Saturday, 17 December 2016

சமையல் குறிப்பு

வெள்ளை காராமணி சுண்டல் தேவையானவை: வெள்ளை காராமணி - ஒரு கப், வெல்லம் - அரை கப், நெய் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன். செய்முறை: வெள்ளை காராமணியை 6 மணி நேரம் ஊறவிட்டு, வேகவிட்டு எடுக்கவும். வெல்லத்தைக் கரைத்து, வடிகட்டி கெட்டிப்பாகு காய்ச்சவும். வாணலியில் நெய்யை சூடாக்கி, காராமணியை சேர்க்கவும். கூடவே, காய்ச்சிய வெல்லப்பாகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். இறக்குவதற்கு முன் தேங்காய் துருவல் தூவி இறக்கவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சுண்டல் இது.

No comments:

Post a Comment