Friday, 30 March 2018

29-3-2018

@@@@@@@@@@@@@@@@@@

எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்.

எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ அவன் பாக்கியவான்.

நீ அடக்கிவைத்த மட்டும், நித்தம் உன் கதறுதலினாலே உன் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.

இரவும் பகலும் உன்மேல் கர்த்தருடைய கை பாரமாயிருந்ததினால், உன் சாரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று.

நீ உன் அக்கிரமத்தை மறைக்காமல், உன் பாவத்தை கர்த்தருக்கு அறிவித்தாய். உன் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றாய், தேவன் உன் பாவத்தின் தோஷத்தை மன்னித்தார்.

இதற்காகச் சகாயங்கிடைக்குங் காலத்தில் பக்தியுள்ளவனெவனும் கர்த்தரை நோக்கி விண்ணப்பஞ்செய்வான், அப்பொழுது மிகுந்த ஜலப்பிரவாகம் வந்தாலும் அது அவனை அணுகாது,

சங்கீதம் 32;1-6

@@@@@@@@@@@@@@@@@@@

  The Joy of Forgiveness A Psalm of David. A Contemplation.

Blessed is he whose transgression is forgiven, Whose sin is covered. Blessed is the man to whom the Lord does not impute iniquity, And in whose spirit there is no deceit. When I kept silent, my bones grew old Through my groaning all the day long. For day and night Your hand was heavy upon me; My vitality was turned into the drought of summer. Selah I acknowledged my sin to You, And my iniquity I have not hidden. I said, “I will confess my transgressions to the Lord,” And You forgave the iniquity of my sin. Selah For this cause everyone who is godly shall pray to You In a time when You may be found; Surely in a flood of great waters They shall not come near him.                                Psalm 32:1-6

@@@@@@@@@@@@@@@@@@@@

@@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"சுவிசேஷ பிரதி ஒலி மிஷனரி இயக்கம் ( GEMS)"

@@@@@@@@@@@@@@@@@@@

@@@@@@@@@@@@@@@@@@@

உணவே மருத்து

உடல் வளர்ச்சிக்கு

பேரிக்காய்: தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், இதய படபடப்பு நின்றுவிடும்..

@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்தோத்திரபலி

ஒருவன் பிறனுடைய வசத்தில் திரவியத்தையாவது, உடைமைகளையாவது அடைக்கலமாக வைத்திருக்கும்போது, அது அவன் வீட்டிலிருந்து திருடப்பட்டுப் போனால், திருடன் அகப்பட்டானாகில், அவன் அதற்கு இரட்டிப்பாகக் கொடுக்கவேண்டும்.

திருடன் அகப்படாதேபோனால், அந்த வீட்டுக்காரன் தானே பிறனுடைய பொருளை அபகரித்தானோ இல்லையோ என்று அறியும்படி நியாயாதிபதிகளிடத்தில் அவனைக் கொண்டுபோகவேண்டும். என்ற தேவனே 
(யாத்திராகமம் 22:7,8))

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@@@@@@@@@@@@

@@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"ஜைன சமயத்தை சார்ந்த சகோதர,சகோதரிகள் இயேசுவை அறிந்து கொண்டு இரட்சிக்கப்பட"

@@@@@@.

No comments:

Post a Comment