Thursday, 22 December 2016

நீதிமொழிகள 15:15-22

@@@@@# சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்: மனரம்மியமோ நித்திய விருந்து. சஞ்சலத்தோடு கூடிய அதிகப் பொருளிலும், கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப் பொருளே உத்தமம் . பகையோடிருக்கும் கொழுத்த எருதின் கறியைப்பார்க்கிலும், சிநேகிதத்தோடிருக்கும் இலைக்கறியே நல்லது. கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்: நீடிய சாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான். சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமானம்: நீதிமானுடைய வழியோ ராஜபாதை. ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம்பண்ணுகிறான். மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோ:ம்: புத்திமானோ தன் நடக்கையைச் செம்மைப்படுத்துகிறான். ஆலோசனையின்மையால் எண்ணங்கள் சிந்தியாமற்போம்: ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும். நீதிமொழிகள் 15 :15-22

No comments:

Post a Comment