Wednesday, 14 December 2016

சமையல் குறிப்பு

###### சமையல் குறிப்பு ஜவ்வரிசி போண்டா செய்முறை தேவையான பொருட்கள் ஜவ்வரிசி - 1 கப் அரிசி மாவு - 1/2 கப் புளிப்பான கெட்டித் தயிர் - 1கப் கடலைப்பருப்பு - 1 ஸ்பூன் பொடியாக நறுக்கிய  வெங்காயம் - 1/4 கப் வட்டமாக நறுக்கிய  பச்சை மிளகாய் - 2 ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு செய்முறை ஜவ்வரிசியைக் கழுவி தண்ணீரை முழவதுமாக வடித்துவிடவும்.புளிப்புத் தயிரை லேசாகக்கடைந்து உப்பு சேர்த்து ஜவ்வரிசியில் கலந்து மூடி வைக்கவும். 6 மணி நேரம் அப்படியே ஊற வைக்கவும். கடலைப்பருப்பை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து தண்ணீரை வடிக்கவும். ஜவ்வரிசியில் ஊற வைத்த கடலைப்பருப்பு, வெங்காயம், அரிசி மாவு சேர்த்து கலக்கவும். மோர் பற்றாவிடில் சிறிது நீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். உருண்டை பிடிக்குமளவிற்கு மாவு பக்குவம் இருக்க வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி ஜவ்வரிசிக் கலவையில் இருந்து உருண்டைகள் செய்து எண்ணெயில் போடவும். நன்றாகப் பொன்னிறமாக ஆனதும் திருப்பிப்போட்டு சிவந்ததும் எடுத்து சூடாகப் பரிமாறவும். @_@@@_@

No comments:

Post a Comment