Friday, 22 July 2016

சங்கீதம் 90 :1-17

தேவன் தலைமுறை தலைமுறையாக உனக்கு அடைக்கலமானவர். பர்வதங்கள் தோன்றுமுன்னும், அவர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், அவரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறார். அவர் மனுஷரை நிர்த்தூளியாக்கி, மனுபுத்திரரே, திரும்புங்கள் என்கிறார். அவரது பார்வைக்கு ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இராச்சாமம்போலவும் இருக்கிறது. மனுபுத்திரரை வெள்ளம்போல் வாரிக்கொண்டுபோகிறார், அவர்கள் நித்திரைக்கு ஒத்திருக்கிறார்கள், காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். அது காலையிலே முளைத்துப் பூத்து, மாலையிலே அறுப்புண்டு உலர்ந்துபோம். அவர்கள் அவரது கோபத்தினால் அழிந்து, அவரது உக்கிரத்தினால் கலங்கிப்போகிறாரகள். அவர்கள் அக்கிரமங்களை அவருக்கு முன்பாகவும், அவர்கள் அந்தரங்க பாவங்களை அவரது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினார். அவர்கள் நாட்களெல்லாம் அவரது கோபத்தால் போய்விட்டது, ஒரு கதையைப்போல் அவர்கள் வருஷங்களைக் கழித்துப்போட்டார்கள். அவர்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே , அது சீக்கிரமாய்க் கடந்து போகிறது, நாமும் பறந்துபோகிறோம். அவரது கோபத்தின் வல்லமையையும், அவருக்குப் பயப்படத்தக்க விதமாய் அவரது உக்கிரத்தையும் அறிந்து கொள்ளுகிறவன் யார்? நீ ஞான இருதயமுள்ளவனாகும்படி, உன் நாட்களை எண்ணும் அறிவை உனக்குப் போதித்தருளுவார். கர்த்தர், திரும்பிவருவார்! எதுவரைக்கும் கோபமாயிருப்பார்? அவரது அடியாருக்காகப் பரிதபிப்பாா். நீ உன் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே உன்னை அவரது கிருபையால் திருப்தியாக்குவார். தேவன் உன்னைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நீ துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் உன்னை மகிழ்ச்சியாக்குவார். அவரது கிரியை அவரது ஊழியக்காரருக்கும், அவரது மகிமை அவர்கள் பிள்ளைகளுக்கும் விளங்குவதாக. உன் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் உன் மேல் இருப்பதாக, உன் கைகளின் கிரியையை உன்னிடத்தில் உறுதிப்படுத்துவார், ஆம், உன் கைகளின் கிரியையை உன்னிடத்தில் உறுதிப்படுத்தியருளுவார்.

No comments:

Post a Comment