Tuesday, 6 December 2016

நீதிமொழிகள் 11 :17-24

@@@@@@ தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மைசெய்துகொள்ளுகிறான்: கடூரனோ தன் உடலை அலைக்கழிக்கிறான். துன்மார்க்கன் விருதாவேலையைச் செய்கிறான்; நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான். நீதி ஜீவனுக்கு ஏதுவாகிறதுபோல் தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்துக்கு ஏதுவாகிறான். மாறுபாடுள்ள இருதயமுள்ளவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்: உத்தம மார்க்கத்தாரோ அவருக்குப் பிரியமானவர்கள். கையோடே கைகோர்த்தாலும், துஷ்டன் தண்டனைக்குத் தப்பான்; நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும். மதிகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ, பன்றியின் மூக்கிலுள்ள பொன்மூக்குத்திக்குச் சமானம். நீதிமான்களுடைய ஆசை நன்மையே: துன்மார்க்கருடைய நம்பிக்கையோ கோபாக்கினையாய் முடியும். வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு, அதிகமாய் பிசினித்தனம் பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு. நீதிமொழிகள் 11 :17-24 @@@@@

No comments:

Post a Comment