தேவைகளை சந்தித்த இயேசு!
*"அவர் (இயேசு) பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பிரயாணம்பண்ணி, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைக் கூறிப் பிரசங்கித்துவந்தார்." (லூக்கா 8:1)*
இயேசு கிறிஸ்து, இந்த உலகத்தில் வந்து ஊழியம் செய்த 3 1/2 ஆண்டு காலமும், கிராமங்கள்தோறும், பட்டணங்கள்தோறும் பிரயாணப்பட்டு, தேவனுடைய இராஜியத்தை பற்றி பிரசங்கித்து, ஜனங்களுக்கு அற்புதங்களை செய்து, அவர்களை மகிழப் பண்ணினார்.
*"சாயங்காலமானபோது, அவருடைய (இயேசு கிறிஸ்து) சீஷர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்தரமான இடம், நேரமுமாயிற்று, ஜனங்கள் கிராமங்களுக்குப் போய்த் தங்களுக்குப் போஜனபதார்த்தங்களைக் கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்." (மத்தேயு 14:15)*
திரளான ஜனங்கள் வனாந்திரமான ஒரு இடத்தில் அமர்ந்து, காலையிலிருந்து இயேசு கிறிஸ்துவினுடைய போதனையை கேட்டு கேட்டு, சாயங்காலமாகி விட்டது. அங்கே அவர்களுக்கு சாப்பிட ஒன்றுமில்லை.
ஆகவே அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து, "ஜனங்களை அனுப்பி விட வேண்டும்." என்று சொன்னார்கள். அதற்கு அவர், "அவர்களை சும்மா அனுப்ப கூடாது. அவர்களுடைய தேவைகளை சந்தித்து அனுப்ப வேண்டும்." என்று சொன்னார்.
அங்கிருந்த 5 அப்பங்களையும், 2 மீன்களையும் அவரிடத்தில் கொண்டு போனார்கள். அதை அவர் தன் கரத்தில் எடுத்து, அதை ஆசீர்வதித்து பெருக பண்ணி, அங்கிருந்த எல்லா ஜனங்களும் திருப்தியாக சாப்பிடும்படி கொடுத்தார். மீதியான துணிக்கைகளையும் எடுக்கும்படி செய்தார்.
இன்றைக்கு ஒருவேளை நீங்கள், கடன் பிரச்சனையிலோ, பணப் பிரச்சனையிலோ, வேலையில்லாத பிரச்சனையிலோ சிக்கி, வேதனைப்பட்டு _"வருமானத்திற்கு ஒரு வழியும் இல்லையே!"_ எனேறு கலங்கிக் கொண்டிருக்கலாம்.
கலங்காதீர்கள்! கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து, பெருக பண்ணப் போகிறார்! உங்களுக்கு ஒரு வழி திறக்கப்படும்! ஆசீர்வாதமான வாசல் திறக்கப்படும்! *விசுவாசியுங்கள்!* ஆமேன்!
-
----------------------------------
No comments:
Post a Comment