Thursday, 30 November 2017

சங்கீதம் 119:73-80

@@@@@@@@

கர்த்தருடைய கரங்கள் உன்னை உண்டாக்கி, உன்னை உருவாக்கிற்று, அவருடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள உன்னை உணர்வுள்ளவனாக்குவார்.

நீ அவருடைய வசனத்திற்குக் காத்திருக்கிறபடியால், அவருக்குப் பயந்தவர்கள் உன்னைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்.

கர்த்தரது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும், உண்மையின்படி உன்னை உபத்திரவப்படுத்துகிறார் என்றும் அறிவாய்.

கர்த்தர் உனக்குக் கொடுத்த அவரது வாக்கின்படி, அவரது கிருபை உன்னைத் தேற்றுவதாக.

நீ பிழைத்திருக்கும்படிக்கு அவரது இரக்கங்கள் உனக்குக் கிடைப்பதாக, அவருடைய வேதம் உன் மனமகிழ்ச்சி.

அகங்காரிகள், உன்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போவார்கள், நீயோ அவருடைய கட்டளைகளைத் தியானிப்பாயாக.

கர்த்தருக்குப் பயந்து, அவரது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் உன்னண்டைக்குத் திரும்புவார்கள்.

நீ வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, உன் இருதயம் அவரது பிரமாணங்களில் உத்தமமாயிருக்கக்கடவதாக.

சங்கீதம் 119:73-80

@@@@@@

O Lord ! Your hands have made me and fashioned me; Give me understanding, that I may learn Your commandments. Those who fear You will be glad when they see me, Because I have hoped in Your word. I know, O Lord, that Your judgments are right, And that in faithfulness You have afflicted me. Let, I pray, Your merciful kindness be for my comfort, According to Your word to Your servant. Let Your tender mercies come to me, that I may live; For Your law is my delight. Let the proud be ashamed, For they treated me wrongfully with falsehood; But I will meditate on Your precepts. Let those who fear You turn to me, Those who know Your testimonies. Let my heart be blameless regarding Your statutes, That I may not be ashamed.
Psalm 119:73-80

@@@@@@

No comments:

Post a Comment