Sunday, 11 December 2016

நீதிமொழிகள் 13 :1-8

ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்: பரிகாசக்காரனோ கடிந்துகொள்ளுதலுக்குச் செவிகொடான். மனுஷன் தன் வாயின் பலனால் நன்மையைப் புசிப்பான்: துரோகிகளின் ஆத்துமாவோ கொடுமையைப் புசிக்கும். தன் வாயைக் காக்கிறவன் தன் பிராணனைக் காக்கிறான்: தன் உதடுகளை விரிவாய்த் திறக்கிறவனோ கலக்கமடைவான். சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது: ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்மாவோ புஷ்டியாகும் நீதிமான் பொய்ப்பேச்சை வெறுக்கிறான்: துன்மார்க்கனோ வெட்கமும் இலட்சையும் உண்டாக்குகிறான். நீதி உத்தமமார்க்கத்தானைத் தற்காக்கும்: துன்மார்க்கமோ பாவியைக் கவிழ்த்துப்போடும். ஒன்றுமில்லாதிருக்கத் தன்னைச் செல்வனாகப் பாராட்டுகிறவனும் உண்டு; மிகுந்த செல்வமிருக்கத் தன்னைத் தரித்திரனாகப் பாராட்டுகிறவனும் உண்டு. மனுஷருடைய ஐசுவரியம் அவன் பிராணனை மீட்கும்: தரித்திரனோ மிரட்டுதலைக் கேளாதிருக்கிறான். நீதிமொழிகள் 13 :1-8

No comments:

Post a Comment