங்கலாக்கி மீட்கப்பட்டு, கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமுள்ள பல தேசங்களிலுமிருந்து சேர்க்கப்பட்டவர்கள், அப்படிச் சொல்லக்கடவர்கள். அவர்கள் தாபரிக்கும் ஊரைக் காணாமல், வனாந்தரத்திலே அவாந்தரவழியாய், பசியாகவும், தாகமாகவும், ஆத்துமா தொய்ந்ததாகவும் அலைந்து திரிந்தார்கள். தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை கர்த்தர் விடுவித்தார். தாபரிக்கும் ஊருக்குப்போய்ச்சேர, அவர்களைச் செவ்வையான வழியிலே நடத்தினார். தவனமுள்ள ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று, அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக. சங்கீதம் 107 :1-9

தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு புதிய பகுதியாக தினம் ஒரு ஜெபக்குறிப்பு அறிமுகமாகிறது ஜெப வீரர்கள் இதனை மனதில் கொண்டு, அந்தந்த நாளில் அந்தந்தக் காரியத்திற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார். "இந்தியாவில் மறைக்கப்பட்டு, புதைக்கப் பட்டுள்ள அனைத்து ஆசீர்வாதங்களும் வெளிவர ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்" ???????????????????????????

முட்டையின் மகிமை

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! முட்டையின் மகிமை உங்களுக்கு செல்போன் "ஹச்" தெரிந்திருக்கும். வைட்டமின் "ஹெச்" தெரியுமா? தெரிய வாய்ப்பில்லை. ஏனென்றால் மருத்துவ உலகமே இப்போதுதான் இந்த வைட்டமினின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளது. இத்தனைக்கும் இந்த வைட்டமின் கண்டுபிடிக்கப்பட்டது 1916-ம் ஆண்டில்! ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பேட்மேன் எனும் அறிவியலாளர்தான் இதனைக் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பில் ஒரு சுவாரசியம் உண்டு. ஜெர்மன் நாட்டில் 1900-ம் ஆண்டு வாக்கில் நாடு முழுவதும் கோழிக்குஞ்சுகளுக்கும் எலிகளுக்கும் திடீரென்று தோலில் பல்வேறு அழற்சி நோய்கள் உண்டாயின. இது ஒரு சத்துக்குறைவு நோய் என்று மட்டும் ஆரம்பத்தில் புரிந்தது. அவற்றுக்குப் பல சத்துணவுகளைக் கொடுத்துப் பார்த்தார், பேட்மேன். இறுதியில் வேகவைத்த கோழிமுட்டைகளைக் கொடுத்ததும் அந்தத் தோல் நோய்கள் சரியாயின. உடனே கோழிமுட்டையை ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். கோழிமுட்டையின் வெள்ளைக் கருவில் உள்ள ஒரு வகை வைட்டமின்தான் இதற்குக் காரணம் என்பதை பேட்மேன் உறுதி செய்தார். ஜெர்மன் மொழியில் ஏஹன்ற் என்றால் "தோல்" என்று பொருள். ஆகவே, அந்த வார்த்தையின் முதல் எழுத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இதற்கு "வைட்டமின்-ஹெச்" என்று பெயரிட்டார். நோய்வாய்ப்பட்ட கோழிக்குஞ்சுகளுக்கு முட்டை தந்து நோயைக் குணப்படுத்துவதற்குச் செலவு அதிகமானதால் இந்த வைட்டமினைத் தனியாகப் பிரிக்க முடியுமா என யோசித்தார் பேட்மேன். அவரால் இயலவில்லை. அவரைத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்த கோர்க் எனும் அறிவியலாளர் 1930-ல் முட்டையின் கருவிலிருந்து இந்த வைட்டமினைப் பிரித்தெடுத்து வெற்றி கண்டார். இதனைத் தொடர்ந்து 1940-ல் மனிதனின் கல்லீரலில் இது உள்ளது என்பதும் தெரியவந்தது. இறுதியாக 1943-ம் ஆண்டில் அமெரிக்காவில் இந்த வைட்டமினைச் செயற்கையாகவும் தயாரிக்கத் தொடங்கினர். காலப்போக்கில் ஆங்கில அகரவரிசையில் இருந்த எல்லா வைட்டமின்களுக்கும் புதிய பெயர்கள் சூட்டப்பட்டபோது, வைட்டமின்-ஏ "ரெட்டினால்" என்றும் வைட்டமின்-சி "அஸ்கார்பிக் அமிலம்" என்றும் புதிய பெயர்களைப் பெற்றபோது, வைட்டமின்-ஹெச் "பயாட்டின்" என்ற நாமகரணத்தைப் பெற்றது. பயாட்டின் விலங்குகளுக்கு மட்டுமன்றி மனித இனத்திற்கும் தேவைப்படுகின்ற முக்கியமான வைட்டமின் என்பது இருபதாம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில்தான் மருத்துவர்களுக்குப் புரிந்தது. தண்ணீரில் கரையும் வைட்டமின் வகையைச் சேர்ந்த இது, வைட்டமின் "பி" தொகுப்பில் உள்ள எட்டு முக்கிய வைட்டமின்களில் ஒன்று. உடலில் கார்பாக்சிலேஸ் நொதிகளுடன் இணைந்து இது செயலாற்றுகிறது. உணவில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச் சத்துகள் உடலில் பல்வேறு வேதிமாற்றங்களை அடைவதற்கு இந்த வைட்டமின் அவசியம். கார்போஹைட்ரேட்டிலிருந்து கிளைக்கோஜனைத் தயாரிப்பதற்கும், இரும்புச்சத்தும் புரதச்சத்தும் இணைந்து "ஹீமோகுளோபின்" எனும் நிறமிப் பொருள் உருவாவதற்கும் இது தேவைப்படுகிறது. புரதச்சத்திலிருந்து அமினோ அமிலங்களைத் தயாரிக்கவும், கொழுப்பிலிருந்து கொழுப்பு அமிலங்களைத் தயாரித்து, உடலின் எலும்பு வளர்ச்சிக்கும் தசை வளர்ச்சிக்கும் முறைப்படி விநியோகிக்கவும் துணைபுரிவது இந்த வைட்டமின்தான். ஆரோக்கியமான முடி வளர்ச்சி மற்றும் நக வளர்ச்சிக்குத் தேவையான நொதிகளைத் தருவதும், ரத்தத்திலும் பிற உடல் அணுக்களிலும் வேதிவினைகள் நடக்கும்போது அங்கு தேவைப்படுகின்ற கரியமில வாயுவைச் சுமந்து செல்வதும் இதுவே. உணவின் வளர்சிதைமாற்றப் பணிகள் பலவற்றில் இது துணைநொதியாகச் செயலாற்றி உடலுக்குச் சக்தியைத் தருகிறது; அது மட்டுமல்லாமல் அதிகப்படியாக உள்ள சக்தியைத் தசைகளில் சேமித்து வைக்கிறது. இவை அனைத்தும் முன்பே கண்டறியப்பட்ட உண்மைகள். அண்மைக்கால ஆராய்ச்சியின்படி கர்ப்பிணிகளுக்கு பயாட்டின் வைட்டமின் மிகவும் அத்தியாவசியமானது என்று கண்டறியப்பட்டுள்ளது. "சாதாரணமாக நடுத்தர வயதில் உள்ளோருக்கு இந்த வைட்டமின் நாளொன்றுக்கு 150 முதல் 200 மைக்ரோகிராம் வரை தேவைப்படுகிறது. கர்ப்ப காலத்தில் இதன் தேவை நாளொன்றுக்கு 300 மைக்ரோகிராம் என்று அதிகரிக்கிறது. இந்த அளவு கண்டிப்பாகக் குறையக் கூடாது. அப்படிக் குறைந்தால் கருவில் வளரும் குழந்தைக்குப் பிறவியிலேயே ஊனம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டாகிவிடும்" என்று "அமெரிக்கன் ஜெர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷன்" ஓர் ஆய்வு அறிக்கையில் உறுதிபடக் கூறியுள்ளது. குறிப்பாக, குழந்தைகளுக்குப் பிறவியிலேயே உதடு, அண்ணம் ஆகியவற்றில் பிளவு ஏற்படுவதற்கு இந்த வைட்டமின் பற்றாக்குறை முக்கியக் காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது. அடுத்து, வளர்ச்சி குறைந்த கை, கால்களுடன் குழந்தை பிறப்பதற்கும் முதுகுத்தண்டின் அடிப்பாகத்தில் முதுகெலும்பு பிளவுபடுவதற்கும் இந்த வைட்டமின் பற்றாக்குறை ஒரு காரணமாக இருக்கலாம் என்பதும் அமெரிக்காவில் ஓர் ஆராய்ச்சியில் கண்டறியப்பட்ட முடிவாகும். கர்ப்ப காலத்தில் பயாட்டின் மருந்து சாப்பிட்டவர்களின் குழந்தைகளுக்கு இந்த ஊனம் ஏற்படுகின்ற வாய்ப்பு மிகவும் குறைந்துள்ளது என்பதும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சரி, பயாட்டின் அளவு குறைவாக உள்ளது என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? இதற்கு ஒரு சிறுநீர்ப் பரிசோதனை உள்ளது. கர்ப்பிணியின் சிறுநீரில் 3-ஹைட்ராக்சி ஐசோவெளிரிக் அமிலம் அளவுக்கு மீறி வெளியேறுகிறது என்றால் அவருக்கு பயாட்டின் அளவு குறைந்துள்ளது என்று பொருள். மேலும் பயாட்டின் பற்றாக்குறை உள்ள கர்ப்பிணிகளுக்கு கடுமையான தசைவலி உண்டாகும்; அடிக்கடி உடல் களைப்படையும்; உளச்சோர்வு உண்டாகும்; ரத்தசோகை ஏற்படும்; தலைமுடி உதிரும்; நகத்தில் வெள்ளைக்கோடுகள் காணப்படும். நாம் சாதாரணமாக உண்கின்ற அரிசி, கோதுமை, ஓட்ஸ் போன்ற தானியங்களிலும், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, சோயா, வேர்க்கடலை போன்ற பருப்பு வகையிலும், பால், இறைச்சி, முட்டை, கல்லீரல், காளான், காலிஃபிளவர் ஆகியவற்றிலும் பயாட்டின் நமக்குத் தேவையான அளவுக்கு உள்ளது. ஆகவே சரிவிகித உணவைச் சரியான அளவில் சாப்பிடும் கர்ப்பிணிகளுக்கு இந்தப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை. வழக்கமாக கர்ப்பிணிகள் தாய்க்கும் சேய்க்குமாகச் சேர்த்து இரண்டு மடங்கு உணவு உண்ண வேண்டும். ஆனால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் மசக்கை காரணமாக வாந்தி மற்றும் தலைச்சுற்றல் வருமென்பதால் 50 விழுக்காடு கர்ப்பிணிகள் சத்துள்ள உணவுகளைத் தேவையான அளவுக்கு உண்பதில்லை. இதனால் இவர்களுக்குப் பயாட்டின் அளவு குறைந்துவிடுகிறது. இன்னொன்று, நம் சிறுகுடலில் உள்ள நன்மை தரும் பாக்டீரியாக்கள் இந்த வைட்டமினைச் சிறிதளவு தயாரிக்கின்றன. அதே வேளையில் கர்ப்பிணிகள் சளி, இருமல், தடுமம் போன்ற தொல்லைகளுக்கு மருத்துவரை ஆலோசிக்காமல் தாங்களாவே நுண்ணுயிர்கொல்லி மருந்துகளை வாங்கி அடிக்கடி சாப்பிட்டால் சிறுகுடலில் உள்ள இந்த பாக்டீரியங்கள் அழிந்துவிடும். பயாட்டின் வைட்டமின் இவர்களுக்குக் கிடைக்காமல் போகும். இறுதியாக ஒன்று, பச்சை முட்டை சாப்பிட்டால் உடலுக்கு அதிகமாகச் சத்து கிடைக்கும் என்று ஒரு நம்பிக்கை நம்மிடம் உள்ளது. ஆனால், ஆபத்தும் அதில்தான் உள்ளது. முட்டையின் வெள்ளைக்கருவில் "அவிடின்" எனும் புரதப் பொருள் உள்ளது. இது பயாட்டினோடு இணையும் போது சிறுகுடலில் பயாட்டின் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது. அதேநேரத்தில் முட்டையை வேகவைத்துவிட்டால் அந்த வெப்பத்தில் அவிடின் செயலற்றுப் போய்விடும். முட்டையில் உள்ள பயாட்டின் சத்து முழுமையாக உடலில் சேரும். ஆகவே கர்ப்பிணிகள் வேகவைத்த முட்டையைச் சாப்பிடுவதே நல்லது. -

Thursday, 18 August 2016

எல்லைப் பிரச்சனை!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>> எல்லைப் பிரச்சனை! இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே சுதந்திரம் அடைந்த நாள்முதல், காஷ்மிர் பிரச்சனையினால் இதுவரையிலும் ஆயிரகணக்கான மனித உயிர்களை இழந்துள்ளோம். ஜம்மு-காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு உண்டாக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். பாகிஸ்தானை மையமாக வைத்திருக்கும் தீவிரவாதஅமைப்புகள். நமது நாட்டில் தொடர்ச்சியாக வன்முறைகளை நிகழ்த்தி வருகிறது. தீவிரவாதங்கள் ஒழிந்து போக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ஜம்மூ-காஷமீர் எல்லை பகுதிகளில் தீவிர பிரச்சாரம், துண்டு பிரசுரம் வினியேகம், பகிஸதான் ஆதரவு அமைப்புகளின யெல்பாடுகள் முற்றிலும் இந்திய ராணுவத்தால் கண்டு பிடிக்கப் பட்டு, கட்டுப்படுத்தப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். இந்தியாவிற்குள் ஊடுருவ ஆயத்தமாயிருக்கும் பாகிஸ்தான் ஐ எஸ் ஐ உளவு அமைப்பின் ஆதரவு தீவிரவாதிகள் விரட்டியடிக்கபட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அதிகாரிகள், அமைச்சர்கள், தலைவர்கள் எதுவும் பேசாதிருக்க பாரத்தோடு ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு புதிய பகுதியாக தினம் ஒரு ஜெபக்குறிப்பு அறிமுகமாகிறது ஜெப வீரர்கள் இதனை மனதில் கொண்டு, அந்தந்த நாளில் அந்தந்தக் காரியத்திற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார். "இந்தியாவின் ஏற்றுமதி துரையில் கர்த்தரின் கரம் செயலாற்ற ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்"

சங்கீதம் 106 :37-48

இஸ்ரவேலர் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் பிசாசுகளுக்குப் பலியிட்டார்கள். அவர்கள் கானான்தேசத்து விக்கிரகங்களுக்குப் பலியிட்டு, தங்கள் குமாரர் குமாரத்திகளுடைய குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தினார்கள், தேசம் இரத்தத்தால் தீட்டுப்பட்டது. அவர்கள் தங்கள் கிரியைகளினால் அசுத்தமாகி, தங்கள் செய்கைகளினால் சோரம்போனார்கள். அதினால் கர்த்தருடைய கோபம் தமது ஜனத்தின்மேல் மூண்டது, அவர் தமது சுதந்தரத்தை அருவருத்தார். அவர்களை ஜாதிகளுடைய கையில் ஒப்புக்கொடுத்தார், அவர்களுடைய பகைஞர் அவர்களை ஆண்டார்கள். அவர்களுடைய சத்துருக்கள் அவர்களை ஒடுக்கினார்கள், அவர்களுடைய கையின்கீழ்த் தாழ்த்தப்பட்டார்கள். அநேகந்தரம் அவர்களை விடுவித்தார், அவர்களோ தங்கள் யோசனையினால் அவருக்கு விரோதமாய்க் கலகம் பண்ணி, தங்களுடைய அக்கிரமத்தினால் சிறுமைப்படுத்தப்பட்டார்கள். அவர்கள் கூப்பிடுதலை அவர் கேட்கும்போதோ, அவர்களுக்கு உண்டான இடுக்கத்தை அவர் கண்ணோக்கி, அவர்களுக்காகத் தமது உடன்படிக்கையை நினைத்து, தமது மிகுந்த கிருபையின்படி மனஸ்தாபப்பட்டு, அவர்களைச் சிறைபிடித்த யாவரும் அவர்களுக்கு இரங்கும்படி செய்தார். அவர்கள் தேவனாகிய கர்த்தரை, அவர்கள் அவரது பரிசுத்த நாமத்தைப்போற்றி, அவரைத் துதிக்கிறதில் மேன்மைபாராட்டும்படி அவர்களை இரட்சித்து, அவர்களை ஜாதிகளிலிருந்து சேர்த்தருளுவார். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஜனங்களெல்லாரும்: ஆமென், அல்லேலூயா, என்பார்களாக. சங்கீதம் 106 :37-48

ஆப்பிள் பழம்

ஆப்பிள் பழம் தினம் ஒன்று சாப்பிடுங்கள். மருத்துவரை நாடிச்செல்ல வேண்டியதில்லை. ஆப்பிள் பழம் எல்லாத் தரப்பு மக்களாலும் விரும்பிப் பயன்படுத்தப்படுகிறது. ஆப்பிள் பழத்தில் இரும்பு, புலோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2, சி முதலியனஅடங்கியுள்ளன. ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் இரத்த சோகை விரைவில் நிவர்த்தியாகிறது. இரத்த ஓட்டச் சுழற்சி சீராக இயங்குகிறது. தேவையற்ற கொழுப்புச் சத்து குறைக்கப்பட்டு HDL அதிகரிக்கிறது. சோடியம் குறைக்கப்பட்டு இரத்த அழுத்தம் குறைய உதவுகிறது. அதிக இரத்தப் போக்கைத் தடுக்கிறது. நரம்பு மண்டலத்துக்கும் மூளைக்கும் நல்ல சக்தி கிடைக்கிறது. செரிமான மண்டலம் சீராக இயங்கச் செய்கிறது. கால்சியம் உடலில் சேமிக்கச் செய்கிறது. இன்சுலின் சுரப்புக்கு உதவுகிறது. ரத்தஅழுத்தம் அதிகரிக்காமல் தடுக்கிறது. மூளைக்கு மிகுற்த சக்தியளிப்பதால், மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர்கள், சிந்தனையாளர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு நல்ல நினைவாற்றல் கிடைக்கிறது. குடற்கிருமிகளை அழிக்க உதவுகிறது. குழந்தைகளுக்குப் பேதி கண்டால் ஆப்பிள் பழத்தை வேகவைத்து பிசைந்து கொடுத்தால் வயிற்றுப்போக்கு உடனே குணமாகும். வலிப்பு நோய் உள்ளவர்கள் ஆப்பிள் பழச்சாறு 60 மி.லி அத்திப் பழச்சாறு 60 மி.லி கலந்து தினசரி இரண்டு வேளை கொடுத்து வந்தால் மூன்று தினங்களில் வலிப்பின் தீவிரம் குறைந்துவிடும். இதய நோயாளிகளுக்குச் சிறந்த உணவாகிறது. நரம்புத் தளர்ச்சி நீங்கவும், நல்ல தூக்கம் வரவும் ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் மிகுந்த நன்மை கிடைக்கிறது. தூக்கத்தில் எழுந்து நடக்கும் இயல்புடையவர்கள் குணமடைய இரவில் இரண்டு ஆப்பிள் பழங்களைத் தண்ணீரில் போட்டு வைத்திருந்து அதிகாலையில் இதன் சாற்றைப் பிழிந்து கொடுத்துவந்தால் தூக்கத்தில் எழுந்து நடக்கும் ஆபத்தான நிலையில் இருந்த ஆச்சரியப்படும்படியான நிவாரணத்தைப் பெறலாம். வறட்டு இருமல் உள்ளவர்கள், தினசரி ஆப்பிள் சாப்பிட்டால் இருமல் தீரும். சரியான உடல் வளர்ச்சியும், சதைப்பிடிப்பும் இல்லாதவர்களும் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிட்டால் ஒல்லியான உடல் சீராகப்பருமன் அடைவார்கள். குடற் கிருமிகள் வெளியேற ஆப்பிள் பழத்தை நெருப்பில் சுட்டு சாப்பிட்டால் குடற் கிருமிகள் அழிந்து விடும். இரத்தம் சுத்தியடையவும், கெட்ட வாடைகள் இல்லாமல் இருக்கவும், தினசரி இரண்டு ஆப்பிள் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட குறைகள் நிவர்த்தியாகும். உடலில் நல்ல மணம் இயற்கையாக உண்டாகும். ஆப்பிள் பழச்சாற்றைத் தேவைக்கு ஏற்ப தயாரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் பாகு பதம் வரும். இந்தப் பாகை எடுத்து வைத்துக்கொண்டு காலை, மாலை, இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால் உயர் ரத்த அழுத்தம் சமநிலைக்கு வந்து, வயதுக்கு ஏற்ற அளவில் செயல்படும். ஆப்பிள் பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாதம் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான நோய்களும் குணமாகும். நரம்பு பலவீனம் நிவர்த்தியாகும். உடம்புக்குத் தேவையான முழு போஷாக்கையும் கொடுக்கும்.

வீட்டுக்குறிப்பு

அரையில் "கர்ட்டன்"களில் நிறத்தையும் சுவற்றின் நிறத்துக்கு ஏற்ப அமைக்கவும். அதனால் அறை ஒரே மாதிரியான தோற்றம் அளிக்கும்.

Wednesday, 17 August 2016

ரேசன் கடைகள்

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ ரேசன் கடைகள் தமிழ் நாட்டில் நுகர் பொருள் வாணிப கழகத்தின் கீழ், 1,420கடைகளும், கூட்டுறவு சங்கங்களின் கீழ் 31,863 கடைகளும், சுய உதவி குழுக்கள் மூலம் 534கடைகளும், இதர குழுக்களின் கீழ் 150கடைகளும் என, தமிழகத்தில் பல ரேசன் கடைகள் உள்ளன. ரேசன் கடைகளில் எடை அளவு குறைவு, கலப்படம், தரமற்ற உணவு தானியங்கள் விற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ரேசன் பொருட்கள் கடத்தப்பட்டு, வெளிகடைகளுக்கு சப்ளை செய்வது, வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வது தடுக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

அழகிய பொருட்கள்

அறையின் மூலைகளிலும் சோபாவின் அருகிலும் டேபிள் அல்லது ஷெல்ஃப் அமைத்து அதில் அழகிய பொருட்களை வைக்கவும்.

ஒரு நல்ல இதயம் நாள்தோறும் சிறப்பாய் இயங்க 27 வழிகளைப் பின்பற்றலாம்.

ஒரு நல்ல இதயம் நாள்தோறும் சிறப்பாய் இயங்க 27 வழிகளைப் பின்பற்றலாம். 1. வழக்கமான உணவு நேரத்திற்கு ஒரு மணிநேரம் முன்பாகப் பசியெடுத்தால், அப்போது பிஸ்கட், கேக், தேநீர் சாப்பிடுவதைத் தவிருங்கள். பசித்து மிகவும் எரிந்தால் கலோரி குறைவான பானம் அருந்துங்கள். 2. புதுப்புது வகையான உணவு வகைகளைக் கண்டு மயங்காதீர்கள். வழக்கமான உணவே நம்பகமான உணவு என நம்புங்கள். 3. ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி இவைகளைக் கூடுமானவரை தவிர்த்து, மீன், கோழி இவைகளை அளவோடு உண்ணுங்கள். 4. தொட்டுக்கொள்ள என சட்னி, சாஸ், ஜாம், ஊறுகாய் போன்ற அனைத்தையும் ருசித்து மாட்டிக் கொள்ளாதீர்கள். 5. சாக்லேட், ஐஸ்கிரீம் கூடியவரை வேண்டாம். 6. கொழுப்பைச் சத்து குறைவான உணவுகளே என்றும் சிறந்துது. 7. வாடி வதங்கிய காய்கறிகளைப் பயன்படுத்த வேண்டாம். அவற்றிலுள்ள வைட்டமின் சி காணாமல் போயிருக்கும். 8. தேங்காயெண்ணெய், பாமாயில் தவிர்த்து சோள எண்ணெய், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம். 9. மீன்களை பொரிப்பதை விட வேகவைத்தே உண்ணுங்கள். 10. பேரீச்சம்பழம், உலர் திராட்சை இவைகளை அடிக்கடி உண்ணுங்கள். 11. இயன்றவரை உப்பைக் குறையுங்கள். அதுவே உயிருள்ள வரை இதயத்தைக் காக்கும். 12. எலுமிச்சை, வெங்காயம், பூண்டு, மிளகு, கடுகு, ஜாதிக்காய் இவற்றில் தினமும் சூப் செய்து சாப்பிடுங்கள். உப்பு சேர்க்க வேண்டாம். 13. தோலுடன் அவித்த உருளை மிகச்சிறந்த நார்ச்சத்து என்பதால், மறக்காமல் சேருங்கள். 14. வீட்டில், அலமாரியில், டப்பாக்களில் சேர்த்து வைத்து உண்ணும் கொரிக்கும் சமாச்சாரங்களைத் தவிருங்கள். 15. சோறு, ரொட்டி, கூழ், களி இவைகள் அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவுகள் அளவுடன் சாப்பிட்டுப் பழகுங்கள். 16. கூடுமானவரை எதையும் எண்ணெயில் வதக்காமல், வறுக்காமல், வேக வைத்தே உண்ணுங்கள். அதுவும் முற்றும் வேகாமல்! 17. காய்கறிகளை பெரிய துண்டுகளாக வெட்டி சமைக்கவும். 18. வாரத்திற்கு மூன்று நான்கு முட்டைகளுக்குள் நிறுத்தி விடுங்கள். இன்னும் வேண்டுமெனில் வெள்ளைக் கருவுக்குத் தடையில்லை. 19. சிகரெட், குடிப்பழக்கம் அபாயமானது. இந்த ஞாபகம் வந்தால் வேகமாக பத்து நிமிடம் நடந்தால் போதும். 20. சிறிய தட்டுக்களில் சாப்பிடுங்கள். அது நிறைய சாப்பிட்ட திருப்தியைத் தரும். 21. நீராவியில் வேக வைத்த பொருள்களே இதயத்திற்கு என்றும் நல்லது. 22. உணவுக்குப் பின் ஏதேனும் ஒரு பழம் சாப்பிடுங்கள். 23. ஆழ்நிலைத் தியானம், யோகாசனம், நடைப்பயிற்சி இவை தினசரி வேண்டும். முடியாதவர்கள் மெதுவாக நடந்தாவது பாருங்கள். 24. நெஞ்சு வலித்தாலே, திடீர் மயக்கம் முற்றுகையிட்டாலோ உடனே மருத்துவரைப் பாருங்கள். 25. ஒற்றைத் தலைவலி இதய நோயின் ரகசிய அறிகுறி என்பதால், ஆரம்பத்திலேயே விரட்ட முயலுங்கள். 26. உயரத்திற்கேற்ற உடல் எடை வேண்டும். இதில் குறையிருப்பின் பட்டினி கிடக்காமல் கலோரி மூலமே எடையைக் குறையுங்கள். 27. மாரடைப்பு நோயிருப்பின் அதையே நினைத்துக் கவலையில் ஆழ்ந்து, ஒரேயடியாக மூழ்கிவிடாதீர்கள். ஓய்வெடுங்கள். உற்சாகம் கொள்ளுங்கள் - இதயநலம் உங்கள் கையில்.

தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு புதிய பகுதியாக தினம் ஒரு ஜெபக்குறிப்பு அறிமுகமாகிறது ஜெப வீரர்கள் இதனை மனதில் கொண்டு, அந்தந்த நாளில் அந்தந்தக் காரியத்திற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார். "இந்தியாவிலுள்ள விவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட, இந்த வருடம் 100மடங்கு பலன் தர ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்"

Tuesday, 16 August 2016

உடற்கழிவுகளை வெளியேற்றும் உடற்பயிற்சி

5000+ தமிழ் குறிப்புகள் FAVORITE_BORDER உடற்கழிவுகளை வெளியேற்றும் உடற்பயிற்சி August 7, 2016 12:15 PM உடற்பயிற்சி மூலம் வெளியாகும் வியர்வை உடற்கழிவுகளை வெளிப்படுத்துவதில் முக்கிய பங்குவகிக்கின்றது. உடற்பயிற்சி மூலம் இரத்த ஓட்டம் துரிதப்படுத்தப்படுவதால், உடலுக்குச் சக்தி அதிகரிக்கின்றது. உடற்பயிற்சி செய்யும் போது நுரையீரல் வேகமாகச் சுருங்கி விரிவடைவதால், போதிய பயிற்சி பெற்று மற்ற நேரங்களிலும் திறமையாய் செயற்படுகிறது. இது உடல் எப்போதும் சுறுசுறுப்பாய் இருக்கப் பயன்படுகிறது.

சங்கீதம் 106 :25-36

இஸ்ரவேலர் கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடாமல், தங்கள் கூடாரங்களில் முறுமுறுத்தார்கள். அப்பொழுது அவர்கள் வனாந்தரத்திலே மடியவும், அவர்கள் சந்ததி ஜாதிகளுக்குள்ளே அழியவும், அவர்கள் பற்பல தேசங்களிலே சிதறடிக்கப்படவும், அவர்களுக்கு விரோதமாகத் தம்முடைய கையை எடுத்தார். அவர்கள் பாகால் பேயோரைப் பற்றிக் கொண்டு, ஜீவனில்லாதவைகளுக்கு இட்ட பலிகளைப் புசித்து, தங்கள் கிரியைகளினால் அவருக்குக் கோபம் மூட்டினார்கள், ஆகையால் வாதை அவர்களுக்குள் புகுந்தது. அப்பொழுது பினெகாஸ் எழுந்து நின்று நியாயஞ்செய்தான், அதினால் வாதை நிறுத்தப்பட்டது. அது தலைமுறை தலைமுறையாக என்றைக்கும் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. மேரிபாவின் தண்ணீர்களிடத்திலும் அவருக்குக் கடுங்கோபம் மூட்டினார்கள், அவர்கள் நிமித்தம் மோசேக்கும் பொல்லாப்பு வந்தது. அவர்கள் அவன் ஆவியை விசனப்படுத்தினதினாலே, தன் உதடுகளினால் பதறிப்பேசினான். கர்த்தர் தங்களுக்குச் சொன்னபடி, அவர்கள் அந்த ஜனங்களை அழிக்கவில்லை. ஜாதிகளுடனே கலந்து, அவர்கள் கிரியைகளைக் கற்று, அவர்களுடைய விக்கிரகங்களைச் சேவித்தார்கள், அவைகள் அவர்களுக்குக் கண்ணியாயிற்று. சங்கீதம் 106 :25-36

வீணாகும் உணவு தாணியங்கள்!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>% வீணாகும் உணவு தாணியங்கள்! நாடு முழுவதும் ஆண்டுக்கு சராசரியாக 13,300கோடி ரூபாய் மதிப்புள்ள காய்கறிகள், பழங்கள் வீணாகின்றன.30,700கோடி மதிப்புள்ள உணவு தாணியங்கள் வீணாகின்றன. இதைத் தடுக்க, நாடு முழுவதும் மத்திய அரசு 34இடங்களில் மெகா உணவு பூங்கா திட்டங்கள் செயல் பட அனுமதி அறிவித்து, பல இடங்களில் செயல் பாட்டுக்கு வந்துள்ளது. உலகத்தில் 795மில்லியன் மக்கள் பசியால் தவிக்கின்றனர்.இந்தியாவில் மட்டும் 195மில்லியன் மக்கள் பசியால் வாடுகின்றனர் உணவு பொருட்கள், காய்கறிகள், பழங்கள், கெட்டு போகாமல் பாதுகாக்கப்படவும், தேவையான நேரத்தில், தேவையான இடங்களுக்கு கொண்டு செல்ல மெகா உணவு பூங்கா சீக்கிரம் செயல்பாட்டுக்கு வர ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். இதன் மூலம் விவசாயிகளுக்கும், விலைபொருட்களுக்கும் உரிய விலை கிடைத்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் வீணாக்கப்படும் உணவு, தாணியங்கள் பாதுகாக்கப்பட பழங்கள், காய்கறிகள் கெடாமல் நீண்ட நாட்கள் வைத்திருக்க, வலைவாசி உயர்வுகள் தடூக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் இந்தியாவில் உணவின்றி தவிக்கும் 195மில்லியன் ஏழை எழிய மக்கள், பசியோடு துங்க செல்லுவோர் இதன்முலம் பயனடைய பாரத்தோடும், கண்ணீரோடும் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

Monday, 15 August 2016

சங்கீதம் 106 :13-24

@@@@@@@@@@@@@@@@@@@ இஸ்ரவேலர் சீக்கிரமாய் கர்த்தருடைய கிரியைகளை மறந்தார்கள், அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திராமல், வனாந்தரத்திலே இச்சையுள்ளவர்களாகி, அவாந்தரவெளியிலே தேவனைப் பரீட்சைபார்த்தார்கள். அப்பொழுது அவர்கள் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார், அவர்கள் ஆத்துமாக்களிலோ இளைப்பை அனுப்பினார். பாளயத்தில் அவர்கள் மோசேயின்மேலும், கர்த்தருடைய பரிசுத்தனாகிய ஆரோனின்மேலும் பொறாமைகொண்டார்கள். பூமி பிளந்து தாத்தானை விழுங்கி, அபிராமின் கூட்டத்தை மூடிப்போட்டது. அவர்கள் கூட்டத்தில் அக்கினி பற்றியெரிந்தது, அக்கினிஜூவாலை துன்மார்க்கரை எரித்துப்போட்டது. அவர்கள் ஓரேபிலே ஒரு கன்றுக்குட்டியையுண்டாக்கி, வார்ப்பிக்கப்பட்ட விக்கிரத்தை நமஸ்கரித்தார்கள். தங்கள் மகிமையைப் புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள். எகிப்திலே பெரிய கிரியைகளையும், காமின் தேசத்திலே அதிசயங்களையும், சிவந்த சமுத்திரத்தண்டையிலே பயங்கரமானவைகளையும் செய்தவராகிய, தங்கள் இரட்சகரான தேவனை மறந்தார்கள். ஆகையால், அவர்களை நாசம்பண்ணுவேன் என்றார், அப்பொழுது அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட மோசே, அவர்களை அவர் அழிக்காதபடிக்கு, அவருடைய உக்கிரத்தை ஆற்றும்பொருட்டு, அவருக்கு முன்பாகத் திறப்பின் வாயிலே நின்றான். அவருடைய வார்த்தையை விசுவாசியாமல், இச்சிக்கப்படத்தக்க தேசத்தை அசட்டைபண்ணினார்கள். சங்கீதம் 106 :13-24

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு புதிய பகுதியாக தினம் ஒரு ஜெபக்குறிப்பு அறிமுகமாகிறது ஜெப வீரர்கள் இதனை மனதில் கொண்டு, அந்தந்த நாளில் அந்தந்தக் காரியத்திற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார். "இந்திய கடற்கரைகளில் மீன் வளம் பெருக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்"

அறையை மேலும் பிரகாசமாக்க

அறையில் ஜன்னலுக்கு எதிரே ஒரு பெரிய கண்ணாடியை வைத்தால், அது அறையை மேலும் பிரகாசமாக்கும்.

எப்போதெலாம் உடற் பயற்சி செய்ய கூடாது

5000+ தமிழ் குறிப்புகள் favorite_border எப்போதெல்லாம் உடற்பயிற்சி செய்யக்கூடாது தெரியுமா? August 8, 2016 12:18 PM * பார்ட்டி அல்லது பங்ஷன் என சென்று மது அருந்து இரவில் தூங்க சென்றிருந்தீர்கள் என்றால் மறுநாள் காலையில் ஜிம் செல்வதை தவிர்த்துவிடுங்கள். * சளி, ஜூரம், என ஏதாவது சிறு உடல் பாதிப்பு வந்திருந்தாலும் கூட உடற்பயிற்சி செய்வதை தவிர்ப்பது நல்லது. * நாளடைவில் தூக்கம் குறைபாட்டுடன் உடற்பயிற்சி செய்வதால் உடல் அசதி, மயக்கம், தலைகிறுகிறுப்பு போன்ற உபாதைகள் ஏற்பட வாய்ப்புண்டு. * உடலில் சின்ன காயம் ஏற்பட்டிருந்தாலும் கூட, கடுமையான உடற்பயிற்சி செய்வதை அந்த காயம் ஆறும் வரை தவிர்த்துவிடுங்கள்.

முட்டை

>>>>>>>>>>>>>>>>>>>::>>>>>>>>>>>> முட்டை இயற்கையில் கிடைக்கும் மிகச் சிறந்த உணவுகளில் ஒன்று முட்டை. இதில் எளிதில் ஜீரணக்கும் புரோட்டீன்களும், சத்துப் பொருட்களும், ஏராளமான மதிப்புக் மிக்க தாதுப் பொருட்களும் காணப்படுகின்றன. அதே சமயம் சிறிதளவுக்கு வேண்டாத விஷயங்களும் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. அதற்காக முட்டையை முழுமையாக வெறுத்து ஒதுக்குவது சரியாக இருக்க முடியாது. முட்டை என்றதும் அதில் அடங்கி இருக்கும் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் தான் உடனடியாக நினைவுக்கு வரும். இந்த இரண்டுமே இருதய ரத்த நாளங்களுக்கு கெடுதல் செய்பவை என்பதால் பலர் முட்டையை தொடுவதற்கு பயப்படுகிறார்கள். இந்த பயம் தெளிய வேண்டுமானால் முதலில் இந்த இரண்டை யும் பற்றி தெளிவாக அறிய வேண்டும். கொலஸ்ட்ரால் என்பது ஏதோ நாம் சாப்பிடுகிற பொருட்கள் மூலம் தான் உடம்பில் சேருவதாக கருதுகிறார்கள். அதுபோல அது ஆகாத பொருள் என்ற எண்ணமும் மேலோங்கி உள்ளது. இந்த இரண்டுமே தவறு. ஏனெனில் நமது உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லும் கொலஸ்ட்ராலுக்காக ஏங்கி தவிக்கும். கொலஸ்ட்ரால் இல்லாவிட்டால் உடம்பு வளர்ச்சி என்பதே இருக்காது. உடம்பில் காணப்படும் 80 சதவீத கொலஸ்ட்ராலை உடம்பே உற்பத்தி செய்து கொள்கிறது. நீங்கள் கொஞ்சமாக சாப்பிட்டாலும் சரி, அதிகமாக சாப்பிட்டாலும் சரி, இது ஆட்டோமேடிக்காக நடந்து கொண்டே இருக்கும். செல்களில் காணப்படும் கொலஸ்ட்ரால்களால் பெரும்பாலும் நன்மை நடக்கிறது. ரத்தத்தில் சேமிக்கப்படும் வெறும் 7 சதவீத கொலஸ்ட்ரால் தான் பிரச்சினையை உண்டு பண்ணும். அதுவும் ஆக்ஸிஜனேற்றம் அடைந்தால் ஒழிய (அப்படி நடந்தால் ரத்த நாளங்களின் சுவர்கள் கடினமாகி இதயத்துக்கு ஆபத்து ஏற்படும்) பிரச்சினை எதுவும் இல்லை. இது தெரிந்து தானோ என்னவோ, இயற்கையே முட்டையில் ஒரு இயற்கையான நோய் எதிர்ப்பு பொருளை வைத்துள்ளது. அதன் பெயர் lecithin என்பதாகும். இது முட்டையில் உள்ள கொலஸ்ட்ரால் மேற்படி சிக்கலை உண்டு பண்ணி விடாமல் தடுக்கிறது. பொதுவாக முட்டையில் எதைச் சாப்பிட்டால் ஆகாது என்று கருதப்படுகிறதோ, அதே மஞ்சள் கருவில் தான் இந்தப் பொருள் உள்ளது என்பது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது. ரத்தத்தில் காணப்படும் கொலஸ்ட்ராலுக்கும், உணவில் காணப்படும் கொலஸ்ட்ராலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் ஒரு சிலர் மட்டும் இதற்கு விதி விலக்காக இருக்கலாம். அவர்களை கொலஸ்ட்ரால் தேவையாளிகள் (cholesterol respsonders) என்று சொல்லலாம். வழக்கமாக உணவு மூலம் கொலஸ்ட்ரால் அதிக அளவில் கிடைக்கிறது என்றால் தான் உற்பத்தி செய்யும் கொலஸ்ட்ராலை உடம்பு தானாகவே குறைத்துக் கொள்ளும். ஆனால் இத்தகைய நபர்களுக்கு உணவு மூலமாக கிடைக்கும் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, உள்ளுக்குள் உற்பத்தி செய்யும் கொலஸ்ட்ராலை குறைக்கும் வித்தையை உடம்பு செய்யாது. கொலஸ்ட்ரால் விஷயத்தில் இவர்கள் பிரச்சினைக்குரிய நபர்கள் என்பதால் சற்று உன்னிப்பாக கண்காணிக்க வேண்டியுள்ளது. முட்டையின் மஞ்சள் கருவில் (arachadonic acid) என்ற அதி முக்கியமான அமிலம் காணப்படுகிறது. இது மனித உடம்புக்கு மிகவும் தேவையான ஒரு கொழுப்பு அமிலம் ஆகும். உடம்பின் வளர்சிதை மாற்றத்துக்கு தேவையான இந்த அமிலம் மனிதர்களில் 20 சதவீதம் பேருக்கு பற்றாக்குறையாக இருப்பதாக புள்ளி விவரம் சொல்கிறது. ஒருபுறம் நன்மை செய்யும் இந்த அமிலம் இன்னொரு புறம் ஆபத்தையும் உண்டு பண்ணுகிறது. அதாவது பல்வேறு நோய்-நொடிகளை உண்டு பண்ணும் பொருட்களில் இது மூலக்கூறாக அமைந்து உள்ளது. இத்தகைய பிரச்சினை உள்ள நபர்களை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவர்களாக கருதலாம். இந்த சிக்கலை சமாளிக்க arachadonic acid மற்றும் ஒமேகா-3 அமிலங்கள் இடையே சம விகித நிலையை கடைப்பிடித்தால் போதும். (ஒமேகா-3 அமிலம் மீன் மற்றும் மீன் எண்ணெயில் அதிகமாக காணப்படுகிறது.) இந்த இரண்டையும் ஒழுங்காக பார்த்துக் கொண்டால், நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு முட்டை என்ன, 10 முட்டை சாப்பிட்டாலும் ஒரு பிரச்சினையும் வராது. தற்போது நிறைய சூப்பர் மார்க்கெட்டுகளில் ஆர்கானிக் முட்டைகள் வந்து விட்டன. இந்த முட்டைகளில் ஒமேகா-3 அமிலமும் வேண்டிய அளவுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, முட்டை என்பது நிச்சயம் ஆரோக்கியமான உணவு தான்.

வாக்குதத்தம்

தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு புதிய பகுதியாக தினம் ஒரு ஜெபக்குறிப்பு அறிமுகமாகிறது ஜெப வீரர்கள் இதனை மனதில் கொண்டு, அந்தந்த நாளில் அந்தந்தக் காரியத்திற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார். "சுதந்திர இந்தியாவின் 128 கோடிஜனங்களும் இரட்சிக்கப் பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்."

கிராமங்களின் வளர்ச்சி!

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ கிராமங்களின் வளர்ச்சி! கிராமங்களின் வளர்ச்சிதான் இந்தியாவின் வளர்ச்சி என்கிறார் பரதமர் மோடி. விவசாய தொழில் அபிவிருத்தியே, கிராம வளர்ச்சிக்கு துனை புரியும். தமிழகத்தில் மட்டும் 12லட்சம் கிணறுகள், 40லட்சம் ஆழ் குழாய் கிணறுகள் உள்ளன. இதில் 60% கிணறுகள் வறண்டு போய் உள்ளன. 5ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட ஒரு கிராமத்தில், ஒரு மணி நேரத்திற்கு ஒரு அங்குலம் அளவு மழை பெய்தாலே, அந்த கிராமத்திற்கு 5லட்சம் லிட்டர் தண்ணீர கிடைக்கும் என்கிறது ஒரு ஆய்வு. நம் நாட்டில், 56% மக்கள் விவசாயத்தையே நம்பியுள்ளனர். நமது நாட்டில் குறைந்து வரும் விவசாய தொழிலுக்கும், விவசாயிகளுக்கும் புத்துயிர் அளிக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாடு முழுவதும் மழை நீர் சேமிப்பு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, பொதுமக்களுக்கு உண்டாக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். மழையின்றி பாதிக்கப் பட்டுள்ள மத்திய பிரதேசம், உத்திர யிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா மற்றும் ஒரிசா மாநிலங்களில் அதிக மழை பெய்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். மிகுந்த வறட்சியால் பாதிக்கப் பட்டுள்ள மகாராஷ்டிரா மானிலத்தில் வறட்சி நீங்கிட, விவசாயிகள் தற்கொலைகள் தடுக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

சங்கீதம் 106 :1-12

அல்லேலூயா, நீ கர்த்தரைத் துதி, அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. கர்த்தருடைய வல்லமையான செய்கைகளைச் சொல்லி, அவருடைய துதியையெல்லாம் பிரஸ்தாபப்படுத்து. நியாயத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும், எக்காலத்திலும் நீதியைச்செய்கிறவர்களும் பாக்கியவான்கள். கர்த்தர் தெரிந்துகொண்டவர்களின் நன்மையை நீ கண்டு, அவருடைய ஜாதியின் மகிழ்ச்சியால் மகிழ்ந்து, அவருடைய சுதந்தரத்தோடே மேன்மைபாராட்டும்படிக்கு, அவருடைய ஜனங்களுக்கு அவர் பாராட்டும் கிருபையின்படி உன்னை நினைத்து, அவருடைய இரட்சிப்பினால் உன்னைச் சந்தித்தருளுவார். அவர்கள் பிதாக்களோடுங்ளோடுங்கூட அவர்களும் பாவஞ்செய்து, அக்கிரமம் நடப்பித்து, ஆகாமியம்பண்ணினார்கள். அவர்கள் பிதாக்கள் எகிப்திலே அவருடைய அதிசயங்களை உணராமலும், அவருடைய கிருபைகளின் திரட்சியை நினையாமலும் போய், சிவந்த சமுத்திர ஓரத்திலே கலகம்பண்ணினார்கள். ஆனாலும் அவர் தமது வல்லமையை வெளிப்படுத்தும்படி, தம்முடைய நாமத்தினிமித்தம் அவர்களை இரட்சித்தார். அவர் சிவந்த சமுத்திரத்தை அதட்டினார், அது வற்றிப்போயிற்று, வெட்டாந்தரையில் நடக்கிறதுபோல அவர்களை ஆழங்களில் நடந்துபோகப்பண்ணினார். பகைஞன் கைக்கு அவர்களை விலக்கி இரட்சித்து, சத்துருவின் கைக்கு அவர்களை விலக்கி மீட்டார். அவர்கள் சத்துருக்களைத் தண்ணீர்கள் மூடிக்கொண்டது, அவர்களில் ஒருவனும் மீந்திருக்கவில்லை. அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை விசுவாசித்து, அவருடைய துதியைப் பாடினார்கள். சங்கீதம் 106 :1-12

உணவு வகைகள்

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ உணவு வகைகள் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் எவை தெரியுமா? கீரைவகைகள், பழவகைகள், வாழைப்பூ, வாழைத்தண்டு, சேம்புத்தண்டு, புடலைங்காய், முருங்கைக்காய், வெங்காயத்தண்டு, பீன்ஸ், பலாக்காய், பலாப்பழ விதை, பயறுவகைகள், ஓட்ஸ் போன்றவைகள். கொழுப்புச்சத்து குறைந்த உணவுகள் எவை? தோல் நீக்கிய கோழி இறைச்சி, முட்டையின் வெள்ளைக்கரு, ஆடை நீக்கிய பால், மோர், சிறிய வகை மீன். கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கும் உணவுகள் பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டும். இறைச்சி வகைகள், முட்டையின் மஞ்சள் கரு, பால், வெண்ணை, நெய், பாலாடைக்கட்டி, பேக்கரி உணவுகள், வறுத்த- பொரித்த உணவுகள், ஊறுகாய் வகைகளில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறது. ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் அதிகமாக இருக்கும் உணவுகள் எவை? கீரைவகைகள், கேரட், பூசணிக்காய், பப்பாளி, இனிப்பு வகைக்கிழங்குகள், மாங்காய், ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய், கொய்யா, முளைவிட்ட பயறுவகைகள், பாதாம், ஈரல், ஈஸ்ட், பால், முட்டை, தானியங்கள், கடல் உணவுகள், வெங்காயம், இஞ்சி, மஞ்சள், பூண்டு, ஓட்ஸ், சோயா பீன்ஸ், கிரீன் டீ, மிளகு, கருவாப்பட்டை, கடுகு, சேனைக் கிழங்கு. இந்த நேரத்தில் புற்று நோயை வரவழைக்கும் உணவுகளைப்பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளவேண்டியது அவசியம். நைட்ரோசமைன் எனப்படும் பொருள் அதிகமாக அடங்கி இருக்கும் பேக்கிங் பவுடர், அஜினோமோட்டோ, சாஸ் வகைகள், சுட்டது அல்லது பொரித்த இறைச்சி, மீன் வகைகள் போன்றவைகள் தவிர்க்கப்படுவது மிக நல்லது. மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் எண்ணை, செயற்கை இனிப்புகள், செயற்கை உணவு நிறப்பொடி வகைகள் போன்றவைகளும் தவிர்க்கப்பட வேண்டும். உப்பை அதிகம் பயன்படுத்தக்கூடாது. பிராய்லர் கோழி, அதன் முட்டை போன்றவைகளையும் தவிர்க்க வேண்டும் என்று டாக்டர்கள் குறிப்பிடுகிறார்கள்.

வீட்டுக்குறிப்பு

டேபிள் லாம்ப்க்கு பதிலாக தொங்கும் அல்லது ஆடும் வகையில் அமைந்த விளக்குகளை உபயோகிப்பது நல்லது.

Sunday, 14 August 2016

கடைசி கால விசுவாசிகளுக்காக!

==||===|<<<|||||================= கடைசி கால விசுவாசிகளுக்காக! நற்கிரியை செய்கிறதற்கு கிறிஸ்துவுக்குள் தங்களை ஆயத்தபடுத்தி, தேவனுடைய அன்பை வெளிபடுத்திட, நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருக்க, செய்யதக்கவர்களுக்கு செய்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் பிதாவாகிய தேவனை அறிந்து கொள்வதற்கான ஞானத்தையும். தெழிவையும் கொடுக்கிற பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெபற்றுக் கொள்ள ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் ஒவ்வொரு விசுவாசிகளுக்கும் பிரகாசமுள்ள மனக்கண்களை கர்த்தர் கொடுக்கும்படிக்கு ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் தேவர்களல்லாதவர்களுக்கு திருபவும் அடிமைகள் ஆகாதிருக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் பெலனற்றதும், வெறுமையானதுமான அந்த வழிப்பாடுகளுக்குள் மறுபடியும் விரும்பிச் செல்லவைக்கும் மாறுபாடுள்ள இருதயம் விசிவாசிகளுக்குள் வராதிருக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் சத்தியத்திற்கு கிழ்படியாதபடிக்கு எதிர்கிற போராடுகிற ஆவிகள் கட்டப்பட, கள்ள உபதேசங்களை, மாறுபாபாடான தர்க்கங்களை, விவாதங்களை. குழப்பங்களை உண்டாக்குகிற ஆவிகள் கட்டப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் நல் விஷயத்தில் வைராக்கியம் பாராட்ட, பிடிவாதம் இல்லாதிருகக, ஆவிக்கும் மாம்சத்திற்கும் இடையே ஏற்படும் போராட்டத்தை. பரிசுத்த ஆவியானவரின் பெலத்தினால் ஜெயித்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நீதி கிடைக்குமென்று, ஆவியைக்கொண்டு விசுவாசத்தினலே நம்பிக்கையோடே காத்திருக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் கிறிஸ்து இயேசுவின் மேலுள்ள அன்பினாலே ஒருவர்க்கொருவர் ஊழியம் செய்ய ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் நமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளுக்கேற்றபடி யாவருக்கும் விசேஷமாக உடன் விசுவாசக் குடும்பத்தாருக்கு நன்மை செய்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் விசிவாசிகளை கெடுக்கிற, கோள் சொல்லுகிற ஆவிகள், வன்கண் எரிச்கல், பொறாமை, பிரிவினை உண்டாக்குகிற ஆவிகள் கட்டப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் கர்த்தரையும் வசனத்தையும் விசுவாசிக்கக் கூடாதபடிக்கு போராடும் அவிசுவாசம், அற்ப விசிவாசம் சந்தேகம் அழிக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் கசப்பான வேர் யாருடைய இருதயத்திலும் காணப்படாதபடிக்கு ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

இந்தியதேசம்

சங்கீதம் 105 :39-45

கர்த்தர், இஸ்ரவேலர் எகிப்த்தை விட்டு புறப்படும் போது மேகத்தை மறைவுக்காக விரித்து, இரவை வெளிச்சமாக்குகிறதற்காக அக்கினியையும் வைத்தார் இறைச்சி கேட்டார்கள், அவர் காடைகளை வரப்பண்ணினார், வான அப்பத்தினாலும் அவர்களைத் திருப்தியாக்கினார். கன்மலையைத் திறந்தார், தண்ணீர்கள் புறப்பட்டு, வறண்ட வெளிகளில் ஆறாய் ஓடிற்று. அவர் தம்முடைய பரிசுத்த வாக்குத்தத்தத்தையும், தம்முடைய தாசனாகிய ஆபிரகாமையும் நினைத்து, தம்முடைய ஜனத்தைக் களிப்போடும், தாம் தெரிந்துகொண்டவர்களைக் கெம்பீர சத்தத்தோடும் புறப்படப்பண்ணி, தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும், தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படிக்கும், அவர்களுக்குப் புறஜாதிகளுடைய தேசங்களைக் கொடுத்தார், அந்நிய ஜனங்களுடைய பிரயாசத்தின் பலனைச் சுதந்தரித்துக்கொண்டார்கள். அல்லேலூயா. சங்கீதம் 105 :39-45

துளசி

5000+ தமிழ் குறிப்புகள் FAVORITE_BORDER ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய மூலிகை : துளசி August 8, 2016 5:05 PM * துளசி, சளியைப் போக்கும் சிறந்த நிவாரணி. மேலும் சிறந்த கிருமிநாசினியான துளசிச் செடியை வளர்ப்பதால், வீட்டைச் சுற்றிலும் உள்ள விஷ ஜந்துகள் மற்றும் கிருமித் தொற்றுகள் வரவு கட்டுப்படும். * ஆக்சிஜனை அதிகளவில் வெளிவிடும் திறன்கொண்ட துளசிச் செடியால், சுவாசிப்பதற்கு தூய்மையான காற்று கிடைக்கும். * தினமும் இரவு செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் 10 துளசி இலைகள் போட்டுவைத்து, மறுநாள் காலையில் துளசியை மென்று, அந்த நீரையும் பருகிவர, ஆரோக்கியம் வளரும். * சரும நோய்களுக்கு மஞ்சள் மற்றும் துளசியை தண்ணீர் சேர்த்து அரைத்து பாதிக்கப்பட்ட இடங்களில் தடவிவர... பலன் கிடைக்கும்.

உன்னத உணவுகள

%%%%%%%%%%%%%%%%%%%%%%***%% உன்னத உணவுகள் ஃபின்லாந்தில் உள்ள டாம்ப்பெரி பல்கலைக்கழகம் உடல்வலிகளையும் மனக்கவலையுடன் சேர்த்து அகற்றும் அபூர்வ உணவுகள் என இந்த உணவுகளைக் குறிக்கிறது. அந்த உன்னத உணவுகள்:- 1. கம்பு 2. கேழ்வரகு 3. பால் அல்லது தயிர் 4. வள்ளிக்கிழங்கு 5. முந்திரி நம்முடைய மூளையில் செரோட்டனின் என்ற இரசாயனப் பொருள் தங்குதடையின்றி சுரந்து கொண்டிருந்தால் தன்னம்பிக்கை, மகிழ்ச்சியான மனநிலை முதலியன நீடிக்கும். இந்த செரோட்டனின் மூளையில் தயாரிக்க நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் டிரைப்டோபன் என்ற அமினோ அமிலம் போதுமான அளவு இருந்தால்தான் முடியும். ஆகவே, கேழ்வரகு ரொட்டி, கேழ்வரகு, கஞ்சியும் தினமும் சேர்த்துக் கொள்ளலாம். சீசனின் போது வள்ளிக்கிழங்குகளையும் அவித்துச் சாப்பிடலாம். பகல் உணவுக்கும் இரவு உணவுக்கும் இடையில் இரண்டு பிரட் துண்டுகளுடன் ஒரு கப் பழச்சாறு அருந்தினாலும் மகிழ்ச்சியான மனநிலை நீடிக்கும் தினமும் ஒருவேளையாவது பழச்சாறு அருந்துவதும் மிக முக்கியம். மூளையில் செரோட்டனின் போதுமான அளவு இருக்கும் போது "கவலைப்படாதே", எல்லாம் நல்லபடியாக முடியும்", திடீரென்று கோபபப்பட்டு யாருடனும் வலுச்சண்டைக்கு போகாதே", மனஇறுக்கம் இல்லாமல் வாழ்" போன்ற சிந்தனைகளை எழுப்பி நம்மை கட்டுப்படுத்தி வழி நடத்துகிறதாம். அதே நேரத்தில் செரோட்டனின் அளவு மூளையில் குறைவாக இருந்தவர்களிடம் உடனுக்குடன் சண்டை போடும் குணம், மன அழுத்தம், வலுச்சண்டைக்குப் போய் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் குணமும் இருந்தது ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. தூக்கமின்மையுடன் உணர்ச்சிகளுக்கு உடனுக்குடன் அடிமைப்படும் குணமும் இருப்பவர்கள் மேற்கண்ட ஐந்து உணவுகளையும் தினமும் தவறாமல் சேர்ப்பது நல்லது. இதனால் மனம் பண்பட்டு மகிழ்ச்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் வாழ ஆரம்பிப்பார்கள். இரவில் நன்கு தூங்குவார்கள். இதனால் முதுமையிலும் இளமையான தோற்றத்தையும் பெறுவார்கள்.

தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு புதிய பகுதியாக தினம் ஒரு ஜெபக்குறிப்பு அறிமுகமாகிறது ஜெப வீரர்கள் இதனை மனதில் கொண்டு, அந்தந்த நாளில் அந்தந்தக் காரியத்திற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார். "இந்திய திருச்சபையில் மாபெரும் எழுப்புதல் உண்டாக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்."

Saturday, 13 August 2016

தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு புதிய பகுதியாக தினம் ஒரு ஜெபக்குறிப்பு அறிமுகமாகிறது ஜெப வீரர்கள் இதனை மனதில் கொண்டு, அந்தந்த நாளில் அந்தந்தக் காரியத்திற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார். "இந்தியாவின் காடுகளில் கர்த்தரின் பாதுகாப்பு கடந்துவர ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்."

நீதிபதிகள் பற்றாக்குறை!

########################### நீதிபதிகள் பற்றாக்குறை! இந்தியாவிலுள்ள நீதிமன்றத்தில், நீதிபதி பற்றாகுறை இருப்பதாக மத்திய சட்ட அமைப்புகள் தெரிவித்துள்ளது. நம்நாட்டிலுள்ள மொத்த நீதிபதிகளின் பணியிடம் 1,079. இதில் 621 நீதியதிகள் மட்டுமே உள்ளனர். காலியக உள்ள பணியிடங்கள் சீக்கிரத்தில் நிரப்பப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நிலுவையலுள்ள வழக்குகளுக்கு சீக்கிரம் தீர்வுகள் கிடைத்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நல்ல நீதிபதிகளால் நாடு செழிக்க வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகள் வெளிவர, ஏழைகளுக்கும் மற்றவர்களுக்கும் சமநிதி வழங்கப் பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

பட்டாணி

??????????????????????????????? பட்டாணி * உடலுக்கு சக்தியைத் தரும். * மூளைக்குத் தேவைப்படும் ஊட்டத்தைத் தரும். * பாஸ்பரஸ் நிறைந்துள்ளதால் மூளை நோயைத் தடுக்கும். * சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் உள்ளன. * குடல் புண்ணை ஆற்றும். * பட்டாணியிலிருந்து கிடைக்கும் புரதச்சத்து இறைச்சியிலிருந்து கிடைக்கும் சக்திக்குச் சமமானது.

சங்கீதம் 105 :24-38

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ கர்த்தர் தம்முடைய ஜனங்களை மிகவும் பலுகப்பண்ணி, அவர்களுடைய சத்துருக்களைப்பார்க்கிலும் அவர்களைப் பலவான்களாக்கினார். தம்முடைய ஜனங்களைப் பகைக்கவும், தம்முடைய ஊழியக்காரரை வஞ்சனையாய் நடத்தவும், எகிப்தியர்களுடைய இருதயத்தை மாற்றினார். தம்முடைய தாசனாகிய மோசேயையும் தாம் தெரிந்துகொண்ட ஆரோனையும் அனுப்பினார். இவர்கள் அவர்களுக்குள் கர்த்தருடைய அடையாளங்களையும், காமின்தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள். அவர் இருளை அனுப்பி, அந்தகாரத்தை உண்டாக்கினார்: அவருடைய வார்த்தைகளை எதிர்ப்பாரில்லை. அவர்களுடைய தண்ணீர்களை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய மச்சங்களைச் சாகப்பண்ணினார். அவர்களுடைய தேசம் தவளைகளைத் திரளாய்ப் பிறப்பித்தது, அவர்களுடைய ராஜாக்களின் அறைவீடுகளிலும் அவைகள் வந்தது. அவர் கட்டளையிட, அவர்களுடைய எல்லைகளிலெங்கும் வண்டுகளும் பேன்களும் வந்தது. அவர்களுடைய மழைகளைக் கல்மழையாக்கி, அவர்களுடைய தேசத்திலே ஜூவாலிக்கிற அக்கினியை வரப்பண்ணினார். அவர்களுடைய திராட்சச் செடிகளையும் அத்திமரங்களையும் அழித்து, அவர்களுடைய எல்லைகளிலுள்ள மரங்களையும் முறித்தார். அவர் கட்டளையிட, எண்ணிமுடியாத வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் வந்து, அவர்களுடைய தேசத்திலுள்ள சகல பூண்டுகளையும் அரித்து, அவர்களுடைய நிலத்தின் கனியைத் தின்றுபோட்டது. அவர்களுடைய தேசத்திலே தலைச்சன்கள் அனைத்தையும், அவர்களுடைய பெலனில் முதற்பெலனான யாவரையும் சங்கரித்தார். அப்பொழுது, கர்த்தர் அவருடைய ஜனங்களை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படப்பண்ணினார், அவர்கள் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை. எகிப்தியர் அவர்களுக்குப் பயந்ததினால், அவர்கள் புறப்பட்டபோது மகிழ்ந்தார்கள். சங்கீதம் 105 :24-38

இன்றய வாக்குத்தத்தம்

இன்றய வாக்குத்தத்தம்

Friday, 12 August 2016

சங்கீதம் 105 :11-23

இஸ்ரவேலர் அக்காலத்தில் கொஞ்சத் தொகைக்குட்பட்ட சொற்ப ஜனங்களும் பரதேசிகளுமாயிருந்தார்கள். அவர்கள் ஒரு ஜனத்தைவிட்டு மறு ஜனத்தண்டைக்கும், ஒரு ராஜ்யத்தைவிட்டு மறு தேசத்தாரண்டைக்கும் போனார்கள். கர்த்தர்! அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்கள் நிமித்தம் ராஜாக்களைக் கடிந்து கொண்டு: "நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள்" என்றார். அவர் தேசத்திலே பஞ்சத்தை வருவித்து, ஆகாரமென்னும் ஆதரவுகோலை முற்றிலும் முறித்தார். அவர்களுக்கு முன்னாலே ஒரு புருஷனை அனுப்பினார், யோசேப்பு சிறையாக விற்கப்பட்டான். அவன் கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள், அவன் பிராணன் இரும்பில் அடைபட்டிருந்தது. கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது. ராஜா ஆள் அனுப்பி, அவனைக் கட்டவிழ்க்கச்சொன்னான், ஜனங்களின் அதிபதி அவனை விடுதலைபண்ணினான். தன் பிரபுக்களை அவன் மனதின்படி கட்டவும், தன் மூப்பர்களை ஞானிகளாக்கவும், அவனைத் தன் வீட்டுக்கு ஆண்டவனும், தன் ஆஸ்திக்கெல்லாம் அதிபதியுமாக்கினான். அப்பொழுது இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான், யாக்கோபு காமின் தேசத்திலே பரதேசியாயிருந்தான். சங்கீதம் 105 :11-23

புதிய பர்னிச்சர்

புதிய பர்னிச்சர் வாங்குவதற்கு முன் அதை எங்கே வைத்தால் நன்றாக இருக்கும் என்பதை முதலில் முடிவு செய்து கொள்ளுங்கள். இதற்காக பல அமைப்புகளிலும் அளவுகளிலும் செய்திதாளை கத்தரித்து வைத்து பார்த்துக்கொள்வது நல்லது.

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு புதிய பகுதியாக தினம் ஒரு ஜெபக்குறிப்பு அறிமுகமாகிறது ஜெப வீரர்கள் இதனை மனதில் கொண்டு, அந்தந்த நாளில் அந்தந்தக் காரியத்திற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார். "இந்தியாவின் கனிம வளங்கள் பாதுகாக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்."

சிகரெட்-உயிர்க்கொல்லி

தென்கிழக்கு ஆசியாவில், தொடர்ந்து புகையிலை ஓர் உயிர் கொள்ளியாகத்தான் இருக்கிறது. புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவோர். ஒரு மணி நேரத்தில் 150பேர் வரை இறக்கிறார்கள். இந்தியா உட்பட 11நாடுகளில், 24.60 கோடிபேர் சிகரெட். பீடி குடிக்கிறார்கள். 29கோடி பேர் இதர புகை இலைகளைப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு ஆண்டும்.13 லட்சம் பேரை இந்த புகையிலை பொருட்கள் கொல்லுகின்றன என்று, உலகசுகாதார கழகத்தின் தென் கழக்கு ஆசியா பிராந்திய இயக்குனர் தெரிவித்துள்ளார் உயர் வருவாய் நாடுகளில், சிரெட் பிடிப்போர் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஆனால், வளரும் நாடுகளை நம்பித்தான், சிகரெட் கம்பெனிகளே செயல் படுகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார் புகையிலை மற்றும் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள மக்கள் விடுதலை பெற ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். விளையாட்டாகவும், நன்பர்களோடு சேர்ந்து பழகியபிறகு இளைஞர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இதற்கு அடிமையாகி விடுகின்றனர். இந்நிலைமாறிடவும், மிகைப்படுத்தும் விளம்பரங்கள், சிகரட் பிடிக்கத் தூண்டும் சினிமா காட்சிகளின் மூலமாகவும், சிகரெட் விற்பனை அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரதுறை தகுந்த நடவடிக்கை எடுத்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். போதை வெறியைத் தூண்டும் ஆவிகள் கட்டப்பட, உயிரிழப்புகள் இல்லாதிருக்க பாரத்தோடும் கண்ணீரோடும் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

சப்போட்டா பழம்

????????????????????????????? சப்போட்டா பழம் சப்போட்டா பழத்தை அரைத்துச் சாற்றை தேனில் கலந்து சாப்பிட்டு வர வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள், வயிற்று வலி இவற்றைப் போக்கும். சப்போட்டா பழம், வாழைப்பழம், மாம்பழம் சேர்த்து பொடியாக நறுக்கி இவற்றை ஒன்றாக கலந்து அரைத்து பஞ்சாமிர்தம் செய்து சாப்பிட உடலுக்கு வலிமையும் உறுதியையும் தரும். சப்போட்டா பழம், கொய்யா, திராட்சை இவற்றை ஒன்றாகக் கலந்து அத்துடன் தேன் சேர்த்துச் சாறு எடுத்துச் சாப்பிட்டுவர உடல் வலிமை, உறுதி இவற்றைத் தரும். சப்போட்டா பழத்தைத் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குடல்புண், குடல் எரிச்சல், வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் இவற்றைப் போக்கும். சப்போட்டா பழத்தைத் தோல் நீக்கி அத்துடன் பால் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டுவர உடல் உஷ்ணத்தைத் தணிக்கும்.

சங்கீதம் 105 :1-11

######################### கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள், அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள். அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப்பேசுங்கள். அவருடைய பரிசுத்த நாமத்தைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள், கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக. கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள், அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள். அவருடைய தாசனாகிய ஆபிரகாமின் சந்ததியே! அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் புத்திரரே! அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள். அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர், அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும். ஆயிரந்தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வாக்கையும், ஆபிரகாமோடே அவர் பண்ணின உடன்படிக்கையையும், அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார். அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், இஸ்ரவேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி: உங்கள் சுதந்தரபாகமான கானான் தேசத்தை உங்களுக்குத் தருவேன் என்றார். சங்கீதம் 105 :1-11

தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு புதிய பகுதியாக தினம் ஒரு ஜெபக்குறிப்பு அறிமுகமாகிறது ஜெப வீரர்கள் இதனை மனதில் கொண்டு, அந்தந்த நாளில் அந்தந்தக் காரியத்திற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார். "இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலை பிரதேசங்களுக்காக, நல்ல மழையை கர்த்தர் கட்டளையிடும்படி ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்."

Thursday, 11 August 2016

மீனவர் பிரச்சனை!

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<< மீனவர் பிரச்சனை! இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளான இலங்கை பாகிஸ்தான் கடற்பகுதியில், மீனவர்கள் எல்லையைத் தாண்டும் போது, கடற்படையால் தாக்கப்படுவது, கைதுசெய்யப்படுவதும் அடிக்கடி நடக்கிறது. இதற்கு சரியானத் தீர்வு கிடைக்க, மத்தியஅரசு பேச்சுவார்த்தை நடத்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லையைத் தாண்டி செல்லாதிருக்க, மன்னார் வளைகடா பகுதியில் நம் எல்லைக்குள்ளே அதிக மீன்கள் கிடைக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். தவறுதலாக எல்லையை தாண்டியதால், இலங்கை சிறையிலிருக்கும் மீனவர்கள் விடுவிக்கப்பட, அவர்களது மீன்பிடி படகு மீட்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். பாகிஸதான் நாட்டு மீனவர்கள் நம் எல்லைக்குள் வராதிருக்க, நமது நாட்டு மீனவர்கள், அரபிக்கடலின் எல்லையை தாண்டாதிருக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். இந்தியா-பாகிஸ்தான், இந்தியா-இலங்கை மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைத்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

Wednesday, 10 August 2016

சங்கீதம் 104 :1-12

உன் ஆத்துமா, கர்த்தரை ஸ்தோத்தரிக்கட்டும், உன் தேவனாகிய கர்த்தர், மிகவும் பெரியவராயிருக்கிறார், மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்துகொண்டிருக்கிறார். ஒளியை வஸ்திரமாகத் தரித்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறார். அவரது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மச்சுப்பாவி, மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய செட்டைகளின்மேல் செல்லுகிறார். அவருடைய தூதர்களைக் காற்றுகளாகவும், அவருடைய ஊழியக்காரரை அக்கினிஜூவாலைகளாகவும் செய்கிறார். பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதை ஸ்தாபித்தார். அதை வஸ்திரத்தினால் மூடுவதுபோல ஆழத்தினால் மூடினார், பர்வதங்களின்மேல் தண்ணீர்கள் நின்றது. அவைகள் அவரது கண்டிதத்தால் விலகியோடி, அவரது குமுறலின் சத்தத்தால் விரைந்துபோயிற்று. அவைகள் மலைகளில் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, அவர் அவைகளுக்கு ஏற்படுத்தின இடத்தில் செல்லுகிறது. அவைகள் திரும்பவும் வந்து பூமியை மூடிக்கொள்ளாதபடி கடவாதிருக்கும் எல்லையை அவைகளுக்கு ஏற்படுத்தினார். அவர் பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை வரவிடுகிறார், அவைகள் மலைகள் நடுவே ஓடுகிறது. அவைகள் வெளியின் ஜீவன்களுக்கெல்லாம் தண்ணீர் கொடுக்கிறது அங்கே காட்டுக்கழுதைகள் தங்கள் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளுகிறது. அவைகளின் ஓரமாய் ஆகாயத்துப்பறவைகள் சஞ்சரித்து, கிளைகள்மேலிருந்து பாடுகிறது. சங்கீதம் 104 :1-12

அவரைக்காய்

அவரைக்காய் இதிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இதை சமைத்து உண்டால் உடலை உரமாக்கும் காம உணர்ச்சியைப் பெருக்கும். சூட்டுடம்புக்கு இது மிகவும் நல்லது. இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஏற்றது

Wednesday, 3 August 2016

"தினம் ஒரு ஜெபக்குறிப்பு"

♥♥♥♥♥♥♥♥♪♥♥♥ "தினம் ஒரு ஜெபக்குறிப்பு" இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது கர்த்தர் பெரிய அற்புதம் செய்வார். ' இந்திய இரானுவத்திற்காக ஜெபிப்போம்.'

Monday, 1 August 2016

சங்கீதம் 100 :1-5

♦♦♦♦♦♦♦♦♦♦♦♦ சங்கீதம் 100 :1-5 நீ கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடு. மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வா. கர்த்தரே தேவனென்று அறிந்து கொள், நீ அல்ல, அவரே உன்னை உண்டாக்கினார், நீ அவர் ஜனமும், அவர் மேய்ச்சலின் ஆடுமாயிருக்கிறாய். அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரி. கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது சங்கீதம் 100 :1-5 . ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

செம்பருத்தி பூ

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ செம்பருத்தி பூ செம்பருத்தி பூ பார்ப்பதற்கு மட்டுமல்ல.... வைத்தியத்திற்கும் ரொம்ப சிறப்பானது. அதோட வேர், இலை, மொட்டு, பூ எல்லாமே மருத்துவ குணம் நிறைஞ்சதுதான். இது பருத்தி வகையைச் சேர்ந்த ஒரு செடி. இதோட பூக்கள் இரண்டு வகையா இருக்கும். ஒரு வகை பூக்கள் அடுக்கடுக்கா காட்சியளிக்கும். இன்னொரு வகை, தனித்தனியா அகலமா காட்சியளிக்கும். இந்தச் செடி எட்டடி உயரம் வரைக்கும் செழித்து வளரும். இதோட பூக்கள் வருஷம் முழுக்கப் பூத்துக்கிட்டே இருக்கும். உடல் உஷ்ணம் குறைய.... உடல் உஷ்ணம் அதிகமாகிவிட்டால் பலவித பிணிகள் வர வாய்ப்புண்டு. இதுபோல் வராமல் தடுக்க ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உடல் உஷ்ணம் குறைஞ்சுடும். சாதாரண காய்ச்சலுக்கும் இந்த நீரைக் குடித்து நிவாரணம் பெறலாம். இருதயம் பலம் பெற... இருதய பலவீனமானவர்களுக்குச் செம்பருத்தி பூ டானிக் சிறப்பாக உதவுகிறது. செம்பருத்திப் பூவை 250 கிராம் கொண்டு வந்து துண்டு துண்டாக நறுக்கி, ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு 50 கிராம் எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்துவிட்டு கலக்கி, காலையில் வெயிலில் வைக்கவும். பின்னர் மாலையில் எடுத்துப் பிசையவும். அப்போது சிவப்பான சாறு வரும். அந்தச் சாறை ஒரு சட்டியில் ஊற்றி சேர்க்க வேண்டிய சர்க்கரையைச் சேர்த்துக் காய்ச்சி சர்பத் செய்து வடிகட்டி ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும். இதிலிருந்து காலை மாலை இரு வேளைகளிலும் ஒரு ஸ்பூன் எடுத்து 2 அவுன்ஸ் நீரில் கலந்து குடிக்கவும். இது போன்று தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தம் சீரான முறையில் பரவும். இருதயமும் பலம் பெறும். குழந்தையின் வளர்ச்சிக்கு..... சில குழந்தைகள் பிறக்கும்போதே பலகீனத்துடன் பிறப்பதுண்டு. இதனால் வயதிற்கேற்ப வளர்ச்சியில்லாமல் இருக்கும். இக்குறையைப் போக்கிட, ஐந்து செம்பருத்தி பூக்களை, ஒரு மண்பாண்டத்தில் போட்டு அரைலிட்டர் நீர் விட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி பனைவெல்லம் சேர்த்துக் கொடுத்து வர வேண்டும். தொடர்ந்து கொடுத்து வந்தால், சில நாட்களிலேயே குழந்தை வளர்ச்சியில் நல்ல பலன் தெரியும். - உணவே மருந்து ?????????????♪♪♪????????