Sunday, 17 July 2016

சங்கீதம் 85 :1-13

கர்த்தர், அவரது தேசத்தின்மேல் பிரியம் வைத்து, யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினார். அவரது ஜனத்தின் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினார். அவரது உக்கிரத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு, அவரது கோபத்தின் எரிச்சலைவிட்டுத் திரும்பினார். அவர்கள் இரட்சிப்பின் தேவன். அவர்களைத் திருப்பிக்கொண்டுவருவார், அவர்கள்மேலுள்ள அவரது கோபத்தை ஆறப்பண்ணுவார். என்றைக்கும் அவர்கள்மேல் கோபமாயிரார் தலைமுறை தலைமுறையாக அவரது கோபத்தை நீடித்திருக்கப்பண்ணார். அவரது ஜனங்கள் அவரில் மகிழ்ந்திருக்கும்படி அவர் அவர்களைத் திரும்ப உயிர்ப்பிப்பார் கர்த்தர், அவரது கிருபையை அவர்களுக்குக் காண்பித்து, அவரது இரட்சிப்பை அவர்களுக்கு அருளிச்செய்வார். கர்த்தராகிய தேவன் விளம்புவதைக் கேட்பாகள், அவர் தம்முடைய ஜனங்களுக்கும் தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார், அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாதிருப்பார்களாக. நம்முடைய தேசத்தில் மகிமைவாசமாயிருக்கும்படி, அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது. கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும். சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும், நீதி வானத்திலிருந்து தாழப்பார்க்கும். கர்த்தர் நன்மையானதைத் தருவார், நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும். நீதி அவருக்கு முன்னாகச்சென்று, அவருடைய அடிச்சுவடுகளின் வழியிலே நம்மை நிறுத்தும் சங்கீதம் 85 :1-13

No comments:

Post a Comment