*ஒருமனப்பாட்டின் ஜெபம்!*
*"பின்பு தானியேல், தன் வீட்டுக்குப்போய் , தானும், தன் தோழரும் பாபிலோனின் மற்ற ஞானிகளோடேகூட அழியாதபடிக்கு , இந்த மறைபொருளைக்குறித்துப் பரலோகத்தின் தேவனை நோக்கி இரக்கம் கேட்கிறதற்காக அனனியா, மீஷாவேல், அசரியா என்னும் தன்னுடைய தோழருக்கு இந்தக் காரியத்தை அறிவித்தான்"* (தானி. 2:17,18).
ஜெபத்திலே, இந்த நான்கு பேருக்கும் நல்ல ஒருமனப்பாடு இருந்தது. அன்பின் ஐக்கியமிருந்தது. அவர்கள் தெய்வீகத்தில் ஒருமனப்பட்டு இணைந்து நின்றார்கள். அவர்களுக்குள்ளே கருத்து வேற்றுமையோ, ஒற்றுமையோ, எரிச்சலோ மனதிலே வஞ்சகமோ இருந்ததில்லை.
இரண்டுபேர் இணைந்து நின்றாலே, அங்கே கர்த்தர் வந்துவிடுகிறார். இயேசு சொன்னார், "உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும், பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால், அது அவர்களுக்கு உண்டாகும்" (மத். 18:19). ஆனால் இங்கே இரண்டுபேர் அல்ல, நான்கு பேர் ஒருமனப்பட்டு, பாபிலோன் தேசத்திலே ஜெபிக்கிறார்களென்றால், ஜெபம் எவ்வளவு வல்லமையுள்ளதாயிருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள். கர்த்தர் அதைக் கேட்டு, அவர்களுக்கு வெளிப்பாட்டு வரங் களையும், ஊழியத்தையும் தந்தார்.
அதுபோல, சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள், ராஜாவின் பொற் சிலையை வணங்காதபோது, அவர்கள் மூன்றுபேரும் இணைந்து ராஜாவை பார்த்து, நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன் எங்களை தப்புவிக்க வல்லவர். அவர் தப்புவியாதேபோனாலும், நீர் உண்டாக்கின பொற்சிலையை நாங்கள் வணங்கப் போதில்லை என்று இணைந்து சொன்னார்கள். அந்த ஒருமனப்பாட்டு ஜெபத்தை கர்த்தர் கேட்டார். அக்கினியின் உக்கிரத்தை அவித்து, அதின் நடுவில் உலாவினார். அவர்களை தப்பப்பண்ணினார்.
குடும்பம் என்பது, கணவன், மனைவி, பிள்ளைகள் இணைந்து நிற்பதே குடும்பம். "ஏற்ற துணையை உண்டாக்குவேன்" என்றவர், ஜெபத்திலும்கூட ஏற்றத் துணையாக இருக்கும்படி, தம் ஜனங்களுக்கு கிருபை செய்திருக்கிறார். அநேக குடும்பங்களில் புருஷன் ஒரு பக்கம், இழுத்தால், மனைவி இன்னொரு பக்கம் இழுக்கிறாள். இருவரும் வெவ்வேறு துருவங்களாக செயல்பட்டால், எப்படி ஒரு மனமாய் ஜெபிக்க முடியும்? எப்படி ஒருவருடைய ஜெபத்திற்கு, மற்றவர் ஆம் என்று சொல்ல முடியும்?
ஒரு தண்டிலே இரண்டு மாடுகளை இணைத்தால், இரண்டும் ஒருமனமாய் வண்டியை இழுக்க முடியும். ஆகவே, பழைய ஏற்பாட்டிலே கர்த்தர் சொன்னார், "மாட்டையும், கழுதையையும் பிணைத்து உழாதிருப்பாயாக" (உபா. 22:10). அதுபோல புதிய ஏற்பாட்டிலும், "அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?" என்று கேட்டார் (2 கொரி. 6:15).
ஆகவே, அந்நிய நுகத்திலே அவிசுவாசியோடு பிணைக்கப்படாதிருப்பீர்களாக. கிறிஸ்துவுக்கும், பேலியாளுக்கும் சம்பந்தமேது? குடும்பத்தில் சரியான ஒருமனம் இருக்குமென்றால், அந்த வீடு தேவ பிரசன்னத்தாலும், தேவ கிருபையாலும் நிரம்பி யிருக்கும். தேவபிள்ளைகளே, வாழ்க்கைத் துணையுடன் கைகோர்த்து, தினமும் ஜெபியுங்கள். பிள்ளைகளோடும் இணைந்து, ஜெபிக்க வேண்டியது அவசியம். முக்கியமான பிரச்சனைகள், போராட்டங்கள், பிசாசின் எதிர்ப்புகள் வரும்போது, குடும்பமாக உபவாசித்து ஜெபியுங்கள். அப்போது முற்றிலும் ஜெயங்கொள்வீர்கள்.
நினைவிற்கு :- *"உனக்கு விரோதமாய் எழும்பும், உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார்"* (உபா. 28:7).
சகோ. J. சாம் ஜெபத்துரை.
*PRAYER OF UNANIMITY!*
*“Then Daniel went to his house, and made the decision known to Hananiah, Mishael, and Azariah, his companions, that they might seek mercies from the God of heaven concerning this secret, so that Daniel and his companions might not perish with the rest of the wise men of Babylon.”* (Daniel 2:17, 18).
These four persons had unanimity in prayer. They had the fellowship of love. They had no disagreements, differences, irritations or animosities between them.
Even when two persons stand united, God comes there. Jesus said, “Again I say to you that if two of you agree on earth concerning anything that they ask, it will be done for them by my Father in heaven” (Mathew 18:19). But here, not only two but four persons combine together and pray at Babylon. Just imagine how powerful that prayer would have been. God heard their prayer and accorded them with gifts of revelation and ministry.
Similarly, Shadrach, Meshach, and Abednego refused to worship the Golden image set by the king and they single-mindedly told the king “Our God whom we serve is able to deliver us. Even if it does not happen, we will not worship the gold image which you have set up.” God listened to that prayer of unison. When the three were put into the hot furnace, He took away the power of the fire and walked into it along with Shadrach, Meshach, and Abednego. Thus the three were delivered.
A family is the one in which the husband, wife and the children stand together. God who said “I will make a helper that is right for him” has graciously created suitable partners in prayer too. In many families, the husbands and wives do not think alike. If they function as opposite poles how could they pray with oneness?
If two bulls are tied to one stem both of them could pull the cart together. That is why God says in the Old Testament “You shall not plough with an ox and a donkey together” (Deuteronomy 22:10). Similarly, in the New Testament also He asks “What part has a believer with an unbeliever?” (II Corinthians 6:15).
Do not be unequally yoked together with unbelievers. And what accord has Christ with Belial? A home will be filled with God’s presence and His grace if there is ideal oneness in the family. Dear children of God join hands with your life partners and pray every day. It is also important that you should pray along with your children. When you face big problems, struggles and resistances from the devil, fast and pray as a family. Then you will fully succeed.
To meditate : *“The LORD will cause your enemies who rise against you to be defeated before your face.”* (Deuteronomy 28:7).
Bro J. Sam Jebadurai.
No comments:
Post a Comment