உணவே மருத்து
@@@@@@@@@@@@@
சீரகம்
தினமும் வீடுகளில் பல வகைகளில் சமையலுக்குப் பயன்படும் "சீரகம்", வாசனைப் பொருட்களில் தனி இடம் பெற்றுத் திகழ்ந்தாலும், ஒரு சிறந்த இயற்கை மருந்தாக அனேக வழிகளில் நமக்கு உபயோகப்படுகிறது. இத்தாவரத்தின் விதைகள்தான் நாம் பயன்படுத்தும் சீரகம். பண்டைக்காலத்திலிருந்தே இந்தியாவில் சீரகம் எளிய மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பன்மொழிப் பெயர்கள்: சீரகத்திற்கு ஆங்கிலத்தில் "குமின்" (Cumin) என்று பெயர். இந்தியில் ஜீரா, தெலுங்கில் ஜீலகாரா, கன்னடத்தில் சீரகே, மராத்தியில் சிரே, குஜராத்தியில் ஜிரு, அசாமியில் கொத்த ஜீரா, ஒரியாவில் ஜிர்கா, கார்மீரியில் ஜையுர் என்று பெயர்.
பெயர் வந்த விதம்: நமது உடம்பின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் பலவகை சீர்கேடுகளைச் சரிசெய்யும் குணம்கொண்ட வாசனைப் பொருள் என்பதால், இதற்கு தமிழில் "சீரகம்" என்று தாவர இயல் நிபுணர்கள் பெயர் வைத்தார்கள். சீரூஅகம்-சீரகம். அகத்தைச் சீர் செய்யும் ஓர் ஒப்பற்ற இயற்கை மருந்து சீரகம்.
சத்துப் பொருட்கள்: நூறு கிராம் சீரகத்தில் அடங்கி உள்ள சத்துப் பொருட்கள் கீழ்க்கண்டவாறு உள்ளன. புரதம் 17.7 கிராம், கொழுப்பு 23.4 கிராம், பொட்டாசியம் 2.1 கிராம், சுண்ணாம்புச் சத்து 0.9 கிராம், பாஸ்பரஸ் 0.5 கிராம், சோடியம் 0.2 கிராம், இரும்புச்சத்து 48.1 மில்லி கிராம், தயாமின் 0.8 மில்லிகிராம், ரைபோஃபிளேவின் 0.4 மில்லிகிராம், நியாசின் 2.5 மில்லிகிராம், அஸ்கார்பிக் அமிலம் 17.2 மில்லிகிராம், வைட்டமின் ஏ 175 ஐ.யு.
பொதுப் பயன்கள்: சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் உபப்பொருளாக பங்கு வகிக்கிறது. சூப் வகைகள், சாஸ் வகைகள், ஊறுகாய் வகைகள் தயாரிக்க இதுவும் இடம் பெறுகிறது. மிட்டாய், கோக், ரொட்டி வகைகள் செய்வதற்கும் பயன்படுகிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து. பித்தத்தை மொத்தமாகப் போக்கும். பசியைத் தூண்டும். குடல் கோளாறுகளைக் குணப்படுத்தும் எளியமருந்து. வயிற்றுப் பொருமல், உடல் அசதி போக்கும். நரம்புகளை வலுப்படுத்தும்.
மருத்துவப் பயன்கள்: சீரகக்குடிநீர்: தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து சீரகக் குடிநீர் தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக்கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையதும் ஆகும் .
@@@@@@@@@@@@@@@@@@@
.ஸ்தோத்திரபலி
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக. என்ற தேவனே (யாத்திராகமம் 20:12)
உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.
@@@@@@@@@@@@@@@@@@@@
No comments:
Post a Comment