@@@@@@@@
கர்த்தரே உன் பங்கு, நீ அவரது வசனங்களைக் கைக்கொள்ளுவாயாக.
உன் முழு இருதயத்தோடு, அவருடைய தயவுக்காகக் கெஞ்சுவாயாக. அவரது வாக்கின்படி உனக்கு இரங்குவார்.
உன் வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, உன் கால்களை அவருடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்புவாயாக.
அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நீ தாமதியாமல் தீவிரிப்பாயாக.
துன்மார்க்கரின் கூட்டங்கள் உன்னைக் கொள்ளையிட்டும், அவருடைய வேதத்தை நீ மறக்கவில்லை.
அவருடைய நீதியான நியாயத்தீர்ப்புகளினிமித்தம், அவரைத் துதிக்கும்படி பாதிராத்திரியில் எழுந்திருப்பாயாக.
கர்த்தருக்குப் பயந்து, அவரது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நீ தோழன்.
பூமி அவருடைய கிருபையினால் நிறைந்திருக்கிறது, அவருடைய பிரமாணங்களை உனக்குப் போதிப்பார்.
சங்கீதம் 119:57-64
@@@@@@
Heth You are my portion,
O Lord; I have said that I would keep Your words. I entreated Your favor with my whole heart; Be merciful to me according to Your word. I thought about my ways, And turned my feet to Your testimonies. I made haste, and did not delay To keep Your commandments. The cords of the wicked have bound me, But I have not forgotten Your law. At midnight I will rise to give thanks to You, Because of Your righteous judgments. I am a companion of all who fear You, And of those who keep Your precepts. The earth, O Lord, is full of Your mercy; Teach me Your statutes.
Psalm 119:57-64
@@@@@@
No comments:
Post a Comment