Saturday, 30 April 2016

இந்தியாவுக்காக ஒரு நிமிட ஜெபம்

பெரிய தொழலதிபர்கள் சாத்தானின் கிரியைகளுக்கு இடம் கொடாமலிருக்க ஆட்சி அதிகாரத்தில் அவர்கள் தலையீடு இல்லாமலிருக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்யோம்

சங்கீதம் 51 :13-19

தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான், தேவன் நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை புறக்கணிக்க மாட்டார் பாதகருக்கு தேவனுடைய வழிகளை உபதேசி அப்போது பாவிகள் கர்த்தரிடத்தில் மனந்திரும்புவார்கள். உன்னை இரட்சிக்குந் தேவன், இரத்தப்பழிகளுக்கு உன்னை நீங்கலாக்கிவிடுவார் அப்பொழுது உன் நாவு அவருடைய நீதியைக் கெம்பீரமாய்ப்பாடும். ஆண்டவர், உன் உதடுகளைத் திறந்தருளுவார் அப்பொழுது உன் வாய் அவருடைய புகழை அறிவிக்கும். பலியை கர்த்தர் விரும்புகிறதில்லை, விரும்பினால் நீ செலுத்துவாய் தகனபலியும் அவருக்குப் பிரியமானதல்ல. தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான், சீயோனுக்கு அவரது பிரியத்தின்படி நன்மைசெய்வார் எருசலேமின் மதில்களைக் கட்டுவார் அப்பொழுது தகனபலியும் சர்வாங்க தகனபலியுமாகிய நீதியின் பலிகளில் பிரியப்படுவார் அப்பொழுது அவரது பீடத்தின்மேல் காளைகளைப் பலியிடுவார்கள். சங்கீதம் 51 :13-19

அடிக்கடி ஏப்பம் வருகிறதா?

வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும். -

ஸ்தோத்திர ஜெபம

ஆப்பிரிக்க கண்டத்தில் உண்டான எழுப்புதலினால் தினமும் 20,000 பேர் இரட்சிக்கப்படுகின்றனர் 1900ஆண்டில் 3% விசுவாசிகள் இருந்தநாட்டில் இப்போது 50% விசுவாசிகள் இருக்கின்றனர் இதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்துவோம்

உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்

உலகமெங்கும் இன்டெர்நெட் மற்றும் மீடியாக்கள் மூலம் பாவத்தை திரளாய் விதைக்கிற கிரியைகள் அழிக்கப்பட ஊக்கமாய் ஜெபிப்போம்

தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம

கர்த்தரை சொந்த இரட்சகராய் ஏற்று கொண்ட தொழிலதிபர்கள் , கிறிஸ்தவ வாலிபர்கள் தமிழ்நாட்டின் முதன்மையான இடங்களில் வந்து தேவனை மகிமை படுத்த தேவனை நோக்கிக் கெஞ்சுவோம்

தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக

தேர்தலுக்காக செய்யப்படுகிற மந்திரங்கள், செய்வினைகள்,பில்லி சூனியங்லகள் மற்றும் பிசாசின் தந்திரங்கள் எல்லாம் செயலிழந்து போக, ஜனங்கள் சந்தோஷம், சமாதானத்தோடு 100% ஓட்டு போட தேவனை நோக்கி ஜெபிப்போம்

Friday, 29 April 2016

தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்

இந்தியாவிலேயே முதன்மையான நிலையில் எல்லா விதத்திலும் நமது மாநிலம் ஆசீர்வதிக்கப்பட தொழில் வளம், வேலை வாய்ப்புகள் பெருக கர்த்தரை நோக்கி ஜெபிப்போம்

இந்தியாவுக்காக ஒரு நிமிட ஜெபம்

இந்தியப் பிரதமர், மத்திய அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் நீதியோடும் நேர்மையோடும் ஆட்சி செய்ய ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்

மத்திய கிழக்கு நாடுகளில் சுவிசேஷம் அறிவிக்க முடீயாத அளவிற்கு தீவிரமான எதிர்ப்புகள் உள்ளது கிறிஸ்துவை ஏற்று கொண்டவர்களுக்கு அதிக உபத்திரவம் காணப்படுகிறது திறந்த வாசல் உண்டாக கர்த்தரை நோக்கி ஜெபிப்போம்

தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக

தேர்தல் நேரத்தில் ஜாதிகலவரமோ, மதகலவரமோ. மெழி கலவரமோ வராதபடி கர்த்தரை நோக்கி ஜெபிப்போம்

கரும்புள்ளி

* தோலில் உள்ள கரும்புள்ளிகளின் மேல் தக்காளிப் பழத்தைத் துண்டாக்கிக் தேயுங்கள். அதில் உள்ள அமிலம் கரும்புள்ளிகளைக் கரைத்துவிடும்.

ஸ்தோத்திர ஜெபம

1960ம் ஆண்டு வரை நேபாளம் தேசத்தில் கறிஸ்தவர்கள் வசிக்கக் கூடாது என அரசாங்கம் தடை விதித்திருந்தது ஆனால் இன்று நேபாளில் மதசுதந்திரம் உள்ளது சுமார் 5 இலட்சம் விசுவாசிகள் உள்ளனர் அனைத்து மாவட்டங்களிலும் சபைகள் ஸ்தாபிக்கப் பட்டுள்ளது. இதற்காக ஆண்டவரை ஸ்தோத்தரிப்போம்

சங்கீதம் 51 :7-12

உன் நாவு தேவனுடைய நீதியைக் கெம்பீரமாய்ப்பாடுவதால் நீ சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்வார் அப்பொழுது அவர் நொறுக்கின எலும்புகள் களிகூரும். உன் பாவங்களைப் பாராதபடிக்கு அவர் தமது முகத்தை மறைத்து, உன் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளுவார் தேவன் சுத்த இருதயத்தை உன்னிலே சிருஷ்டிப்பார் நிலைவரமான ஆவியை உன் உள்ளத்திலே புதுப்பிப்பார் அவரது சமுகத்தை விட்டு உன்னைத் தள்ளாமலும், அவரது பரிசுத்த ஆவியை உன்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இருப்பார் அவரது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் உனக்குத் தந்து, உற்சாகமான ஆவி உன்னைத் தாங்கும்படி செய்வார் சங்கீதம் 51 :7-12

Thursday, 28 April 2016

தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக

இயேசுவின் மீது நம்பிக்னக, விசுவாசம் உள்ள நேர்மையான, மதமாற்ற தடை சட்டத்தை விரும்பாத நேர்மையான கட்சி தமிழ் நாட்டை ஆட்சி செய்ய ஆண்டவரை நோக்கி பாரத்துடன் ஜெபிப்போம்

உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்

ஐக்கிய அரபு நாடுகளின் பாதுகாப்பிற்காக.♪ அரசாங்கத்திற்காக அங்கு வேலை செய்யும் இந்தியர்களுக்கு எந்த ஆபத்தும் வராமலிருக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

இந்தியாவுக்காக ஒரு நிமிட ஜெபம்

உலகிலேயே அதிகமான ஊழல், லஞ்சம் நிறைந்தநாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது கருப்புப் பணங்கள் பதுக்கி வைக்கப் பட்டிருக்கிறது கர்த்தர் இந்நிலையை மாற்ற ஜெபிப்போம்

தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்

எல்லா மாவட்ட ஆட்சியளர்கள் தாசில்தார்கள் மேயர்கள் நகராட்சி, ஊராட்சி, பஞ்சாயத்து தலைவர்கள், உறுப்பினர்களுக்காக ஜெபிப்போம்

ஸ்தோத்திர ஜெபம

உலகிலேயே கிறிஸ்தவர்களை உபத்திரவப்படுத்தம் நாடுகளில் முதல் பத்து இடங்களில் ஈரானும் உள்ளது ஆனால் ஒவ்வொரு மாதமும் சுமார் 500 முஸ்லிம்கள் இரட்சிக்கப்பட்டு வருகின்றனர் இவர்கள் சராசரி வயது 30 இதற்காக தேவனை நோக்கி ஸ்தோத்தரிப்போம்

சங்கீதம் 51 :1-6

தேவன், அவரது கிருபையின்படி உனக்கு இரங்குவாா், அவரது மிகுந்த இரக்கங்களின்படி உன் மீறுதல்கள் நீங்க உன்னைச் சுத்திகரிப்பாா். உன் அக்கிரமம் நீங்க உன்னை முற்றிலும் கழுவி, உன் பாவமற உன்னைச் சுத்திகரிப்பார் உன் மீறுதல்களை நீீ அறிந்திருக்கிறாய். உன் பாவம் எப்பொழுதும் உனக்கு முன்பாக நிற்கிறது. தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நீ பாவஞ்செய்து, அவரது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தாய், அவர் பேசும்போது அவருடைய நீதி விளங்கவும், அவர் நியாயந்தீர்க்கும்போது அவருடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடு. இதோ, நீ துர்க்குணத்தில் உருவானாய உன் தாய் உன்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள். இதோ, கர்த்தர் உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறார் அந்தக்கரணத்தில் ஞானத்தை உனக்குத் தெரியப்படுத்துவார். சங்கீதம் 51 :1-6

குழந்தைப் பேறு

* கருவுற்ற மகளிர் நெல்லிக்காய், முருங்கைக் கீரை, முள்ளங்கி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் கை, கால், முகம், பாதம் வீக்கம் வராது. குழந்தைப் பேறு எளிதாக அமையும்.

Wednesday, 27 April 2016

குழந்தையின் அழுகை

* கசகசாவை நைசாக அரைத்து குழந்தையின் தொப்புள் சுற்றி தடவினால் குழந்தையின் அழுகை நின்றுவிடும்

தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக

பணத்தைக் கொண்டு அரசியல்வாதிகளை  விலைக்குவாங்கித் தாங்கள் ஆட்சியை னகபற்ற நினைக்கும் கட்சிகள் ஆட்சிக்கு வராமல் தடுத்து நிருத்தும்படி ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

ஸ்தோத்திர ஜெபம

உலகில் மாதம் 30 ஆயிரம் சபைகள் புதிதாக உருவாகின்றன

தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்

நீதித்துரை, காவல்துனர, வருவாய்துரை, மற்றும் எல்லா துரைகளைச் சார்ந்த அதிகாரிகளுக்காக கர்த்தரின் ஆளுகை , தேவஞானம் அவர்கள் மேலிருக்க ஜெபிப்போம்

இந்தியாவுக்காக ஒரு நிமிட ஜெபம்

டெல்லிப் பட்டனத்தின் மேல் தேவப் பாதுகாப்பு இருக்க, அரசாங்கக் கட்டடங்கள். தேசத் தலைவர்கள் பாதுகாக்கப்பட, தீீவிரவாதங்கள் தலைத்தூக்காமல் முறியடிக்கப்பட ஜெபிப்போம்

உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்

மத்திப கிழக்கு நாடுகளான் (17நாடுகள்) இஸ்லாமிய நாடுகளுக்காக ஜெபிப்போம், இனக் கலவரங்ககள், அரசாங்கத்திற்கு விரோதமான கலவரங்கள் எழும்பாமலிருக்க ஜெபிப்பேரம்

Tuesday, 26 April 2016

சங்கீதம் 50 :17-23

சிட்சையை நீ பகைத்து, கர்த்தருடைய வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய். நீ திருடனைக் காணும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய், விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு. உன் வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், உன் நாவு சற்பனையைப் பிணைக்கிறது. நீ உட்கார்ந்து உன் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, உன் தாயின் மகனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய். இவைகளை நீ செய்யும்போது கர்த்தர் மவுனமாயிருநதார், உன்னைப்போல் கர்த்தரும் இருப்பார் என்று நினைவு கொண்டாய், ஆனாலும் கர்த்தர் உன்னைக் கடிந்துகொண்டு, அவைகளை உன் கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவார தேவனை மறக்கிறவனே, இதைச் சிந்தித்துக்கொள், இல்லாவிட்டால் கர்த்தர் உன்னைப் பீறிப்போடுவார், ஒருவரும் உன்னை விடுவிப்பதில்லை. ஸ்தோத்திர பலியிடுகிறவன் கர்த்தரை மகிமைப்படுத்துகிறான், தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்குத் தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். சங்கீதம் 50 :17-23

தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக

தமிழ் நாட்டை ஆட்சி செய்ய தகுதி அற்றவர்கள் அரசியலை விட்டு ஓடும்படியாக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

முக சுருக்கம்

தக்காளி, கோஸ், கேரட் ஆகியவற்றை சாப்பிட்டால் முக சுருக்கம் நீங்கும்.

சங்கீதம்50:9-15

உன் வீட்டிலிருந்து காளைகளையும், உன் தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் கர்த்தர் வாங்கிக்கொள்வதில்லை. சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் அவருடையவைகள். மலைகளிலுள்ள பறவைகளை யெல்லாம் அறிவார், வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் அவருடையவைகள். நீ பசியாயிருந்தால் உனக்குச் சொல்லாா் பூமியும் அதின் நிறைவும் அவருடையவைகளே. கர்த்தர் எருதுகளின் மாம்சத்தை புசித்து, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பாரோ? நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு, உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி, ஆபத்துக்காலத்தில் கர்த்தரை நோக்கிக் கூப்பிடு, அவர் உன்னை விடுவிப்பாா், நீ கர்த்தரை மகிமைப்படுத்துவாய். சங்கீதம் 50 :9-15

உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்

அமெரிக்காவின் மீது தேவ கோபாக்கினை வர காரணமான ஓரின சேர்க்கை, விக்கிரகத்தை அங்கிகரித்து அமெரிக்காவுக்கு கொண்டு செல்ல அனுமதித்ததாகும் விக்கிரகங்களை அழித்து தேசம் ஆசிர்வதிக்கும் படியாக தேவனை நோக்கி ஜெபிப்போம்

இந்தியாவுக்காக ஒரு நிமிட ஜெபம்

பாகிஸ்தான் தேசத்தின் மூலம் எந்தவிதமான பிரச்சனைகளும் நம் தேசத்திற்கு வராமலிருக்க, தீவிரவாதிகளின் கால்கள் தேசஎல்லைக்குள் கடந்து வராமல் கட்டபட பாரத்தோடு ஜெபிப்போம்

தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்

தமிழக முதலமைச்சர் மற்றும் எல்லாத் துறைகளைச் சார்ந்த அமைச்சர்கள் மீதும் கர்த்தரின் ஆளுகை வர தேவ ஞானம் , பாதுகாப்பு அவர்களைச் சூழ்ந்து கொள்ள ஜெபிப்போம்

ஸ்தோத்திர ஜெபம

உலகில் நாள்தோரும் சுமார் இரண்டு லட்சம் பேர் சபைகளில் சேர்க்கப் படுகிறபடியால் கர்த்தரை ஸ்தோத்தரிப்போம்

Monday, 25 April 2016

தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்

மந்திரக் கிரியைகள், பில்லி சூனிய வல்லமைகள் செயல்படாமல் அழிக்கப்பட, இதைச் செய்கிறவர்கள் கர்த்தருடைய வல்லமையை அறிந்து கொள்ள கர்த்தரை நோக்கி ஜெபிப்போம்

ஸ்தோத்திர ஜெபம

எழுப்புதலுக்கான கர்த்தருடைய லேளை வந்துவிட்டபடியால் முதற்கட்ட எழுப்புதலாகிய ஜெப எழுப்புதல் ஆரம்பித்து விட்டபடியால் இது இன்னும் தீவிரமாய் பற்றியெரியப் பேகிறபடியால் கர்த்தரை ஸ்தோத்தரிப்போம்

தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக

ஆண்டவரை விசுவாசிக்கிறவர்கள் ஆண்டவருக்கு பயப்படுகிறவர்கள் ஆண்டவரைத் தேடுகிறவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று ஆண்டவருக்கு சாட்சியாக நாட்டை ஆட்சி செய்யும் படி ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

மூட்டு வலி

பச்சைக் கற்பூரத்துடன் புதினா இலைச் சாறை கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டு வலி குணமாகும்

உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்

அமெரிக்கா தேசத்தின சபைகளுக்காக ஜெபிப்போம் அங்கிருந்து பல்வேறு விதமான குழப்பங்கள். உபதேச சீர்கேடுகளைக் கொண்டு வர சாத்தான் திட்டமிடுகிறான் இதை தடுத்து நிறுத்தும்படி தேவனை நோக்கி ஜெபிப்போம்

இந்தியாவுக்காக ஒரு நிமிட ஜெபம்

சீனா தேசத்தின் மூலம் வருகிற பிரச்சனைகள், ஆபத்துகள் தடுத்து நிறுத்தப்பட அத்தேசத்தின் அரசியல் தலைவர்களை கர்த்தர் சந்திக்க ஜெபிப்போம்

சங்கீதம் 50 :3-8

நம்முடைய தேவன் வருவார், மவுனமாயிரார், அவருக்குமுன் அக்கினி பட்சிக்கும், அவரைச் சுற்றிலும் மகா புசல் கொந்தளிப்பாயிருக்கும். அவர் தம்முடைய ஜனத்தை நியாயந்தீர்க்க உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார். பலியினாலே என்னோடே உடன்படிக்கை பண்ணின என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார். வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும், தேவனே நியாயாதிபதி. தேவனின் ஜனமே, கேள், தேவன் பேசுவார், இஸ்ரவேலே, உனக்கு விரோதமாய்ச் சாட்சியிடுவார், அவரே தேவன், உன் தேவனாயிருக்கிறார் உன் பலிகளினிமித்தம் உன்னைக் கடிந்துகொள்ளமாட்டார், உன் தகனபலிகள் எப்போதும் அவருக்கு முன்பாக இருக்கிறது. சங்கீதம் 50 :3-8

Sunday, 24 April 2016

சங்கீதம் 48 :9-14

நீ தேவனுடைய ஆலயத்தின் நடுவிலே, அவரது கிருபையைச் சிந்தித்துக் கொண்டிரு தேவனது நாமம் விளங்குகிறதுபோல அவரது புகழ்ச்சியும் பூமியின் கடையாந்தரங்கள் பரியந்தமும் விளங்குகிறது, அவரது வலதுகரம் நீதியால் நிறைந்திருக்கிறது. அவருடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் சீயோன் பர்வதம் மகிழ்வதாக, யூதாவின் குமாரத்திகள் களிகூருவார்களாக. சீயோனைச் சுற்றி உலாவி, அதின் கொத்தளங்களை எண்ணிக் கொண்டிரு பின்வரும் சந்ததிக்கு நீ விவரிப்பதற்காக, அதின் அலங்கத்தைக் கவனித்து, அதின் அரமனைகளை உற்றுப்பார் இந்தத் தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் உன்னுடைய தேவன், மரணபரியந்தம் உன்னை நடத்துவார். சங்கீதம் 48 :9-14

ஸ்தோத்திர ஜெபம்

இந்தியாவிலேயே அதிகமான திருச்சபைகள், மேய்ப்பர்கள், சுவிசேஷகர்கள், தீர்க்கதரிசிகள், மீஷ்னரிகள், ஜெபிக்கிறவர்கள், தாங்குகறவர்கள், தமிழ்நாட்டிலிருந்து எழும்பியபடியால் தேவனை ஸ்தோத்தரிப்போம்

தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக

தேர்தல் நேரத்தில் எந்த வண்முறைகள் வராமல் எந்த கலவரங்கள் வராமல் தகுந்த பாதுகாப்புச் செய்யவும் தேவனை நோக்கி ஜெபிப்போம்

   தலை பாரம், மயக்கம்

சீரகத்தை நல்லெண்ணையில் காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால், தலை பாரம், பித்த மயக்கம் நீங்கும்.

உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்

உலகமெங்கும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் தீவிரவாத ஆவிகள் கட்டப்பட, தீவிரவாத்தை அதிகமாய் தூண்டுகிற இன மக்களின் ஆலோசனை கள் அபத்தமாக ஜெபிப்போம்

இந்தியாவுக்காக ஒரு நிமிட ஜெபம்

தேவ ஜனங்களின் குடும்பம், தொழில்கள், சபைகள் இவைகளுக்கு விரோதமாய் எழும்பும் ஆவிகள் கட்டப்பட, விசேஷமாக தேவ பிள்ளைகளின் சிந்தனைகளைச் சிதரடிக்க நினனக்கும் ஆவிகளை கட்டி ஜெபிப்போம்

தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்

சிறு பிள்ளைகள் வாலிபர்களின் கற்பை கறிவைக்கிற ஆவிகளை சிறு பிள்ளைகள் வாலிபர்களின் மனநிலையில் கை வைக்கிற, ஜீவனை எடுக்கப் போராடுகிற வல்லமைகளை அழிக்க ஜெபியுங்கள்

Saturday, 23 April 2016

இந்தியாவுக்காக ஒரு நிமிட ஜெபம்

பஞ்சாப் மாநிலத்தில் கர்த்தர் பெரிய எழுப்புதலைக் கட்டளையிட்டிருக்கிறார் சபைகள் வேகமாக வளர்ந்து பெருகுகிறது இந்த எழுப்புதலை சபைகள் பாதுகாக்கவும், அனைத்து இடங்களிலும் சபைகள் ஸ்தாபிக்கப்படவும் ஜெபிப்போம்

தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்

தமழ் நாட்டின் பலவான் கட்டப்பட, சாத்தானின் அரண்கள் நிர்மூலமாக, கர்த்தர் சிருஷ்டித்த மலைகள், நதிகள், மரங்கள், கல்லுகள் கர்த்தருக்காக திருப்பப்பட ஜெபிப்போம்

இஸ்ரேல் தேசத்திற்காக ஜெபிப்போம்

எருசலேமின் சமாதானத்திற்காகவும், யூதர்களின் இரட்சிப்பிற்காகவும் இவர்கள் இயேசுவை சொந்த இரட்சகராய் ஏற்றுக்கொள்ளுவதற்காகவும் ஜெபிப்போம்

தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக

பணபலத்தினால் ,பொய் வாக்குறுதியினால்,கவர்ச்சியினால், கவர்ச்சி பேச்சியினால் மக்களை ஏமாற்றுபவர்கள் பதவிக்கு வராமல் மக்கள் மீது உண்மையான அன்பு, கருணை, இரக்கம் உள்ளவர்கள் பதவிக்கு வரும்படியாக கர்த்தரை நோக்கி ஜெபிப்போம்

ஸ்தோத்திர ஜெபம

சபை வளர்ச்சிக்கு விரோதமாக சத்துரு வெள்ளம் போல எழும்பினாலும் ஆவிபானவர் கொடியேற்றியதற்காக பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ள முடியாதபடியால் தேவனை ஸ்தோத்தரிப்போம்

சங்கீதம்48:1-7

கர்த்தர் பெரியவர், அவர் உன் தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர். வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம். அதின் அரமனைகளில் தேவன் உயர்ந்த அடைக்கலமாக அறியப்பட்டிருக்கிறார் இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஏகமாய்க் கடந்துவந்தார்கள். அவர்கள் அதைக் கண்டபோது பிரமித்துக் கலங்கி விரைந்தோடினார்கள். அங்கே நடுக்கங்கொண்டு, பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயைப்போல வேதனைப்பட்டார்கள். கீழ்காற்றினால் தர்ஷீசின் கப்பல்களை அவர் உடைக்கிறார். சங்கீதம்48:1-7

கண் பார்வை

தினமும் ஒரு கைப்பிடி அளவு கொத்த மல்லிக்கீரையை மண்ணில்லாமல் சுத்தம் செய்து, பச்சையாகவே மென்று சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவாகும். பித்தமும் நீங்கும்

Friday, 22 April 2016

நெருக்கப்படும் கிறிஸ்த்தவர்களுக்காக

நெருக்கப்படும் கிறிஸ்த்தவர்களுக்காக
கிழக்கு நாடுகளில் குறிப்பாக சிரியா மற்றும் ஈராக் தேசங்களில் நெருக்கப் படுகிற கிறிஸ்தவர்களுக்காக பாரத்தோடு ஜெபிப்போம்

தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக

      நெருக்கப்படும் கிறிஸ்த்தவர்களுக்காக ஆண்டவருக்கு சித்தமான, மக்களுக்காக உண்னமயும் உத்தமமாய் உழைக்கிற பணத்திற்கு ஆசைப்படாத கடவுளுக்கு பயப்படுகிற நேர்மையான வேட்பாளரை மக்கள் தேர்வு செய்ய தெளிந்த ஞானத்தை மக்களுக்கு தேவன் கொடுக்கும்படி ஜெபிப்போம்

மூலவியாதி

மூலவியாதி இரவின் பூவன் பழத்தை செங்குத்து வாக்கில் இரண்டாகப் பிளந்து, அதில் சீரகத்தை வைத்து மூடி வைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மூலவியாதி முச்சு காட்டாது

சங்கீதம் 47 :6-9

நீ தேவனைப் போற்றிப் பாடு், பாடு, நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடு, பாடு தேவன் பூமியனைத்திற்கும் ராஜா, கருத்துடனே அவரைப் போற்றிப் பாடு தேவன் ஜாதிகள்மேல் அரசாளுகிறார், தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறார். ஜனங்களின் பிரபுக்கள் ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களாகச் சேர்க்கப்படுகிறார்கள், பூமியின் கேடகங்கள் தேவனுடையவைகள், அவர் மகா உன்னதமானவர். சங்கீதம் 47 :6-9

ஸ்தோத்திர ஜெபம

எழுப்புதலுக்காகப் பிரயாசப்பட்ட நம் முன்னேர்களுக்காக. சகோதரர் D.G.S தினகரன். சகோதர் ஜீவானந்தம், சகோதரர் ஆபிரகாம் ராஜபாண்டியன், சகோதர் எமில் ஜெபசிங் போன்ற பரிசுத்தவான்களுக்காக தேவனை துதிப்போம்

இந்தியாவுக்காக ஒரு நிமிட ஜெபம்

இந்திய தேசத்தில் ஜெப ஆவி ஊற்றப்பட கர்த்தரின் வருகைக்கு வழியை ஆயத்தப் படுத்தும் புதிய தலைமுறை யுத்தவீரர்கள் லட்ச லட்சமாக எழும்ப ஜெபிப்போம்

தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்

தமிழ்நாட்டிலுள்ள பிரபலமானவர்கள், சினிமாத் துரையினர், தொழிலதிபர்கள், அனைத்துத் தரப்பு மக்களின் இரட்சிபிற்காக கருத்தாக பெயர் செல்லி ஜெபிப்போம்

Thursday, 21 April 2016

தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக

தேர்தல் அதிகாரிகளுக்கு தேவன் நல்ல தைரியத்தை கொடுக்கவும்,நல்ல ஞானத்தைக் கொடுக்கவும் உண்மையாக தங்கள் கடமைகள செய்யவும் ஜெபியுங்கள்

தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக

தேர்தல் அதிகாரிகளுக்கு தேவன் நல்ல தைரியத்தை கொடுக்கவும்,நல்ல ஞானத்தைக் கொடுக்கவும் உண்மையாக தங்கள் கடமைகள செய்யவும் ஜெபியுங்கள்

இந்தியாவுக்காக ஒரு நிமிட ஜெபம்

இந்தியாவுக்கு எதிராக வன்முறைகள், கலவரங்கள், இரத்தம் சிந்துதலை கொண்டுவர போராடுகிற பெண் விக்கிரக ஆவிகளையும் பிரிவிைனைகளை கொண்டுவரப் போராடுகிற பிரிவினை ஆவிகளையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கட்டி பாதாளத்தில் போடும்படியாக அதைஅழிக்கும்படியாக தேவனிடத்தில் மனறாடடுடவோம்

சிரங்கு

100மி.லி., தேங்காய் எண்ணெய்யில் 5 வெற்றிலைகளைப் போட்டு நன்றாகக் காய்ச்சி அந்த எண்ணெயைத் தடவ நல்ல குணம் கிடைக்கும்.

தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்

தமிழ் நாட்டில் சிருவர்கள், லாலிபர்கள், நடுவில் எழுப்புதல் ஏற்பட, அவர்கள் இரட்சிக்கப்பட்டு, கர்த்தருக்காக சேனையாய் எழும்ப ஜெபியுங்கள்

ஸ்தோத்திர ஜெபம

இயேசு கிறிஸ்து நூற்றுக்கணக்கான மிஷ்னெரிகளை தமிழ்நாடிற்கு அனுப்பியதற்காக, அவர்கள் மூலமாக சுவிஷேசம் அறிவிக்கப்பட்டு, சபைகள் ஸ்தாபிக்கப்பட்டதற்காக இந்திய மொழிகளியே, தமிழ் மொழியில் முதன் முதலாக பரிசுத்த வேதாகமம் மொழி பெயர்க்கப் பட்டதற்காக, மிஷனெரிகள் கோதுமை மணிகளாய் விதைக்கப்பட்டதற்காக தேவனை ஸ்தோத்தரியுங்கள்

Wednesday, 20 April 2016

சங்கீதம் 47 :1-5

நீ கைகொட்டி, தேவனுக்கு முன்பாகக் கெம்பீரசத்தமாய் ஆர்ப்பரி. உன்னதமானவராகிய கர்த்தர் பயங்கரமானவரும், பூமியின்மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாயிருக்கிறார். ஜனங்களை உனக்கு வசப்படுத்தி, ஜாதிகளை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார். தமக்குப் பிரியமான யாக்கோபின் சிறப்பான தேசத்தை உனக்குச் சுதந்தரமாகத் தெரிந்தளிப்பார். தேவன் ஆர்ப்பரிப்போடும், கர்த்தர் எக்காள சத்தத்தோடும் உயர எழுந்தருளினார். சங்கீதம் 47 :1-5

ஸ்தோத்திர ஜெபம்

இயேசு கிறிஸ்து தமிழ் நாட்டை நேசிக்கிறார் .தமிழக மக்களுக்காகவும் இரத்தம் சிந்தியிருக்கிறார். எல்லோரும் இரட்சிக்கப்படலேண்டும்மெனற சித்தமுள்ளவராய்யிருக்கிறார். இதற்காக ஸதோத்தரியுங்கள் *தமிழ் நாட்டிலிருந்து உலகம் தழுவிய எழுப்புதல் ஆரம்பிக்கப் படவேண்டும் என்பது தேவசித்தம் எனவே அப்போஸ்தலனாகிய தோமாவை அனுப்பி அவருடைய இரத்தம் தமிழ் மண்ணில் சிந்தப்பட அனுமதித்த்ற்காக ஸ்தோத்தரியுங்கள்

தமிழ்நாட்டிற்காக ஒரு நிமிட ஜெபம்

எட்டு கோடி தமிழக மக்களின் இரட்சிப்பிற்காக, ஜீவனுள்ள தேவனை அறிந்து கொள்ள, ஒவ்வொருவரின் மனக் கண்கள் திறக்கப்பட ஜெபிப்போம்

இந்தியாவுக்காக ஒரு நிமிட ஜெபம்

இந்தியப் பொருளாதாரத்தில் வீழ்ச்சி வராமலிருக்க பஞ்சங்கள் வராமலிருக்க, தொழில்கள் நலிவடையமலிருக்க, இவைகளை கொாண்டு வரப் போராடுகிற ஆவிகள் கட்டப்பட ஜெபியுங்கள்

Tuesday, 19 April 2016

சங்கீதம் 46 :7-11

சேனைகளின் கர்த்தர் உன்னோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் உனக்கு உயர்ந்த அடைக்கலமானவர். பூமியிலே பாழ்க்கடிப்புகளை நடப்பிக்கிற கர்த்தருடைய செய்கைகளை வந்து பார் அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார், வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார், இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார். நீ அமர்ந்திருந்து கர்த்தரே தேவனென்று அறிந்துகொள், ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பாய், பூமியிலே உயர்ந்திருப்பாய். சேனைகளின் கர்த்தர் உன்னோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் உனக்கு உயர்ந்த அடைக்கலமானவர்.
சங்கீதம் 46 :7-11

பீட்ருட்டின் மகிமை

பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள் * புற்றுநோய் பரவுவதை தடுக்கும். * மலச்சிக்கலைப் போக்கும். * பித்தத்தைக் குறைக்கும் * அரிப்பு - எரிச்சலைத் தவிர்க்கும். * கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும். அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட் இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்ணுகின்றனர். பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது. ஒரு 100 கிராம் பீட்ரூட்டில் தண்ணீர் 87.7 விழுக்காடும், புரோட்டின் 17 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 0.8 விழுக்காடும், நார்ச்சத்து 0.9 விழுக்காடும், கார்போஹைட்ரேட் 8.8 விழுக்காடும் உள்ளது. மற்றும் கால்சியம் 18 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 5.5 மில்லிகிராமும், இருப்பு 10 மில்லிகிராமும், வைட்டசின் சி 10 மில்லிகிராமும் மற்றும் வைட்டமின் ஏ மற்றும் பி1, பி2, பி6 நியாசின் வைட்டமின் பி ஆகியவற்றுடன் சோடியம், பொட்டாசியம், சல்வர், க்ளோரின், ஐயோடின், காப்பர் போன்ற சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன. பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம். கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும். பல மாதங்களாக மலச்சிக்கலினால் துன்பப்படுபவர்களும், மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் அருந்த வேண்டும். பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு பங்கு பீட்ரூட் ஜூசுடன் ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால் பிரச்னையிலிருந்து விடுபடலாம். புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட். பீட்ரூட் பலருக்குப் பிடிக்காது, சிலருக்கு மட்டுமே பிடிக்கும். குழந்தைகளில் பலருக்குப் பிடிக்கும். இது பலருக்கும் சுவை சம்பந்தப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. ஆனால் இதற்கென்று பிரத்யேக மருத்துவப் பயன்கள் உண்டு. 1. பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும். 2. பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும். 3. பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு மாறும். 4. தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும். 5. பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும். 6. பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும். இரத்த சோகையை குணப்படுத்தும். 7. பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும். 8. பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும். 9. பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்

பூண்டின் மகிமை

பூண்டைச் சேர்த்து எந்த வகை உணவு சாப்பிட்டாலும் வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம் . இதனை தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி, அதைத் தேய்த்தால் வாத வலி போகும். பூண்டுத் தழையை உப்பிட்டு அரைத்து சாற்றைப் பிழிந்து சுளுக்குக்குத் தடவ, சுளுக்கு விட்டுப் போகும் - உணவே மருந்து

தமிழ்நாடு-சில தகவல்கள்

* இந்தியாவில் கருக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலம் தமிழகம் (ஆண்டிற்கு சுமார் 1 லட்சம் பெண்கள் கருக் ககலைப்பு செய்கிிறார்கள் ) * தமிழகத்தில் H.I.V. பாதிப்பு உள்ளவர்கள் சுமார் 1.32 லட்சம் பேர்கள் * விபத்துக்களினால் தமிழ்நாட்டில் ஆண்டிற்கு சுமார் 20,000 பேர் மரிக்கின்றார்கள் * குடிகாரர்கள் சுமார் 47 லட்சம் 2015ம் ஆண்டில் மது விற்பனை 28000 கோடி ரூபாய் மது அடிமைகள் உயிரை இழந்திருக்கிறார்கள் * தமிழகத்தில் குழந்தைத் தொழிளாளர்கள் சுமார் 2,84 லட்சம் பேர்கள்

இந்தியாவுக்காக ஒரு நிமிட ஜெபம்

இந்தியர்களாகிய நாம் செய்த மற்றும் செய்கிற பாவங்களை கர்த்தர் மன்னிக்குமாறும், 125 கோடி மக்களும் இரட்சிக்கப்படும்படியாகவும் மன்றாடுவோம்

சங்கீதம் 46 :1-6

தேவன் உனக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்து போனாலும், அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நீ பயப்படாய் ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தையும் சந்தோஷிப்பிககும் தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது, அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம் பண்ணுவார். ஜாதிகள் கொந்தளித்தது, ராஜ்யங்கள் தத்தளித்தது, அவர் தமது சத்தத்தை முழங்கப்பண்ணினார், பூமி உருகிப்போயிற்று.
சங்கீதம் 46 :1-6

Sunday, 17 April 2016

மல்லியின் மகிமை

இதன் தழையை அரைத்து சர்க்கரை போட்டு பால் சேர்த்து தினம் 100 கிராம் சாப்பிட மன நோய் நீங்கும். மல்லி நீரால் கண்களைக் கழுவ கண்கள் பளிச்சிடும். தாகத்தைத் தணிக்கும். பல் வலி, ஈறு வீக்கம் ஆகியவை கட்டுப்படும். இதன் விதை எண்ணெய் சுளுக்கு நீக்கியாகப் பயன்படும். - உணவே மருந்து

சங்கீதம் 44 :23-26

ஆண்டவர், விழித்துக்கொள்ளுவார், நித்திரைபண்ணமாட்டார் எழுந்தருளுவார் உன்னை என்றைக்கும் தள்ளிவிடமாட்டார் அவருடைய முகத்தை மறைக்க மாட்டார், உன் சிறுமையையும் உன் நெருக்கத்தையும் மறந்துவிடமாட்டார் உன் ஆத்துமா புழுதிமட்டும் தாழ்ந்திருக்கிறது, உன் வயிறு தரையோடு ஒட்டியிருக்கிறது. கர்த்தர் உனக்கு ஒத்தாசையாக எழுந்தருளுவார், அவருடைய கிருபையினிமித்தம் உன்னை மீட்டுவிடுவார், சங்கீதம் 44 :23-26

தமிழ்நாடு-சில தகவல்கள்

* தற்கொலை செய்வதில் தமிழகம் இரண்டாவது இடம்[ஆண்டிற்கு சுமார்17000பேர்] *தமிழகத்தில் தினந்தோறும் சராசரியாக 8 குழந்தைகள் மாயமாகின்றனர் ஆண்டடிற்கு சுமார் 3000 குழந்ழந்தைகள் காணாமல் போகின்றனர் இதில் 3வயது முதல் 13வயது வரையுள்ள பெண் குழந்தைகளே அதிகம் *குழந்தைகள் கொலை செய்ப்படுவதில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது {ஆண்டிற்கு 90 குழந்தைகள்} * விவாகரத்துக்கள் அதிகமாய் நடக்கும் இந்திய மானிலங்களில் தமிழகம் முதலிடத்தில் (8,8%) உள்ளது *வரதட்சணை கொடுமையால் உயிரை மாய்த்துக் கொள்ளும் பெண்கள் எண்ணிக்கையில் தமிழகம் 4வது இடம் (ஆண்டிற்கு சுமார் 200 பேர்)

தமிழ் நாடு: சில தகவல்கள்

*திருச்சபைகள் (Main Line Churches) தவிர ஒரு லட்சத்திற்கும் அதிகமான சுயாதின திருச்சபைகள் இருக்கிறது *சென்னையில் மட்டுமே சுமார் 5,200 திருச்சபைகளும் , 6,500 முழு நேர ஊழியர்களும் இருக்கிறார்கள் *தமிழகத்தில் இந்து அறநிலையத் துறையின்கீழ் மாத்திரம் 36,352 கோவில்கள் உள்ளன *பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதில் தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளது (ஆண்டிற்கு சுமார் 7,875 பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்) * விதவைகள் எண்ணிக்கையில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது

சங்கீதம் 44 :17-23

நீ கர்த்தரை மறக்கவும் இல்லை, அவருடைய உடன்படிக்கைக்குத் துரோகம்பண்ணவும் இல்லை. கர்த்தர் உன்னை வலுசர்ப்பங்களுள்ள இடத்திலே நொறுக்கி, மரண இருளினாலே உன்ளை மூடியிருந்தும். உன் இருதயம் பின்வாங்கவும் இல்லை, உன் காலடி அவருடைய பாதையை விட்டு விலகவும் இல்லை. நீ தேவனுடைய நாமத்தை மறந்து, அந்நியதேவனை நோக்கிக் கையெடுத்திருந்தாயானால், தேவன் அதை ஆராய்ந்து, விசாரித்திருப்பார் இருதயத்தின் அந்தரங்கங்களை அவர் அறிந்திருக்கிறார் அவரது நிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறாய், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறாய் ஆண்டவர் விழித்துக்கொள்ளுவார் நித்திரைபண்ணமாட்டார் எழுந்தருளுவார் உன்னை என்றைக்கும் தள்ளிவிடமாட்டார் சங்கீதம் 44 :17-23

இஞ்சியின் மகிமை

இஞ்சியை கற்கண்டுடன் சேர்த்துச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுப்படும். இஞ்சி சாற்றையும் வெங்காயச் சாற்றையும் சமமாகக் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும். அஜீரணத்துககு  இஞ்சி சாற்றை தொப்புளைச் சுற்றித் தடவலாம். - உணவே மருந்து   

Friday, 15 April 2016

சங்கீதம் 44 :11-16

கர்த்தர் உங்களை ஆடுகளைப்போல இரையாக ஒப்புக்கொடுத்து, ஜாதிகளுக்குள்ளே உங்களைச் சிதறடிக்கமாட்டார் அவருடைய ஜனங்களை இலவசமாக விற்கமாட்டார் உங்கள் கிரயத்தினால் கர்த்தருக்கு லாபமில்லையே. உங்கள் அயலாருக்கு உங்களை நிந்தையாகவும், உங்கள் சுற்றுப்புறத்தாருக்குப் பரியாசமும் சக்கந்தமுமாகவும் வைக்க மாட்டார் நீங்கள் ஜாதிகளுக்குள்ளே பழமொழியாயிருக்கவும், ஜனங்கள் உங்களைக்குறித்துத் தலைதுலுக்கவும் செய்ய விடமாட்டார் நிந்தித்துத் தூஷிக்கிறவனுடைய சத்தத்தினிமித்தமும், சத்துருவினிமித்தமும், பழிவாங்குகிறவனிமித்தமும், உன் இலச்சை நித்தம் உனக்கு முன்பாக இருக்காது, உன் முகத்தின் வெட்கம் உன்னை மூடாது. சங்கீதம் 44 :11-16

ஓமத்தின் விசேஷம்

நம் தினசரி உணவில் ஓமத்தைச் சேர்த்துக் கொள்வது வழக்கம். காரக் குழம்பா? ஓமம் வறுத்துப்போடுவோம். மோர்க் குழம்பா? தேங்காயுடன் ஓமத்தை அரைத்துக் போடுவோம். ஓமத்தில் சூப் வைத்துக் குடித்தால் உடல் சோர்வு, நீங்கி சுறுசுறுப்பாகி விடுவோம். ஓம ரசம் செய்து, சூடான சாதத்தில் ஊற்றி, ஒரு சொட்டு நெய், ஊற்றி, உப்பில் ஊற வைத்த நார்த்தங்காயைத் தொட்டுக் கொண்டு சாப்பிடுவது ஆண்டாண்டு காலமாய் பின்பற்றப்பட்டு வரும் பழக்கம். காய்ச்ச்ல் கண்டவர்களுக்கு இது தான் சாப்பாடு. ஓமத்தின் விசேஷம் சிறிது புரோட்டீன், தாது, உப்புக்களான கால்சியம், அயோடின், பாஸ்பரஸ், அயர்ன், பொட்டாசியம், வைட்டமின்களான தையாமின், ரிபோபிளாவின், நிக்கோடினிக் அமிலம் மற்றும் கரோட்டின் ஆகியவை உள்ளன. வயிற்றுக் கோளாறுக்கு ஓமம் தான் சிறந்த மருந்து. தினமும் ஓமத் தண்ணீர் குடித்தால் ஆஸ்துமா நோய் வரவே வராது. ஓமத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்? அரை டீஸ்பூன் ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக்குடித்தால் ஆஸ்துமா அண்டாது. வயிற்றில் செரிமானம் சீராகும். வயிற்று வலி ஏற்பட்டால், ஐந்து கிராம் ஓமத்துடன் சிறிது உப்பு, பெருங்காயம் சேர்த்துப் பொடித்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சிறிது நேரத்தில் வயிறு லேசாகி விடும். நாட்டு மருந்து கடைகளில் ஓம எண்ணெய் கிடைக்கும். மூட்டு வலிக்கு இதைத் தடவினால் நாளடைவில் மூட்டி வலிக்கு குணமாகும். மார்ச்சளி இருந்தால், ஓம எண்ணெயை மார்பின் மீது தடவுவதை கிராமங்களில் இன்றும் காணலாம் பல்வலி இருந்தால், இந்த எண்ணெயைப் பஞ்சில்தோய்த்து பல் மீது வைத்து அழுத்திக் கொண்டால் பல் வலி மறையும். வயிறு "கடமுடா" வென சத்தம் போட்டால், ஓம எண்ணெயை வயிற்றின் மீது தடவலாம். ஓமப் பொடி சிறிது, உப்பு சிறிது ஆகியவற்றை மோரில் கலந்து குடித்தால், நெஞ்சில் பிடித்துள்ள சளி வெளியேறும். சுறுசுறுப்பின்றி சோம்பலாய் உட்கார்ந்திருப்பவர்கள் சிறிது ஓமத் தண்ணீர் குடித்தால், சோர்வு பயந்து ஓடி விடும்!. - உணவே மருந்து

சங்கீதம் 44 :6-10

உன் வில்லை நீ நம்பாதே உன் பட்டயம் உன்னை இரட்சிப்பதில்லை. கர்த்தரே உன் சத்துருக்களினின்று உன்னை இரட்சித்து, உன் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துவார் நீ தேவனுக்குள் நித்தம் மேன்மை பாராட்டு அவரது நாமத்தை என்றென்றைக்கும் துதி கர்த்தர் உன்னைத் தள்ளிவிட்டு, நாணப் பண்ணமாட்டார் உன் சேனைகளுடனே செல்லுவார் சத்துருவுக்கு நீ் இடைந்து பின்னிட்டுத் திரும்பிப்போகப் பண்ணமாட்டார் உன் பகைஞர் தங்களுக்கென்று உன்னை கொள்ளையிட மாட்டார்கள். சங்கீதம் 44 :6-10

மஞ்சள்

1. மஞ்சளை உணவில் சேர்ப்பதால் பசியை உண்டாக்கும். 2. மஞ்சளை உணவில் சேர்ப்பது வெறும் நிறத்திற்காக மட்டுமல்ல. மணத்திற்காகவும் உணவிலுள்ள தேவையற்ற கிருமிகளையும் நீக்கும் என்பதால் தான். 3. மஞ்சளை சுட்டு முகர மூக்கில் நீர் வடியும் ஜலதோஷம் நிற்கும். 4. அடிப்பட்டதினால் ஏற்பட்ட இரத்தக் கட்டு உள்காயங்களை நீக்க மஞ்சளை பற்று போடுவார்கள். 5. வெறும் மஞ்சள் பொடியை புண்கள் மீது தூவ புண்கள் ஆறும். 6. மஞ்சளுடன் வேப்பிலையை அரைத்துப் பூச அம்மையினால் ஏற்பட்ட கொப்புளங்கள் ஆறும். 7. மஞ்சள், வேப்பிலை உடன் சிறிது வசம்பும் சேர்த்து அரைத்து பூச, மேகப்படை, விஷக்கடிகள் வட்டமான படைகள் போகும். 8. மஞ்சளை இலுப்பை எண்ணெயில் குழைத்து, தடவ கால் வெடிப்பு குணமாகும். 9. கஸ்தூரி மஞ்சளுடன், வெண்கடுகு சாம்பிராணி சேர்த்தரைத்து சுளுக்குகளுக்கு பற்று போட்டால் குணமாகும். 10. மஞ்சள் சுட்ட சாம்பலுடன், ஊமத்தன் இலைச்சாறு குழைத்து பூச கட்டிகள் பழுத்து உடையும். 11. மஞ்சளும், கடுக்காயும் பூச சேற்றுபுண் போகும். 12. மஞ்சள் சுட்ட சாம்பலுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து பூச, ஆறாத புண்கள் ஆறும். 13. மஞ்சளுடன், சாம்பிராணி, ஏலம் சுக்கு சேர்த்தரைத்து தலையில் பற்றிட தலைவலி போகும். 14. மஞ்சளுடன் சுண்ணாம்பு மூலிகையும் சேர்த்து மிகவும் பிரபலமான புத்தூர் (ஆந்திரா) எலும்பு முறிவுக்கு கட்டப்படுகிறது. 15. மஞ்சள் தூளுடன், சிறிது கற்பூரத்தூளை சேர்த்து, கை கால்கள் சில்லிட்தற்கு பூச சூடேறும். 16. கஸ்தூரி மஞ்சள், சந்தனம், சங்கு சம அளவு அரைத்து பூச முகப்பருக்கள் மறையும். 17. பெண்கள் முக்கியமாக முகத்தில் மஞ்சளை பூசுவதற்குக் காரணம் முகத்தில் முடி வளருவதை தடுக்கிறது. 18. பெண்கள் மஞ்சளை பூசிக் குளிப்பதினால் அவர்கள் மேனி பொன்நிறம் பெறும். - உணவே மருந்து download from http://bit.ly/1OeJioY

Thursday, 14 April 2016

மாங்கொட்டை் பருப்புப் பொடி

மாங்கொட்டையின் பருப்பை உலர்த்தி, நன்றாகப் பொடி செய்து, தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சிகள் மலத்துடன் வெளி வந்து விடும். மூல நோயும் குணமாகும். மாத விடாய் அதிகமாக போவதும் நின்று விடும். கொசுக்களை விரட்ட மாம்பூக்களைப் பொடி செய்து, சாம்பிராணி போல புகைபோட்டால் கொசுக்கள் ஓடி விடும். - உணவே மருந்து

சங்கீதம்44:1-5

தேவன், உங்கள் பிதாக்களுடைய நாட்களாகிய பூர்வநாட்களில் நடப்பித்த கிரியைகளை அவர்கள் உங்களுக்கு அறிவித்தார்கள், அவைகளை உங்கள் காதுகளால் கேட்டீர்கள் தேவன் அவருடைய கையினாலே ஜாதிகளைத் துரத்தி, உங்களை நாட்டி, ஜனங்களைத் துன்பப்படுத்தி, உங்களைப் பரவப்பண்ணினார் ஜனங்கள தங்கள் பட்டயத்தால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை, அவர்கள் புயமும் அவர்களை இரட்சிக்கவில்லை, கர்த்தர உங்கள் மேல் பிரியமாயிருந்தபடியால், அவருடைய வலதுகரமும், அவருடைய புயமும், அவருடைய முகத்தின் பிரகாசமும் உங்களை இரட்சித்தது. தேவன் உங்கள் ராஜா, யாக்கோபுக்கு இரட்சிப்பைக் கட்டளையிடுவார் தேவனலே உங்கள் சத்துருக்களைக் கீழே விழத்தாக்கி, உங்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை அவருடைய நாமத்தினால் மிதிப்பீர்கள்
சங்கீதம் 44 :1-5

Wednesday, 13 April 2016

குழந்தை நலன்

காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் நல்ல அக்மார்க் தேனில் ஒரு சொட்டு நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால், தேன் தடவுவதால் நாக்கு புரண்டு சீக்கிரம் பேச்சு வரும். தினமும் இரவில் விள்கேற்றியவுடன் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி தடவுங்கள். பின் ஒரு வெற்றிலையில் எண்ணெய் தடவி அதை விளக்கில் காட்டி வாட்டி, பொறுக்கும் சூட்டில் அந்த இலையை குழந்தையின் தொப்புள் மேல் போட்டால் அசுத்த காற்றெல்லாம் வெளியேறி, வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்! நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் என்று கிடைக்கும். அதை வாங்கி சாதம் வேகும்போது, அதோடு போட்டு எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால் நாக்கில் உள்ள மாவு அகன்று குழந்தை ருசித்துப் பால் சாப்பிடும். சில குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பார்க்குத்துளி, அரை மிளகு, ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டுப் பிழிந்து வடிக்கட்டி ஊற்றினால் வாந்தி சட்டென்று நின்றுவிடும். குழந்தை அடிக்கடி வெளிக்குப் போனால், சுட்ட வசம்பை இரண்டு உரை உரைத்து ஊற்றினால் நின்று விடும். குழந்தை தினமும் இரண்டு, மூன்று முறை மலங்கழிக்க வேண்டும். இல்லாமல் கஷ்டப்பட்டால், முதலில் ஒரு பாலாடை வெந்நீர் புகட்டிப் பார்க்கவும். அப்படியும் போகவில்லை என்றால் ஐந்தாறு விதையில்லாத உலர்ந்த திராட்சைகளை வெந்நீரில் ஊறப்போட்டு கசக்கிப் புகட்டினால் ஒரு மணி நேரத்தில் போய்விடும். மலங்கட்டி அவஸ்தைப்பட்டால் விளக்கெண்ணையோ, வேறு மருந்துகளோ தர வேண்டாம். ஆசனவாயில் வெற்றிலைக் காம்போ சீவிய மெல்லிய சோப் துண்டோ வைத்தாலே போய்விடும். பிறந்த குழந்தைக்கு தலைக்கு ஊற்றியதும், கால் கஸ்தூரி மாத்திரையை தாய்ப்பாலில் கரைத்து ஊற்றினால் சளிப்பிடிக்காது. ஒவ்வொரு மாதமும் கால், கால் மாத்திரையாக அளவைக் கூட்டிக் கொள்ளலாம். ஒரு வயதுக்கு மேல் துளசி, கற்பூரவல்லி இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொடுத்தால் சளிப் பிடிக்காது, இருந்தாலும் அகன்று விடும். குழந்தைகளுக்கு பேதிக்குக் கொடுப்பது எண்ணெய் தேய்த்து ஊற்றுவது, காதில் மூக்கில் எண்ணெய் விடுவது இதை அறவே தவிர்த்து விடவும். குழந்தைக்கு சளி பிடித்து இருந்தால் தேங்காய் எண்ணெயை சுடவைத்து, பூங்கற்பூரம் போட்டு உருக்கி, ஆற வைத்துத் தடவினால் போதும், சளி இளகிக் கரைந்து விடும். தினமும் குடிக்க காலையும், மாலையும் இரண்டிரண்டு சங்கு வெந்நீர் கொடுங்கள். குழந்தையின் உடம்பு கலகலவென்று இருக்கும். குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து குளிப்பாட்டாத நாட்களில் வெந்நீரில் யுடிகோலோன் போட்டு குழந்தையைத் துடைத்து பவுடர் போட்டு சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும். - உணவே மருந்து

சங்கீதம்43:1-5

தேவன் உன் நியாயத்தை விசாரித்து, பக்தியில்லாத ஜாதியாரோடு உனக்காக வழக்காடி, சூதும் அநியாயமுமான மனுஷனுக்கு உன்னைத் தப்புவிப்பார் உன் அரணாகிய தேவன் உன்னைத் தள்ளிவிடமாட்டாா சத்துருவினால் ஒடுக்கப்பட்டு நீ உன் துக்கத்துடனே திரியவேண்டாம் கர்த்தர் அவரது வெளிச்சத்தையும் அவரது சத்தியத்தையும் அனுப்பியருளுவார் அவைகள் உன்னை நடத்தி, அவரது பரிசுத்த பர்வதத்திற்கும் அவரது வாசஸ்தலங்களுக்கும் உன்னைக் கொண்டுபோகும் அப்பொழுது நீ தேவனுடைய பீடத்தண்டைக்கும், உனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிற தேவனிடத்திற்கும் பிரவேசிப்பாய் தேவனை, உன் தேவனைச் சுரமண்டலத்தால் துதி உன் ஆத்துமா ஏன் கலங்குகிறது? ஏன் உனக்குள் தியங்குகிறது தேவனை நோக்கிக் காத்திரு, உன் முகத்திற்கு இரட்சிப்பு உண்டாக உன் தேவனாயிருக்கிறவரை நீ இன்னும் துதி சங்கீதம்43:1-5

Tuesday, 12 April 2016

சங்கீதம்42:6-11

உன் ஆத்துமா உனக்குள் கலங்குகிறது, ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து கர்த்தரை நினை அவரது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது, அவரது அலைகளும் திரைகளும் எல்லாம் உன்மேல் புரண்டுபோகிறது ஆகிலும் கர்த்தர் பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார், இராக்காலத்திலே அவரைப் பாடும் பாட்டு உன் வாயிலிருக்கிறது, உன் ஜீவனுடைய தேவனை நோக்கி விண்ணப்பஞ்செய்கிற நீ உன் கன்மலையாகிய தேவனை நோக்கி: ஏன் என்னை மறந்தீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும் என்று சொல்லு உன் தேவன் எங்கே என்று உன் சத்துருக்கள் நாள்தோறும் உன்னோடே சொல்லி, உன்னை நிந்திப்பது உன் எலும்புகளை உருவக்குத்துகிறதுபோல் இருக்கிறது. உன் ஆத்துமா ஏன் கலங்குகிறது ஏன் உனக்குள் தியங்குகிறது தேவனை நோக்கிக் காத்திருக்கட்டும், உன் முகத்திற்கு இரட்சிப்பும் உன் தேவனுமாயிருக்கிறவரை நீ் இன்னும் துதி சங்கீதம் 42 :6-11

சங்கீதம்42:1-5

மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, உன் ஆத்துமா தேவனை வாஞ்சி;த்துக் கதறுகிறது. உன் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது, நீ எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பாய் உன் தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் உன்னிடத்தில் சொல்லுகிறபடியால், இரவும் பகலும் உன் கண்ணீரே உனக்கு உணவாயிற்று. முன்னே நீ பண்டிகையை ஆசரிக்கிற ஜனங்களோடே கூட நடந்து, கூட்டத்தின் களிப்பும் துதியுமான சத்தத்தோடே தேவாலயத்திற்குப் போய்வருவாய், இவைகளை நீ நினைக்கும்போது உன் உள்ளம் உனக்குள்ளே உருகுகிறது. உன் ஆத்துமா ஏன் கலங்குகிறது? ஏன் எனக்குள் தியங்குகிறது? நீ தேவனை நோக்கிக் காத்திரு, அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நீ இன்னும் அவரைத் துதி சங்கீதம்41,1-5.

சங்கீதம்42:1-5

மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, உன் ஆத்துமா தேவனை வாஞ்சி;த்துக் கதறுகிறது. உன் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது, நீ எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பாய் உன் தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் உன்னிடத்தில் சொல்லுகிறபடியால், இரவும் பகலும் உன் கண்ணீரே உனக்கு உணவாயிற்று. முன்னே நீ பண்டிகையை ஆசரிக்கிற ஜனங்களோடே கூட நடந்து, கூட்டத்தின் களிப்பும் துதியுமான சத்தத்தோடே தேவாலயத்திற்குப் போய்வருவாய், இவைகளை நீ நினைக்கும்போது உன் உள்ளம் உனக்குள்ளே உருகுகிறது. உன் ஆத்துமா ஏன் கலங்குகிறது? ஏன் எனக்குள் தியங்குகிறது? நீ தேவனை நோக்கிக் காத்திரு, அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நீ இன்னும் அவரைத் துதி சங்கீதம்41,1-5.

Sunday, 10 April 2016

சங்கீதம41;7-13

உன்ன் பகைஞரெல்லாரும் உன்மேல் ஏகமாய் முணுமுணுத்து, உனக்கு விரோதமாயிருந்து, உனக்குப் பொல்லாங்கு நினைத்து
தீராவியாதி அவனைப் பிடித்துக் கொண்டது, படுக்கையில் கிடக்கிற அவன் இனி எழுந்திருப்பதில்லை என்கிறார்கள்.

உன் பிராணசிநேகிதனும், நீ நம்பினவனும், உன் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், உன்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்

கர்த்தர் உனக்கு இரங்கி, நீ அவர்களுக்குச் சரிக்கட்ட உன்னை எழுந்திருக்கப்பண்ணுவார்
உன் சத்துரு உன்மேல் ஜெயங்கொள்ளாததினால்,  கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறாரென்று அறிவாய்   உன் சத்துரு உன்மேல் ஜெயங்கொள்ளாததினால், நீர் என்மேல் பிரியமாயிருக்கிறீரென்று அறிவாய்  
கர்த்தர்  உன் உத்தமத்திலே உன்னைத்தாங்கி, என்றென்றைக்கும் அவருடைய சமுகத்தில் உன்னை நிலைநிறுத்துவார்.
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஆமென், ஆமென்.
சங்கீதம் 41 :13