Saturday, 30 April 2016

சங்கீதம் 51 :13-19

தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான், தேவன் நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை புறக்கணிக்க மாட்டார் பாதகருக்கு தேவனுடைய வழிகளை உபதேசி அப்போது பாவிகள் கர்த்தரிடத்தில் மனந்திரும்புவார்கள். உன்னை இரட்சிக்குந் தேவன், இரத்தப்பழிகளுக்கு உன்னை நீங்கலாக்கிவிடுவார் அப்பொழுது உன் நாவு அவருடைய நீதியைக் கெம்பீரமாய்ப்பாடும். ஆண்டவர், உன் உதடுகளைத் திறந்தருளுவார் அப்பொழுது உன் வாய் அவருடைய புகழை அறிவிக்கும். பலியை கர்த்தர் விரும்புகிறதில்லை, விரும்பினால் நீ செலுத்துவாய் தகனபலியும் அவருக்குப் பிரியமானதல்ல. தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான், சீயோனுக்கு அவரது பிரியத்தின்படி நன்மைசெய்வார் எருசலேமின் மதில்களைக் கட்டுவார் அப்பொழுது தகனபலியும் சர்வாங்க தகனபலியுமாகிய நீதியின் பலிகளில் பிரியப்படுவார் அப்பொழுது அவரது பீடத்தின்மேல் காளைகளைப் பலியிடுவார்கள். சங்கீதம் 51 :13-19

No comments:

Post a Comment