Tuesday, 21 November 2017

சங்கீதம் 119:9-16


@@@@@@

வாலிபன் தன் வழியை, கர்த்தருடைய வசனத்தின்படி தன்னைகாத்துக் கொள்ளுவதினால் சுத்தம்பண்ணுவான்.

அவன் முழு இருதயத்தோடும் கர்த்தரைத் தேடுகிறான், அவனை கர்த்தர் அவரது கற்பனைகளைவிட்டு வழிதப்பவிடமாட்டார்.

அவன் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, கர்த்தருடைய வாக்கை அவனிருதயத்தில் வைத்து வைத்தான்.

கர்த்தர், ஸ்தோத்திரிக்கப்பட்டவர், கர்த்தருடைய பிரமாணங்களை அவனுக்குப் போதிப்பார்.

கர்த்தருடைய வாக்கின் நியாயத்தீர்ப்புகளையெல்லாம் அவன் உதடுகளால் விவரித்திருக்கிறது.

திரளான செல்வத்தில் களிகூருவது போல, அவன் கர்த்தருடைய சாட்சிகளின் வழியில் களிகூருவான்.

கர்த்தருடைய கட்டளைகளைத் தியானித்து, அவரது வழிகளைக் கண்ணோக்குவான்.

கர்த்தருடைய பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறான், கர்த்தருடைய வசனத்தை மறவான்.

சங்கீதம் 119:9-16

@@@@@@@@@@@@@@

No comments:

Post a Comment