Wednesday, 6 December 2017

சங்கீதம் 119:113-120

@@@@@@@@

நீ வீண் சிந்தனைகளை வெறுத்து, கர்த்தருடைய வேதத்தில் பிரியப்படுகிறாய்.

உன் மறைவிடமும் உன் கேடகமும் நீரே, கர்த்தருடைய வசனத்துக்குக் காத்திருக்கிறாய்.

உன் தேவனுடைய கற்பனைகளை நீ கைக்கொள்ளுகிறபடியால் .
பொல்லாதவர்கள், உன்னைவிட்டு அகன்றுபோவார்கள்,

நீ பிழைத்திருப்பதற்கு கர்த்தருடைய வார்த்தையின்படி உன்னை ஆதரித்தருளுவார், உன் நம்பிக்கை விருதாவாய்ப்போக உன்னை வெட்கத்திற்கு உட்படுத்தமாட்டார்.

கர்த்தர் உன்னை ஆதரித்தருளுவார், அப்பொழுது நீ இரட்சிக்கப்பட்டு, எக்காலமும் கர்த்தருடைய பிரமாணங்களின்பேரில் நோக்கமாயிருப்பாய்.

கர்த்தருடைய பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற யாவரையும் மிதித்துப்போடுகிறார், அவர்களுடைய உபாயம் வெறும் பொய்யே.

கர்த்தர் பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரையும் களிம்பைப்போல அகற்றிவிடுகிறார், ஆகையால் கர்த்தருடைய சாட்சிகளில் பிரியப்படுகிறாய்.

கர்த்தருக்குப் பயப்படும் பயத்தால் உன் உடம்பு சிலிர்க்கிறது, கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறாய்.

சங்கீதம் 119:113-120

@@@@@@

   I hate the double-minded, But I love Your law. You are my hiding place and my shield; I hope in Your word. Depart from me, you evildoers, For I will keep the commandments of my God! Uphold me according to Your word, that I may live; And do not let me be ashamed of my hope. Hold me up, and I shall be safe, And I shall observe Your statutes continually. You reject all those who stray from Your statutes, For their deceit is falsehood. You put away all the wicked of the earth like dross; Therefore I love Your testimonies. My flesh trembles for fear of Yours, And I am afraid of Your judgments.

Psalm 119:113-120

No comments:

Post a Comment