Sunday, 25 December 2016

சமையல் குறிப்பு - samayal kuripu

@@@@@ சமையல் குறிப்பு வாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள் மற்றும் கொத்துமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம். &&&&&

இலவங்கப்பட்டை

உலகின் மிக முக்கிய @@@@@@ இலவங்கப்பட்டை நறுமணப்பொருளான இலவங்கப்பட்டை மூவாயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் மருந்து தாவரம் ஆகும். யூதர்களின் நூலான டோராவில் இது பற்றி குறிப்பு உள்ளது. எகிப்து மற்றும் இந்தியாவில் கி.மு. 500 ஆண்டுகளுக்கு முன்பே லவங்கப்பட்டை பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் காணப்படுகின்றன. ஐரோப்பா மற்றும் எகிப்தில் கி.மு. 500 - ம் ஆண்டு முதல் மருந்தாக உபயோகிப்பட்டு வருகின்றன. இவற்றின் பட்டை மற்றும் இலைகள் நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் இத்தாவரத்தில் சின்ன மால்டிஹைடு, யூஜினால், டேனின்கள், கௌமாரின்கள் மற்றும் தாவரப்பசைப் பொருட்கள் காணப்படுகின்றன. லவங்கப்பட்டையில் நார்ச்சத்தும் மெக்னீசியம், இரும்பு, மற்றும் கால்சியம் சத்தும் காணப்படுகிறது. கிருமிகளுக்கு எதிரானது பண்டைய இந்தியா மற்றும் ஐரோப்பாவில் குளிராக இருக்கும் நிலைகளில், வெப்பம் தரும் மருந்தாகப் பயன்பட்டது. ஜலதோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இஞ்சியுடன் சேர்ந்து மருந்துப் பொருளாக கொடுக்கப்பட்டது. இத்தாவரத்தில் உள்ள எளிதில் ஆவியாகும் எண்ணெய் உடலுக்கு வெப்ப உணர்வை தரும். ஜீரணத்தினை ஊக்குவிக்கும். வலி குறைக்கும். வைரஸ்களுக்கு எதிராகச் செயல்படும் மற்றும் நோய் விளைவிக்கும் கிருமிகளுக்கு எதிரானது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் இது இரத்த ஓட்டத்தை தூண்ட வல்லது. குறிப்பாக கை விரல்களுக்கும். கால் கட்டை விரல்களுக்கும், இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும். ஜீரணக்கோளாறுகள் மற்றும் மயக்கம், வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கினை போக்க உதவும். அசைவ சமையலில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சளி போன்ற வைரஸ் நோய்களுக்கு எதிராகவும் செயல்படும். தசைவலிகளை போக்க வல்லது. உடலின் வலு இன்மையினையும், நோயில் இருந்து குணப்பட்டு வரும் நிலையினையும் தெளிவாக்க உதவுகிறது. சர்க்கரை நோயை குணப்படுத்தும் தினமும் அரை டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடி உட்கொண்டால் கெட்ட கொழுப்புகள் கரைவதாக மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவினை கட்டுப்படுத்துகிறது. டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த மருந்து. லுக்கேமியா மற்றும் லிம்ப்போமா புற்றுநோய் செல்களை இது கட்டுப்படுத்துவதாக அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. பூஞ்சைக் காளான் பாதிப்பினால் ஏற்படும் நோய்களுக்கு இது அருமருந்தாக விளங்குகிறது. மூட்டுவலிக்கு மருந்து தினமும் காலை உணவுக்கு முன்னதாக அரை டீஸ்பூன் லவங்கப்பொடியுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து உட்கொண்டால் ஒரு வாரத்தில் மூட்டுவலி பிரச்சினை தீரும். ஒரு மாதத்தில் வலி முற்றிலும் தீர்ந்து சகஜமாக நடமாடலாம். இது கருப்பையினை தூண்டி மாதவிடாய் குருதிப் போக்கினை ஊக்குவிக்கும். இந்தியாவில் குழந்தை பிறந்த பிறகு, கருத்தடையாக உட்கொள்ளப்படுகிறது. பட்டையின் வடிநீர், சாறு மற்றும் பொடி சாராயக்கரைசல் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

பழக்கத்திற்கு அடிமையானவர்கள

&&&&&& பழக்கத்திற்கு அடிமையானவர்கள ஒரு பானத்தையோ அல்லது விருப்பமான உணவையோ சாப்பிட்டு விட்டால் உடம்பிலும், மனத்திலும் உற்சாகம் கொப்பளித்துவிடும். குறிப்பாக ஏதாவது ஒரு குறிப்பிட்ட பழக்கத்திற்கு அடிமையானவர்கள், அதை செய்யாவிட்டால் எதையோ இழந்தது போல் பரிதவிப்பார்கள். அதே நேரத்தில் அந்த பழக்கத்தை செய்தவுடன் உற்சாகம் கொப்பளிக்க தமது பணியில் விரைவாக செயல்படுவார்கள். இப்படி சாப்பிடும் உணவுகள் உண்மையில் உற்சாகத்தை கொடுக்கின்றனவா? ஆம்... என்று கூறுகின்றனர் உணவு ஆராய்ச்சியாளர்கள். தினமும் காலையில் எழுந்தவுடன் அனைவருமே சுறுசுறுப்பாக இருப்பதில்லை. தூக்கத்தின் காரணமாக கொஞ்சம் மந்தமாக இருப்போம். ஒரு கப் காபியோ அல்லது டீயோ சாப்பிட்டவுடன் உற்சாகம் ஊற்றெடுக்கிறது. அதேபோல், மதியம் கொழுப்பு நிறைந்த பிரியாணி அல்லது தயிரோ அல்லது தயிர் சாதமோ சாப்பிட்டால் மூளை மந்தமாக இருக்கும். ஒரு கப் காபி சாப்பிட்டால் இரண்டு நிமிடங்களுக்கு சுறுசுறுப்பாக இருக்கும். நாம் உண்ணும் உணவு நம் மனநிலையில் இம்மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. உணவு ஜீரணமாகும்போது பல ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது மூளையை தாக்கி மனநிலையை மாற்றுகிறது. இந்த ரசாயனப் பொருட்களுக்கு 'நியூரோ டிரான்ஸ்மீட்டர்ஸ்' என்று பெயர். நம் உணவில் இருந்து தயாரிக்கப்படும் முக்கியமான மூன்று ரசாயனப் பொருட்கள் செரோட்டோனின், டோபோமின், நார் எபினெபெரின் ஆகியவை. உறுதியான உடலும், சுறுசுறுப்பான மனமும் இருக்க உணவு அவசியமாகிறது. ஆனால் அந்த உணவில் மாவுப் பொருள், புரதம், கொழுப்பு ஊட்டச் சத்துகள், தாதுப் பொருள்கள் அளவான நிலையில் சமச்சீர் உணவாக இருக்க வேண்டும். தக்காளி, சுரைக்காய், அன்னாசிப்பழம், சீதாப்பழம், முந்திரிப் பருப்பு, எறா, முட்டை போன்ற உணவுகள் பலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துகின்றன. இதனால் மூக்கில் நீர் வடிதல், கண்ணில் நீர் வடிதல், உதடுகள் எரிச்சல், மூச்சு தடைப்படுதல், வயிற்றுப் போக்கு, வாந்தி முதலிய தொந்தரவுகள் ஏற்படும். இந்தப் பாதிப்பால் மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டு சோர்வடைவார்கள். ஒவ்வாமையில் சிலருக்கு தோலில் நமைச்சல் ஏற்படும். வேலைப்பளு அதிகரிக்கும்போது ஒரு கப் சூடான காபி அல்லது டீ சாப்பிட்டால் உடலுக்கும், மனதுக்கும் இதமாக இருக்கும். குறிப்பாக காபியில் உள்ள காபின் மற்றும் சூடான நிலை புத்துணர்ச்சியை உண்டாக்கும். சூடான காபியில் ஒரு மதுரமான வாசனை உண்டு. அதே காபி சூடு குறைந்தால் ருசி இருக்காது. இந்த மதுரமான வாசனையை மூக்கு அனுபவித்து மூளைக்குத் தெரிவிக்கிறது. இந்த மூளையின் தாக்கம் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கிறது. ஆனால் அதிகமாக குடித்தால் மனச் சோர்வு ஏற்படும். சமச்சீர் உணவு மகிழ்ச்சியை கொடுக்கக் கூடிய நரம்புப் பாதைகளை ஊக்குவித்து உடலுக்கும், மனதிற்கும் இன்பமளிக்கிறது. பட்டாணி, அவரையில் கிடைக்கும் வைட்டமின் 'பி' குறைந்தால் மனச் சோர்வு, நரம்புத் தளர்ச்சி ஏற்படும். கீரை வகைகளில் கிடைக்கும் இரும்புச்சத்து குறைந்தால் ஞாபக மறதி, உடல் சோர்வு, மனச்சோர்வு உண்டாகும். சோயாபீன்ஸ் போன்ற பொருட்களில் கிடைக்கும் தையாமின் மன அமைதி, நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும். குறைந்தால் மனத் தளர்ச்சி ஏற்படும். அரிசி, கோதுமை மற்றும் இனிப்புகளில் உள்ள மாவுப் பொருள் சக்தியைக் கொடுத்து மன அமைதியை ஏற்படுத்துகிறது. ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக மனமும் இதில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. இதை அனைத்து வகை மருத்துவ முறைகளும் உறுதிப்படுத்துகின்றன என்கிறார்கள்

மனித உடலின் அடிப்படைத் தேவைகள்.

@@@@@ மனித உடலின் அடிப்படைத் தேவைகள். மனித உடல் சீராக செயல்படுவதற்கு பலவகையான பொருட்கள் அதற்குத் தொடர்ந்து தேவைப்படுகின்றன. தொடர்ந்து மூச்சுவிடுவதன் மூலமும், சாப்பிடுவதன் மூலமும் அந்தப் பொருட்களை நம்முடைய உடலுக்கு நாம் வழங்கி வருகிறோம். வளர்ச்சி, பழுதுபார்ப்பு மற்றும் ஆரோக்கியம் பேணுதல், அவற்றுக்குத் தேவையான ஆற்றல் - இவைதான் மனித உடலின் அடிப்படைத் தேவைகள். மனித உடல் பலவகையான திசுக்களால் ஆனது என்றாலும் அவற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது செல்கள்தான். இந்த செல்களில் நிகழும் பல்லாயிரக்கணக்கான வேதிவினைகள்தான் மனித உடலின் வளர்ச்சிக்கும், பழுதுபார்ப்பு மற்றும் ஆரோக்கியம் பேணுவதற்கும், அவற்றுக்குத் தேவையான ஆற்றலைப் பெறுவதற்கும் காரணமாக இருக்கின்றன. உடலின் வளர்ச்சி, பழுதுபார்ப்பு மற்றும் ஆரோக்கியம் பேணுவதற்கு புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் போன்ற பலவகையான பொருட்கள் தேவைப்படுகின்றன. உண்ணும் உணவிலிருந்து உடல் இவற்றைப் பெறுகின்றது. உடலின் மற்ற செயல்கள் நிகழ்வதற்கு தேவைப்படும் ஆற்றலைப் பெற தரசமும், ஆக்சிஜனும் உடலுக்கு தேவைப்படுகின்றன. உண்ணும் உணவிலிருந்து தரசத்தை (மாவுப் பொருள்) உடல் எடுத்துக்கொள்கிறது. மூச்சுக் காற்றிலிருந்து தேவையான ஆக்சிஜன் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதுதான் மனித உடலின் அடிப்படையான இயங்குமுறை. இது பற்றி இப்போது மிகவும் விரிவாகவும், நுட்பமாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வரையில்கூட மனித உடலின் உணவுத் தேவை பற்றி எதுவும் கண்டறியப்பட்டிருக்கவில்லை. சில குறிப்பிட்ட உணவுப் பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதை மட்டுமே மனிதர்கள் அறிந்திருந்தனர். அந்த உணவுப் பொருட்களில் என்னென்ன உணவுச் சத்துகள் இருக்கின்றன என்பது பற்றி எதுவும் தெரியாது. பின்னர், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பொருட்களை வேதியல் முறையில் பகுத்தாய்வதில் வளர்ச்சி ஏற்படத் தொடங்கியது. இதனால், இயற்கையாக கிடைக்கக் கூடிய பொருட்களை அவற்றின் சுத்தமான வடிவத்தில் பிரித்தெடுப்பதும், அவற்றின் வேதியல் அமைப்பை கண்டறிவதும், அவற்றை செயற்கையான முறையில் உற்பத்தி செய்வதும் சாத்தியமானது. அந்த வளர்ச்சியின் விளைவாக, ஆராய்ச்சியாளர்களால் உணவிலுள்ள சத்துப் பொருட்களை அவற்றினுடைய சுத்தமான வடிவத்தில் பிரித்தெடுக்க முடிந்தது. அதனால், இதுபோல சுத்தமான வடிவத்தில் பிரித்தெடுக்கப்பட்ட உணவுச் சத்துகள் உடலில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை மிகவும் துல்லியமாக பரிசோதித்தறிவதும் சாத்தியமானது. இதுபோன்ற முறையில், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தரசம் (மாவுப் பொருள்), புரதம், கொழுப்பு, தாதுப் பொருட்கள் ஆகிய உணவுச் சத்துகள் உடலின் ஆரோக்கியத்திற்கு தேவைப்படுகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் மிகவும் திட்டவட்டமாக கண்டறிந்தனர். இந்த உணவுச் சத்துகள் அவற்றின் சுத்தமான வடிவத்தில் பிரித்தெடுக்கப்பட்டு அவற்றின் வேதியல் அமைப்புகளும் கண்டறியப்பட்டன. அதேபோல, அவற்றை செயற்கையாக தயாரிக்கும் முறைகளும் கண்டறியப்பட்டன. இந்த நிலையில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சில ஆராய்ச்சியாளர்கள் சோதனை பிராணிகளுக்கு இந்த உணவுச் சத்துகளை அவற்றின் சுத்தமான வடிவத்தில் கொடுத்து அவை உடலில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆராய்ந்து வந்தனர். ஆனால், இந்த உணவுச் சத்துகளை மட்டும் அவற்றின் சுத்தமான வடிவத்தில் தேவையான அளவுகளில் சோதனை பிராணிகளுக்கு கொடுத்து பரிசோதித்தபோது அவை விரைவிலேயே உடல் நலம் குன்றி உயிரிழப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர். எனவே, இந்த உணவுச் சத்துகளைத் தவிர வேறு ஏதோ சில உணவுச் சத்துகளும் மிகவும் குறைந்த அளவில் உயிர் வாழ்க்கைக்கு கட்டாயமாக தேவைப்படுகின்றன என்று அவர்கள் முடிவு செய்தனர். அது போன்ற அடையாளம் கண்டறியப்படாத உணவுச் சத்துகளுக்கு துணை உணவு காரணிகள் (Accessory Food Factors) என்று பெயர் சூட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த துணை உணவு காரணிகளைக் கண்டறியும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் மிகத் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினர். இந்த நிலையில், சில ஆராய்ச்சியாளர்கள் துணை உணவு காரணிகள் சிலவற்றைக் கண்டறிந்தனர். உயிர் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான ஒரு அமைனை (Amine - அமைன் என்பது வேதிப் பொருட்களில் ஒரு வகை) கண்டுபிடித்து விட்டதாக அவர்கள் நம்பினர். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அந்தப் பொருளுக்கு விட்டமைன் (Vital + Amine = Vitamine) என்று பெயர் சூட்டினர். அதைத் தொடர்ந்து மற்ற விட்டமைன்களைக் கண்டறியும் ஆராய்ச்சி முழு வேகமடைந்தது. நூற்றுக்கணக்கானவர்கள் அந்த ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கினர். அதன் விளைவாக பல துணை உணவுக் காரணிகள் கண்டறியப்பட்டன. பின்னர் அவற்றின் பெயர் வைட்டமின் என மாற்றப்பட்டது. வைட்டமின் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாக தேவைப்படும் ஒரு சத்துப்பொருள். பெரும்பாலான வைட்டமின்கள் வளர்சிதை மாற்றச் செயல்களில் முக்கியப் பங்கு எடுத்துக்கொள்கின்றன. எனவே, வைட்டமின்கள் பற்றாக் குறையாகும்போது சில முக்கியமான வளர்சிதை மாற்றச் செயல்கள் நிகழாமல் போகின்றன. இதனால், உடல் பலவிதமாக பாதிக்கப்படுகிறது. வைட்டமின்கள் அவை செயல்படும் விதத்தில் ஹார்மோன்களையும், என்சைம்களையும் ஓரளவு ஒத்திருக்கின்றன. ஆனால், அவை கிடைக்கும் விதத்தில் வித்தியாசம் இருக்கிறது. அதாவது, ஹார்மோன்களையும், என்சைம்களையும் நாம் உட்கொள்ளும் உணவிலுள்ள வேறு பொருட்களைப் பயன்படுத்தி உடலே தயாரித்துக்கொள்கிறது. ஆனால், வைட்டமின்களை அது போல நமது உடலால் தயாரிக்க இயலாது. வைட்டமின்களைத் தயாரிக்கும் திறனை நமது உடல் இழந்து விட்டது. (வேறு உயிரினங்களுக்கு அந்த திறன் இருக்கிறது.) எனவே, வைட்டமின்கள் அதே வடிவில் நமது உடலுக்குத் தேவைப்படுகின்றன. அதாவது வைட்டமின்களைத் தயார் நிலையில் நாம் நமது உடலுக்கு வழங்க வேண்டியதிருக்கிறது. இதுபோல தயார் நிலையில் நமது உடலுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துகள் வைட்டமின்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த காரணத்தினால் நமக்கு வைட்டமினாக இருக்கும் ஒரு பொருள் வேறு உயிரினங்களுக்கு வைட்டமினாக இருப்பதில்லை. அதாவது வேறு உயிரினங்களுக்கு அந்தப் பொருள் தயார் நிலையில் தேவைப்படுவதில்லை. உணவில் உள்ள வேறு பொருட்களிலிருந்து அந்த உயிரினங்களின் உடலே அதை தயாரித்துக்கொள்ளும். எனவே, வைட்டமின்கள் எனறால் தயார் நிலையில் நமது உடலுக்கு தேவைப்படும் உணவுச் சத்துகள் என்று கூறலாம். வைட்டமின்கள் பொதுவாக மிகக் குறைந்த அளவில்தான் நமது உடலுக்குத் தேவைப்படுகின்றன. அந்த மிகக் குறைந்த அளவும் கிடைக்காதபோதுதான் அவற்றின் பற்றாக்குறையால் மனித உடல் பலவிதமாக பாதிக்கப்படுகிறது. - உணவே மருந்து download from http://bit.ly/1OeJioY

நீரிழிவு நோயால் பாதிப்பட்டிருப்பவர்களுக்கு

@@@@@ நீரிழிவு நோயால் பாதிப்பட்டிருப்பவர்களுக்கு நீரிழிவு நோயால் பாதிப்பட்டிருப்பவர்களுக்கு காது செவிடாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே நீரிழிவு நோயாளிகள் கண், கால் போன்றவைகளை மட்டுமல்லாது இனி காதையும் அடிக்கடி கவனிக்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். இன்று உலக அளவில் அச்சுறுத்தும் நோயாக நீரிழிவு நோய் உள்ளது. உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவருக்கு நீரிழிவு இருப்பது தெரியவந்துள்ளது. நீரிழிவு நோயினால் பல்வேறு நோய்கள் உருவாகின்றன. கண்பார்வை குறைபாடு, நரம்பு மண்டல பாதிப்பு, பாத எரிச்சல், உள்ளிட்ட பல்வேறு நோய்கள் நீரிழிவின் பாதிப்பினாலேயே ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது நீரிழிவுநோயாளிகளுக்கு காது கேட்கும் திறன் குறையும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் காதின் உள் செல்லும் நரம்புகள் பாதிக்கப்படுவதுதான் என்கின்றனர் நிபுணர்கள். இது குறித்து பல ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. இவற்றை மேற்கோள் காட்டியுள்ள மருத்துவர்கள் நீரிழிவு நோயால் காதுகள் கேட்கும் சக்தியை இழக்கும் என்று கூறுகின்றனர். மேலும் நீரிரிவு நோய் உள்ளவர்களுக்கு காது செவிடாகும் வாய்ப்பு அந்த நோய் இல்லாதவர்களுக்கு ஏற்படுவதைக் காட்டிலும் இரு மடங்கு அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள். இன்றைக்கு காதுநோய் சிறப்பு மருத்துவரை சந்திப்பது பெரும்பாலும் இளம் வயதினர்தான். அவர்களுக்கு ஒரு காது மந்தத்தன்மை அதிகம் ஏற்படுகிறது. இதற்கு காரணம் நீரிழிவு நோய்தான் என்கின்றனர் நிபுணர்கள். மேலும் காதுகளில் அழுக்கு சேருவது என்பது நீரிழிவு நோயின் ஒரு அறிகுறியாகும். ஏனெனில் காதுகளில் அழுக்கைப் போக்கும் கெராடின் என்ற ஒன்று நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு குறைவாக இருக்கும் அல்லது இல்லாமலே கூட போய்விடும். கெராடின் குறைபாட்டினால் காதுகளில் அழுக்கு விரைவில் சேர்ந்து காது செவிடாகும் வாய்ப்பு ஏற்படுகிறது.எனவே நீரிழிவு நோயாளிகள் தங்கள் காதுகளின் உள்ளுக்குள் சப்தங்கள் ஏற்பட்டாலோ அல்லது ரீங்காரம் போன்று சப்தம் வந்தாலோ உடனே காது சிறப்பு மருத்துவரைப் பார்ப்பது நல்லது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் இனி கண், இருதயம், கால்கள், பாதங்களுடன் காதுகளையும் அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்வது நல்லது என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.

சமையல் கறிப்பு

@@@@@ சமையல் குறிப்பு கத்தியின் கூரிய பகுதியை உப்பில் அழுத்தி எடுத்தால் மீன், மாமிசம் இவற்றை சுலபமாக நறுக்கலாம். &&&&&&

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார் " கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு நடைபெறுகிற களியாட்டுகள் தடுக்கப்பட"ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். @@@@@

சமையல் குறிப்பு

@@@@@ சமையல் குறிப்பு நன்றாகக் காய்ந்து போன பிரட், பன் போன்றவைகளை எடுத்துத் தண்­ணீர் கலந்து பிசைந்து விடுங்கள். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்கி விடுங்கள். கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்த கலவையை வடை சுடுவது போல் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து விடுங்கள். பஜ்ஜிகளுக்கு போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும்.

சளித் தொல்லை

சளித்தொல்லையால் பாதிக்கப்படாதவர்களே இல்லை எனலாம். இதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் தற்காலிக நிவாரணம்தான் கிடைக்கிறதே ஒழிய, முழுமையான நிவாரணம் கிடைப்பதில்லை. பெரும்பாலும், நமக்கு எதிர்ப்புசக்தி நன்றாக இருக்கும் போது, எவ்வித சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமலேயே நோய் குறைந்துவிடுவதுண்டு. ஆனால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது, சளித்தொல்லையானது நமது மூச்சுப்பாதையை பாடாய் படுத்திவிட்டுத்தான், நம்மைவிட்டு அகலுகிறது. அந்நாட்களில், நமக்கு தோன்றும் உபாதைகளோ ஏராளம். சளித்தொல்லையை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் காசநோய், நிமோனியா போன்றவற்றின் பாதிப்பு உண்டாகிவிடும். பாக்டீரியா, பூஞ்சை கிருமிகளினால் உண்டாகும் ஒவ்வாமை, மற்றும் தொற்றினால் ஏற்பட்ட சளித் தொல்லை மருந்துகளுக்கு கட்டுப்பட்டாலும், வைரஸ் கிருமிகளால் ஏற்பட்ட சளித்தொல்லை மருந்துகளுக்கு கட்டுப்படாமல், கடும் வேதனையை உண்டாக்குகிறது. சில நேரங்களில் மூளையையும் தாக்கி, உயிருக்கு ஆபத்தை உண்டாக்குகிறது. நுரையீரலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்காக இயற்கையாக படைக்கப்பட்ட சளியானது தன் அளவிற்கு மீறி, பல்கி, பெருகி, வேதனையை உண்டாக்கும் போது, பெருகிய சளியை வெளியேற்றி, மீண்டும் ஒவ்வாமையினால் சளி உண்டாகாமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். மஞ்சள், மிளகு, சிற்றரத்தை, பூண்டு, மல்லி, சிறிய வெங்காயம் ஆகியன நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் இயற்கை உணவுகள். இவற்றை அன்றாட உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். அடிக்கடி தோன்றும் சளித் தொல்லையை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, பால், தயிர் போன்ற உணவுகளையும் நன்கு எடுக்குமளவுக்கு, நுரையீரலுக்கு வலுவை தரும் அற்புத மூலிகை கருந்துளசி. 'ஆசிமம் டெனியுபுளோரம் டைப்பிகா' என்ற தாவரவியல் பெயர் கொண்ட லேமியேசியே குடும்பத்தைச் சார்ந்த கருந்துளசி செடிகளின் இலைகள் கபத்தை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். சளியை கட்டுப்படுத்த இரண்டு அல்லது மூன்று கருந்துளசி இலைகளை பசும்பாலில் போட்டு காய்ச்சி குடிக்க, பாலின் ஒவ்வாமையால் ஏற்பட்ட கபம் நீங்கும். இதை நீரில் போட்டு, கொதிக்கவைத்து ஆவிபிடிக்க, சைனஸ் தொல்லையால் ஏற்பட்ட சளி நீங்கும். அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க ஐந்து அல்லது பத்து கருந்துளசி இலைகளை, ஒரு லிட்டர் நீரில் ஊறவைத்து அந்த நீரை அருந்தி, பின் இலைகளை மென்று சாப்பிட வேண்டும். தினமும் அதிகாலையில், இரண்டு முதல் நான்கு கருந்துளசி இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர ஒவ்வாமை மற்றும் கிருமித் தொற்றினால் ஏற்படும் சளித்தொல்லையிலிருந்து காத்துக் கொள்ளலாம். பாற்கடலில் பள்ளி கொண்ட திருமாலின் அபிஷேகப் பொருளான துளசியை, கபப்பொருட்களின் ஒவ்வாமையால், தோன்றும் சளித் தொல்லையை நீக்க பயன்படுத்தலாம்.

Friday, 23 December 2016

சமையல் குறிப்பு

@@@@@ சமையல் குறிப்பு கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: ப்ரௌனி என்னென்ன தேவை : மைதா - 100 கிராம்,சரக்கரை, வெண்ணெய், டார்க் சாக்லேட் - தலா 100 கிராம்,கோக்கோ பவுடர் - 10 கிராம்,வால்நட் - 30 கிராம்,பேக்கிங் பவுடர் - 3 கிராம் எப்படிச் செய்வது : ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். டார்க் சாக்லேட்டைத் துண்டுகளாக்கி, ஒரு சிறிய பாத்திரத்தினுள் போடுங்கள். இதை கொதிக்கும் தண்ணீரில் வைத்தால் அந்தச் சூட்டில் சாக்லேட் உருகிவரும். இதை டபுள் பாய்லிங் என்று சொல்வார்கள். சாக்லேட்டைப் பாத்திரத்தில் போட்டு நேரடியாக உருக்கினால் தீய்ந்துவிடும்.வெண்ணெய், சர்க்கரை இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து எக் பீட்டரால் நன்றாக அடித்துக்கொள்ளுங்கள். பிறகு ஒவ்வொரு முட்டையாகச் சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளுங்கள். சர்க்கரை நன்றாகக் கரைந்ததும் சலித்த மைதா, கோக்கோ பவுடர், பேக்கிங் பவுடர் ஆகியவற்றைச் சேர்த்து மிருதுவாகக் கலந்துகொள்ளுங்கள். மைதாவைச் சேர்த்த பிறகு எக்காரணம் கொண்டும் கலவையை வேகமாக அடிக்கக் கூடாது. பிறகு உருக்கிய டார்க் சாக்லெட், பொடியாக நறுக்கிய வால்நட் ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்குங்கள். அவன் - ஐ 165 டிகிரி செண்டிகிரேடில் 15 நிமிடங்களுக்கு ப்ரீஹீட் செய்யுங்கள். ப்ரௌனி கலவையை வெண்ணெய் தடவிய பேக்கிங் டிரேவில் கொட்டி 165 டிகிரி செண்டிகிரேடில் 25 நிமிடங்களுக்கு பேக் செய்து எடுங்கள்.

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

@@@@@@@@@@@@@ தினசரி ஒரு மிஷனெரி இயக்கம் இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார். " (கிருபையின் ஊழியங்கள் (Grace Ministries)" $$$$$$$

நீதிமொழிகள் 16 :1-6

@@@@@ மனதின் யோசனைகள் மனுஷனுடையது: நாவின் பிரதியுத்தரம் கர்த்தரால் வரும். மனுஷனுடைய வழிகளெல்லாம் அவன் பார்வைக்குச் சுத்தமானவைகள்; கர்த்தரோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார் உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி, அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும். கர்த்தர் சகலத்தையும் தமக்கென்று படைத்தார்: தீங்குநாளுக்காகத் துன்மார்கனையும் உண்டாக்கினார். மனமேட்டிமையுள்ளவவெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன் கையோடே கைகோர்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பான். கிருபைபினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்: கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள். நீதிமொழிகள் 16 :1-6

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார் " இந்திய தேசத்திலுள்ள கைத்தறி தொழிலாளர்கள் இரட்சிக்கப்பட, அவர்கள் வாழ்வாதாரம் உயர " ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். @@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

@@@@@@@@@@@@@ தினசரி ஒரு மிஷனெரி இயக்கம் இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார். " ஆசியாவுக்கு சுவிஷேசம் (G.F.A)" $$$$$$$

Thursday, 22 December 2016

நீரிழிவு கட்டுப்படும்

@@@@@ நீரிழிவு கட்டுப்படும் நீரிழிவினால் பாதிக்கப்பட்டவர்கள் கலோரி குறைவான உணவுகளை சாப்பிட்டால் நான்கு மாதங்களில் அவர்களுக்கு நீரிழிவு கட்டுப்படும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. நீரிழிவு என்பது உலகளாவிய ஒரு நோயாக பரவியுள்ளது. நீரிழிவின் தொடர்ச்சியாக கண் பாதிப்பு, நரம்பியல் நோய்கள், மூட்டுவலி போன்றவை ஏற்படுகின்றன. இதனால் பெரும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. நீரிழிவு நோயினால் ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில் நெதர்லாந்தை சேர்ந்த லெய்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் புதிய தீர்வு ஒன்றை தெரிவித்துள்ளனர். டைப் 2 நீரிழிவு நோய் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் அதற்கான மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வருகின்றனர். மாத்திரை மூலம் குணமாக்குவதை விட எளிதில் நோயை குணமாகும் வழியை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். அதன்படி இரண்டாம் பிரிவு நீரிழிவு நோயை உணவு கட்டுப்பாட்டின் மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும். அவர்கள் குறைந்த கலோரி தரும் உணவு வகைகளை 4 மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் போதும். அவர்களை பாதித்துள்ள நீரிழிவு நோய் குணமாகி விடும். இன்சுலின் சுரப்பு குறையும் இந்த உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் அளவுக்கு அதிகமாக இன்சுலின் சுரப்பது குறையும். இதன் மூலம் இருதயத்தில் கொழுப்பு படிவது தடுக்கப்படும். என்றும் ஆய்வாளர்க கூறியுள்ளனர். குறைந்த சக்தி (கலோரி) தரும் உணவு வகைகள். தர்பூசணி, ஓட்ஸ், குகும்பர், முட்டைகோஸ், ஆப்பிள், காரட், பீன்ஸ் போன்றவையாகும். இவற்றை தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு சாப்பிட்டு வர நீரிழிவு நோய் கட்டுப்படும். இதன்மூலம் இருதயத்தின் செயல்பாடு நன்றாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சமையல் குறிப்பு

@@@@@ சமையல் குறிப்பு வெண்டைக்காயை பிரிஜில் வைக்கும்போது வெண்டைக்காயை பிரிஜில் வைக்கும்போது ஈரம் இல்லாமல், கழுவாமல் பிளாஸ்டிக் பையில் போட்டு காய்கறி வைக்கும் டிரேயில் வைக்க வேண்டும். ஈரம் இருந்தால் அழுகி விடும். சமைப்பதற்கு முன் நன்றாக கழுவி விட வேண்டும். சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழுகொழு போன்ற திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும். வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது.

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார் " இந்திய தேசத்தில் ஒற்றுமை செழித்தோங்க, வேற்றுமை அகல " ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். @@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார் " இந்திய தேசத்தில் ஒற்றுமை செழித்தோங்க, வேற்றுமை அகல " ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். @@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

@@@@@@@@@@@@@ தினசரி ஒரு மிஷனெரி இயக்கம் இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார். "கிராம மிஷனரி (VMM)இயக்கம்" $$$$$$$

நீதிமொழிகள 15:15-22

@@@@@# சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்: மனரம்மியமோ நித்திய விருந்து. சஞ்சலத்தோடு கூடிய அதிகப் பொருளிலும், கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப் பொருளே உத்தமம் . பகையோடிருக்கும் கொழுத்த எருதின் கறியைப்பார்க்கிலும், சிநேகிதத்தோடிருக்கும் இலைக்கறியே நல்லது. கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்: நீடிய சாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான். சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமானம்: நீதிமானுடைய வழியோ ராஜபாதை. ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம்பண்ணுகிறான். மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோ:ம்: புத்திமானோ தன் நடக்கையைச் செம்மைப்படுத்துகிறான். ஆலோசனையின்மையால் எண்ணங்கள் சிந்தியாமற்போம்: ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும். நீதிமொழிகள் 15 :15-22

Wednesday, 21 December 2016

மாவிலங்கம்

இந்தியாவினைச் சார்ந்த இலையுதிர் மரம் மாவிலங்கமாகும். இது ஆற்றங்கரை ஓரங்களில் அதிகமாக காணப்படும். இந்த மரத்தின் இலைகள் மூன்று சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலையாகும். மாவிலங்கத்தின் இலைகளும், பட்டையும் மருத்துவ பயன் கொண்டவை. கி.மு 8-ம் நூற்றாண்டிலேயே ஆயுர்வேத மருத்துவ குறிப்புகளில் மாவிலங்கத்தின் மருத்துவ பயன்பாடு பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. கி.பி 1100-ம் ஆண்டு முதல் சிறுநீரகக் கல் போக்க இந்திய மருத்துவத்தில் முக்கிய மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தில் சபோனின்கள், பிளேவனாய்டுகள், தாவரஸ்டீரால்கள் மற்றும் குளுக்கோசிலினேட்டுகள் காணப்படுகின்றன. இவற்றுள் வருனால், ரூட்டின், சிட்டோஸ்டிரால், பெட்டுலினிக் அமிலம், குளுக்கோகப்பாரின், கெடா பிசைன் போன்றவை காணப்படுகின்றன. அலர்ஜிக்கு மருந்து மாவிலங்கப் பட்டை ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலற்சி, மற்றும் தோல் வியாதிகளை குணப்படுத்தும். மேலும் காய்ச்சல் வயிற்று எரிச்சல், வாந்தி ஆகியவற்றினையும் போக்கும். மூட்டுக்களின் வீக்கம் மற்றும் புண் போக்க பசுமை இலைகள் உதவுகின்றன. கசக்கிய இலைகளை வினிகர் சேர்த்து பயன்படுத்துவர். முகவாதத்தை குணமாக்கும் குளிர்காலத்தில் பனிக்காற்று தாக்குவதினால் ஏராளமானோர் முகவாத நோயினால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மாவிலங்கம் அருமருந்தாகும். மாவிலங்கு மரப்பட்டை, மூக்கிரட்டைப் பட்டை வேர், வெள்ளைச் சாரணை வேர் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து நன்கு இடித்து முதல் நாள் இரவில் 250 மில்லி தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதை கொதிக்க வைக்க வேண்டும். 50 மில்லி அளவு வரும் வரை கொதிக்க வைத்து இறக்கி, ஆற வைத்து வடிகட்ட வேண்டும். இதனுடன் 60மில்லி கிராம் 'நண்டுகல் பஷ்பம்' சேர்க்க வேண்டும். தினமும் பல் துலக்கியதும், இதை அருந்தி வர இரண்டு, மூன்று மாதங்களில் நிரந்தர குணம் ஏற்படும். சர்க்கரை நோயாளிகளை துன்புறுத்தும் பிரச்சினை 'தோள்பட்டை உறைவு'. இந்த நோய்க்கான காரணம் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இந்தப் பிரச்சினையையும் மாவிலங்கம், மூக்கிரட்டை, வெள்ளைச் சாரணை வேர், நண்டுகல் பஷ்பம் மூலம் இரண்டு மாதங்களில் குணப்படுத்த முடியும். சிறுநீரக கற்களை வெளியேற்றும் சிறுநீரகக் கற்களை நீக்க மேலை நாடுகளிலும், இந்தியாவிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. சிறுநீருடனேயே கல் வெளிவருவது போன்று உதவுகிறது. இன்றைய நவீன ஆய்வுகள் இதனை நிரூபித்துள்ளன. சிறுநீர்ப்பையில் வீக்கம், சிறுநீர்க்குழாய் அடைப்பு மற்றும் இனபெருக்க உறுப்புடனான சுரப்பியில் அதிக வளர்ச்சியினால் ஏற்படும் சிறுநீரக கோளாறுகளை குணப்படுத்துகிறது. பாரம்பரியமாக கடந்த 3 ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்ட தாவர மருந்தின் அதே பயன்பாடு அதே நோய்களுக்கு ஏற்றது என்று நிறுவப்பட்டதற்கு சிறந்த எடுத்துக்காட்டு மாவிலங்கம்.

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார் " இந்திய தேசத்திலுள்ள அகதிகள் இயேசுவை அறிந்து கொண்டு, சொந்த தேசத்துக்கு திரும்பிச் செல்ல" ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். @@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

@@@@@@@@@@@@@ தினசரி ஒரு மிஷனெரி இயக்கம் இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார். "இந்திய தேசிய மிஷனரி இயக்கம் (NMSI)" $$$$$$$

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

@@@@@@@@@@@@@ தினசரி ஒரு மிஷனெரி இயக்கம் இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார். "இந்திய தேசிய மிஷனரி இயக்கம் (NMSI)" $$$$$$$

Tuesday, 20 December 2016

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

@@@@@@@@@@@@@ தினசரி ஒரு மிஷனெரி இயக்கம் இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார். "இந்தியா கேம்பஸ் குருஷேட் பார் ," $$$$$$$

சமையல் குறிப்பு

@@@@@

மாங்காய் ஜுஸ் செய்முறை

தேவையான பொருட்கள்: மாங்காய் – 1 புதினா இலை - 6 சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன் மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு தேன் – 1 டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிது செய்முறை: முதலில் மாங்காயை தோலை சீவி துண்டுகளாக நறுக்கவும். மாங்காயுடன் புதினா, சிறிது நீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். வெந்ததை நன்கு மசித்துக் கொண்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு, சீரகத் தூள், மிளகுத் தூள், தேன் சேர்த்துக் கலந்து கொத்தமல்லி தூவி பருகவும். மாங்காய் ஒரு சிறந்த கிருமி நாசினி. மாங்காயை அடிக்கடி சேர்த்துக் கொள்வது வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கிறது

Sunday, 18 December 2016

சமையல் குறிப்பு

@@@@@@ சமையல் குறிப்பு வெஜிடபிள் நூடுல்ஸ் சூப் செய்முறை தேவையானவை: நறுக்கிய காய்கறிகள் நூடுல்ஸ் வெங்காயம் – ஒன்று, மிளகுத்தூள் – காரத்துக்கேற்ப, பூண்டு – ஒரு பல், வெங்காயத்தாள் – ஒன்று (நறுக்கியது), நறுக்கிய கொத்தமல்லி தழை – சிறிதளவு, வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், சோயா சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை: நறுக்கிய காய்கறிகள் எல்லாம் ஒன்றாக சேர்த்து வேக வைத்து, வேக வைத்த தண்ணீர் 4 கப் எடுத்துக் வைத்துக்கொள்ளவும். பிறகு நூடுல்ஸ் வேக வைத்து ஒரு கப் எடுத்துக் கொள்ளவும். கடாயில் வெண்ணெயை போட்டு உருகியதும் பூண்டை நறுக்கி போட்டு வதக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து மேலும் வதக்கி… காய்கறி வேக வைத்த தண்ணீரை ஊற்றி, நன்கு கொதி வந்தவுடன், உப்பு, மிளகுத்தூள், வேக வைத்த காய்கறி, வேக வைத்த நூடுல்ஸ் சேர்க்கவும். தேவைப்பட்டால் அஜினோமோட்டோ சேர்த்து கொதிக்கவிடவும். இதில் சோள மாவை கரைத்து ஊற்றி, கொதி வந்தவுடன் இறக்கி, கப்பில் ஊற்றி… கொத்தமல்லி தழை, சோயா சாஸ், வெங்காயத்தாள் சேர்த்துப் பரிமாறவும்.

Saturday, 17 December 2016

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார் " இந்திய தேசத்திலுள்ள பழங்குடியினர் மத்தியில் ஆவிக்குறிய எழுப்புதல் உண்டாக " ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். @@@@@

நீதிமொழிகள் 14 :22-28

தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமுமுண்டு. சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு: உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும். ஞானிகளுக்கு முடி அவர்கள் செல்வம்; மூடரின் மதியீனம் மூடத்தனமே. மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களை இரட்சிக்கிறான்: வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான். கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு: அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும். கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று: அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம். ஜனத்திரட்சி ராஜாவின் மகிமை: ஜனக்குறைவு தலைவனின் முறிவு. நீதிமொழிகள் 14 :22-28

நீதிமொழிகள் 14 :22-28

தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமுமுண்டு. சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு: உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும். ஞானிகளுக்கு முடி அவர்கள் செல்வம்; மூடரின் மதியீனம் மூடத்தனமே. மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களை இரட்சிக்கிறான்: வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான். கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு: அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும். கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று: அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம். ஜனத்திரட்சி ராஜாவின் மகிமை: ஜனக்குறைவு தலைவனின் முறிவு. நீதிமொழிகள் 14 :22-28

நீதிமொழிகள் 14 :22-28

தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமுமுண்டு. சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு: உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும். ஞானிகளுக்கு முடி அவர்கள் செல்வம்; மூடரின் மதியீனம் மூடத்தனமே. மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களை இரட்சிக்கிறான்: வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான். கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு: அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும். கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று: அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம். ஜனத்திரட்சி ராஜாவின் மகிமை: ஜனக்குறைவு தலைவனின் முறிவு. நீதிமொழிகள் 14 :22-28

உருளைக்கிழங்கு

@@@@@@ உருளைக்கிழங்கு எல்லா உணவு வகைகளில் உள்ளதைவிட இதில் காரப்பொருள் அதிக அளவுடனும், உறுதியான பொருளாகவும் இருக்கிறது. இதுதான் நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது. யூரிக் அமிலத்தையும் புளித்த நீரையும் கரைத்து வெளியேற்றிவிடுகிறது. அத்துடன் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பாக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்துவிடுகிறது. ஊட்டச்சத்துக்குறைவால் ஏற்படும் சொறி, கரப்பான் போன்ற ஸ்கர்வி நோயைக் குணப்படுத்த உருளைக்கிழங்கு மசியலைக் சாப்பிட்டால் போதும். அவித்த உருளைக்கிழங்குகளை தோலுடன் மசித்துத் தினமும் ஒருவேளை வீதம் ஒரு வாரம் முதல் பத்து நாள்கள் வரை சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பச்சையான உருளைக்கிழங்கு ரசம் தரும் நன்மைகள்! வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், ஆகியன உள்ளவர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள உருளைக்கிழங்குகளாகப் பார்த்து எடுத்து, அவற்றை பச்சையாக மிக்ஸி மூலம் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாக இந்தச் சாற்றில் அரை கப் அருந்த வேண்டும். இதுபோல், மூன்று வேளையும் உணவு நேரத்துக்கு முன்பு அருந்த வேண்டும். உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து, அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது. இதே உருளைக்கிழங்குச்சாற்றை உடலில் எலும்பு இணைப்புகள் மற்றும் தசைப்பகுதிகளில் வீக்கம் முதலிய கோளாறுகளுக்கும், வாத நோய்களுக்கும் வெளிப்பூச்சாகத் தேய்க்க உடல் நலமுறும். இந்தச்சாற்றை அடுப்பில் வைத்து மூன்றில் ஒரு பங்காக வற்றச் செய்து அதில் கிளிசரின் சேர்த்து, பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவேண்டும். வீக்கம், வலி ஆகியன உள்ள இடங்களில் இரண்டு அல்லது மூன்ற மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த தைலத்தை அழுத்தித் தேய்த்தால் ஒரே நாளில் வீக்கம் குறையும் வலியும் நீங்கும். வாத நோய் குணமாகும்! இரு பச்சையான உருளைக்கிழங்குகளைத் தோலுடன் மிக்ஸியில் அரைத்துச் சிறிது தண்ணீர்விட்டு, இரு தேக்கரண்டி வீதம், உணவு சாப்பிடுவதற்கு முன்பு, அருந்த வேண்டும். இப்படி அருந்திய சாறு உடலில் வாதநோயைத் தோற்றுவிக்கும் அமிலத்தை வெளியேற்றிவிடுகிறது. தொடர்ந்து உட்கொண்டால் வாதநோய் முற்றிலும் குணமாகும் சாத்தியம் அதிகம் உண்டு. அவித்த உருளைக்கிழங்குகளின் தோல்களைச் சேகரித்து, சுத்தம் செய்து, ஒரு டம்ளர் தண்ணீரில் பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கவும். பிறகு, இந்தக் கஷாயத்தை அருந்தினாலும் கீல் வாதம் குணமாகும். இந்த முறையில் தினமும் மும்முறை தயாரித்து அருந்த வேண்டும். நீண்ட நாள் மலச்சிக்கல் தீர... கெட்டுப்போன இரத்தம், குடல்பாதையின் நச்சுத்தன்மை உள்ள அமிலம், சிறுநீரில் உள்ள புளிப்பு அமிலம் தொடர்பாக ஏற்படும் நோய்கள் உள்ளோர், நீண்ட நாள் மலச்சிக்ககால் அவதிப்படுவோர் ஆகியோர் உருளைக்கிழங்கு வைத்தியத்தை குறைந்தது ஆறுமாதங்கள் பின்பற்றினால் மேற்கண்ட நோய்களிலிருந்து பூரண நலம் பெறலாம். தினசரி உணவில் உருளைக்கிழங்கை அவித்தோ, வேகவைத்தோ, பொரித்தோ, சூப்வைத்தோ சேர்த்துக்கொள்வதுதான் உருளைக் கிழங்கு வைத்தியம். சோறு, சப்பாத்தி போன்றவற்றைக் குறைத்துக்கொண்டு உருளைக்கிழங்குடன் கீரைவகைகளை, குறிப்பாக லெட்டூஸ், பசலைக்கீரை, தக்காளி, செலரி, வெள்ளரிக்காய், பிட்ரூட் கிழங்கு, டர்னிப் கிழங்கு போன்றவற்றையும் சேர்த்துச் சாப்பிடவேண்டும். இதன்மூலம் தோலில் உள்ள அழுக்குகளும், சுருக்கங்களும் நீங்கிவிடும். மலச்சிக்கலும் அகன்று இரத்தம் சுத்தம் செய்யப்பட்டுப் புத்தம் புது மனிதனாக ஒவ்வொரு நாளையும் சந்திக்கலாம். முகத்திற்கு பீளிச்சிங் வேண்டாம்! வயதால் முகத்திலும், உடலிலும் சுருக்கம் உள்ளவர்கள் பச்சையாக உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக்கொண்டு இரவில் தூங்கச் செல்ல வேண்டும். சுருக்கங்களை போக்கிச் சலவை செய்த துணிபோல இளமைத் துடிப்புள்ள முகத்தையும், சுருக்கமில்லாத தோலையும் உடலுக்குத் தந்துவிடுகிறது. இந்த வைத்தியம், அமெரிக்காவில் இந்த முறையில் இயற்கையாக முதுமையால் ஏற்படும் தோல் சுருக்கங்களை நீக்கிக்கொள்கின்றனர். உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! ஆட்டுக்கறியுடன் உருளைக்கிழங்கு சேர்த்து சமைக்கக் காரணம் என்ன? உருளைக்கிழங்கு எளிதில் ஜீரணமாகி உணவுப்பாதையில் எந்தவிதமான சிரமும் இன்றி ஆட்டுக்கறி செல்ல பயன்படுகிறது. எனவே ஆட்டுக்கறி செரிமானம் ஆக உருளைக்கிழங்கு பயன்படுகிறது. உருளைக்கிழங்கை யார் சாப்பிடக் கூடாது? கொழுத்த சரீரம் உள்ளவர்கள. உருளைக் கிழங்கைச் சாப்பிடாமல் இருந்தால் நலம். சிற்றின்ப உணர்ச்சியைத் தூண்டுவது உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கு மெலிந்தவர்களை சதைப்பிடிப்புடன் உருவாக்கும். குண்டானவர்களை மேலும் குண்டாக்கிவிடும்! எனவே, உடல் கொழுத்த மனிதர்கள் எண்ணெயில் பொரித்த உருளைக்கிழங்கு வறுவலை முற்றிலும் தவிர்த்து, மாதம் ஒரு முறை அவித்த உருளைக்கிழங்கை அளவுடன் சாப்பிட வேண்டும். ஆரோக்கிய உணவாகத் திகழும் உருளைக் கிழங்கை அடிக்கடி சாப்பிட்டு உடல் நலத்தைப் புதுப்பிக்க இன்றே முடிவு செய்யுங்கள்.

சமையல் குறிப்பு

வெள்ளை காராமணி சுண்டல் தேவையானவை: வெள்ளை காராமணி - ஒரு கப், வெல்லம் - அரை கப், நெய் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன். செய்முறை: வெள்ளை காராமணியை 6 மணி நேரம் ஊறவிட்டு, வேகவிட்டு எடுக்கவும். வெல்லத்தைக் கரைத்து, வடிகட்டி கெட்டிப்பாகு காய்ச்சவும். வாணலியில் நெய்யை சூடாக்கி, காராமணியை சேர்க்கவும். கூடவே, காய்ச்சிய வெல்லப்பாகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். இறக்குவதற்கு முன் தேங்காய் துருவல் தூவி இறக்கவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சுண்டல் இது.

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம

@@@@@@@@@@@@@ தினசரி ஒரு மிஷனெரி இயக்கம் இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார். "ஷைலோ மிஷனெரி இயக்கம் (SHYLOH)" $$$$$$$

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார் " இந்திய தேசத்திலுள்ள தேயிலை உற்பத்தி பெருக, அதை நம்பியிருக்கும் தொழிளாலர்கள் நலம் பாதுகாக்கப்பட " ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். @@@@@

நீதிமொழிகள் 14 :15-21

பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்: விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான். ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்: மதியீனனோ மூர்க்கங்கொண்டு துணிகரமாயிருக்கிறான். முற்கோபி மதிகேட்டைச் செய்வான்: துர்ச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான். பேதையர் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்; விவேகிகளோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள். தீயோர் நல்லோருக்கு முன்பாகவும், துன்மார்க்கர் நீதிமான்களுடைய வாசற்படிகளிலும் குனிவதுண்டு. தரித்திரன் தனக்கடுத்தவனாலும் பகைக்கப்படுகிறான்; ஐசுவரியவானுக்கோ அநேக சிநேகிதருண்டு. பிறனை அவமதிக்கிறவன் பாவஞ்செய்கிறான்: தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான். நீதிமொழிகள் 14 :15-21

Friday, 16 December 2016

உணவு உண்ணும் முறை:

உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது. உணவு உண்ணும் முறை: உடலில் இயக்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய மூளை சரியாக இயங்க வேண்டுமானால், பிற தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும். இந்த ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகளாகும். துவர்ப்பு ரத்தம் பெருகச் செய்கிறது. இனிப்பு தசை வளர்க்கிறது. புளிப்பு கொழுப்பை உற்பத்தி செய்கிறது. கார்ப்பு எலும்பை வளர்த்து உறுதியாக்குகிறது. கசப்பு நரம்பை பலப்படுத்துகிறது. உவர்ப்பு உமிழ் நீரைச் சுரக்கச் செய்கிறது. உடல் தாதுக்கள் பெருக்கவும் அவற்றை உடலுக்கு ஏற்றவாறு சமன் செய்வதும் ஆறு சுவைகள் கொண்ட உணவுகளாகும். துவர்ப்பு: உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. விருப்பு வெறுப்பில்லாதது. வியர்வை, ரத்தப்போக்கு, வயிற்றுப் போக்கை சரி செய்யும். வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அத்திக்காய் போன்றவை துவர்ப்பு சுவையுடையவை. இனிப்பு: மனத்துக்கும் உடலுக்கும் உற்சாகத்தைத் தரக்கூடியது. இது அதிகமானால் எடை கூடும். உடல் தளரும். சோர்வும் தூக்கமும் உண்டாகும். பழங்கள், உருளை, காரட், அரிசி, கோதுமை, கரும்பு போன்ற பொருள்களில் இனிப்புச் சுவை இருக்கிறது. புளிப்பு: உணவின் சுவையை அதிகரிக்கும் சுவையிது. பசியைத் தூண்டும். நரம்புகளை வலுவடையச் செய்யும். இது அளவுக்கு அதிகமானால், பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும். உடல் தளரும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நாரத்தங்காய் போன்றவை புளிப்புச் சுவை கொண்டவை. காரம்: பசியைத் தூண்டும். செரிமானத்தைத் தூண்டும். உடல் இளைக்கும். உடலில் சேர்ந்துள்ள நீர்ப்பொருளை வெளியேற்றும். ரத்தத்தைத் தூய்மையாக்கும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவை காரச்சுவை கொண்டவை. கசப்பு: பெரும்பாலும் வெறுக்கக் கூடிய சுவை. ஆனாலும் உடலுக்கு மிகுந்த நன்மையைத் தரக்கூடிய சுவை இதுவே. இது, நோய் எதிர்ப்புச் சக்தியாகச் செயல்படும். தாகம், உடல் எரிச்சல், அரிப்பு, காய்ச்சல் ஆகிய இவற்றைத் தணிக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பாகற்காய், சுண்டை, கத்தரி, வெங்காயம், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம் பூ, ஓமம் போன்றவற்றிலிருந்து கசப்புச் சுவையைப் பெறலாம். உவர்ப்பு: அனைவரும் விரும்புகின்ற சுவை. தவிர்க்க இயலாதது. உமிழ் நீரைச் சுரக்கச் செய்யும். மற்ற சுவைகளைச் சமன் செய்யும். உண்ட உணவைச் செரிக்க வைக்கும். கீரைத்தண்டு, வாழைத் தண்டு, முள்ளங்கி, பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் உவர்ப்புச் சுவை மிகுதியாக உள்ளது. உணவு வகைகளை சுவைக்கு ஒன்றாகச் சமைத்து உண்பதாக வைத்துக் கொள்வோம். இலையில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும். எந்தச் சுவையை இறுதியில் உண்ண வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். சிலர், இலையில் உணவு பரிமாறப்படும் போதே ஒவ்வொன்றாக உண்டு கொண்டேயிருப்பார்கள். அது தவறு. உணவு முழுமையாகப் பரிமாறப்பட்ட பின்பும், முதலில் உண்ண வேண்டியது, இனிப்பு. அடுத்து அடுத்ததாகப் புளிப்பு, உப்பு, காரம், கசப்பு ஆகிய சுவைகளை உண்ட பின்பு இறுதியாகத் துவர்ப்புச் சுவையை உண்ண வேண்டும். இவ்வாறாக உணவை உண்பதனால், உடம்பில் ஆட்கொண்டிருக்கும் பஞ்ச பூதங்கள் சமநிலை பெறும். இவ்வாறு உண்ட பின்பு முடிவாக தயிரும் உப்பும் கலந்து உண்டால், உணவில் கலந்துள்ள வாத பித்த ரசாயங்கள் என்னும் முக்குற்றங்கள் நீங்கிவிடும். உடம்பில் நோய் தோன்றுவதற்கான கூறுகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும். ஆறு சுவை உணவை மட்டும் உண்டுவிட்டால் போதாது. அதற்கு உரிய காலத்தில் உணவு உண்ண வேண்டும். ஞாயிறு எழும்போதும், மறையும் போதும் எந்த உணவையும் உண்ணக் கூடாது. கோபமோ கவலையோ துக்கமோ ஏற்படும் போதில் உணவு உண்பதைத் தவிர்த்திட வேண்டும். அதே போல், நின்று கொண்டும் கைகளை ஊன்றிக் கொண்டும் உணவு உண்ணக் கூடாது. எப்போதும் உணவ உண்ணும்போது, கிழக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது ஆயுளை வளர்க்கும். தெற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது புகழை வளர்க்கும். மேற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது செல்வத்தை வளர்க்கும். வடக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது அழிவுக்கு வழி வகுக்கும். எவ்வகை உணவாயினும் அதை உண்பதற்கு வாழை இலையைப் பயன்படுத்தினால், உணவினால் உண்டாகக் கூடிய தீமைகள் முற்றிலும் நீங்கிவிடும். உணவு உண்டு முடிந்த பின்பு குறைந்த அளவு நூறு அடி தூரமாவது நடந்து வர வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. படுக்கையில் அமர்ந்து கொண்டு உணவுண்ட பின்பு அப்படியே படுத்துக் கொள்கின்றவர்களுக்காகப் பரிதாப் படலாமே ஒழிய வேறு ஒன்றும் செய்ய இயலாது. உணவின் சுவைக்கும் உடல் நலத்துக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொண்டால், உடல் நோய்களைத் தீர்க்கலாம். உடலில் நோய்கள் வராமல் தடுக்கலாம். உடல் உறுப்புகள் நன்கு வளரச் செய்யலாம். உடல் உறுப்புகள் பழுதில்லாமல் செழிப்பாகச் செம்மையாக அமைந்துவிட்டால் உடல் இன்பமாக இருக்கும். அதன்பின் வாழ்க்கை இன்பமாக இருக்கும். உடலில் ஏற்படும் குறைபாடுகளுக்கு ஏற்ப மனம் இருக்கும். நோயுடைய உடலைக் கொண்ட மனம், மகிழ்ச்சியை இன்பத்தை எண்ணாமல் துன்பப்படும். நாக்கின் விருப்பத்துக்கு ஏற்ப உணவை உண்ணும் நாகரிகம் வளர்ந்து வருகிறது. எதை எப்போது சாப்பிடுவது என்றில்லாமல் எப்போதும் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்னும் பழக்கத்தினால், நோய்களுக்கு இடமளிப்பவர்கள் இருக்கின்றார்கள். உயிர் வாழ்வதற்கு உணவு வேண்டும் என்பதற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் உண்டு கொண்டிருந்தால் தம்மைத்தாமே வருத்தத்தில் ஆழ்த்திக் கொள்வதாகும். 'உண்பது நாழி' என்று, உணவின் அளவு குறிக்கப்படுகிறது. அதுவும் ஒரு நாளைக்கு எத்தனை முறை என்பதும் கூறப்பட்டுள்ளது. வாழ்க்கையை வாழும் முறையை அறிந்தவர்கள் சொல்லும் சொல்லை இகழ்ந்தால் வாழ்க்கையை இகழ்ந்தது போலாகும். ஆறு சுவையுடைய உணவுகளை உண்டு வந்தால், இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும். சில சமயத்தில் ஆறு சுவை உணவை உண்ண இயலாமல் போகலாம். இயலும் போது உண்டு வந்தால் அவை சமநிலைக்கு வந்து உடல் நிலையைப் பாதுகாக்கும்.

தினம் ஒரு ஜெபக்குறிப்ப

♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார் "இந்திய தேசத்தில் மின் ஆற்றல் பாதுகாக்கப்பட , மின்ஆற்றல் தடுக்கப்பட " @@@@@

சமையல் குறிப்பு

@@@@@

சமையல் குறிப்பு

கத்தரிக்காய் பருப்புக் கூட்டு செய்முறை

தேவையான பொருள்கள்:
கத்தரிக்காய் = அரை கிலோ
துவரம் பருப்பு = 100 கிராம் பெருங்காயம் = சிறிது வெங்காயம் = 2 பூண்டு = 5 பல்
வெந்தயம் = அரை ஸ்பூன்
சீரகம் = அரை ஸ்பூன்
கடுகு = அரை ஸ்பூன்
பச்சை மிளகாய் = 5
புளி = தேவையான அளவு
மஞ்சள் பொடி = அரை ஸ்பூன்
மிளகாய் வற்றல் = 2
எண்ணெய் = 4 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு

செய்முறை:

கத்தரிக்காயை பிஞ்சாக வாங்கி சிறு துண்டுகளாக நறுக்கவும். துவரம் பருப்பை பெருங்காயம், மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் வைத்து வேக வைத்து கொண்டு கடைந்து கொள்ளவும். வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கவும். புளியை கெட்டியாக கரைக்கவும். கடுகு, வெந்தயம், சீரகம், மிளகாய் வற்றல் முதலியவற்றை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். இதை கரகரப்பாக பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வதங்கியதும் கத்தரிக்காயை போட்டு வதக்கவும். 5 நிமிடம் வதக்கியதும் கரைத்து வைத்துள்ள புளியை விட்டுக் கிளறி உப்பு சேர்த்து வதக்கவும். அடுத்து அரை கப் தண்ணீர் விட்டு மூடி வைத்து வேக விடவும். நடுநடுவில் கிளறி விடவும். முழுக்க நீர்பதம் வற்றிய பிறகு இறக்கி வைத்து பொடித்து வைத்துள்ள பொடியையும், கொத்தமல்லியையும் தூவி இறக்கவும். சுவையான கத்தரிக்காய் பருப்புக் கூட்டு தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பரோட்டா, பொங்கல், உப்புமா போன்றவற்றோடு பரிமாறலாம்.

நீதிமொழிகள் 14 :8-14

தன் வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்: மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம். மூடர் பாவத்தைக்குறித்துப் பரியாசம் பண்ணுகிறார்கள்: நீதிமான்களுக்குள்ளே தயை உண்டு. இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்: அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தையாகான். துன்மார்க்கனுடைய வீடு அழியும், செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும். மனுஷனுக்குத் செம்மையாய்த் தோன்றுகிறவழி உண்டு: அதின் முடிவோ மரண வழிகள். நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு: அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம். பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன் வழிகளிலேயும்: நல்ல மனுஷனோ தன்னிலே தானும் திருப்தியடைவான். நீதிமொழிகள் 14 :8-14

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

@@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார். "நேட்டிவ் வில்லேஜ் மிஷனரி இயக்கம் (NVMM) " $$$$$$$

Thursday, 15 December 2016

மூளை

@@@@@@ மூளை நமது உடம்பில் மூளையை தலைமை செயலகம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் இதயமே நமது உடம்பின் தலைமை செயலகம் என்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள். இன்றைக்கு நாம் சாப்பிடும் துரித உணவின் தாக்கத்தால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுகிறது. இதயத்தை பாதுகாக்க, தினமும் பாதாம் பருப்பு, இஞ்சி, முந்திரிப் பருப்பு, வெந்தயம், பருப்பு வகைகள் ஆகியவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும். இதில் இஞ்சியும், பாதாம் பருப்பும் மிக முக்கியமானவை. நம் உடலில் குரோமியம் என்ற தாது உப்பின் அளவு குறைந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிர்ணயிக்கும் பணி தாறுமாறாகி விடுகிறது. இதனால் சர்க்கரை எரிக்கப்படுவது குறைந்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இதயத் தசைகளுக்கு ஆக்ஸிஜனும், சத்துணவும் எடுத்துச் செல்ல உதவும் கரனரி நாளங்களிலும் தடைகளை ஏற்படுத்தி இதயநோய்களை உண்டாக்குகிறது. இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு அதிகரித்தால் குரோமியம் உப்பு குறைந்துவிட்டது என்பதே அர்த்தம். 1999-ல் பிரிட்டீஷ் ஆராய்ச்சியாளர்கள், ஒரு வயது முதல் 75 வயது வரை உள்ள 41 ஆயிரம் பேர்களின் இரத்தம், முடி, வியர்வை முதலியவற்றில் குரோமியம் அளவு எப்படி இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்தார்கள். வயது ஆக, ஆக குரோமியம் உப்பின் அளவு பாதியாகக் குறைந்துகொண்டே வந்தது. இதற்கு நன்கு சுத்திகரிக்கப்பட்ட (ரீபைன்ட்) உணவுப் பொருட்களையே அதிகம் சாப்பிடுவதே முக்கிய காரணம். நன்கு சுத்திகரிக்கப்பட்ட மாவுப்பொருள்களில் குரோமியம் உப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. இதைத் தவிர்க்க விரும்பினால், கேழ்வரகு அல்லது பார்லி அரிசியை காலையில் சாப்பிடுங்கள். பகலில் காரட், முருங்கைக்கீரை, கொண்டைக்கடலை, பீட்ரூட், வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்வது நல்லது. சீத்தாப்பழம், மாதுளம்பழம், பழுத்தத் தக்காளி, அன்னாசிப்பழம் முதலியவைகளில் இந்த உப்பு போதுமான அளவு உள்ளது. இஞ்சியும், பாதாம் பருப்பும், தினமும் தவறாமல் சேர்க்க வேண்டும். இதயக்கோளாறு மற்றும் நீரிழிவு நோயாளிகள் இந்தப் பட்டியல்படி சாப்பிட்டு வந்தால், குரோமியம் அளவு சரியாக இருக்கும். விருந்தின்போது கேக், மட்டன் மூலம் சேரும் கொழுப்பு, படியாமல் இருக்க வெற்றிலை போட்டுக் கொள்ள வேண்டும். இதில் இந்தக் குரோமியம் உப்பு நன்கு கிடைப்பதால், கொழுப்பால் இரத்தத்தை நிர்வகிப்பது தடைபடாமல் இருக்கும். பல நோய்களுக்கு இந்தத் தாது உப்பு குறைவே காரணமாக இருக்கிறது. எனவே, எல்லா வயதுக்காரர்களும் கொண்டைக்கடலை, முருங்கைக்கீரை, வெங்காயம் முதலியவற்றை அவ்வப்போது தவறாமல் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தினசரி அளவான 50 மைக்ரோ கிராம் முதல் 20 மைக்ரோ கிராம் வரை இந்த தாது உப்பு எளிதில் கிடைத்துவிடும். தினசரி பாதாம் பருப்பு சாப்பிடுவது மிகவும் நல்லது.

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார் "நுரையீரல்கள் பாதிப்படைந்நவர்கள் கர்த்தரால் தொடப்பட்டு குணமடைய இரட்சிக்கப்பட " @@@@@

சமையல் குறிப்பு

@@@@@@

சமையல் குறிப்பு

கோஸ் மசாலா செய்முறை

தேவையானவை: முட்டைகோஸ் - 1/2 கிலோ பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப் இஞ்சி - 1 துண்டு பூண்டு - 2 பல் உருளைக்கிழங்கு - 2 தக்காளி - 2 பச்சைமிளகாய் - 1 கொத்தமல்லி - சிறிதளவு மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு நெய் கலவை - தேவையான அளவு பட்டை - 4 துண்டு கிராம்பு - 2 கருஞ்சிரகம் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். முட்டைகோஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் 2 டீஸ்பூன் ஆகியவற்றை நைஸாக அரைத்துக் கொள்ளவும். பட்டை, கிராம்பு, கருஞ் சிரகத்தை எண்ணெய் விடாமல் வறுத்து, பொடித்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கையும் வெங்காயத்தையும் தனித்தனியாக எண்ணெயில் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் முட்டை கோஸ் போட்டு வதக்கி, அதில் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும். நன்றாக வெந்ததும் வதக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கையும் பொடித்து வைத்திருக்கும் மசாலாவையும் சேர்த்துக் கிளறவும். கடைசியில் பொடியாக நறுக்கிய தக்காளி, வதக்கிய வெங்காயம், கொத்தமல்லியை சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

@@@@@@@@@@@@@ தினசரி ஒரு மிஷனெரி இயக்கம் இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார். " இந்திய வேதாகம சங்கம் (B.S.I) " $$$$$$$

Wednesday, 14 December 2016

சமையல் குறிப்பு

###### சமையல் குறிப்பு ஜவ்வரிசி போண்டா செய்முறை தேவையான பொருட்கள் ஜவ்வரிசி - 1 கப் அரிசி மாவு - 1/2 கப் புளிப்பான கெட்டித் தயிர் - 1கப் கடலைப்பருப்பு - 1 ஸ்பூன் பொடியாக நறுக்கிய  வெங்காயம் - 1/4 கப் வட்டமாக நறுக்கிய  பச்சை மிளகாய் - 2 ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு செய்முறை ஜவ்வரிசியைக் கழுவி தண்ணீரை முழவதுமாக வடித்துவிடவும்.புளிப்புத் தயிரை லேசாகக்கடைந்து உப்பு சேர்த்து ஜவ்வரிசியில் கலந்து மூடி வைக்கவும். 6 மணி நேரம் அப்படியே ஊற வைக்கவும். கடலைப்பருப்பை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து தண்ணீரை வடிக்கவும். ஜவ்வரிசியில் ஊற வைத்த கடலைப்பருப்பு, வெங்காயம், அரிசி மாவு சேர்த்து கலக்கவும். மோர் பற்றாவிடில் சிறிது நீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். உருண்டை பிடிக்குமளவிற்கு மாவு பக்குவம் இருக்க வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி ஜவ்வரிசிக் கலவையில் இருந்து உருண்டைகள் செய்து எண்ணெயில் போடவும். நன்றாகப் பொன்னிறமாக ஆனதும் திருப்பிப்போட்டு சிவந்ததும் எடுத்து சூடாகப் பரிமாறவும். @_@@@_@

நீதிமொழிகள் 14 :1-7

புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்: புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப் போடுகிறாள். நிதானமாய் நடக்கிறவன் கர்த்தருக்குப் பயப்படுகிறான்; தன் வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம்பண்ணுகிறான். மூடன் வாயிலே அவன் அகந்தைக்கேற்ற மிலாறுண்டு: ஞானவான்களின் உதடுகளோ அவர்களைக் காப்பாற்றும். எருதுகளில்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாயிருக்கும்: காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு. மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லான்: பொய்ச்சாட்சிக் காரனோ பொய்களை ஊதுகிறான். பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடியான்; புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாய் வரும். மூடனுடைய முகத்துக்கு விலகிப்போ: அறிவுள்ள உதடுகளை அங்கே காணாய். நீதிமொழிகள் 14 :1-7

Tuesday, 13 December 2016

சமையல் குறிப்பு

@@@@@ சமையல் குறிப்பு . தீய்ந்த பாலில் சூடு ஆறுமுன்னர் மிளகைத் தட்டிப் போட்டால் பாலின் ருசி மாறாமல் இருக்கும். &&&&&&

குளிர்காலம்

@@@@@@ குளிர்காலம் குளிர்காலம் என்றாலே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது இருக்கிறது. அந்த நடவடிக்கைகளை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சட்டென்று வந்து ஒட்டிக்கொண்டு விடுகின்றன. பொதுவாக, கோடைகாலத்தில் குளிர்பானங்களுக்கு எல்லோருமே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். காரணம், அப்போது வெயில் காரணமாக உடலில் அதிக அளவில் வியர்வை வெளியாகும், சக்தி இழப்பு உடனே ஏற்படும். இதுதவிர, "அல்கலைன் சிட்ரைட்" என்ற அமிலமும் அதிக அளவில் வெளியாகிறது. புளிப்பு சுவை கொண்ட மோர், பானகம் உள்ளிட்ட பானங்களை அப்போது அருந்துவதன் மூலம், அந்த அமில இழப்பை சரி செய்து கொள்ளலாம். இதே புளிப்பு சுவை கொண்ட குளிர்பானங்களை குளிர்காலத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது. மீறி எடுத்துக்கொண்டால், உடலில் உள்ள "அக்கலைன் சிட்ரைட்" அமிலத்தின் அளவு அதிகரித்து சைனஸ், மார்புச்சளி, ஜலதோஷம் போன்ற பாதிப்புகளை அதிகப்படுத்திவிடும். அதனால், குளிர் காலத்தில் "கூல் டிரிங்ஸ்" மட்டுமின்றி புளிப்பு சுவை கொண்ட பானங்களும் வேண்டவே வேண்டாம். ஏன்... புளிப்பு சுவை கொண்ட வைட்டமின்-சி பழங்களைக்கூட அளவோடுதான் சாப்பிடவேண்டும் என்கிறார்கள் டாக்டர்கள். -

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

@@@@@@@@@@@@@ தினசரி ஒரு மிஷனெரி இயக்கம் இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார். "இந்திய இல்லங்களில் நற்செய்தி இயக்கம் (I.E. H.C)" $$$$$$$

நீதிமொழிகள் 13 :18-25

புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் இலச்சையையும் அடைவான்: கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ கனமடைவான். வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது: தீமையை விட்டு விலகுவது மூடருக்கு அருவருப்பு. ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்: மூடருக்குத் தோழனோ நாசமடைவான். பாவிகளை தீவினை தொடரும்: நீதிமான்களுக்கோ நன்மை பயனாக வரும். நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்திரம் வைத்துப்போகிறான்: பாவியின் ஆஸ்தியோ நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும். ஏழைகளின் வயல் மிகுதியான ஆகாரத்தை விளைவிக்கும்: நியாயம் கிடையாமல் கெட்டுப்போகிறவர்களும் உண்டு. பிரம்பைக் கையாடாதவன் தன்மகனைப் பகைக்கிறான்: அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான். நீதிமான் தனக்குத் திருப்தியாகப் புசிக்கிறான்: துன்மார்க்கருடைய வயிறோ பசித்திருக்கும். நீதிமொழிகள் 13 :18-25

Monday, 12 December 2016

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார் "இந்திய தேசத்திலுள்ள மலைபிரதேசங்களில் கர்த்தருடைய ஆளுகை கடந்துவர, பாதுகாக்கப்பட" @@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

@@@@@@@@@@@@@ தினசரி ஒரு மிஷனெரி இயக்கம் இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார். "இந்திய அருட்பணி இயக்கம் (I.F.M)" $$$$$$$

நீதிமொழிகள் 13 :9-17

நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷிப்பிக்கும்; துன்மார்க்கரின் தீபமோ அணைந்துபோம். அகந்தையினால்மாத்திரம் வாது பிறக்கும்: ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு. வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோம்: கைப்பாடாய்ச் சேர்க்கிறவனோ விருத்தியடைவான். நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்: விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும். திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்: கற்பனைக்கு பயப்படுகிறவனோ பலனடைவான். ஞானவான்களுடைய போதகம் ஜீவ ஊற்று: அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்;. நற்புத்தி தயையை உண்டாக்கும்: துரோகிகளுடைய வழியோ கரடுமுரடானது. விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான்: மூடனோ தன் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான். துரோகமுள்ள தூதன் தீதிலே விழுவான்: உண்மையுள்ள ஸ்தானாதிபதியோ ஒளஷதம். நீதிமொழிகள் 13 :9-17

Sunday, 11 December 2016

சமையல் குறிப்பு

@@@@@ சமையல் குறிப்பு காலிப்ளவரை சமைக்கும் முன் வெந்நீரில் சர்க்கரை கலந்து வேக வைத்தால் காளிப்ளவர் வெண்மையாக இருப்பதுடன் கண்ணுக்குத் தெரியாத புழுக்கள் அழிந்து விடும். &&&&&&

மூட்டு வலி

@@@@#@ மூட்டு வலி "தலைவலியும் பல் வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்"னு சொல்வாங்க. அதுகூட... மூட்டு வலியையும் சேர்த்துக்கலாம். அது கொடுக்கிற இம்சை அவ்ளோ பெரிசு. வயசானவங்களுக்கு வரக்கூடியது, ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ்னு சொல்ற மூட்டு வலி. மூட்டுல உள்ள திரவம் குறைஞ்சு, ஒருவித இறுக்கம் உண்டாகி, உயிர் போகிற மாதிரி வலிக்கும். நம்ம உடம்புல உள்ளே செல்லே, உடல் உறுப்புக்கு எதிரியாகி வேலை செய்யறதோட விளைவு இது. 30-40 வயசுல உண்டாகிறது ருமட்டாயிட் ஆர்த்ரைட்டிஸ்னு சொல்ற வலி. கை, கால் விரல்கள்ல உள்ள சின்னச்சின்ன மூட்டுகள்லகூட இந்த வலியை உணரலாம். முக்கியமா காலை நேரத்துல வலி அதிகமிருக்கும். இது சீசனுக்கு ஏத்தபடி மாறி மாறி வரும். பரம்பரையாகவும் தாக்கக்கூடியது. எந்தவிதமான மூட்டு வலியா இருந்தாலும், அது நாம சாப்பிடற உணவோட ஓரளவு சம்பந்தப் பட்டதுன்னு கண்டுபிடிச்சிருக்காங்க மருத்துவர்கள். அதேசமயம் மூட்டு வலியால அவதிப்படற எல்லாருக்கும் அவங்களோட சாப்பாடுதான் காரணம்னும் சொல்லிட முடியாதுங்கிறாங்க அவங்க. பரம்பரைத்தன்மையோ, வேற காரணமோ இல்லாம திடீர்னு மூட்டு வலியால பாதிக்கப்படறவங்க, முதல்ல கவனிக்க வேண்டிய விஷயம், அவங்களோட டயட்! மூட்டு வலியால பாதிக்கப்பட்டவங்களை இப்படி ஒரு ஆராய்ச்சிக்கு உட்படுத்தினப்ப, அவங்கள்ல பலரும் அசைவ உணவுப்பழக்கம் உள்ளவங்களா இருந்தது தெரிய வந்ததாம். முதல் கட்டமா, அசைவத்துலேர்ந்து சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறச் சொன்னபோது, ஒரு சில நாட்கள்லயே வலி குறையறதை உணர்ந்திருக்காங்க அவங்க. மூட்டு வலியை உண்டாக்கி, அந்த இடத்துல வீக்கத்தையும் ஏற்படுத்தக்கூடியது அசைவ உணவு. அப்படின்னா சைவம் மட்டுமே சாப்பிடறவங்களுக்கு மூட்டு வலி வர்றதில்லையான்னு கேட்கலாம். அவங்களும் கொழுப்பு குறைவான உணவை எடுத்துக்கிறப்ப, வலி குறையறதை உணர்வதா சொல்றாங்க. சோளம், கோதுமை, ஆரஞ்சு, எலுமிச்சை, ஓட்ஸ், கேழ்வரகு, தக்காளி, பால் மற்றும் பால் பொருட்கள், மிளகு, சோயா, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, அதிகாரம், ஆல்கஹால், முட்டை, வேர்க்கடலை, அதிக சர்க்கரை, வெண்ணெய், மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி... இதெல்லாம் மூட்டுவலியை அதிகப்படுத்தற உணவுகளாம். மூட்டு வலியோட அறிகுறிகளை உணர்ந்ததுமே, முதல் கட்டமா மேல சொன்ன உணவுகள்ல ஒவ்வொண்ணா நிறுத்திப் பார்க்கலாம். உணவு அலர்ஜியால் உண்டான வலியா இருந்தா, அதை நிறுத்தினதுமே குணம் தெரியும். இதய நோய் இருக்கிற சிலருக்கு, மூட்டு வலி இருக்கலாம். அவங்க தினமும் 2 அல்லது 3 பூண்டை பச்சையா சாப்பிடறது இதயம், மூட்டு ரெண்டுக்குமே நல்லது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ள உணவுகளும் மூட்டுக்கு நல்லது. ஃபிளாக்ஸ் சீட்ஸ்னு இப்ப கடைகள்ல கிடைக்கிற ஆளி விதைல, அக்ரோட், பாதாம்ல இது நிறைய இருக்கு. தவிர சில வகை மீன்கள்லயும் அதிகமா இருக்கு. வலியோட வீக்கமும் சேர்ந்திருந்தா, தினம் இஞ்சியை ஏதாவது ஒரு வகைல எடுத்துக்கிறதும் குணம் தரும். மூட்டுவலி வந்ததுமே என்னவோ ஏதோனு அலறத் தேவையில்லை. முதல்ல உங்க உணவை சரிபாருங்க. நீங்க அடிக்கடி விரும்பிச் சாப்பிடற ஏதோ ஒரு உணவுகூட அலர்ஜியாகி, வலியைக் கொடுத்திருக்கலாம். அடுத்து கவனிக்க வேண்டியது எண்ணெய், அதையும் அளவோட எடுத்துக்க வேண்டியது முக்கியம். எதுலயும் குணம் தெரியாதப்ப, மருத்துவரைப் பார்க்கலாம்.

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம

@@@@@@@@@@@@@ தினசரி ஒரு மிஷனெரி இயக்கம் இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார். ("பெத்தேல் அருட்பணி இயக்கம் (B.O.M))" $$$$$$$

நீதிமொழிகள் 13 :1-8

ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்: பரிகாசக்காரனோ கடிந்துகொள்ளுதலுக்குச் செவிகொடான். மனுஷன் தன் வாயின் பலனால் நன்மையைப் புசிப்பான்: துரோகிகளின் ஆத்துமாவோ கொடுமையைப் புசிக்கும். தன் வாயைக் காக்கிறவன் தன் பிராணனைக் காக்கிறான்: தன் உதடுகளை விரிவாய்த் திறக்கிறவனோ கலக்கமடைவான். சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது: ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்மாவோ புஷ்டியாகும் நீதிமான் பொய்ப்பேச்சை வெறுக்கிறான்: துன்மார்க்கனோ வெட்கமும் இலட்சையும் உண்டாக்குகிறான். நீதி உத்தமமார்க்கத்தானைத் தற்காக்கும்: துன்மார்க்கமோ பாவியைக் கவிழ்த்துப்போடும். ஒன்றுமில்லாதிருக்கத் தன்னைச் செல்வனாகப் பாராட்டுகிறவனும் உண்டு; மிகுந்த செல்வமிருக்கத் தன்னைத் தரித்திரனாகப் பாராட்டுகிறவனும் உண்டு. மனுஷருடைய ஐசுவரியம் அவன் பிராணனை மீட்கும்: தரித்திரனோ மிரட்டுதலைக் கேளாதிருக்கிறான். நீதிமொழிகள் 13 :1-8

தினம் ஒரு ஜெபக்குறிப்பு.

♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார் "இந்தியாவில் மனித உரிமைகள் நிலைநாட்டப்பட" @@@@@

Saturday, 10 December 2016

நீதிமொழிகள் 12 :22-28

பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்: உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம். விவேகமுள்ள மனுஷன் அறிவை அடக்கிவைக்கிறான்: மூடருடைய இருதயமோ மதியீனத்தைப் பிரசித்தப்படுத்தும். ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகைசெய்யும்: சோம்பேறியோ பகுதிகட்டுவான். மனுஷருடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஓடுக்கும்: நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும். நீதிமான் தன் அயலானைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவன்: துன்மார்க்கருடைய வழியோ அவர்களை மோசப்படுத்தும். சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை; ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது. நீதியின் பாதையில் ஜீவன் உண்டு, அந்தப் பாதையில் மரணம் இல்லை. நீதிமொழிகள் 12 :22-28

Friday, 9 December 2016

நீதிமொழிகள் 12 :15-21

மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்: ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன். மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும், இலச்சையை மூடுகிறவனோ விவேகி. சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; பொய்ச்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான். பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு: ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஒளஷதம். சத்திய உதடுகள் என்றும் நிலைத்திருக்கும்: பொய்நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும் தீங்கைப் பிணைக்கிறவர்களின் இருதயத்தில் இருக்கிறது கபடம்: சமாதானம் பண்ணுகிற ஆலோசனைக்காரருக்கு உள்ளது சந்தோஷம். நீதிமானுக்கு ஒரு கேடும் வராது: துன்மார்க்கரோ தீமையினால் நிறையப்படுவார்கள். நீதிமொழிகள் 12 :21

Tuesday, 6 December 2016

நீதிமொழிகள் 11 :17-24

@@@@@@ தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மைசெய்துகொள்ளுகிறான்: கடூரனோ தன் உடலை அலைக்கழிக்கிறான். துன்மார்க்கன் விருதாவேலையைச் செய்கிறான்; நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான். நீதி ஜீவனுக்கு ஏதுவாகிறதுபோல் தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்துக்கு ஏதுவாகிறான். மாறுபாடுள்ள இருதயமுள்ளவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்: உத்தம மார்க்கத்தாரோ அவருக்குப் பிரியமானவர்கள். கையோடே கைகோர்த்தாலும், துஷ்டன் தண்டனைக்குத் தப்பான்; நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும். மதிகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ, பன்றியின் மூக்கிலுள்ள பொன்மூக்குத்திக்குச் சமானம். நீதிமான்களுடைய ஆசை நன்மையே: துன்மார்க்கருடைய நம்பிக்கையோ கோபாக்கினையாய் முடியும். வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு, அதிகமாய் பிசினித்தனம் பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு. நீதிமொழிகள் 11 :17-24 @@@@@

நீதிமொழிகள் 11 :1-8

கள்ளத்தராசு கர்த்தருக்கு அருவருப்பானது: சுமுத்திரையான நிறைகல்லோ அவருக்குப் பிரியம். அகந்தை வந்தால் இலச்சையும் வரும்: தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு. செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்: துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப பாழாக்கும். கோபாக்கினை நாளில் ஐசுவரியம் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும். உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்: துன்மார்க்கனோ தன் துன்மார்க்கத்தினால் விழுவான். செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்; துரோகிகளோ தங்கள் தீவினையிலே பிடிபடுவார்கள். துன்மார்க்கன் மரிக்கும்பேது அவன் நம்பிக்கை அழியும், அக்கிரமக்காரரின் அபேட்சை கெட்டுப்போம். நீதிமான் இக்கட்டினின்று விடுவிக்கப்படுவான்: அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான். நீதிமொழிகள் 11 :1-8

நீதிமொழிகள் 11 :9-16

@@@@@@ மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்: நீதிமானோ அறிவினால் தப்புகிறான். நீதிமான்கள் நன்றாயிருந்தால் பட்டணம் களிகூரும்: துன்மார்க்கர் அழிந்தால் கெம்பீரம் உண்டாகும். செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்றோங்கும்: துன்மார்க்கருடைய வாயினால் அது இடிந்துவிழும். மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்: புத்திமானோ தன் வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான். புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெறிப்படுத்துகிறான்: ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான். ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்;: அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும். அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் வெகு பாடுபடுவான்: பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாயிருப்பான். நல்லொழுக்கமுள்ள ஸ்திரீ மானத்தைக் காப்பாள்; பராக்கிரமசாலிகள் ஐசுவரியத்தைக் காப்பார்கள். நீதிமொழிகள் 11 :9-16

நீதிமொழிகள் 10 :27-32

27 கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும்: துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம். நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்: துன்மார்க்கருடைய அபேட்சையோ அழியும். கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு அரண், அக்கிரமகாரருக்கோ கலக்கம். நீதிமான் என்றும் அசைக்கப் படுவதில்லை, துன்மார்க்கர் பூமியில் வசிப்பதில்லை. நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்: மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோம். நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப்பேச அறியும், துன்மார்க்கருடைய வாயோ மாறூபாடுள்ளது. நீதிமொழிகள் 10 :27-32

நீதிமொழிகள் 10 :20-26

நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி: துன்மார்க்கனுடைய மனம் அற்ப விலையும் பெறாது. நீதிமானுடைய உதடுகள் அநேகரைப் போஷிக்கும்; மூடரோ மதியீனத்தினால் மாளுவார்கள். கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார். தீவினை செய்வது மூடனுக்கு விளையாட்டு: புத்திமானுக்கோ ஞானம் உண்டு. துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்: நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்கு கொடுக்கப்படும். சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்: நீதிமானோ நித்திய அஸ்திபாரமுள்ளவன் பற்களுக்கு காடியும், கண்களுக்குப் புகையும் எப்படியிருக்கிறதோ, அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான். நீதிமொழிகள் 10 :20-26

நீதிமொழிகள். 9 :18

ஞானம் புத்தியீனனை நோக்கி: எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன். நீங்கள் வந்து என் அப்பத்தைப் புசித்து, நான் வார்த்த திராட்சரசத்தைப் பானம்பண்ணுங்கள்;. பேதைமையை விட்டு விலகுங்கள், அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்: புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று விளம்புகிறது. பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் இலச்சையடைகிறான்: துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக்கறைப்படுத்திக் கொள்கிறான். பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்: ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான். ஞானமுள்ளவனுக்குப் போதகம் பண்ணு, அவன் ஞானத்தில் தேறுவான்: நீதிமானுக்கு உபதேசம்பண்ணு, அவன் அறிவில் விருத்தியடைவான். கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு. ஞானம், நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்: நீ பரியாசக்காரனானால் நீயே அதன் பயனை அநுபவிப்பாய் என்று சொல்லுகிறது. மதியற்ற ஸ்திரீ வாயாடியும், ஒன்றுமறியாத நிர்மூடமுமாயிருக்கிறாள். அவள் தன் வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் ஆசனம் போட்டு உட்கார்ந்து, தங்கள் வழிகளை நோக்கி நேரே போகும் வழிப்போக்கரைப் பார்த்து: எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன் என்றும், மதியீனனை நோக்கி: திருட்டுத்தண்ணீர் தித்திக்கும், அந்தரங்கத்தில் புசிக்கும் அப்பம் இன்பமாயிருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள். ஆயினும் மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகளின் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான். நீதிமொழிகள் 9 :18

நீதிமொழிகள் 7:2-23

நீ கர்த்தருடைய கட்டளைகளையும் அவருடைய போதகத்தையும் உன் கண்மணியைப்போல் காத்துக்கொள், அப்பொழுது பிழைப்பாய். அவைகளை உன் விரல்களில் கட்டி, அவைகளை உன் இருதய பலகையில் எழுதிக்கொள். இச்சகவார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய பரஸ்திரீக்கு உன்னை விலக்கிக் காப்பதற்காக, ஞானத்தை நோக்கி, நீ என் சகோதரி என்றும், புத்தியைப்பார்த்து, நீ என் இனத்தாள் என்றும் சொல்வாயாக. பேதையர்களாகிய வாலிபருக்குள்ளே ஒரு புத்தியீன வாலிபன் மாலைமயங்கும் அஸ்தமனநேரத்திலும் இரவின் இருண்ட அந்தகாரத்திலும். அவள் இருக்கும் சந்துக்கடுத்த தெருவில் சென்று, அவள் வீட்டுவழியாய் நடந்துபோனான். அப்பொழுது இதோ, வேசியின் ஆடையாபரணந் தரித்த தந்திரமனமுள்ள ஒரு ஸ்திரீ அவனுக்கு எதிர்ப்பட்டாள். அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள்: அவள் கால்கள் வீட்டிலே தரிக்கிறதில்லை. சிலவேளை வெளியிலிருப்பாள், சிலவேளை வீதியிலிருப்பாள், சந்துகள்தோறும் பதிவிருப்பாள். அவள் அவனைப் பிடித்து முத்தஞ்செய்து, முகம் நாணாமல் அவனைப்பார்த்து: சமாதான பலிகள் என்மேல் சுமந்திருந்தது, இன்றைக்குத்தான் என் பொருத்தனைகளை நிறைவேற்றினேன். ஆதலால், நான் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு, உன் முகத்தை ஆவலோடு தேடினேன்: இப்பொழுது உன்னைக் கண்டுபிடித்தேன். என் மஞ்சத்தை இரத்தின கம்பளங்களாலும், எகிப்துதேசத்து விசித்திரமான மெல்லிய வஸ்திரங்களாலும் சிங்காரித்தேன். என் படுக்கையை வெள்ளைப்போளத்தாலும் சந்தனத்தாலும் இலவங்கப்பட்டையாலும் வாசனை கட்டினேன். வா, விடியற்காலம் வரைக்கும் சம்போகமாயிருப்போம், இன்பங்களினால் பூரிப்போம். வா, விடியற்காலம் வரைக்கும் சம்போகமாயிருப்போம், இன்பங்களினால் பூரிப்போம். புருஷன் வீட்டிலே இல்லை, தூரப் பிரயாணம் போனான். பணப்பையைத் தன் கையிலே கொண்டுபோனான், குறிக்கப்பட்ட நாளிலே வீட்டுக்கு வருவான் என்று சொல்லி, தன் மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, தன் உதடுகளின் மதுரவாக்கினால் அவனை இணங்கப் பண்ணினாள். உடனே அவன் அவள் பின்னே சென்றான்: ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டுத் தண்டனைக்குப் போவது போலும், ஒரு குருவி தன் பிராணணை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழத் தீவிரிக்கிறது போலும், அவளுக்குப் பின்னே போனான்: அம்பு அவன் ஈரலைப் பிளந்தது. நீதிமொழிகள் 7:2-23

நீதிமொழிகள் 6 :24-35

தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக் கூடுமோ? தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக் கூடுமோ? பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பபனும், அப்படியே அவளைத்தொடுகிற எவனும் ஆக்கினைக்குத் தப்பான். திருடன் தன் பசியை ஆற்றத் திருடினால் ஜனங்கள் அவனை இகழமாட்டார்கள். அவன் கண்டுபிடிக்கப்பட்டால் ஏழு மடங்கு கொடுத்துத் தீரவேண்டும்: தன் வீட்டிலுள்ள பொருட்களையெல்லாம் கொடுக்கவேண்டியதாகும். ஸ்திரீயுடனே விபசாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன்: அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப் போடுகிறான். வாதையையும் இலச்சையையும் அடைவான்: அவன் நிந்தை ஒளியாது ஸ்திரீயைப் பற்றிய எரிச்சல் புருஷனுக்கு மூர்க்கத்தை உண்டுபண்ணும்: அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடான். அவன் எந்த ஈட்டையும் பாரான்: அநேகம் வெகுமதிகளைக் கொடுத்தாலும் அமர்ந்திருக்கமாட்டான நீதிமொழிகள் 6 :24-35

நீதிமொழிகள் 6 :24-35

தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக் கூடுமோ? தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக் கூடுமோ? பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பபனும், அப்படியே அவளைத்தொடுகிற எவனும் ஆக்கினைக்குத் தப்பான். திருடன் தன் பசியை ஆற்றத் திருடினால் ஜனங்கள் அவனை இகழமாட்டார்கள். அவன் கண்டுபிடிக்கப்பட்டால் ஏழு மடங்கு கொடுத்துத் தீரவேண்டும்: தன் வீட்டிலுள்ள பொருட்களையெல்லாம் கொடுக்கவேண்டியதாகும். ஸ்திரீயுடனே விபசாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன்: அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப் போடுகிறான். வாதையையும் இலச்சையையும் அடைவான்: அவன் நிந்தை ஒளியாது ஸ்திரீயைப் பற்றிய எரிச்சல் புருஷனுக்கு மூர்க்கத்தை உண்டுபண்ணும்: அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடான். அவன் எந்த ஈட்டையும் பாரான்: அநேகம் வெகுமதிகளைக் கொடுத்தாலும் அமர்ந்திருக்கமாட்டான நீதிமொழிகள் 6 :24-35

நீதிமொழிகள் 6 :22-26

@@@@@ நீ நடக்கும்போது உன் தகப்பன் கற்பனை உனக்கு வழிகாட்டும்: நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும்: நீ விழிக்கும்போது அது உன்னோடே சம்பாஷிக்கும். கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவவழி. அது உன்னைத் துன்மார்க்க ஸ்திரீக்கும், இச்சகம்பேசும் நாவையுடைய பரஸ்திரீக்கும் விலக்கிக் காக்கும். உன் இருதயத்திலே அவள் அழகை இச்சியாதே: அவள் தன் கண்ணிமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே. வேசியினிமித்தம் ஒரு அப்பத்துணிக்கையையும் இரக்கவேண்டியதாகும்: விபச்சாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள். நீதிமொழிகள் 6 :22-26

நீதிமொழிகள் 6 :12-21

பேலியாளின் மனுஷனாகிய ஒரு துன்மார்க்கன் ஆகடியம் பேசித்திரிகிறான். அவன் தன் கண்களால் சைகைகாட்டி, தன் கால்களால் பேசி, தன் விரல்களால் போதனை செய்கிறான். அவன் இருதயத்திலோ திரியாவரமுண்டு: இடைவிடாமல் பொல்லாப்பைப் பிணைத்து, வழக்குகளை உண்டுபண்ணுகிறான். ஆகையால் சடுதியில் அவனுக்கு ஆபத்து வரும்: சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான். ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை, துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங் கால், அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே. நீ உன் தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்: உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே. அவைகளை எப்பொழுதும் உன் இருதயத்திலே அணிந்து, அவைகளை உன் கழுத்திலே கட்டிக்கொள். நீதிமொழிகள் 6 :12-21