Blog Archive
-
▼
2016
(788)
-
▼
July
(36)
- குழந்தைகளுக்கான சத்தான உணவு
- உப்பு
- சங்கீதம் 98 :1-9
- சங்கீதம் 96 :1-13
- உலர் திராட்சை
- சங்கீதம் 95 :1-11
- வரட்சி
- மதிய உணவு திட்டம்
- சங்கீதம் 94 :5-7,15-23
- தாகத்துக்கு தண்ணீர்
- சங்கீதம் 93 :1-5
- சங்கீதம் 94 :1-4,8-14
- புதினா
- மத்திய அரசுப் பணியாளர்கள்
- பூசணிக்காய்
- சங்கீதம் 92:1-15
- சங்கீதம் 90 :1-17
- சங்கீதம் 91 :1-16
- தயிர்
- ஆரோக்கியம்
- ஆணவக் கொலை
- நீரிழிவு நோய்
- சங்கீதம் 89 :11-17
- சங்கீதம் 89 :1-10
- மாமரத்து இலை
- நிலநடுக்கம்
- மாம்பூவும், பட்டையும்
- உச்ச நீதிமன்றம் கெடு
- சங்கீதம் 85 :1-13
- சங்கீதம் 84 :1-12
- சங்கீதம் 83 :1-18
- பள்ளி வாகனங்கள்!
- சங்கீதம் 80 :8-17
- சங்கீதம் 78 :23-31
- சங்கீதம் 78 :17-22
- சங்கீதம்78:12-16
-
▼
July
(36)
Total Pageviews
Sunday, 31 July 2016
குழந்தைகளுக்கான சத்தான உணவு
குழந்தைகளுக்கான சத்தான உணவு இன்றைய நவீன, அவசர உலகில் குழந்தைகளுக்கான சத்தான உணவு குறித்து பெற்றோர் கவலைப்படுவதில்லை. அவர்களின் வயிற்றை நிரப்ப ஏதாவது ஓர் உணவு போதும் என்று நினைக்கிறார்கள். இதனால் குழந்தைகள் அதிக கலோரிகள் நிறைந்த சிப்ஸ்கள், ஐஸ்கிரீம், சாக்லேட்கள் மீது அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இவற்றால் உடல் வளர்ச்சிக்குத் தேவையான எந்தவிதச் சத்தும் கிடைப்பதில்லை. உணவைக் குழந்தைகள் விரல்களால் தொட்டு உணர்ந்து சாப்பிடப் பழக்க வேண்டும். பச்சைக் காய்கறிகள், சிறிய வகை சான்ட்விச்கள், பழங்களைக் கைகளால் குழந்தைகள் எடுத்துச் சாப்பிடும்போது உணவு மீதான அதன் ஆர்வம் அதிகரிக்கிறது. இரவு உறங்கி எழுந்தவுடன் காலை நேரத்தில் சாப்பிடும் உணவு சத்தானதாக இருப்பது அவசியம். பொதுவாக ஒரே மாதிரியான உணவு மெனுவைக் குழந்தைகள் விரும்புவதில்லை. குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் வகையிலும் அதேசமயம் சத்தானதுமான ஒருசில காலை நேர உணவு வகைகள் இதோ: காரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு போன்ற பலவகைக் காய்கறிகளை துருவிப்போட்டு ஆவியில் வேகவைத்த இடியாப்பம். அதே போன்ற வண்ணமயமான காய்களைப் பயன்படுத்திச் செய்யப்படும் பிரட் சான்ட்விச். பருப்புபோட்டுத் தாளித்த பணியாரம். அவல் உப்புமா. காரட்டைத் துருவிப்போட்டுத் தயாரிக்கும் ஊத்தாப்பம். பலவித காய்கறிகளைச் சிறிதாக நறுக்கியோ, துருவிப்போட்டோ செய்யப்படும் தோசை. பாலுடன் உண்ணத்தக்க கான்ஃப்ளேக்ஸ். காய்கறிகளை நிரப்பி ரோல்போல் சுருட்டி செய்யப்படும் ஸ்டஃப்ட் சப்பாத்தி. சாம்பார் மற்றும் நிலக்கடலைச் சட்னியுடன்கூடிய மினி இட்லி. வெஜிடபிள் ரவா தோசை. காரம் மற்றும் இனிப்புக் கொழுக்கட்டை. இனிப்புக் கொழுக்கட்டையின் உள்ளே பூர்ணமாக வைக்க கடலைப்பருப்பு வேகவைத்து வெல்லம் அல்லது சர்க்கரை கலந்து உருண்டை பிடிக்கலாம். சத்தானதும்கூட. பூரி, அதற்கு இணையாக முளை கட்டிய பயறு சேர்த்த மசாலா. அரிசியால் செய்யப்பட்ட ஃப்ளேக்ஸ். இதை பால், தேன், பழங்கள் மற்றும் உலர்ந்த கொட்டைகளுடன் (பாதாம், பிஸ்தா, முந்திரி, உலர் திராட்சை) சேர்த்துக் கொடுக்கலாம். சர்க்கரைப் பொங்கல். இதில் அரிசியும், பாசிப்பருப்பும் சேர்க்கப்படுவதால் கூடுதல் சத்து. இவற்றுடன் நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தினசரி கட்டாயம் கொடுக்கவேண்டிய உணவு வகைகள் உள்ளன. அவை: நாளொன்றுக்கு 2 கப் பால். ஒரு வாரத்துக்கு 3 அல்லது 4 முட்டைகள். தினமும் ஒரு கப் ஆரஞ்சு ஜூஸ் அல்லது சாத்துக்குடி ஜூஸ் அல்லது எலுமிச்சை ஜூஸ். ஆப்பிள், வாழைப்பழம், மாதுளை, கொய்யா, பைன் ஆப்பிள், பப்பாளி, ஆரஞ்ச், சாத்துக்குடி, மாம்பழம் போன்ற ஏதேனும் ஒரு பழமோ அல்லது பழக் கலவைகளோ தினசரி 2 முதல் 4 மேஜைக் கரண்டிகள். காரட், பட்டாணி, பீட்ரூட் போன்ற வேக வைத்த காய்கறிகள், முட்டைக்கோஸ் போன்ற இலைக் காய்கறிகளை தினசரி 2 முதல் 3 மேஜைக் கரண்டிகள். வேக வைத்த ஓர் உருளைக்கிழங்கு. காரட், வெள்ளரி, தக்காளி போன்ற காய்கறிகளில் ஏதேனும் ஒன்றைப் பச்சையாகக் கொடுக்கலாம். வறுக்கப்பட்ட அல்லது நன்கு வேகவைக்கப்பட்ட தானிய வகைகள் கால் கப் அல்லது முக்கால் கப். வேகவைக்கப்பட்ட பருப்பு வகைகளில் ஏதேனும் ஒன்று அரை கப். இந்த உணவு வகைகள் குழந்தைக்குக் குழந்தை மாறுபடும். குழந்தைகளின் விருப்பத்திற்கேற்ப உணவு வகைகளில் ஒரு சில மாற்றங்களைச் செய்து கொடுக்கலாம். - உணவே மருந்து
உப்பு
உப்பு சிலசமயங்களில் மிகவும் குறைவான இதயத் துடிப்பு இருந்தாலும், பிரச்சனையை சந்திக்க நேரிடும். எனவே இதயத் துடிப்பு குறைவாக இருப்பவர்கள், உப்புள்ள உணவுகளை சாப்பிட்டால், சீராக வைக்கலாம். ஆனால், அதிகமான இதயத் துடிப்பு உள்ளவர்கள், உப்பை சேர்க்கவே கூடாது
சங்கீதம் 98 :1-9
கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள், அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார், அவருடைய வலதுகரமும், அவருடைய பரிசுத்த புயமும், இரட்சிப்பை உண்டாக்கினது. கர்த்தர் தமது இரட்சிப்பைப் பிரஸ்தாபமாக்கி, தமது நீதியை ஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக விளங்கப்பண்ணினார். அவர் இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது கிருபையையும், உண்மையையும் நினைவுகூர்ந்தார். , பூமியின் எல்லைகளெல்லாம் நமது தேவனுடைய இரட்சிப்பைக் கண்டது. பூமியின் குடிகளே, நீங்களெல்லாரும் கர்த்தரை நோக்கி ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள், முழக்கமிட்டுக் கெம்பீரமாய்ப் பாடுங்கள். சுரமண்டலத்தால் கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், சுரமண்டலத்தாலும் கீதசத்தத்தாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள். கர்த்தராகிய ராஜாவின் சமுகத்தில் பூரிகைகளாலும் எக்காள சத்தத்தாலும் ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள். சமுத்திரமும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதின் குடிகளும் முழங்குவதாக. கர்த்தருக்கு முன்பாக ஆறுகள் கைகொட்டி, பர்வதங்கள் ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடக்கடவது. அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார், பூலோகத்தை நீதியோடும் ஜனங்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார். சங்கீதம் 98 :1-9
Wednesday, 27 July 2016
சங்கீதம் 96 :1-13
கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள், பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைப் பாடுங்கள். கர்த்தரைப் பாடி, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரித்து, நாளுக்கு நாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள். ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள். கர்த்தர் பெரியவரும், மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார், எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே. சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே, கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர். மகிமையும் கனமும் அவர் சமுகத்தில் இருக்கிறது, வல்லமையும் மகத்துவமும் அவர் பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது. ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள், கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள். கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய பிராகாரங்களில் பிரவேசியுங்கள். பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள், பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள். கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், ஆகையால் பூச்சக்கரம் அசையாதபடி உறுதிப்பட்டிருக்கும், கர்த்தர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்ப்பார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லுங்கள். வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி, சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்குவதாக. நாடும் அதிலுள்ள யாவும் களிகூருவதாக, அப்பொழுது கர்த்தருக்கு முன்பாகக் காட்டுவிருட்சங்களெல்லாம் கெம்பீரிக்கும். கர்த்தர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார், அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார். சங்கீதம் 96 :1-13
உலர் திராட்சை
உலர் திராட்சையிலும் பொட்டாசியம் அதிகம் நிறைந்திருப்பதால், இதனை உட்கொள்வதன் மூலம், வேகமான இதயத் துடிப்பின் அளவானது குறையும்.
சங்கீதம் 95 :1-11
கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடி, உன்னுடைய இரட்சணியக் கன்மலையைச் சங்கீர்த்தனம் பண்ணக்கடவாய். துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, சங்கீதங்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடக்கடவாய். கர்த்தரே மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார். பூமியின் ஆழங்கள் அவர் கையில் இருக்கிறது, பர்வதங்களின் உயரங்களும் அவருடையவைகள். சமுத்திரம் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார், வெட்டாந்தரையையும் அவருடைய கரம் உருவாக்கிற்று. உன்னை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நீ பணிந்து குனிந்து முழங்கால்படியிடக்கடவாய் . அவர் உன்னுடைய தேவன், நீ அவர் மேய்ச்சலின் ஜனமும், அவர்கைக்குள்ளான ஆடுமாவாய். இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பாயாகில், வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனைநாளிலும் நடந்ததுபோல, உன் இருதயத்தைக் கடினப்படுத்தாதே. அங்கே உன் பிதாக்கள் கர்த்தரைச் சோதித்து, அவரைப் பரீட்சை பார்த்து, அவர் கிரியையையும் கண்டார்கள். நாற்பது வருஷமாய் கர்த்தர் உன் சந்ததியை அரோசித்து, அவர்கள் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், அவருடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி, அவருடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று, அவருடைய கோபத்திலே ஆணையிட்டார். சங்கீதம் 95 :1-11
வரட்சி
"இந்தியாவிலுள்ள சுமார் இரண்டரை இலட்சம் கிராமங்களில், வறட்சி ஏற்பட்டுள்ளது." என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்த கிராமங்களில் வாழும் மக்களுக்கு குடி நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேசத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் மாறிட பாரத்தோடு ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நம் தேசத்திற்கு கர்த்தர் இரக்கம் பாராட்டி போதுமான மழையை கட்டளையிட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம தண்ணீர் மேலாண்மை மற்றும் நதி நீர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம
Tuesday, 26 July 2016
மதிய உணவு திட்டம்
தேசம் முழுவதுமுள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள் உட்பட 12லட்சம் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய, வருமைக் கோட்டிற்கு கீழுள்ள மாணவர்களுக்கு மதியஉணவு வழங்கப்படுகிறது. இது உலகிலேயே மிகப்பெரிய ஊட்ட சத்து திட்டமாக கருதப் படுகிறது இந்த உணவு, ஒவ்வொரு குழந்தைகளுக்கும் போதுமான ஊட்டச் சத்தாக இருக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மதிய உணவு திட்டத்தை மேம்படுத்தவும், அவைகளை தரமிக்கதாக மாற்ற எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வாய்த்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் தரமற்ற உணவு பொருட்கள் வழங்கப் படாதிருக்க குழந்தைகள் நலன் பேணப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்
சங்கீதம் 94 :5-7,15-23
துன்மார்க்கர், கர்த்தருடைய ஜனத்தை நொறுக்கி, அவரது சுதந்தரத்தை ஒடுக்குகிறார்கள். விதவையையும் பரதேசியையும் கொன்று, திக்கற்ற பிள்ளைகளைக் கொலைசெய்து: கர்த்தர் பாரார், யாக்கோபின் தேவன் கவனியார் என்று சொல்லுகிறார்கள். நியாயம் நீதியினிடமாகத் திரும்பும், செம்மையான இருதயத்தார் யாவரும் அதைப் பின்பற்றுவார்கள். துன்மார்க்கருக்கு விரோதமாய் கர்த்தருடையபட்சத்தில் எழும்புகிறவன் யார்? அக்கிரமக்காரருக்கு விரோதமாய் கர்த்தருடையபட்சத்தில் நிற்பவன் யார்? கர்த்தர் உனக்குத் துணையாயிராவிட்டால், உன் ஆத்துமா சீக்கிரமாய் மவுனத்தில் வாசம்பண்ணியிருக்கும். உன் கால் சறுக்குகிறது என்று நீ சொல்லும்போது, கர்த்தருடைய கிருபை உன்னைத் தாங்குகிறது. உன் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், கர்த்தருடைய ஆறுதல்கள் உன் ஆத்துமாவைத் தேற்றுகிறது. தீமையைக் கட்டளையினால் பிறப்பிக்கிற கொடுங்கோலாசனம் உமக்கு இசைந்திருக்குமோ? அவர்கள் நீதிமானுடைய ஆத்துமாவுக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, குற்றமில்லாத இரத்தத்தைக் குற்றப்படுத்துகிறார்கள். கர்த்தரோ உனக்கு அடைக்கலமும், உன் தேவனும் நீ நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார். அவர்களுடைய அக்கிரமத்தை அவர்கள்மேல் திருப்பி, அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களைச் சங்கரிப்பார், நம்முடைய தேவனாகிய கர்த்தரே அவர்களைச் சங்கரிப்பார். சங்கீதம் 94 :5-7,15-23
தாகத்துக்கு தண்ணீர்
மகாராஷ்டிரா மாநிலத்தில் காணப்படுகிற கொடுரமான வரட்சியினால், பொது மக்கள் குடிதண்ணீருக்காக கஷ்ட்டப் படும் சூழ் நிலை ஏற்பட்டுள்ளது. இப்போதைய சூழ்நிலையில், மனித உயிரினங்கள் காப்பாற்றப் படுவதற்கு மட்டும்தான் தண்ணீர் பயன் படுத்தப்பட வேண்டும், "குடிநீருக்குப் பதிலாக 'பீர்' அருந்துவது , நமதுநாட்டின் கலாச்சாரம் அல்ல" என்றும். "ஆகவே, மதுபான உற்பத்தி தொழற்சாலைகளுக்கு தண்ணீர் வினியோகத்தை முதலில் நிருத்தவேண்டும்" என்றும் ஒரு அரசியல் பிரமுகர் சமீபத்தில் கூறியுள்ளார். நமது நாட்டிலுள்ள பல மானிலங்களில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சம், குடிநீர் தட்டுபாடு முற்றிலும் மாறிட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் கர்த்தர் நம்முடைய தேசத்திற்கு தேவையான ஆசிர்வாத மழையைக் கொடுத்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்
Monday, 25 July 2016
சங்கீதம் 93 :1-5
கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், மகத்துவத்தை அணிந்துகொண்டிருக்கிறார், கர்த்தர் பராக்கிரமத்தை அணிந்து, அவர் அதைக் கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார், ஆதலால் பூச்சக்கரம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது. கர்த்தருடைய சிங்காசனம் பூர்வமுதல் உறுதியானது, கர்த்தர்ர் அநாதியாயிருக்கிறார். நதிகள் எழும்பின, நதிகள் இரைச்சலிட்டு எழும்பின, நதிகள் அலைதிரண்டு எழும்பின. திரளான தண்ணீர்களின் இரைச்சலைப்பார்க்கிலும், சழுத்திரத்தின் வலுமையான அலைகளைப்பார்க்கிலும், கர்த்தர் உன்னதத்திலே வல்லமையுள்ளவர். கர்த்தருடைய சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள், பரிசுத்தமானது நித்தியநாளாக கர்த்தருடைய ஆலயத்தின் அலங்காரமாயிருக்கிறது. சங்கீதம் 93 :1-5
சங்கீதம் 94 :1-4,8-14
நீதியைச் சரிக்கட்டுகிற தேவனாகிய கர்த்தர், பிரகாசிப்பார். பூமியின் நியாயாதிபதி, எழுந்து, பெருமைக்காரருக்குப் பதிலளிபார். துன்மார்க்கர் எது வரைக்கும் மகிழ்ந்து, எதுவரைக்கும் களிகூர்ந்திருப்பார்கள்? எதுவரைக்கும் அக்கிரமக்காரர் யாவரும் வாயாடி, கடினமாய்ப் பேசி, பெருமைபாராட்டுவார்கள்? எதுவரைக்கும் ஜனத்தில் மிருககுணமுள்ளவர்கள், உணர்வடையார்கள், மூடர், எப்பொழுது புத்திமான்களாயிருப் இருப்பார்கள்கள்? காதை உண்டாக்கினவர் கேளாரோ? கண்ணை உருவாக்கினவர் காணாரோ? ஜாதிகளைத் தண்டிக்கிறவர்கடிந்து கொள்ளாரோ? மனுஷனுக்கு அறிவைப் போதிக்கிறவர் அறியாரோ? மனுஷனுடைய யோசனைகள் வீணென்று கர்த்தர் அறிந்திருக்கிறார். கர்த்தர், துன்மார்க்கனுக்குக் குழிவெட்டப்படும்வரைக்கும், தீங்குநாட்களில் அமர்ந்திருக்கப்பண்ணி, சிட்சித்து, கர்த்தருடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான். கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார். சங்கீதம் 94 :1-4,8-14
Saturday, 23 July 2016
புதினா
புதினா புதினா, இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகளில் முதன்மையானதாக இல்லாவிட்டாலும், மருத்துவக்குணம் அதிகம் கொண்டது. அதிலும் இதனை சாப்பிட்டால், இதய தசைகள் வலிமையாவதுடன், இதயத்தில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து, இதயமானது ஆரோக்கியமாக இருக்கும்.
மத்திய அரசுப் பணியாளர்கள்
மத்திய அரசுப் பணியாளர்கள் கடந்த 2015 மார்ச் 1ம் தேதி 33'05 லட்சம் இருந்த அரசு பணியாளர்களின் எண்ணிக்கை வருகிற 2015மார்ச் 1ம் தேதிக்குள், 35'23 லட்சமாக உயரும் எனத் தெரிகிறது. ரெயில்வேத்துறையில் தற்போது 13,26,437 பேர் பணிபுரிகின்றனர்.மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் இன்னும் 6 லட்சம் காலி இடங்கள் இருப்பதாக மத்திய பணியானர் நலத்துறை கூறியுள்ளது. மத்திய அரசுத் துறையில் பணியாற்றுகிறவர்கள் கர்த்தருடைய அன்பை அறிந்துக் கொள்ள ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் இவர்களுடைய தகுதிகள், தாலந்துகள், திறமைகள், பொருளாதாரங்கள் தேவராஜிய பணிக்கு பயனுள்ளதாக மாரிட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். இவர்கள் மூலம் சுவிசேஷம் தேசத்தில் துரிதமாகச் செல்லவும் பாகால்களை பின்பற்றி சோரம் போகாதிருக்கவும் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்
பூசணிக்காய்
பூசணிக்காய் பூசணிக்காயில் மக்னீசியம் என்னும் இதயத் துடிப்பை சீராக வைக்கும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இந்த உணவுப் பொருளை உணவில் அதிகம் சேர்ப்பது நல்லது.
சங்கீதம் 92:1-15
கர்த்தரைத் துதிப்பதும், உன்னதமானவரின் நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவதும், பத்துநரம்பு வீணையினாலும், தம்புறாவினாலும், தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினாலும், காலையிலே அவரது கிருயையையும், இரவிலே அவரது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாயிருக்கும். கர்த்தர், அவரது செய்கைகளால் உன்னை மகிழ்ச்சியாக்கினார், அவரது கரத்தின் கிரியைகளினிமித்தம் ஆனந்தசத்தமிடு. கர்த்தருடைய கிரியைகள் எவ்வளவு மகத்துவமானவைகள்! அவரது யோசனைகள் மகா ஆழமானவைகள். மிருககுணமுள்ள மனுஷன் அதை அறியான், மூடன் அதை உணரான். துன்மார்க்கர் புல்லைப்போல தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும். கர்த்தர் என்றென்றைக்கும் உன்னதமானவராயிருக்கிறார். கர்த்தருடைய சத்துருக்கள் அழிவார்கள், அவரது சத்துருக்கள் அழிந்தேபோவார்கள், சகலஅக்கிரமக்காரரும் சிதறுண்டுபோவார்கள். கர்த்தர் உன் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவார் புது எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்படுவாய். உன் சத்துருக்களுக்கு நேரிடுவதை உன் கண்கள் காணும், உனக்கு விரோதமாய் எழும்புகிற துன்மார்க்கருக்கு நேரிடுவதை உன் காது கேட்கும். நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான். கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் அவர்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள். கர்த்தர் உத்தமரென்றும், உன் கன்மலையாகிய அவரிடத்தில் அநீதியில்லையென்றும், விளங்கப்பண்ணும்படி, உன் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பாய். சங்கீதம் 92 :1-15
Friday, 22 July 2016
சங்கீதம் 90 :1-17
தேவன் தலைமுறை தலைமுறையாக உனக்கு அடைக்கலமானவர். பர்வதங்கள் தோன்றுமுன்னும், அவர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், அவரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறார். அவர் மனுஷரை நிர்த்தூளியாக்கி, மனுபுத்திரரே, திரும்புங்கள் என்கிறார். அவரது பார்வைக்கு ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இராச்சாமம்போலவும் இருக்கிறது. மனுபுத்திரரை வெள்ளம்போல் வாரிக்கொண்டுபோகிறார், அவர்கள் நித்திரைக்கு ஒத்திருக்கிறார்கள், காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். அது காலையிலே முளைத்துப் பூத்து, மாலையிலே அறுப்புண்டு உலர்ந்துபோம். அவர்கள் அவரது கோபத்தினால் அழிந்து, அவரது உக்கிரத்தினால் கலங்கிப்போகிறாரகள். அவர்கள் அக்கிரமங்களை அவருக்கு முன்பாகவும், அவர்கள் அந்தரங்க பாவங்களை அவரது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினார். அவர்கள் நாட்களெல்லாம் அவரது கோபத்தால் போய்விட்டது, ஒரு கதையைப்போல் அவர்கள் வருஷங்களைக் கழித்துப்போட்டார்கள். அவர்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே , அது சீக்கிரமாய்க் கடந்து போகிறது, நாமும் பறந்துபோகிறோம். அவரது கோபத்தின் வல்லமையையும், அவருக்குப் பயப்படத்தக்க விதமாய் அவரது உக்கிரத்தையும் அறிந்து கொள்ளுகிறவன் யார்? நீ ஞான இருதயமுள்ளவனாகும்படி, உன் நாட்களை எண்ணும் அறிவை உனக்குப் போதித்தருளுவார். கர்த்தர், திரும்பிவருவார்! எதுவரைக்கும் கோபமாயிருப்பார்? அவரது அடியாருக்காகப் பரிதபிப்பாா். நீ உன் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே உன்னை அவரது கிருபையால் திருப்தியாக்குவார். தேவன் உன்னைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நீ துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் உன்னை மகிழ்ச்சியாக்குவார். அவரது கிரியை அவரது ஊழியக்காரருக்கும், அவரது மகிமை அவர்கள் பிள்ளைகளுக்கும் விளங்குவதாக. உன் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் உன் மேல் இருப்பதாக, உன் கைகளின் கிரியையை உன்னிடத்தில் உறுதிப்படுத்துவார், ஆம், உன் கைகளின் கிரியையை உன்னிடத்தில் உறுதிப்படுத்தியருளுவார்.
சங்கீதம் 91 :1-16
உன்னதமானவரின் மறைவிலிருக்கிற நீ சர்வவல்லவருடைய நிழலில் தங்குவாய். நீ கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவாய். அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார். அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார், அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய், அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும். இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும், இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய். உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது. உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்குவரும் பலனைக் காண்பாய். உனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய். ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது. உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள். சிங்கத்தின்மேலும,் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப் போடுவாய். நீ அவரிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் உன்னை விடுவிப்பார், அவர் நாமத்தை நீ அறிந்திருக்கிறபடியால் உன்னை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பார். நீ அவரை நோக்கிக் கூப்பிடு, அவர் உனக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வார், ஆபத்தில் அவரே உன்னோடிருந்து, உன்னைத் தப்புவித்து, உன்னைக் கனப்படுத்துவார். நீடித்த நாட்களால் உன்னைத் திருப்தியாக்கி, அவர் இரட்சிப்பை உனக்குக் காண்பிப்பார். சங்கீதம் 91 :1-16
தயிர்
தயிருக்கு இதய படபடப்பை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. ஏனெனில் இதில் நரம்பு செல்களை கட்டுப்பாட்டுடன் செயல்பட வைக்கும், வைட்டமின் பி12 அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே தயிரை தினமும் சாப்பிட்டு வந்தால், இதயத் துடிப்பை சீராக வைக்கலாம்.
Wednesday, 20 July 2016
ஆரோக்கியம்
ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளவும் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுதலே முதன்மையான வழியாகும். சரிவிகித ஊட்டச்சத்து தரும் உணவு முறையே ஆரோக்கியமான உடலையும் இதயத்தில் அழுத்தத்தையும் குறைத்து அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதிக அளவு டிரான்ஸ்-கொழுப்பு உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்கவும் உடலின் எடையை எப்போதும் கண்காணித்து அதை கட்டுக்கோப்பாக வைப்பது அவசியம். உடல் பருமன் இதய சார்ந்த நோய்களுக்கு மிக முக்கிய காரணமாக விளங்குகிறது. உங்களது உயரத்திற்கேற்ப எவ்வளவு எடை இருக்கவேண்டும் என்பதை கண்டறிந்து அதை கண்டிப்பாக அதனை கட்டுக்குள் வைப்பது மிக அவசியமாகும். உடற்பயிற்சி செய்யவும் தினமும் உடற்பயிற்சி அல்லது யோகாசனம் செய்து வருவது, உடலையும், இதயத்தையும் ஆரோக்கியமாக பாதுகாக்கிறது. அனுதினமும் பயில்வதற்கு ஏதேனும் ஒரு வகையான உடற்பயிற்சியை தேர்ந்தெடுத்து தொடர்ந்து செய்து வாருங்கள். விளையாட்டு, ஏரோபிக்ஸ் அல்லது நடனம் ஆகியவை உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. சுறுசுறுப்பாக இருக்கவும் உடலை சுறுசுறுப்பாக எப்போதும் வைத்திருக்க வேண்டும். நீங்கள் பொதுவாக அமர்ந்து வேலை செய்யும் தொழிலில் இருந்தால் தினமும் காலை அல்லது மாலையில் நடக்கவோ அல்லது மிதி வண்டியில் பயிற்சி மேற்கொள்வதோ உடலை சுறுசுறுப்பாக எப்போதும் வைத்திருக்க உதவும். கெட்ட பழக்கங்களை கைவிடவும் புகைப்பிடித்தல், மது அருந்துதல் மற்றும் இதர பழக்கங்களை தவிர்ப்பது நல்லது. இத்தகைய போதை பொருட்கள் உடலை ஊடுருவி மற்றும் உருக்குலைத்து உடலையும் இதயத்தையும் சேதப்படுத்துகின்றன. இத்தகைய போதைக்கு அடிமையாவதை மெதுவாக தவிர்க்க முயல வேண்டும் ஆனால் முழுமையாக விட்டு விட வேண்டும். மன அழுத்தத்தைக் குறைக்கவும் எவ்வளவு அதிகமாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணமிருந்தாலும் தனிப்பட்ட வாழ்கையிலும், வேலை அலுவல்களிலும் மன அழுத்தத்தின் அளவுகளை குறைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். வாழ்க்கையையும் வேலையும் சரி சமமாக வைத்து வாழ்கையின் வழிப்படியே சென்று சந்தோஷத்தை அனுபவிக்க முயலவேண்டும் அதிக அளவு அழுத்தம் இதய நோய்களை உருவாக்கி விடும். பரம்பரை நோய் தானா என்று கண்டறியவும் பரம்பரை பரம்பரையாக பற்பல இதயம் சார்ந்த நோய்கள் தொடர்ந்து வருகின்றன. ஆதலால் மரபணு சார்ந்த குடும்ப விஷயங்களை கண்டறிந்து முன் யோசனையுடன் அத்தகைய நோய்களை தவிர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். இது பின் நாட்களில் வரும் பல்வேறு சிக்கல்ளை தவிர்க்கும். அது மட்டுமல்லாமல் ஆரம்ப நிலையில் அறிந்து கொள்வதன் மூலம் இந்த நோய்களுக்கு சிகிச்சை செய்வதும் எளிதாக இருக்கிறது. உணவில் மீன்களை சேர்த்துக் கொள்ளவும் எண்ணெய் நிறைந்த மீன்களையும் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு மிக்க உணவுகளையும் உண்டால் இதயத்திற்கு மிகவும் நல்லது. மத்தி, புதிய டூனா, மற்றும் சால்மன் போன்ற மீன்கள் ஒமேகா-3 கொழுப்பு சத்து மிக்கவையாகும். இவை இதய கோளாறுகளிருந்து நம்மை காக்கின்றன. நல்ல தூக்கம் அவசியம் தினமும் போதுமான அளவிலும் மற்றும் நன்றாகவும் உறங்குவது மிகவும் அவசியமாகும். நீங்கள் தூங்கும் நேரத்தை குறைக்கும் போது பயம், மன அழுத்தம் மற்றும் உறக்கம் தொடர்பான கோளாறுகள் உடலில் ஏற்படும். இவை உங்கள் இதயத்தில் எண்ணற்ற கோளாறுகளை ஏற்படுத்தும். நன்கு சிரிக்கவும் இறுதியானதாகவும் மற்றும் முக்கியமாகவும் இருப்பது உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்வது - அது தான் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும். வாய்விட்டு சிரிக்க வேண்டும். தினமும் 15 நிமிடங்கள் சிரித்தால் இரத்த ஓட்டத்தை 22% உயர்த்தும் என்று ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.
ஆணவக் கொலை
நாடு முழுவதும் தினமும் ஏதோ ஒரு இடத்தில் உயர் ஜாதி மக்களால், பிற இன மக்கள் பாதிக்கப் படுவதும், கொடுமைப் படுத்தப்படுவதும், கொலை, பலாத்காரம் செய்யப் படுவதும் நடந்து கொண்டே இருக்கிறது. 130 கோடிக்கு அருகில் நெருங்கி வரும் மக்கள் தொகையில், 60% க்கு மேலுள்ள இவர்களுக்கு எவ்விதமான பாதுகாப்பபோ, அங்கிகாரமோ சமுதாயத்திலில்லை. உச்ச நீதிமன்றம் இவர்களுக்கு பாதுகாப்பை உருதி செய்யும் சட்டத் திட்டங்களை அறிவிக்க, ஆணவக் கொலைகள் தடுக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். இவர்கள் மீது ஏவப்படும் சாதிய, தீண்டாமை கொடுமைகள் விலகிட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். காதல் பிரச்சனையினால் நடக்கும் கொலைகள் தடுக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.
நீரிழிவு நோய்
நீரிழிவு நோய் நீரிழிவு நோயாளிகளில் 56 லட்சம் பேர் கண் பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். 20 லிருந்து 74 வயது வரை உள்ளவர்கள் கண்பார்வையை இழப்பதற்கு நீரிழிவு வியாதி மிகமுக்கிய காரணமாக உள்ளது. இதற்கு நுண்ணிய நரம்புகளுக்கு ஏற்படும் பாதிப்புகளே கண்களை தாக்கி பார்வைக்குறைபாடுக்கு காரணமாகின்றன என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கண்களில் பாதிப்பு நீரிழிவினால் கண்பார்வை மங்குதல், கண்வலி, இரட்டை பார்வை, அடிக்கடி கண்கட்டி, கால் முகம் வீங்குதல், வாந்தி, சிறுநீரில் புரதம் ஒழுகுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. பார்வை இழப்பு சர்க்கரை நோய் தாக்கப்பட்டுள்ளவர்களுக்கு லேசான பார்வை கோளாறுகளும்,சிலருக்கு கடும் பார்வையிழப்பு கூட ஏற்படலாம். இதற்கு காரணம் நமது கண்களின் உட்புறம் இறுதியில் உள்ள விழித்திரைக்குள் பல மெல்லிய இரத்தக் குழாய்கள் பாதிக்கப்படுவதே. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது முதலில் பாதிக்கப்படும் இரத்தக் குழாய்கள் இவையே. இதனையே விழித்திரை வலுவிழப்பு என்கின்றனர் மருத்துவர்கள். ரத்தக்கசிவு நோய் நீரிழிவு நோய் குறைவாக பாதிக்கப்பட்டவர்களுக்கு விழித்திரை நாளங்கள் வலுவிழந்து வீங்கிப் பெருத்து அல்லது கொழுப்புப் படிவுகளுடன் காணப்படுகிறது. இதுவே மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு, விழித்திரையில் உள்ள மெல்லிய நாளங்கள் பாதிப்படைந்து அவற்றில் இரத்தக்கசிவு ஏற்பட்டு பின் அடைபடும். உறுதியற்ற புதிய இரத்த நாளங்கள் விழித்திரையில் உண்டாகும். அவையும் எளிதில் உடைந்து இரத்தக்கசிவு ஏற்படும். இது அதிகமானாலும்,விழித்திரையின் முக்கியப் பாகங்களில் ஏற்பட்டாலும் பார்வையிழப்பு ஏற்படும். கசியும் இரத்தக் குழாய்களை லேசர் சிகிச்சை மூலம் உறைய வைக்க முடியும்.தழும்புததிசுக்களால் விழித்திரை விலகல் ஏற்படும் போது,அறுவை சிகிச்சை செய்து மீண்டும் விழித்திரையை ஒட்ட வைக்க முடியும். பரிசோதனை அவசியம் முறையாக சர்க்கரை பரிசோதனை மட்டுமல்லாமல்,கண் பரிசோதனையையும் செய்து கொள்வதன் மூலம் நோய் தீவிரமாவதற்கு முன்னர் ஆரம்ப கட்டடத்திலேயே கண்டறிய முடியும். மேலும் முறையான உணவுக் கட்டுப்பாட்டின் மூலமும் நீரிழிவு நோயின் தீவிரத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சமையல் எண்ணெய்கள் உணவில் கலோரிகளை அதிகரிப்பது சமையல் எண்ணெய்தான். நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், தவிடு எண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை பயன் படுத்தலாம். இவற்றையும் குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும். அதேசமயம் நெய், வெண்ணெய், வனஸ்பதி, பாமாயில் இவற்றை தவிர்ப்பது நல்லது. பயறுகள், சூப் வகைகள் நீரிழிவு நோயாளிகள் சரிவிகித ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும். உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில் பசி, தாகம் எடுத்தால். வெள்ளரி, அரிசிப்பொரி, மோர், கோதுமை உப்புமா, அவித்த சுண்டல், சிறுபயறு, கொண்டைக் கடலை, கொள்ளு, தட்டைப்பயிறு இவற்றில் ஏதாவது ஒன்றை சாப்பிடலாம். எலுமிச்சை சாறு, வாழைத்தண்டு சூப், அருகம்புல் சூப், நெல்லிக்காய் சாறு, கொத்தமல்லி சூப், கறிவேப்பிலை சூப், இவற்றில் ஏதாவது ஒன்றை சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது. தவிர்க்கவேண்டிய பழங்கள் மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம், சப்போட்டா, திராட்சை, சீதாப்பழம், இந்த பழங்களில் மாவுச்சத்தும், கலோரியும், சர்க்கரையை உயர்த்தும் திறனும் அதிகம் என்பதால், சர்க்கரை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
சங்கீதம் 89 :11-17
வானங்கள் கர்த்தருைடையது, பூமியும் அவருடையது, பூலோகத்தையும் அதிலுள்ள யாவையும் அவரே அஸ்திபாரப்படுத்தினார். வடக்கையும் தெற்கையும் அவரே உண்டாக்கினார், தாபோரும் எர்மோனும் அவருடைய நாமம் விளங்கக் கெம்பீரிக்கிறது. அவருக்கு வல்லமையுள்ள புயமிருக்கிறது, அவருடைய கரம் பராக்கிரமமுள்ளது, அவருடைய வலதுகரம் உன்னதமானது. நீதியும் நியாயமும் அவருடையது சிங்காசனத்தின் ஆதாரமும், கிருபையும், சத்தியமும் அவருக்கு முன்பாக நடக்கும். கெம்பீரசத்தத்தை அறியும் ஜனங்கள் பாக்கியமுள்ளவர்கள், அவர்கள் அவருடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள். அவர்கள் அவருடைய நாமத்தில் நாடோறும் களிகூர்ந்து, அவருடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள். கர்த்தரே அவர்கள் பலத்தின் மகிமையாயிருக்கிறார், அவருடைய தயவினால் எங்கள் கொம்பு உயரும். சங்கீதம் 89 :11-17
Tuesday, 19 July 2016
சங்கீதம் 89 :1-10
கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடு், கர்த்தருடைய உண்மையைத் தலைமுறை தலைமுறையாக உன்வாயினால் அறிவிப்பாயாக கிருபை என்றென்றைக்கும் ஸ்திரப்பட்டிருக்கும், கர்த்தருடைய உண்மையை வானங்களிலே ஸ்தாபிப்பார். கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவனோடே உடன்படிக்கைப் பண்ணி, அவர் தாசனாகிய தாவீதை நோக்கி: என்றென்றைக்கும் உன் சந்ததியை நிலைப்படுத்தி, தலைமுறை தலைமுறையாக உன் சிங்காசனத்தை ஸ்தாபிப்பேன் என்று ஆணையிட்டேன் என்றார். வானங்கள் கர்த்தருடைய அதிசயங்களைத் துதிக்கும், பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய உண்மையும் விளங்கும். ஆகாயமண்டலத்தில் கர்த்தருக்கு நிகரானவர் யார்? பலவான்களின் புத்திரரில் கர்த்தருக்கு ஒப்பானவர் யார்? தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர், தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் அஞ்சப்படத்தக்கவர். சேனைகளின் தேவனாகிய கர்த்தரைப் போல் வல்லமையுள்ள கர்த்தர் யார்? அவருடைய உண்மை அவரைச் சூழ்ந்திருக்கிறது. தேவன் சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிறவர், அதின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கப்பண்ணுகிறார். கர்த்தர் ராகாபை வெட்டுண்ட ஒருவனைப்போல் நொறுக்கினார். அவரது வல்லமையான புயத்தினால் அவருடைய சத்துருக்களைச் சிதறடித்தார். சங்கீதம் 89 :1-10
மாமரத்து இலை
மாமரத்து இலை கொழுந்து இலையை தேன் விட்டு வதக்கி குடிநீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரை அருந்தினால், குரல் கம்மல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும். நீரிழிவு உள்ளவர்கள், மா கொழுந்து இலையை எடுத்து உலர்த்தி பொடி செய்து தினமும் காலை மாலை 2 ஸ்பூன் அளவு அருந்தினால் நீரிழிவு கட்டுப்படும். தீக்காயம் பட்டவர்கள் மா இலையைச் சுட்டு சாம்பலாக்கி, வெண்ணெயில் குழைத்து பூசி வந்தால் தீப்புண் விரைவில் குணமாகும்.
Monday, 18 July 2016
நிலநடுக்கம்
தென் ஆப்பிரிக்க நாடான ஈகுவடாரில் நிலநடுக்கம் ஏற்பட்டது, அதில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து நாசமாயின ஏராளமானோர் பலியானார்கள் ஜப்பானிலும் இது போன்ற நிலநடுக்கம் ஏற்பட்டது. உலகம் முழுவதும் திடீரென்று ஏற்பட்டு வரும் மாபெரும் இயற்கை சீற்றங்களினால். பலர் மரித்து விடுகின்றனர். இயற்கை பேரழிவுகளிலிருந்து கர்த்தர் மக்களை விலக்கி பாதுகாக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் இயற்கை பேரழிவுகளுக்கு ஐனங்கள் தப்புவிக்கப்பட, அரசாங்கம் துரிதமாக, பொதுமக்களும் மனிதாபிமானத்தோடு செயல்பட்டு உதவிகள் செயல் பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்
மாம்பூவும், பட்டையும்
மாம்பூவும், பட்டையும் மாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து பொடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால், வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பு போன்றவை நீங்கும். இளம் மாவடுக்களை எடுத்து காம்பு நீக்கி காயவைத்து, உப்பு நீரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து வைத்துக்கொண்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டால், சீரண சக்தி அதிகரிக்கும். வாந்தி, குமட்டல் நீங்கும். மாம்பட்டையைக் குடிநீர் செய்து அருந்தினால் சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏதும் அணுகாது. மா வேர்பட்டை வயிற்றுப்புண், குருதிக்கழிச்சல் போன்றவற்றை நீக்கும். பித்த வெடிப்பு குணமாகும் பித்த வெடிப்பினால் கால் வலி ஏற்படுவதோடு பாதங்கள் பார்ப்பதற்கே அருவெறுப்பாக காணப்படும். கால் பித்தவெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். தேமல், படை உள்ளவர்கள் மாம்பிசினை மாம்பழச்சாறுடன் கலந்து பூசினால் தேமல், படை நீங்கும்.
Sunday, 17 July 2016
உச்ச நீதிமன்றம் கெடு
"சாலைகள் மற்றும் நடை பாதைகளை ஆக்கிரமித்து அமைக்கப் பட்டுள்ள சட்ட விரோதமான கட்டுமானங்கள்,வழிபாட்டு ஸ்தலங்கள், தலைவர்களின் சிலைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று மாநில, யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு உச்ச நீதிமன்றம் இருதி கெடு விதித்துள்ளது. உச்சநீதி மன்றத்தின் இந்த உத்தரவு நாடு முழுவதும் தீவிரமாக அமல் படுத்தப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் சாலைகளில் மற்றும் பொது இடங்களில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள யாவற்றையும் சீக்கிரத்தில் மாநில அரசுகள் அகற்ற ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் இந்தியாவில் அனைத்து மத, இன மக்களுக்கும் சம உரிமை வாய்ப்புக்கள் உள்ளது என்பதை உலக அரங்கில் நிலை நாட்டிட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்
சங்கீதம் 85 :1-13
கர்த்தர், அவரது தேசத்தின்மேல் பிரியம் வைத்து, யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினார். அவரது ஜனத்தின் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினார். அவரது உக்கிரத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு, அவரது கோபத்தின் எரிச்சலைவிட்டுத் திரும்பினார். அவர்கள் இரட்சிப்பின் தேவன். அவர்களைத் திருப்பிக்கொண்டுவருவார், அவர்கள்மேலுள்ள அவரது கோபத்தை ஆறப்பண்ணுவார். என்றைக்கும் அவர்கள்மேல் கோபமாயிரார் தலைமுறை தலைமுறையாக அவரது கோபத்தை நீடித்திருக்கப்பண்ணார். அவரது ஜனங்கள் அவரில் மகிழ்ந்திருக்கும்படி அவர் அவர்களைத் திரும்ப உயிர்ப்பிப்பார் கர்த்தர், அவரது கிருபையை அவர்களுக்குக் காண்பித்து, அவரது இரட்சிப்பை அவர்களுக்கு அருளிச்செய்வார். கர்த்தராகிய தேவன் விளம்புவதைக் கேட்பாகள், அவர் தம்முடைய ஜனங்களுக்கும் தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார், அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாதிருப்பார்களாக. நம்முடைய தேசத்தில் மகிமைவாசமாயிருக்கும்படி, அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது. கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும். சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும், நீதி வானத்திலிருந்து தாழப்பார்க்கும். கர்த்தர் நன்மையானதைத் தருவார், நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும். நீதி அவருக்கு முன்னாகச்சென்று, அவருடைய அடிச்சுவடுகளின் வழியிலே நம்மை நிறுத்தும் சங்கீதம் 85 :1-13
Saturday, 16 July 2016
சங்கீதம் 84 :1-12
சேனைகளின் கர்த்தருடைய வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்! உன் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிரகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கட்டும், உன் இருதயமும் உன் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடட்டும். உன் ராஜாவும் உன் தேவனுமாகிய சேனைகளின் கர்த்தருடைய, பீடங்களண்டையில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்தது. அவருடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் எப்பொழுதும் அவரைத் துதித்துக்கொண்டிருப்பார்கள். அவரிலே பெலன் கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள். அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள், மழையும் குளங்களை நிரப்பும். அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள். சேனைகளின் தேவனாகிய கர்த்தர், உன் விண்ணப்பத்தைக் கேட்பார், யாக்கோபின் தேவன், செவிகொடுப்பார். உன் கேடகமாகிய தேவன், கண்ணோக்கமாயிருப்பார், அவர் அபிஷேகம் பண்ணின உன் முகத்தைப் பார்ப்பார். ஆயிரம் நாளைப்பார்க்கிலும் அவரது பிரகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது, ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப்பார்க்கிலும் உன் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள். உன் தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர், கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார், உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார். சேனைகளின் கர்த்தரை, நம்பியிருக்கிற மனுஷன் பாக்கியவான். சங்கீதம் 84 :1-12
Friday, 15 July 2016
சங்கீதம் 83 :1-18
தேவன், மவுனமாயிருக்கமாட்டார், பேசாமலிருக்கமாட்டார், சும்மாயிருக்கமாட்டா். இதோ, அவருடைய சத்துருக்கள் கொந்தளித்து, அவருடைய பகைஞர் தலையெடுக்கிறார்கள். அவரது ஜனத்துக்கு விரோதமாக உபாய தந்திரங்களை யோசித்து, அவரது மறைவிலிருக்கிறவர்களுக்கு விரோதமாக ஆலோசனை பண்ணுகிறார்கள். இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமல் போவதற்காக, அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள். இப்படி, ஏதோமின் கூடாரத்தாரும், இஸ்மவேலரும், மோவாபியரும், ஆகாரியரும், கேபாலரும், அம்மோனியரும், அமலேக்கியரும், தீருவின் குடிகளோடுகூடிய பெலிஸ்தரும், ஏகமனநிர்ணயமாய் ஆலோசனைசெய்து, அவருக்கு விரோதமாய் ஒப்பந்தம்பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அசீரியரும் அவர்களோடேகூடக்கலந்து, லோத்தின் புத்திரருக்குப் புயபலமானார்கள். மீதியானியருக்குச் செய்ததுபோலவும், கீசோன் என்னும் ஆற்றண்டை எந்தோரிலே அழிக்கப்பட்டு, நிலத்துக்கு எருவாய்ப்போன சிசெரா, யாபீன் என்பவர்களுக்குச் செய்ததுபோலவும், அவர்களுக்குச்செய்வார் அவர்களையும் அவர்கள் அதிபதிகளையும் ஓரேபுக்கும் சேபுக்கும், அவர்கள் பிரபுக்களையெல்லாம் சேபாவுக்கும் சல்முனாவுக்கும் சமமாக்குவார். தேவனுடைய வாசஸ்தலங்களை எங்களுக்குச் சுதந்தரமாக நாங்கள் கட்டிக்கொள்வோம் என்று சொல்லுகிறார்கள். அவர்களைச் சுழல் காற்றின் புழுதிக்கும், காற்றுமுகத்தில் பறக்கும் துரும்புக்கும் சமமாக்குவார். நெருப்பு காட்டைக் கொளுத்துவதுபோலவும், அக்கினி ஜூவாலைகள் மலைகளை எரிப்பதுபோலவும அவரது புசலினாலே அவர்களைத் தொடர்ந்து, அவரது பெருங்காற்றினாலே அவர்களைக் கலங்கப்பண்ணுவார். கர்த்தர், அவர்களை அவரது நாமத்தைத் தேடும்படிக்கு, அவர்கள் முகங்களை அவமானத்தாலே மூடுவார் யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி, அவர்கள் என்றைக்கும் வெட்கிக்கலங்கி, நாணமடைந்து அழிந்து போவார்கள். சங்கீதம் 83:1-18
Thursday, 14 July 2016
பள்ளி வாகனங்கள்!
தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மொத்தம் 37,107 வாகனங்கள் இயக்கப் படுகின்றன. இந்த வாகன ஓட்டுனர்களுக்காக. உதவியாளர்களுக்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் முறையான பராமரிப்பு இருந்தால் மட்டுமே. வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் வாகனங்களுக்கு உரிமமும்,சான்றிதழும் கொடுத்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் அதிகாரிகள் மிகுந்தகண்டிப்புடனும், கவனத்துடனும் செயல்பட, எந்ந ஒரு பழைய வாகனத்துக்கும் உண்மைக்குப் புறம்பாக அனுமதி தராதிருக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் இனி ஒருபோதும் பள்ளி வாகன விபத்துக்கள் நடக்காதிருக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்
Monday, 11 July 2016
சங்கீதம் 80 :8-17
கர்த்தர் எகிப்திலிருந்து ஒரு திராட்சக்கொடியைக் கொண்டுவந்து, ஜாதிகளைத் துரத்திவிட்டு, அதை நாட்டினார் அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினார், அது வேரூன்றி, தேசமெங்கும் படர்ந்தது. அதின் நிழலால் மலைகளும் அதின் கிளைகளால் திவ்வியமான கேதுருக்களும் மூடப்பட்டது. அது தன் கொடிகளைச் சமுத்திரமட்டாகவும், தன் கிளைகளை நதிமட்டாகவும் படரவிட்டது. அப்பொழுதோ வழிநடக்கிற யாவரும் அதைப் பறிக்கும்படியாக, அதின் அடைப்புகளை அவர் தகர்த்துப்போட்டார் காட்டுப்பன்றி அதை உழுது போட்டது, வெளியின் மிருகங்கள் அதை மேய்ந்துபோட்டது. சேனைகளின் தேவன், திரும்பி வருவார், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, இந்தத் திராட்சச்செடியை விசாரிப்பார், அவருடைய வலதுகரம் நாட்டின கொடியையும், அவருக்கு அவர் திடப்படுத்தின கிளையையும் கடாட்சித்தருளுவார். அவரது கரம் அவரது வலதுபாரிசத்துப் புருஷன் மீதிலும், அவருக்கு அவர் திடப்படுத்தின மனுஷகுமாரன்மீதிலும் இருக்கும். சங்கீதம் 80 :8-17
Monday, 4 July 2016
சங்கீதம் 78 :23-31
கர்த்தர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டு, வானத்தின் கதவுகளைத் திறந்து, மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாக வருஷிக்கப்பண்ணி, வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார். தூதர்களின் அப்பத்தை மனுஷன் சாப்பிட்டான், அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாய் அனுப்பினார். ஆகாசத்திலே கீழ்காற்றை வரப்பண்ணி, தம்முடைய வல்லமையினால் தென்றலையும் வீசச்செய்து மாம்சத்தைத் தூளத்தனையாயும், சிறகுள்ள பறவைகளைக் கடற்கரை மணலத்தனையாயும் வருஷிக்கப்பண்ணி, அவைகளை அவர்கள் பாளயத்தின் நடுவிலும், அவர்கள் கூடாரங்களைச் சுற்றிலும் இறங்கப்பண்ணினார். அவர்கள் புசித்துத் திருப்தியடைந்தார்கள், அவர்கள் இச்சித்ததை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் தங்கள் இச்சையை வெறுக்கவில்லை, அவர்களுடைய போஜனம் அவர்கள் வாயில் இருக்கும்போதே. தேவகோபம் அவர்கள்மேல் எழும்பி, அவர்களில் கொழுத்தவர்களைச் சங்கரித்து, இஸ்ரவேலில் விசேஷித்தவர்களை மடியப்பண்ணிற்று. சங்கீதம் 78 :23-31
Sunday, 3 July 2016
சங்கீதம் 78 :17-22
இஸ்ரவேலர் பின்னும் அவருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, வறண்ட வெளியிலே உன்னதமானவருக்குக் கோபம் மூட்டினார்கள். தங்கள் இச்சைக்கேற்ற போஜனத்தைக் கேட்டு, தங்கள் இருதயத்தில் தேவனைப் பரீட்சைபார்த்தார்கள். அவர்கள் தேவனுக்கு விரோதமாய்ப் பேசி: "தேவன் வனாந்தரத்திலே போஜனபந்தியை ஆயத்தப்படுத்தக்கூடுமோ? இதோ அவர் கன்மலையை அடித்ததினால் தண்ணீர் புறப்பட்டு, நதிகளாய்ப் புரண்டுவந்தது, அவர் அப்பத்தையும் கொடுக்கக்கூடுமோ? தம்முடைய ஜனத்திற்கு மாம்சத்தையும் ஆயத்தப்படுத்துவாரோ?" என்றார்கள். ஆகையால் கர்த்தர் அதைக் கேட்டுக் கோபங்கொண்டார், அவர்கள் தேவனை விசுவாசியாமலும், அவருடைய இரட்சிப்பை நம்பாமலும் போனதினால், யாக்கோபுக்கு விரோதமாய் அக்கினி பற்றியெரிந்தது, இஸ்ரவேலுக்கு விரோதமாய்க் கோபம்மூண்டது. சங்கீதம் 78 :17-22
Saturday, 2 July 2016
சங்கீதம்78:12-16
கர்த்தர் இஸ்ரவேலருடைய பிதாக்களுக்கு முன்பாக, எகிப்துதேசத்துச்சோவான் வெளியிலே, அவர் அதிசயமானவைகளைச் செய்தார். கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கப்பண்ணி, ஜலத்தைக் குவியலாக நிற்கும்படி செய்தார். பகலிலே மேகத்தினாலும், இராமுழுதும் அக்கினி வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார் வனாந்தரத்திலே கன்மலைகளைப்பிளந்து, மகா ஆழங்களிலிருந்து, தண்ணீரை அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்தார். கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படப்பண்ணி, தண்ணீரை நதிபோல ஓடிவரும்படி செய்தார். சங்கீதம்78:12-16
Subscribe to:
Posts (Atom)
About Me
Search This Blog
Popular Posts
-
281 புன்னகை ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்ற ஒன்று நடப்பட்டது. ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வா...
-
307 என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள். ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க. ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்தில...
-
ஜேம்ஸ் பரேசர் சீனாவின் தென்மேற்குப் பகுதிக்கு தனது இருபத்திரண்டாவது வயதில...
Labels
- Christian Missionary History
- 1015 ஏமி கார்மைக்கேல் அம்மையாரின் வரலாறு
- 1016 கிளாடிஸ் அயில்வார்ட் 1902 -
- 1017 பண்டித இராமாபாய் 1858 - 1922
- 1018 ஃபேனி க்ராஸ்பி 1820 - 1915
- 1019 காரி டென் பூம் 1892 - 1983
- Christian Message
- Christian Missionary History
- Health
- Prayer
- Tamil Bible Verse
- Tamil Bible Versev
- Tamil Christian Photos
- நீதிமௌழிகள்