Wednesday, 27 July 2016

சங்கீதம் 95 :1-11

கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடி, உன்னுடைய இரட்சணியக் கன்மலையைச் சங்கீர்த்தனம் பண்ணக்கடவாய். துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, சங்கீதங்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடக்கடவாய். கர்த்தரே மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார். பூமியின் ஆழங்கள் அவர் கையில் இருக்கிறது, பர்வதங்களின் உயரங்களும் அவருடையவைகள். சமுத்திரம் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார், வெட்டாந்தரையையும் அவருடைய கரம் உருவாக்கிற்று. உன்னை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நீ பணிந்து குனிந்து முழங்கால்படியிடக்கடவாய் . அவர் உன்னுடைய தேவன், நீ அவர் மேய்ச்சலின் ஜனமும், அவர்கைக்குள்ளான ஆடுமாவாய். இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பாயாகில், வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனைநாளிலும் நடந்ததுபோல, உன் இருதயத்தைக் கடினப்படுத்தாதே. அங்கே உன் பிதாக்கள் கர்த்தரைச் சோதித்து, அவரைப் பரீட்சை பார்த்து, அவர் கிரியையையும் கண்டார்கள். நாற்பது வருஷமாய் கர்த்தர் உன் சந்ததியை அரோசித்து, அவர்கள் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், அவருடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி, அவருடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று, அவருடைய கோபத்திலே ஆணையிட்டார். சங்கீதம் 95 :1-11

No comments:

Post a Comment