Tuesday, 6 December 2016

நீதிமொழிகள் 6 :24-35

தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக் கூடுமோ? தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக் கூடுமோ? பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பபனும், அப்படியே அவளைத்தொடுகிற எவனும் ஆக்கினைக்குத் தப்பான். திருடன் தன் பசியை ஆற்றத் திருடினால் ஜனங்கள் அவனை இகழமாட்டார்கள். அவன் கண்டுபிடிக்கப்பட்டால் ஏழு மடங்கு கொடுத்துத் தீரவேண்டும்: தன் வீட்டிலுள்ள பொருட்களையெல்லாம் கொடுக்கவேண்டியதாகும். ஸ்திரீயுடனே விபசாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன்: அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப் போடுகிறான். வாதையையும் இலச்சையையும் அடைவான்: அவன் நிந்தை ஒளியாது ஸ்திரீயைப் பற்றிய எரிச்சல் புருஷனுக்கு மூர்க்கத்தை உண்டுபண்ணும்: அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடான். அவன் எந்த ஈட்டையும் பாரான்: அநேகம் வெகுமதிகளைக் கொடுத்தாலும் அமர்ந்திருக்கமாட்டான நீதிமொழிகள் 6 :24-35

No comments:

Post a Comment