Thursday, 16 November 2017

சங்கீதம் 116:10-19


@@@@@@

விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன், நான் மிகுதியாய் வருத்தப்பட்டேன்.

எந்த மனுஷனும் பொய்யன் என்று என் மனக்கலக்கத்திலே சொன்னேன்.

கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்.

இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.

நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செலுத்துவேன்.

கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் கர்த்தர் பார்வைக்கு அருமையானது.

நான் கர்த்தரது அடியேன், நான் கர்த்தரது அடியாளின் புத்திரனும், அவரது ஊழியக்காரனுமாயிருக்கிறேன், கர்த்தர் என் கட்டுகளை அவிழ்த்துவிட்டார்.

நான் கர்த்தருக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்தி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.

நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும்,

கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரங்களிலும், எருசலேமின் நடுவிலும் நிறைவேற்றுவேன். அல்லேலூயா.

சங்கீதம் 116:10-19

No comments:

Post a Comment