Saturday, 10 December 2016

நீதிமொழிகள் 12 :22-28

பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்: உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம். விவேகமுள்ள மனுஷன் அறிவை அடக்கிவைக்கிறான்: மூடருடைய இருதயமோ மதியீனத்தைப் பிரசித்தப்படுத்தும். ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகைசெய்யும்: சோம்பேறியோ பகுதிகட்டுவான். மனுஷருடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஓடுக்கும்: நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும். நீதிமான் தன் அயலானைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவன்: துன்மார்க்கருடைய வழியோ அவர்களை மோசப்படுத்தும். சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை; ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது. நீதியின் பாதையில் ஜீவன் உண்டு, அந்தப் பாதையில் மரணம் இல்லை. நீதிமொழிகள் 12 :22-28

No comments:

Post a Comment