Tuesday, 6 December 2016

நீதிமொழிகள் 11 :1-8

கள்ளத்தராசு கர்த்தருக்கு அருவருப்பானது: சுமுத்திரையான நிறைகல்லோ அவருக்குப் பிரியம். அகந்தை வந்தால் இலச்சையும் வரும்: தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு. செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்: துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப பாழாக்கும். கோபாக்கினை நாளில் ஐசுவரியம் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும். உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்: துன்மார்க்கனோ தன் துன்மார்க்கத்தினால் விழுவான். செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்; துரோகிகளோ தங்கள் தீவினையிலே பிடிபடுவார்கள். துன்மார்க்கன் மரிக்கும்பேது அவன் நம்பிக்கை அழியும், அக்கிரமக்காரரின் அபேட்சை கெட்டுப்போம். நீதிமான் இக்கட்டினின்று விடுவிக்கப்படுவான்: அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான். நீதிமொழிகள் 11 :1-8

No comments:

Post a Comment