Monday, 4 May 2020

Christian Missionary History Tamil Part 8

ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு கிறஸ்தவ குடும்பம் மிஷனரிகளாக ஒரிசாவில் தங்கி ஊழியம் செய்து வந்தார்கள். அவர்கள் தங்களால் இயன்ற அளவு குஷ்டரோகிகளுக்கும், சமுதாயத்தில் துச்சமாக எண்ணப்பட்டவர்களுக்கும் நடுவில் இருந்து கிறிஸ்துவின அன்பை வெளிப்படுத்தி, அங்கு அவர்கள் மத்தியில் 34 வருடங்களாக ஊழியம் செய்து வநதனர். அவர்கள், கிரஹம் ஸ்டெயின் மற்றும் அவரது மனைவி கிளாடிஸ் ஸ்டெயின் ஆவர்

அவர்களுக்கு ஒரு மகளும். இரண்டு மகன்களும் இருந்தனர்.. 1999-ம் வருடம் ஜனவரி மாதம் 23ம் தேதி இந்தியர்களை தலை குனிய வைத்த நாள். கிரஹம் ஸ்டெயின் தன் மகன்கள் பிலிப்பு (11 வயது), தீமோத்தேயு (6 வயது) அவர்களோடு, ஒரிசாவில் இருந்த காட்டில் தங்கள் ஊழியத்தை முடித்து, இரவில் தங்கள் ஜீப்பில் உறங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு 50 பேர் அடங்கிய அரக்கர் கூட்டம், ஒன்றுமறியாத ஆடுகளைப் போன்று உறங்கிக் கொண்டிருந்த, அந்த களங்கமில்லாத மூவர் இருந்த ஜீப்பின் மேல் கெரோசினை ஊற்றி தீக்கொளுத்தியது. ஜீப் பற்றி எரிந்துக் கொண்டிருந்தபோது, ஒரு வேளை கிரஹம் தன் பிள்ளைகளையாவது விட்டுவிடுமாறு அந்த ஓநாய் கூட்டத்திடம் மன்றாடியிருந்திருப்பார்.

ஆனால் மூர்க்க வெறிக் கொண்ட அந்தக் கூட்டம் மூவரையும் துடிக்க துடிக்க உயிரோடு எரிந்ததைக் கண்டு ரசித்தது. பாவமறியாத பிள்ளைகள் துடிப்பதைக் கண்டும் அந்த அரக்கர்களின் மனம் இரங்கவில்லை. அப்போது கிரஹம், தன் பிள்ளைகளை தன் மார்போடு அணைத்தவராக, அந்நாளில் அம்மூவரும் கர்த்தருக்கென்று இரத்த சாட்சிகளாக மரித்தார்கள்.

கிரஹம் மிகவும் தாழ்மையுள்ளவராக, அற்புதமானவராக, மற்றவர்களுடைய குறைகளைக் கேட்டு அதைத் தீர்த்து வைப்பவராக, விசுவாசவீரனாக, தேவனுடைய மனிதனாக வாழ்ந்தவர். அவருடைய அடக்க ஆராதனையில், அநேக இந்துக்களும், முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் என்று நாடே திரண்டு வந்திருந்து, அவர்களை கொன்றவர்களை வன்மையாக கண்டிக்கும் வகையில் கூடி, அவர்களை கௌரவித்தனர்.

அப்போது அவரது மனைவியாகிய கிளாடிஸ் ஸ்டெயின் அவர்கள் பேசிய வார்த்தைகள், அநேகருடைய கண்களில் கண்ணீரை வரவழைத்தது. அவர்கள் சொன்னார்கள், ‘எனக்கு சொல்வதற்கு ஒரே ஒரு செய்திதான் உண்டு, அது என்னவென்றால் எனக்கு யார் மேலும் கசப்பு இல்லை. யாரையும் நான் வெறுக்கவுமில்லை. எனக்கு ஒரே ஒரு பாரம்தான் உண்டு, அது, இந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தங்களுக்காக, தங்கள் பாவங்களுக்காக மரித்த இயேசுகிறிஸ்துவின் அன்பை உணர வேண்டும். நாம் வெறுப்பை எரித்து, கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துவோம்’ என்று கூறி தன் கணவரையும், தன் இரண்டு சிறிய மகன்களையும் உயிரோடு எரித்தவர்களை ‘மன்னிக்கிறேன்’ என்று மன்னித்தார்களே அங்கு அவர்கள் ‘இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்’ என்று தங்களுடைய நற்கந்தத்தை வெளிப்படுத்தினார்கள்.

எந்த ஒரு தாயும் சொல்ல முடியாத வார்த்தைகளை அவர்கள் அன்று சொன்னார்கள். அவர்களுடைய 13 வயது நிரம்பிய மகள் எஸ்தரிடம், தகப்பனுடைய இந்த கொடூர மரணத்தைக் குறித்து கேட்டபோது, அவள் சொன்னாள், ‘தமக்காக என் தகப்பன் மரிக்கும்படி என் தேவன் அவரை தகுதியாக எண்ணினாரே அதற்காக அவரை நான் ஸ்தோத்தரிக்கிறேன்’ என்றாள்.

என்ன ஒரு விசுவாச அறைகூவல்!! என்ன ஒரு ஞானமுள்ள வார்த்தைகள்! பெற்றோரின் விசுவாசம் சிறுவயதிலிருந்தே அவளுடைய இருதயத்தில் வேர் கொண்டிருப்பதை அவளுடைய பேச்சின் மூலம் அறியலாம். கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.

இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும்,நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம். – (2 கொரிந்தியர் 2:14-15)

அமெரிக்காவின் எழுப்புதல் வரலாற்றுப் பதிவேடுகளில் ஆன்மீக இராட்சதராய் நிமிர்ந்து உயர்ந்து நிற்கிறார் * சார்ல்ஸ் ஃபின்னி . . * 7 அடி உயரம் கொண்டவர் என்று அவரது சரீர உயரத்தைப் பற்றி சொல்லப்படுவது உண்மையானால் , சரீர வளர்ச்சியிலும் அவர் ஒரு ஆஜானுபாகுவானவரே ! அறிவிலும் அவர் குறைந்தவர் அல்ல . . கல்வியிலும் அறிவாற்றலிலும் அவரது காலத்திலிருந்தவர்கள் அநேகரை விட அவர் உயர்ந்தே நின்றார் . .

இந்த , ஆவியில் அனல் கொண்டு அபிஷேக அக்கினியால் தகித்துக் கொண்டிருந்த ஃபின்னியின் பிரசங்கத்தைக் கேட்டு எரிச்சலடைந்து யாரோ ஒருவனோ , அவன் பின்னாலேயே ஆலயத்தில் உட்கார்ந்திருக்கும் அனைவருமோ சில நேரங்களில் எழுந்து போய் விட்டாலும் , பிரசங்கத்தை முடித்த கையோடு அடுத்த ஃபிளைட் பிடித்து அடுத்த மீட்டிங்குக்கு ஓடும் நம்ம ஊர் சுவிசேஷகர் அல்ல சார்ல்ஸ் ஃபின்னி . .

ஒரு ஊரிலே எழுப்புதலும் மனந்திரும்புதலும் நடக்கும் வரை அந்த ஊரை விட்டு நகராத ஒரு இரும்பு மனிதர் அவர் ! தனது அனல் தெறிக்கும் கண்டிப்பான பிரசங்கத்தினால் கூட சில வேளை சிலரை அவர் இழக்க நேரிட்டாலும் தன் ஜெபத்தினால் அவர்களை மீட்டு தேவனிடம் திருப்பிக் கொள்ளுவார் இந்த ஆவிக்குரிய ஜாம்பவான் ! காரணம் ஜெபம் ! .

* இங்கிலாந்திலுள்ள போல்ட்டனில் ஸ்காட்லாந்து சபையிலே Dr . Fawcett என்ற அருமையான தேவ மனிதருக்குக் கீழே உதவிப் போதகராக நான் ( ரேவன்ஹில் ) இருந்த நாட்கள் அவை . . பூர்வகால ஜெபவீரர்களின் ஜெப வாழ்க்கைகளையும் பிரசங்க ) வேந்தர்களையும் எனக்கு அறிமுகப்படுத்தி , ஆவிக்குரிய புத்தகங்களை நேசிக்கவும் படிக்கவும் எனக்குக் கற்றுத் தந்தவரும் அவரே ! அவரோடு ஊழியம் செய்து வந்த நாட்களில் நான் சந்தித்த வயதான பெண்மணி ஒருவர் சார்ல்ஸ் ஃபின்னி பற்றி சொன்ன சம்பவம் ஒன்று

வருடக்கணக்காக சவாலாக இருந்தது ! அவர் சொன்னது இது தான் . . " ஒரு முறை போல்ட்டனுக்கு ஃபின்னி ஊழியத்துக்கு வந்தார் . அவர் வருமுன் , எங்கள் வீட்டு வாசலைத் தேடித் தட்டிக் கொண்டு நின்றனர் இருவர் , தாங்கள் சில நாட்கள் தங்க இடம் கிடைக்குமா என்று . ஏற்கனவே இடம் நெருக்கடியான நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் கடைசியில் ஒரு சிறிய அறையை அவர்களுக்கு வேறு ஒருவர் மூலம் ஆயத்தப்படுத்திக் கொடுத்தேன் . . அவர்களுக்குக் கிடைத்ததோ வாரம் 25 சென்ட் வாடகையில் ஒரு இருளடைந்த ஈரம் நிறைந்த அறை . அதை சந்தோஷமாக எடுத்துக் கொண்ட Father Clery மற்றும் Father Nash என்ற அந்த ஜெப வீரர்கள் இருவரும் Finney கூட்டம் நடத்திய இரண்டு வாரங்களும் அந்தகாரத்தின் வல்லமையோடு ஜெபத்தில் போராடிக் கொண்டிருந்தனர் . கூட்டத்தின் வெற்றியும் பெயரும் Finney க்கு போனாலும் , அவரைப் பின்னிருந்து , தாங்கியவர்களோ இந்த இருவருமே ! அவர்களது கண்ணீரும் அங்கலாய்ப்பும் ஜெபமும் தேவனுடைய நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது !

அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும், நான் உம்மிலேயும் இருக்கிறது போல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்கிறேன். யோவான்.17:21.

யோவான் 17:21 க்கு மாறாக சபை உடைந்து பிரிந்து கிடப்பதை இணைக்க வேண்டிய அவசித்தைப் பற்றி சில மாணவர்கள் பல்லாண்டுகளுக்கு முன் தரங்கம்படி கடற்கரையில் உட்கார்ந்து யோசித்தும், தர்க்கித்தும் ஊக்கத்தோடு ஜெபித்தும் வந்தார்கள்.

டோர்னகல் பேராயத்தின் முதல் பேராயர் V.S.அசரியா ஒரு முறை ரயிலில் பிரயாணம் செய்தபொழுது Dr.அம்பேத்காரை சந்தித்தார். பேராயர் கிறிஸ்தவத்தைப் பள்ளி அவரிடம் பேசிவிட்டு நீங்களும் உங்களைச் சார்ந்தவர்களும் இயேசுவின் அடியவராக விரும்புவதைப் பற்றி எண்ணுவீர்களா என கேட்டபொழுது அவர் கூறினார். நாங்கள் கிறிஸ்தவத்தில் இணைந்தால் எங்கள் ஐக்கியம் முறிந்து போகும என்றார்.

இது பேராயர் அசரியாவுக்கு ஒரு சவாலாகத் தோன்றியது. 1919 ம் ஆண்டு இந்திய கிறிஸ்தவ தலைவர்களுக்கு ஒரு மாநாடு தரங்கம்பாடியில் நடைபெற்றது. அதில் ஒரு இந்திய தலைவர்கள் கலந்து கொண்டனர். பேராயர் அசரியா அவர்களும் அதில் கலந்து கொண்டார்.


தரங்கம்பாடி மாநாட்டு அறிக்கை

நாம் பலவீனமுள்ளவர்களாய் இருக்கிறோம் ஏனெனில் நம்மிடையே ஒற்றுமை இல்லை. நாம் ஒருமைப்படுவோம். மக்களைக் கிறிஸ்துவுக்கென்று ஆதாயப்படுத்தும்படிக்கே ஒன்றாக இணைவோம். பேராயர் அசரியா தனது இறுதி மூச்சு விடும் வரைக்கும் சபைகளின் ஐக்கியத்திற்காக அயராது உழைத்தார். ஆங்கிலேய சபை (Angelican Church) மெத்தடிஸ்ட் சபை, மக்களால் நடத்தப்படும் சபை (Congregational Church) கிறிஸ்தவ குருவால் நடத்தப்படும் சபை (Presbyterian Church) சீர்திருத்த சபை (Reformed Church) எல்லா திருச்சபைகளையும் ஒன்றாக இணைத்து ஒரே திருச்சபையாக உண்டாக்க வேண்டும் என்பதற்காக திருச்சபை தலைவர்களுடன் கலந்து ஆலோசித்தார்.


தென் இந்திய திருச்சபை அமைப்பு :

சபைகளின் ஒருமைப்பாடு பற்றி எல்லா சபைகளும் கலந்து ஆலோசித்த பின்னர் வேதாகமம் தான் நமது விசுவாசத்திற்கும், செயல்பாட்டிற்கும் அடிப்படை ஆதாரம் என ஏற்றுக் கொள்ளப்பட்டது. வரலாற்று பின்னணியம் உள்ள விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக் கொள்ளவும், முக்கிய சாக்கிரமெந்துகளான ஞானஸ்நானம், கர்த்தருடைய இராப்போஜனம் ஆகியவை நமது விசுவாசத்திற்கு ஆதாரமும் அவசியமானது என ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இந்தியா ஆகஸ்டு 15ந் தேதி 1947 ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின், சபைகளின் ஐக்கியம் வலுப்பெற்றது. 27.09.1947 இந்திய திருச்சபையின் பொது கவுன்சில், பாகிஸ்தான், பர்மா, இலங்கை திருச்சபைகள், தென் இந்தியாவில் ஒன்று பட்ட திருச்சபை, தென் இந்திய மெதடிஸ்டு திருச்சபையின் மாநில சினாட் ஆகியவை இணைந்து தென் இந்திய திருச்சபை உருவாக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பேசல் மிஷனைச் சார்ந்த சபைகளும் ஆந்திராவில் உள்ள நந்தியா ஆங்கிலேய திருமண்டலமும் இந்த ஐக்கியத்தில் இணைந்துள்ளன. பேராயரைத் தலைமையாகக் கொண்ட திருச் சபைகளும், பேராயர் தலைமை இல்லாத சபைகளும் சேர்ந்து ஒரே திருச்சபையாக இணைந்து செயல்படுவது கடவுளின் மிகப்பெரிய பரிசாகும். தென் இந்திய திருச்சபை (CSI) சென்னையிலுள்ள தூய ஜியார்ஜ் பேராலயத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

திருநெல்வேலி பேராலயமும் தென் இந்திய திருச்சபையின் அங்கமாயிற்று. 1.04.1949 ல் மதுரை ராமநாதபுரம் பேராலயம் பிரிக்கப்பட்ட பொழுது ராமநாதபுரம், கீழக்கரை, சாட்சியாபுரம், கொடைக்கானல், சாத்தூர், பன்னியாடிபட்டி ஆகிய சபைகள் மதுரை ராமநாதபுரம் பேராயத்துடன் இணைந்தன.

தென் இந்திய திருச்சபையின் முக்கிய நோக்கம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் ஆசாரியத்துவ ஜெபமாகிய நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப் போல ஒன்றாயிருக்கும் படிக்கு நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக நிறைவேறும் படியாகவும், தென் இந்திய திருச்சபை வலுமையான சபையாக ஆண்டவரின் ஊழியத்தைச் சிறப்பாக செயல்படவும் ஏற்படுத்தப்பட்டது.

தென் இந்திய திருச்சபை 22 பேராயங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பேராயத்தின் பிரதிநிதிகளும் தென் இந்திய திருச்சபையின் ஆட்சிக் குழுவாகிய சினாட் அதின் பல கமிட்டிகளிலும் பங்கு பெறுவதால் மற்ற பேராயங்களின் நடபடிக்கைகள், செயல்பாடுகளே அறிந்து கொள்ள வாய்ப்புள்ளது.


தென் இந்திய திருச்சபையின் அர்ப்பணிப்பும், பொறுப்பும் - 2

தென் இந்திய திருச்சபை இந்தியாவிலுள்ள ரோமன் கத்தோலிக்கர் அல்லாத திருச்சபைகளில் ஒரு பெரிய சபையாகும். இந்த திருச்சபை இந்திய பண்பாட்டையும் ஆவிக்குரிய தன்மையையும் கடவுளின் இறையாண்மை யையும் பிரதிபலிக்கின்ற சபையாகவும், சமூகத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகள், நலிவுற்றவர்கள், பின் தங்கிய மக்கள், தலித் இன மக்கள், ஆதரவற்றவர், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் ஆகியோருக்கு தனது உதவும் கரத்தை நீட்டி அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பல திட்டங்களையும் உருவாக்கி செயல்பட்டு வருகிறது.

தென் இந்திய திருச்சபை சமூகத்தில் உள்ள தீமைகளை போக்கவும், சமூக நீதிக்காக உழைக்கவும் கல்விப்பணி, மருத்துவ பணி மூலம் மக்களுக்கு சேவை செய்யும் சபையாக திகழ்கிறது. தென் இந்திய திருச்சபை, வட இந்திய திருச்சபைமார் தோமா சபை ஆகிய சபைகள் இணைந்து செயல்பட்டு, வருங்காலத்தில் மற்ற பிற சபைகளையும் இணைக்கவும், ஒருமைப்பாட்டைக் காக்கவும், இயேசு கிறிஸ்துவைப் பற்றி சாட்சி பகரும், வலுமையான திருச்சபையாக வளரும் தரினத்தோடு செயல்படுகிறது.

தென்னிந்திய திருச்சபைக்கு உட்பட்ட திருமண்டலங்கள் 1. கோயம்புத்தூர் திருமண்டலம் 2. தோர்ணக்கல் டயோசீஸ் 3. கிழக்கு கேரளா டயோசீஸ் 4. ஜாப்னா 5. கன்னியாகுமரி 6. கரிம்நகர் 7. கர்நாடகா சென்ட்ரல் 8. கர்நாடகா வடக்கு 9. கர்நாடகா தெற்கு 10. கிருஷ்ணா கோதவரி 11. மத்திய கேரளா 12. சென்னை 13. மதுரை ராம்நாடு 14. மேதாக் 15. நைனிடால் 16. வடக்கு கேரளா 17. ராயலாசீமா 18. தெற்கு கேரளா 19. தூத்துக்குடி நாசரேத் 20. திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர் 21. திருநெல்வேலி 22. வேலூர்

SPG – Society for the Propagation of the Gospel SPCK சங்கத்தினர் 7.7.1825 ல் தென் இந்திய மிஷனெரி ஊழியத்தை திருநெல்வேலி குகஎ சங்கத்திடம் ஒப்படைக்க தீர்மானித்தனர். இதன் விளைவாக கனம் டேவிட் ரோசன் 1829 ம் ஆண்டு பாளையங்கோட்øக்கு வந்து SPCK மிஷனெரி பணித்தளங்களான நாசரேத் தூத்துக்குடி ஆகிய இடங்களில் 2 மிஷனெரிகளின் உதவியுடன் பணி செய்தார். கனம் கெம்மரர் 20 ஆண்டுகள் நாசரேத் பகுதியில் ஊழியம் செய்து பல கிராமங்களிலும் சபை உருவாக்கினார்.

சங்கத்தைச் சேர்ந்த கனம் டாக்டர் ஸ்டாரசன் எடின்பரோ பல்கலைகழகத்தில் தங்கப் பதக்கம் பெற்றவர் குகஎ மருத்துவ மிஷன் ஊழியத்தை திருநெல்வேலி மாவட்டத்தில் அறிமுகப்படுத்தி முதலாவது மருத்துவமனையை நாசரேத்தில் ஆரம்பித்தார்.

நாசரேத் பேரும், புகழும் பெறுவதற்கு காரணமானவர் கானோன் ஆர்தர் மர்காசிஸ் (1876 – 1908) ஆவார்.

Dr.G.U.போப் 1842 ம் ஆண்டு சாயர்புரத்திற்கு வந்த பின் இவ்வூர் மிஷனெரி வரலாற்றில் முத்திரை பதித்தது. Dr.போப் புகழ் பெற்ற சாயர்புரம் செமினரியை உருவாக்கி நூற்றுக்கணக்கான குருக்கள், உபதேசிமார்கள், ஆசிரியர்களை உருவாக்கும் பள்ளியை ஏற்படுத்தி, அதன் புகழை பரவச் செய்தார். எதிர்ப்புகளுக்கும், உபத்திரவங்களுக்கும் மத்தியில் அவர் சுப்பிரமணியபுரம் ஆலயத்தை கட்டினார்.


சாயர்புரத்தில் மருத்துவபணியும்

1854 ல் ஆரம்பிக்கப்பட்டு தூய ரப்ஃபேல் ஆஸ்பத்திரியின் மூலம் தொற்று நோய் பரவிய காலத்தில் மக்களுக்கு சிறப்பான சேவை செய்யப்பட்டது.

Dr.போப் ஆரம்பித்த செமினரி வளர்ந்து 1880 ம் ஆண்டு சென்னை பல்கலைகழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரியானது. கனம் சராக் அதன் முதல் முதல்வர் ஆவார்.

பேராயர் கால்டுவெல் இந்த கல்லூரியை தூத்துக்குடியிலுள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியுடன் சேர்த்து விட்டார்.

SPG-யின் அடுத்த முக்கியமான மையம் இடையன்குடி, பேராயர் கால்டுவெல் அவர்களின் அன்பினாலும், உழைப்பினாலும் முழு கிராமமும் இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொண்டது. 33 ஆண்டுகள், கனம் கால்டுவெல் ஐயரவர்கள் உழைத்து, இம்மண்ணின் மக்களின் அன்பையும், மரியாதையும் பெற்றார். தூய திரித்துவ ஆலயத்தைக் கட்டினார். 1880 ம் ஆண்டு இந்த ஆலயத்தை பிரதிஷ்டை செய்தார்.

பேராயர் கால்டுவெல் கல்விப் பணியில் ஈடுபட்டார். அவரும் அவரின் துணைவியாகும் ஆண்கள், பெண்களுக்கென்று பள்ளிகளை ஆரம்பித்தார்கள். பேராயர் கால்டுவெல் 1883 ம் ஆண்டு இடையன்குடியிலிருந்து தூத்துக்குடிக்கு சென்று அதை மையமாக வைத்து ஊழியத்தை நிறைவேற்றினார்.

பேராயர் தனது துணைவியாரின் உதவியினால் பெண்களுக்காக 3 பள்ளிகளை தூத்துக்குடியில் ஆரம்பித்தார். பேராயர் கால்டுவெல் 28.8.1891 நித்தியத்துக்குள் பிரவேசித்தார். அவருடைய சரீரம் கொடைக்கானலிருந்து இடையன்குடிக்கு கொண்டு வரப்பட்டு தூய திரித்துவ ஆலயத்தில் வழிபாட்டு மேடையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இரு மிஷனெரி சங்கங்களும் இணைந்தன

Rt. Rev. Samuel Morley (1896-1903) First Bishop in Tirunelveli Diocese இMகு, குகஎ இரு சங்கங்களும் திருநெல்வேலி திருச்சபை வளர்ச்சியில் பங்கு கொண்டு வளர்த்தன. திருநெல்வேலி டயோசீசன் டிரஸ்ட் அசோசியேசன் இMகு, குகஎ சங்கங்களின் சொத்துகளை நிர்வகிக்க அமைக்கப்பட்டது. 11.03.1924 ல் நடைபெற்ற திருமண்டல பெருமன்றத்தில் திருநெல்வேலி திருமண்டலம் என செயல்படும் என தீர்மானிக்கப்பட்டது.

சங்கங்கள் தங்கள் ஆசிகளை புதிய திருமண்டலத்திற்கு வழங்கின. பேராயம் தோன்றியது (1896) : 1896 வரை திருநெல்வேலி திருச்சபை, மதராஸ் பேராயத்தின் கீழ் பேராயர் சார்ஜென்ட், பேராயர் டாக்டர் கால்டுவெல் முறையே திருநெல்வேலி (CMS) தூத்துக்குடி (SPG) யைத் தலைமையாக வைத்து உதவி பேராயர்களாக 1877 லிருந்து செயல்பட்டு வந்தது. இந்த 2 பேராயர்களும் முறையே 1890, 1891 ல் மரித்ததினால் குகஎ சங்கத்தினர் திருநெல்வேலி திருச்சபையை ஒரு தனி பேராயமாக ஏற்படுத்த வலியுறுத்தினர். பின்னர் 1896 ம் ஆண்டு இMகு, குகஎ ஊழிய பணித்தளங்கள் ஒரே பேராயமாக ஆக்கப்பட்டு பேராயர் சாமுவேல் மார்லி திருநெல்வேலி மதுரா அத்தியட்சாதீன முதல் பேராயராக நியமிக்கப்பட்டார்.


சபைகளை உருவாக்கும் திருச்சபை

திருநெல்வேலி திருச்சபை நற்செய்தி பணிக்கு முதலிடம் கொடுத்து ஆண்டவரின் கட்டளையாகிய நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் (மாற்கு.16:15) கீழ்ப்படிந்து ஆத்துமாக்களை ஆதாயம் பண்ணி வழிபாட்டுக்கு ஆலயங்களை கட்டினர்.

பேராயர் மார்லி 26 ஆலயங்களை பிரதிஷ்டை பண்ணினார். அதைத் தொடர்ந்து பேராயர் டப்ஸ் 5 வருட காலத்தில் 71 சபைகளைக் கூட்டினார். மிஷனெரிப் பணி IMS : திருநெல்வேலி திருச்சபை CMS, SPG சங்கங்களின் மூலம் இருளிலிருந்து ஒளிக்கு வந்தபடியால், இந்த நற்செய்தி, இயேசுவைப் பற்றி அறியாத மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்ற வாஞ்சை, பாரத்தினால் 1903 ம் ஆண்டு இந்திய மிஷனெரி சங்கம் உருவாகியது.

திரு. பாக்கியநாதன் ஐ.எம்.எஸ். முதல் மிஷனெரியாக 9.3.1904 ல் அர்ப்பணிக்கப்பட்டார். அவர் 1909 ம் ஆண்டு முதல் மிஷனெரியாக பணியாற்றினார். 1912 ம் ஆண்டு டோர்னக்கல் ஒரு பேராயமாகி அதன் முதல் பேராயராக ங.கு. அசரியா அவர்கள் அபிஷேகிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.


சிறுவர் ஊழியம் :

கனம் ஸ்காட் பிரைஸ் என்பவர் சிறுவர் ஊழியத்தை 1891 ம் ஆண்டு ஆரம்பித்தார். சிறுவர் ஊழியம் தினமும் வேதம் வாசித்தல், ஜெபத்தின் மூலம் ஆண்டவருடன் ஐக்கியம் கொள்வதை வலியுறுத்தி சிறுவர்களுக்கு தேவ பக்தியை வளர்க்கிறது. தின தியானம், பாலியர் நேசர் என்ற பத்திரிக்கை மாதந்தோறும் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிடப்படுகிறது. விடுமுறை வேதாகம பள்ளி 1952 லிருந்து நடைபெறுகிறது. இதன் மூலம் ஏராளமான சிறுவர்கள் பயன் பெறுகிறார்கள்.

ஒரு சிறுவன் 7 ஆண்டுகள் தொடர்ந்து விடுமுறை வேதாகம பள்ளியில் பயின்றால் முழு வேதாகமத்தையும் நன்றாக படித்து வேத அறிவு, இறைவனைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.


பெண்கள் ஐக்கிய சங்கம் :

பெண்கள் ஐக்கியம் (Mother’s Union) திருநெல்வேலி பேராயத்தில் 1921 ல் ஆரம்பிக்கப் பட்டது. 1961 ம் ஆண்டிலிருந்து பெண்கள் ஐக்கிய சங்கம் (Women’s fellowship) என்ற பெயரில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி பேராயத்தில் 650 கிளைகள் ஜெபிப்பதிலும், வேதத்தைப் படிப்பதிலும், சமூக பணிகளிலும் உற்சாகமாய் ஈடுபட்டுள்ளன.

விடிவெள்ளி ஆசிரமம், செல்வி Frost, செல்வி ஜாய் சாலொமோன் ஆகிய சாராள் தக்கர் கல்லூரி பேராசிரியைகளினால் சாயமலையில் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பெண்கள் ஐக்கிய சங்கம் இதைப் பொறுப்பேற்று நடத்திக் கொண்டிருக்கிறது. இந்நாள் வரைக்கும் சாராள் தக்கர் கல்லூரியின் ஒரு சில பேராசிரியைகளும், மாணவிகளும் அங்கு சென்று ஊழியம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி முதல் ஞாயிறு பெண்கள் ஞாயிறு என ஆசரிக்கப்படுகிறது.

அகில உலக ஜெப தினம் மார்ச் முதல் ஞாயிறு கடை பிடிக்கப்படுகிறது. ஒரு நாட்டின் பிரச்சனைகளைக் குறித்து ஆராய்ந்து கருத்தாய் ஜெபிக்கப்படுகிறது. பெண்கள் ஐக்கிய சங்கம் போதகர்களின் துணை வியருக்கான வருடாந்திர தியான கூட்டம் ஒழுங்கு செய்கிறது. வருடாந்திர பெண்கள் ஐக்கிய சங்க மாநாடு திருமண்டல அளவில் நடக்கிறது. இதில் 1000 க்கும் அதிகமான பெண்கள் கலந்து கொள்கின்றனர்.

வறுமை கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கு தையல் மிஷன், ஆடுகள் வளர்க்க உதவி மற்றும் பல திட்டங்கள் தீட்டப்பட்டு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முயற்சி செய்கின்றனர். தலித் பெண்கள், விதவைகள் நலனுக்காக பல திட்டங்கள் தீட்டப்பட்டு உதவிக்கரம் நீட்டப்படுகிறது. குழந்தைகள் வேலை பார்க்கும் அவல நிலையை மாற்று அவர்களைப் பள்ளிக்கு அனுப்ப வழி காட்டப்படுகிறார்கள்.


ஆண்கள் ஐக்கிய சங்கம் :

திருநெல்வேலி திருச்சபையில் 1980 ம் ஆண்டு ஆண்கள் ஐக்கிய சங்கம் பேராயர் தானியேல் ஆபிரகாம் காலத்தில் உருவானது. இதன் கொள்கை ஜெபம், ஐக்கியம், சேவை என்பதாகும். அத்தியட்சாதீனத்தில் 113 கிளைகள் இயங்கி வருகின்றன. இப்பொறுப்பை ஏற்று நடத்த ஒரு முழு நேர குருவானவர் நியமிக்கப்பட்டுள்ளார். சமூகப் பணியிலும், நற்செய்தி பணியிலும் ஆண்கள் பங்கேற்க உற்சாகப்படுத்தப் படுகிறார்கள்.


மருத்துவப்பணி :

குகஎ சங்கத்தினர் மருத்துவ பணிக்கு முக்கியத்துவம் கொடுத்த நாசரேத், சாயர்புரம், இடையன்குடி, நாகலாபுரம் ஆகிய பகுதிகளில் மருத்துவமனையை ஆரம்பித்து சிறப்பான சேவை செய்துள்ளனர். டாக்டர் வேதபோதகம் என்பவர் ஜெர்மனிய உதவியுடன் பேய்க்குளம் என்ற ஊரில் ஒரு தொழுநோய் மருத்துவமனையை ஆரம்பித்து (1956) மிகச் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

பேராயர் ஜேசன் கு. தர்மராஜ் அவர்கள் ஜெயராஜ் அன்னபாக்கியம் மருத்துவமனையையும், இந்திராணி செல்லத்துரை மருத்துவமனையையும் பாளையங் கோட்டையில் ஆரம்பித்தார்கள். இன்று ஏராளமான நோயாளிகளுக்கு குறைவான கட்டணத்தில் சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இப்பொழுது மருதகுளம், அதிசயபுரம், இடையன்குடி, பங்களா சுரண்டை, மேலப்பாளையம், சடையமான்குளம் ஆகிய இடங்களில் மருத்துவமனை மருத்துவ சேவை வழங்கப்படுகிறது.


மனவளர்ச்சி குன்றியவர் பள்ளி :

திருநெல்வேலி திருச்சபை தனது 200 வது நிறைவு விழாவை கொண்டாடின போது ஒரு சிறப்பு திட்டமாக மனவளர்ச்சிக் குன்றியவர் களுக்காக பிஷப் சார்ஜென்ட் பள்ளி வளாகத்தில் ஒரு பள்ளி 30 குழந்தைகளையும் 2 ஆசிரியர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. இன்று 94 குழந்தைகளும் 21 ஆசிரியர்களும் உள்ள ஒரு மாதிரி பள்ளியாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அங்கு படித்த மாணவர்கள் நல்ல வேலையில் அமர்த்தப் பட்டுள்ளார்கள். திருநெல்வேலி திருச்சபை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கட்டளைக்குக் கீழ்படிந்து, தரிசனத்துடனும், ஜெபத்துடனும் செயல்பட்டு இன்று வளர்ந்து பெருகி ஒரு பெரிய ஆலமரம் போன்று காட்சியளிக்கிறது.

இன்று திருநெல்வேலி திருச்சபை ஒரு தாய் சபையாக 21.10.2003 விளங்குகிறது. தென் இந்திய திருச்சபையின் மிகப் பெரிய திருமண்டலம் இரண்டாக பிரிக்கப்பட்டு, தூத்துக்குடி – நாசரேத் டயோசீசனாக தனித்து செயல்படுகிறது.

ஒரு திருச்சபை தன்னுடைய வரலாற்றை மறக்குமானால் அது உண்மையில் ஆபத்தானது …. இந்திய திருச்சபை உண்மையில் ஆபத்தில் உள்ளது – ஏனெனில் அது திருச்சபை வரலாற்றை பற்றி கவலையற்று உள்ளது வரலாற்று சரிதைகளை பாதுகாக்க தவறிவிட்டது கடவுள் திருச்சபைக்கு செய்த, திருச்சபை மூலம் செய்த பணிகளை மறந்து விட்டது.

ஆங்கிலேயத் திருச்சபையில் குருப்பட்டம் பெற்ற முதல் தென்னிந்தியரும் இரண்டாவது இந்தியருமான கனம் யோவான் தேவசகாயம் ஐயரவர்கள் நம்முடைய சபையிலே பணியாற்றியது நமக்குக் கிடைத்த பெரும் பேறாகும்.

"சுவிசேஷத்தைப் பிரசங்கியாதிருப்பவனுக்கு ஐயோ" என்று பரிசுத்த பவுல் கூறியுள்ளதைத் தன் வாழ்க்கைப் பிரமாணமாகக் கொண்டிருந்த தேவசகாயம் ஐயரவர்களின் ஊழியத்தினால் நம் சபையானது வளர்ந்து அநேகர் இரட்சகராம் கிறிஸ்துவைக் கண்டு கொள்ள ஏதுவாக இருந்தது.

நற்குணங்கள் நிறைந்த கிறிஸ்தவர்களையுடைய நம்முடைய சபை கனம் ரேனியஸ் ஐயரின் கண்களுக்கு "பிலிப்பி" யாகக் காணப்பட்டது.

ஷாப்டர் ஐயர் கடாட்சபுரம் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்த சபை என்று கூறியிருக்கிறார்.

"கல்விச் சாலைகள் வைப்போம்" என்ற பாரதியின் கனவு நனவாகும் வகையில் 1837 ஆம் ஆண்டு ப்ளாக்மன் அம்மையாரால் பெண்கள் பள்ளி திறக்கப்பட்டு சாராள் டக்கர் அம்மையாரின் பொருளுதவியோடு நடத்தப்பட்டது. சிற்றூரான கடாட்சபுரத்தின் பைம்பொழிலால் கவரப்பட்ட மிஸ் கிபர்ண் அம்மையார்

1843ல் முதல் பெண்கள் ஆசிரியைப் பயிற்சிப் பள்ளியை இங்கு ஆரம்பித்தார். பின்பு பல்வேறு காரணங்களினால் ஆசிரியைப் பயிற்சிப் பள்ளி இங்கிருந்து பாளையங்கோட்டைக்கு மாற்றப்பட்டுக் கல்லூரியாக விரிவடைந்தது நமக்குப் பேரிழப்பாகும்.

நம் சபையில் நடைபெற்று வந்த முதியோரின் ஓய்வுநாள் பள்ளிகளைப் பார்த்து அகமகிழ்ந்த டக்கர் ஐயர் கடாட்சபுரத்தை "முதிர்ந்து முன்னேறிய சபை" என்று வர்ணித்தெழுதினார்.

நாம் இன்று இறைவனைத் தொழும்படி கம்பீரமாக அமைந்திருக்கும் ஆலயம் நம்முடைய ஆதித்திருச்சபையினர் காலத்திலிருந்து படிப்படியாகக் கட்டப்பட்டு வளர்ந்ததாகும். 1832ல் சபையார் அதுகாறும் வழிபட்டு வந்த சிறிய கோவிலை இடித்து சற்று பெரிய தேவாலயத்தைக் கட்டினர்.

இப்பொழுது கிராமத்தின் நடுவே அமைந்திருக்கும் மாட்சிமை மிகு இத்தேவாலயத்தின் அஸ்திவாரமானது ப்ளாக்மன் ஐயரவர்களால் 1840ல் போடப்பட்டு அவருடைய நண்பர்களாலும் சங்கத்தாராலும் வளர்க்கப்பட்டு 1841 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தேவசகாயம் ஐயரவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆலயத்தின் நீளம் 81 அடி; அகலம் 36 அடி. கல்லாலும் சுண்ணாம்பினாலும் கட்டப்பட்ட ஆலயம் 800 பேர் தாராளமாக உட்கார்ந்து ஆராதிக்கப் போதுமானதாயிருந்தது. முகடு நாழி ஓடுகளாலானதாவும் பார்வைக்கு அழகாகவுமிருந்தது. சுவர்கள் உள்ளூம் புறமும் சுண்ணாம்பு பூசப்பட்டு வெள்ளையடியக்கப்பட்டு விலங்கின.

கடாட்சபுரம் சபையாருக்குத் தங்கள் தேவாலயத்தைப் பற்றி நியாயமான பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாயின.

1851ல் ஆலயமானது 1000 பேர் உட்காரும் அளவிற்கு விரிவாக்கப்பட்டது. அதன் நீளம் 90' 9" ஆகும். அகலம் 36' 3" ஆகும். "இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ அங்கே அவர்கள் நடுவில் இருக்கிறேன்" என்கிற இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்திற்காக

முதல் பெண்கள் ஐக்கிய சங்கம் கடாட்சபுரம் சபையில் வித்திடப்பட்டு 1850 ல் முளைத்து இந்திய திருச்சபையனைத்திலும் வெளிநாடுகளிலும் பரந்து படர்ந்து விட்டது. அரிசிக் காணிக்கை வழக்கத்திற்கு அருளூர் உபதேசியாரின் மனைவி தாய் ஆனது போல தாய்மார் கூட்டத்துக்குத் தேவசகாயம் ஐயரின் மனைவி முத்தம்மாள் தாய் ஆனார்.

மேலும் கிறிஸ்தவ நன்னடத்தையுடைய அநேகர் கடாட்சபுரம் சபையிலிருந்தபடியினால் அது ஒரு பிலிப்பி சபையாக விளங்கி தெய்வ கடாட்சத்திற்குரியதாக ஆசீர்வதிக்கப்பட்டது.

ஆங்கிலேய அம்மையாரால் தொடங்கப்பட்ட பள்ளி நடுநிலைப்பள்ளியாக விரிவடைந்தது. அருட்திரு. பட்ரிக் ஐயரவர்களின் காலத்தில் ஏழை மாணவர்களுக்கென்று தங்கும் விடுதி ஒன்று வெளிநாட்டுப் பொருளுதவியோடு ஆரம்பிக்கப்பட்டுஸ் சிறப்பாக இயங்கியது. மேலும் ஐயரவர்களது அயராத முயற்சியினால் பங்களாத்தோட்டத்தில் கிணறு தோண்டப்பட்டு, தோட்டம் அமைக்கப்பட்டது.

கனம் யோவான் ஐயரவர்கள் காலத்திலேயே ஆலயத்திற்கு அழகான கோபுரம் கட்டவேண்டுமெனத் தீர்மானம் செய்யப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நம்முடய சபையில் இந்தியக் குருவானவர் இருந்தபடியால் அத்தீர்மானம் மெய்ஞ்ஞானபுரத்தில் நிறைவேற்றப்பட்டு கோபுரமும் கட்டிமுடிக்கப்பட்டது.

நம்முடைய கோபுரம் கைநழுவிப் போனதையறிந்த இக்காலச்சபையினர் மிகுந்த வருத்தமடைந்ததோடு விட்டுவிடாமல் தேவமகிமைக்கென்று சிறந்த கோபுரத்தைக் கட்டவேண்டும் என்ற உணர்ச்சிப் பெருக்கோடு கோபுரம் கட்ட முயற்சி செய்தனர்.

முதல் கட்ட நடவடிக்கையாக அருட்திரு கிறிஸ்டோபர் மான்சிங் ஐயரவர்களின் காலத்தில் குடும்பத்திற்கு 400 ரூபாய் வரியாக நிர்ணயிக்கப்ப்பட்டது. அவரைத் தொடர்ந்து வந்த அருட்திரு ராஜபாண்டியன் ஐயரவர்களின் முயற்சியால்

1987 ஆம் ஆண்டு நெல்லைப்பேராயர் அருட்பெருந்திரு ஜேசன் சி தர்மராஜ் அவர்களல் ஆலயக் கோபுரத்திற்கு அஸ்திபாரம் போடப்பட்டது. ஆலய மேற்கூரையும் பழுதுபார்க்கப்பட்டது. சபைமக்களின் குடும்ப வரியின் மூலமாகவும் மனமகிழ்ந்து தாராளமாகக் கொடுத்த நன்கொடையின் மூலமாகவும் கோபுரக் கட்டுமான தேவைகள் பூர்த்தியாக்கப்பட்டன.

அருட்திரு வேதநாயகம் ஐயரவர்களின் ஊக்கத்தாலும் இரவு பகல் பாராது உழைத்த சபை மூப்பர்களது அயராத முயற்சியாலும் கட்டிமுடிக்கப்பட்டதே இக்கவின்மிகு ஆலயக் கோபுரமாகும்.

இவர்களது பங்கு மட்டுமல்லாது மனம் தளராது கொடுத்த நம் சபையைச் சார்ந்த, சாராத வள்ளல் பெருமக்களின் பங்கும் இதில் அடங்கும். நவநாகரீக, விஞ்ஞான யுகமான இந்நூற்றாண்டில் சபை மக்கள் மிகுந்த உற்சாகத்தோடு கோபுரக்கட்டுமான வேலையில் பங்கேற்று வந்தது குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

சபையில் ஆண்கள், பெண்கள், வாலிபர், சிறியோர் அனைவரும் தினமும் இரவு வேளைகளில் படிகளில் வரிசையாக நின்று செங்கற்களை கடத்தியும் கப்பி மூலம் மணல் இழுத்தும் நற்பணி ஆற்றியுள்ளனர். இப்பணியின் மூலம் கோபுரக் கட்டுமான செலவில் ஏறக்குறைய 5,00,000 ரூபாய் குறைந்துள்ளது. இது புதுமையான எடுத்துக்காட்டான ஒரு பணியாகும். எல்லாவற்றிற்கும் மேலாக இயேசு கிறிஸ்துவின் கிருபையினால் "பாபேல் கோபுரத்தைப் போல்" அல்லாது நம்முடைய ஆலயக் கோபுரத்தை எந்த வித இடையூறுமின்றி இனிதாகக் கட்டி முடிக்கப்பட்டது.

பழைய முன் மண்டபமும் ஆலயத்துடன் இணைக்கப்பட்டு விஸ்தரிக்கப்பட்டது. முன் மண்டபத்திற்கும் ஆலயத்திற்கும் நடுவில் உள்ள வாயில் கதவு அழகிய வேலைப்பாடுகளுடன் தேக்கு மரத்தால் செய்யப்பட்டிருப்பது ஆலயத்தின் அழகுக்கு அழகு சேர்ப்பது போன்று அமைந்துள்ளது. கோபுரத்தின் ஏழு தட்டுகளிலும் அமைந்துள்ள ஜன்னல்கள் அதிக வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டிருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். விஸ்தரிக்கப்பட்டபின் நமது ஆலயத்தின் உட்புறம் நீளம் ஆல்டர் நீங்கலாக 90' 9" அகலம் 36' 3" முன் மண்டபத்தின் நீளம் சுவருடன் சேர்த்து 20' 6" ஆல்டரின் நீளம் மகாபரிசுத்த ஸ்தலம் நீளம் 9' 8" பரிசுத்த ஸ்தலம் 8' 4" நீளம். மேற்கூரையின் உயரம் 35 அடி. ஆலயத்தின் மேற்கூரை வேலைப்பாடு மிகுந்த 20 தூண்களல் தாங்கப்பட்டு வருகிறது.

பார் மட்டத்திலிருந்து அஸ்திவாரம் 23 அடி நீளம், 23 அடி அகலம், 23 அடி உயரம் ஆகும். முதல் 1' உயரத்திற்கு ஆற்று மணல் போடப்பட்டுள்ளது. ஆற்று மணலுக்கு மேல் 2 அடி உயர்ம் பாய் விரிப்பு கான்கிரீட் போடப்பட்டுள்ளது. அதற்கு மேல் 5 அடி உயரம் 6 அடி அகலமாகவும் 4 அடி உயரம் 5 அடி அகலமாகவும் 3 அடி உயரம் 4 அடி அகலமாகவும் குறுகி 1 அடி அளவில் முடிந்துள்ளது.

23 அடி மேல் உள்ள கோபுரம் செங்கல், சிமெண்ட் கொண்டு கட்டப்பட்டுள்ளது. முதல் நான்கு மாடிகள் மட்டும் செங்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிக் குறுக்கிக் கட்டப்பட்டுள்ளது. முதல் நான்கு மாடிகளின் மொத்த உயரம் 116 அடி ஆகும். நீளம், அகலம் சுவரோடு சேர்த்து 20', 60'. சுவர் நீங்கலாக 15 அடி. ஐந்தாவது மாடியிலிருந்து கோபுரத்தின் உயரம் 77' 3". கோபுர உச்சியிலே 6 அடி உயரமுள்ள 560 கிலோ எடையுடைய கல்லால் செய்யப்பட்ட மகுடக்கல் சிலுவையுடன் அமைக்கப்பட்டுள்ளது. இடியைத் தாங்கக்கூடிய 277' நீளம் 1" அகலமுள்ள 1/4" கனமுள்ள செம்புப் பட்டையாகும். ஆக கோபுரத்தின் மொத்த உயரம் 199 அடி ஆகும்.

"முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்" என்பதற்கு நமது ஆலயக்கோபுரம் கட்டி முடிக்கப்பட்டுக் கம்பீரமாக நிற்பது ஒரு எடுத்துக்காட்டாகும். பெருந்தன்மையான காரியம் என்னவென்றால் 20,000 ரூபாய் மதிப்புள்ள இடிதாங்கியும் 11,000 ரூபாய் மதிப்புள்ள மகுடக்கல்லும் இரண்டு சபை உறுப்பினர்களால் கொடுக்கப்பட்ட நங்கொடையாகும்.

மேலும் ஆலயப்பணிக்கென 40,000 ரூபாய் மதிப்புடைய ஜெனரேட்டர் ஒன்று சபை உறுப்பினர் ஒருவரால் ஆலயத்திற்குக் கொடுக்கப்பட்டது. மற்றுமொரு சிறப்பான அம்சம் என்னவென்றால் ஒரு தட்டிலிருந்து அடுத்த தட்டிற்குச் செல்வதற்கு நேர்த்தியான படிகள் அமைக்கப்பட்டிருப்பதாகும். முதல் தட்டிலிருந்து 6வது தட்டு வரைக்கும் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு முறையே 25, 42, 45, 38, 31 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆறிலிருந்து ஏழாவது மூலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2002 ஆம் ஆண்டில் ஆல்டரின் ஜன்னல் பெரிதாக்கப்பட்டு கண்ணாடி பொருத்தப்பட்டது. ஆல்டரின் தரை பளிங்குக் கற்களால் அலங்கரிக்கப்பட்டது.

2006 ஆம் ஆண்டில் கடாட்சபுரம் சபை மக்களின் அரும் முயற்சியால் ஆலயம் முழுவதும் பளிங்குக்கற்களால் அழகு செய்யப்பட்டது. தற்போது நமது ஆலயம் தேவனை மகிமைப் படுத்தும் இடமாகத் திகழ்கிறது. (17-05-1995 ஆம் ஆண்டு கோபுர பிரதிஷ்டை சிறப்பு மலரில்

ஆந்திரா மாநிலம் , தோர்ணக்கல் என்ற பகுதி , சரியான பாதைகள் இல்லாதிருந்தது . சிறுத்தையும் , புலியும் நடமாடிய காட்டுப் பகுதிகளாகக் காணப்பட்டது . கோடைக் காலங்களில் பகலில் பயணம் செய்வது மிகக் கடினம் . ஏனெனில் அது வெப்பம் மிகுந்த பகுதி . இரவில் பயணம் செய்தாலோ திருடர்கள் கைவரிசை அட்டகாசமாகக் காணப்படும் . அப்பகுதியில் சுவிசேஷம் அறிவிப்பதற்கு யார் முன் வரக்கூடும் ?

1903ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட இந்திய மிஷனெரிச் சங்கம் அக்கேள்விகளை மக்கள் முன் வைத்தது . குடும்ப சூழ்நிலைகளால் பலர் முன்வரத் தயங்கியபோது * மருதகுளம் பாக்கியநாதன் * தன்னை மிஷனெரியாக அர்ப்பணித்தார் . இவரே , அச்சங்கத்தின் முதல் மிஷனெரி என்பது குறிப்பிடத்தக்கது .

இவர் தோர்ணக்கல் சென்று பணியாற்றிய மூன்று ஆண்டுகளில் 23 பெரியவர்களும் , 33 குழந்தைகளும் ஞானஸ்நானம் பெற்றனர் . உவைட்ஹெட் பேராயர் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார் . 300க்கும் அதிகமானவர்கள் ஞானஸ்நானம் பெற ஆயத்தமாக இருந்தனர் . திருச்சபையை உண்மையிலும் , உத்தமத்திலும் வழி நடத்தினார் . தமது திருச்சபையைப் பற்றி இவர் கூறும்போது , " இது பலமான திருச்சபை . ஏனென்றால் கிறிஸ்தவர்களாக மாறுகிறவர்களுக்கு உலகப் பிரகாரமான நன்மை வழங்கும் சக்தி எங்களுக்கு இல்லை . கடனாகக் கொடுக்கும் வசதியும் இல்லை , மேல் நாட்டு மிஷனெரிகளைப் போன்று நாங்கள் உதவி செய்ய முடியாது . நாங்கள் செய்யக் கூடியது ஜெபம்தான் .

கிறிஸ்துவையே நம்பி வாழ அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறோம் . " இவரின் வார்த்தைக்கேற்ப மக்கள் விசுவாசத்தில் பெலப்பட்டுத் தங்கள் ஏற்றத்தாழ்வுகளை மறந்து கிறிஸ்துவில் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர் . பேராயர் V . S . அசரியாவால் தோர்ணக்கல் மிகவும் சிறப்புப் பெற்றது . அப்பணிக்கு அடித்தளமிட்டவர் சாமுவேல் பாக்கியநாதன் அவர்களே .

தூத்துக்குடி மாவட்டம் வெள்ளாளன்விளையில் 1874 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 17ஆம் நாள் பிறந்தார். அவருடைய தந்தை தாமஸ் வேதநாயகம் ஆங்கிலிக்கன் சபையில் ஆயராக இருந்தார். அவருடைய தாயார் பெயர் எல்லன்( Mrs. Ellen ).அவருடைய மூதாதையர்கள் மிகவும் தீவிரமான சிவபக்தர்கள்.

தாமஸ் 1839 ஆம் ஆண்டு CMS பள்ளி ஒன்றில் படித்துக்கொண்டிருந்தபோது கிறிஸ்தவரானார். தாமஸ் - எல்லன் தம்பதியருக்கு மூத்த மகள் பிறந்து 13 ஆண்டுகளுக்குப் பின் ஓர் ஆண் மகன் பிறந்ததால்

அக்குழந்தைக்கு சாமுவேல் என்று பெயரிட்டார்கள். 1889 ஆம் ஆண்டு அவருடைய தகப்பனார் மரித்தார். அன்றிலிருந்து அவருடைய தாயார்தான் அக்குடும்பத்தைக் காப்பாற்றினார்.

சாமுவேலை அவருடைய தாயார் மெய்ஞானபுறத்திலிருந்த உண்டு உறையுள் பள்ளிக்கு ( Boarding School ) படிக்க அனுப்பினார்.

பள்ளிப்படிப்பை முடித்த பின் சென்னை சென்று சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் ( Madras Christian College ) சேர்ந்து படித்தார். அப்போது அக்கல்லூரியின் முதல்வர்இவரைத் தனிமைப்படுத்திச் சிறப்பிக்கும் வண்ணம் இவருக்கு அசரியா என்று பெயரிட்டார்.

அங்கு திருச்சபையில் பின்னாளில் மிகவும் சிறந்து விழங்கிய K T Paul உடன் நட்புக் கிட்டியது. மேலும் அமெரிக்க அருள் தொண்டரான Sherwood Eddy யின் நட்பையும் பெற்றார். இருவரும் வாழ்நாள் முழுவதும் நண்பர்களாகவே இருந்தனர். கல்லூரியில் இறுதித் தேர்வு சமயம் மிகவும் நோயுற்றதால் இறுதித் தேர்வு எழுதவில்லை. பின்னர் முயர்ச்சிக்கவுமில்லை.

B. A. பட்டம் கிடைக்கவில்லை. ஆனால் கேலியாக " நானும் BA தான் - Born Again Christian என்பவாராம். தமது 19 ஆம் வயதில் YMCA நற்செய்தியாளர் ஆனார். இதன் மூலம் இலங்கை போன்ற வெளி நாடுகளுக்கும்சென்று தமிழர்களுக்கு நற்செய்தி கூறினார்.தொடர்முயற்சிகள் மூலம் இந்தியர்களே நற்செய்தி அறிவிக்கும் வண்ணம் " இந்திய அருள்பணிக் கழகத்தை ( Indian Missionary Society) திருநெல்வேலியில் உருவாக்கினார்.

YMCA செயலராக1895 - 1909 வரை பணிபுரிகையில்கிறிஸ்தவத் திருப்பணியில் " தன்னாட்டுமயமாதலைச் " ( Indigenization ) வலியுறுத்தினார்.

1905 ஆம் ஆண்டு செராம்பூரில் தேசிய அருள்தொண்டுக் கழகம் ( National Missionary Society) உருவாக்கப்பட்டது. அதற்கு சகரியாவே செயலராகப் நியமிக்கப்பட்டார்.

இக்கழகத்தின் மூலம் ஆப்கானிஸ்தான், திபெத், நேபாளம் ஆகிய நாடுகளிலும் பணிபுரிந்தார். 1907 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற உலக்க் கிறிஸ்தவ மாணவர் இயக்க ( World Student Cristian Federation) மாநாட்டில் பங்குபெற்றார்.

1898 ஆம் ஆண்டு அன்பு மாரியம்மன் என்பவரைத் திருமணம் செய்தார். வெறும் 40 ரூபாயில் வரதட்சணை வாங்காமல் முடித்தார். அத்தம்பதியருக்கு 4 ஆண்கள் 2 பெண்கள் பிறந்தனர்.

1909ஆம் ஆண்டு ஆங்கிலிக்கம் திருச்சபையில் ஆயராக அருள்பொழிவு பெற்றார். ஆந்திராவில்உள்ள தோர்ணக்கல்லில் பணியாற்றினார். 1912 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் நாள் தோர்ணக்கல்லில் தொடங்கப்பட்ட பேராயத்தின் முதல் பேராயராக கல்கத்தாவில்உள்ள தூய பவுலோ பேராலயத்தில் திருநிலைப்படுத்தப்பட்டார். தொடக்கத்தில்மிகச் சிறியதாக இருந்த தோர்ணக்கல் பேராயத்தின் மிகப் பெரியதாக விரிவாக்கம் செய்தார். CMS, SPG ஆகிய கழகங்களின் சபைகளையும் தோர்ணக்கல்பேராயத்துடன் இணைந்தார். இந்தியாவிலேயே மிகப்பெரிய - எண்ணிக்கையில் - பேராயராக விளங்கியது.

தோர்ணக்கல்லில் இந்திய இஸ்லாமியக் கலை நுணுக்கத்துடன் கூடிய மிகப்பெரிய பேராலயத்தைக் கட்டினார். 1936 ஆம் ஆண்டு அப்பேராலயம் மங்கலப்படைப்புச் செய்யப்பட்டது.அசரியா அப்பேராயத்தின் ஒரு ஓரத்தில்ஒரு குடிசையில் வாழ்ந்தார். ஆனால் முழு நேரமும் பேராயம் முழுவதும் மாட்டு வண்டி அல்லது சைக்கிளில் சுற்றித் திரிந்து நற்செய்தியை அறிவித்தார்.

அவருடைய மனைவியும் உடன் ஊழியர் ஒருவரும் உடன் செல்வர். நான்கு D க்களை அகற்ற முயன்றார். Dirty Disease Debt Drink ஆகியவற்றை அகற்ற முயன்று வெற்றியும் கண்டார். அடிமட்டத்தில் மக்களின்மனமாற்றத்தில் வெற்றி கண்ட ஊழியராக விழங்கினார்.

அவருடைய கூட்டங்களில் சுமார் 2,00,000 தாழ்த்தப்பட்ட , ஆதிவாசி மக்கள் பங்குபெறுவர். பெண்கள் பள்ளி ஒன்றையும் தொடங்கினார். 1924 ஆம் ஆண்டு 8 ஆங்கிலேய ஆயர்கள், 53 இந்திய ஆயர்கள் அப்பேராயத்தில் இருந்தனர்.

1935 ஆம் ஆண்டு 250 இந்திய ஆயர்கள்,2000 சிற்றூர் ஆசிரியர்கள், மருத்துவமனைகள், கூட்டுறவுக் கடைகள், அச்சகம் ஆகியவை இருந்தன.

காந்திஜி யுடன் நட்பாக இருந்தார். ஆனாலும் இந்து சமயத்தின் சாதியத்தை வெகுவாக எதிர்த்தார். அவருடைய திருப்பணிக்கு அனைத்தும் ஆந்திராவில்உள்ள மாலாக்கள், மடிகர்களுக்காகவே ( Malas and Madigars ) இருந்தது. கிறிஸ்தவத் திருப்பணி சிறந்து விளங்க வேண்டுமென்றால் திருச்சபைகள் இணைந்து ஒன்றாகச் செயல்பட வேண்டும் என்றார்.

இந்திய தேசியக் கிறிஸ்தவம் பெருமன்றத்தின் ( National Christian Council of India) தலைவராகப் பல ஆண்டுகள் பணியாற்றி இந்தியா, இலங்கை, பர்மா ஆகிய நாடுகளின் திருச்சபை ஒருமைப்பாட்டிற்காக உழைத்தார்.

1920 ஆம் ஆண்டு கேம்பரிட்ஜ் பல்கலைக்கழகம் அவருக்குக் கெளரவப்பட்டம் அளித்தது. 1912 ஆம் ஆண்டுமுதல் அவரது மரணம் வரை இந்தியாவின் முதல் பேராயராகப் பணியாற்றினார்.

ஆந்திராவின் ஓரங்கட்டப்பட்ட ஏழைமக்களுக்கும் ஆங்கில அரசின் உயர்அதிகாரங்களுக்கும் இணைப்புப் பாலமாக விளங்கினார். 1945 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தோர்ணக்கல்லில் மரித்தார்.

இரண்டு ஆண்டுகளுக்குப்பின் அவரது நீண்டநாள் கனவு நனவாகியது. 27-9-1947 அன்று தென்னிந்தியத் திருச்சபை உருவாகியது. தோர்ணக்கல்லில் அவரது பெயரில் ஒரு கல்லூரியில் பெண்கள்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. அவரது சொந்த ஊர் வெள்ளாளன்விளையிலும் ஒரு மேல் நிலைப்பள்ளி உள்ளது.

நீங்கள் நிச்சயம் படிக்க வேண்டிய அண்ணன் எமில் ஜெபசிங் அவர்களின் சரித்திர சுவடுகள். முடியாது என்று துவண்டு விடாதே.. முடியும் என்று முரண்டுபிடி.. நிச்சயம் சரித்திரம் உன்னை வரவேற்கும். யாத்திராகமம் 34:10 அதற்கு அவர்:

இதோ, நான் ஒரு உடன்படிக்கை பண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன்; உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்; உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும். இந்த பதிவை போதகர் அண்ணன் எமில் ஜெபசிங் அவர்களுக்கு தேவனுடைய நாமம் மகிமைப்படும்படி அர்ப்பணிக்கிறேன்...

ஆமென்..

சகோதரர் எமில் ஜெபசிங் 10.01.1940 அன்று, மறைத்திரு Y.C. நவமணி ஐயரவர்களுக்கும்,கிரேஸ் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். தனது வாலிப நாட்களிலே, சகோதரர் P.சாம், மற்றும் சகோதரர் N. ஜீவானந்தம் என்ற தேவ வல்லமை நிறைந்த ஊழியர்களின் வழிநடத்துதலால், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பண்ணைவிளையில், (Now in Tuticorin District) தனது 17-வது வயதில் ஆண்டவரின் அன்புக்கு அடிமையானார்.

ஏமி கார்மைக்கேல், தாமஸ் உவாக்கர், ஈசாக்கு ஐயர் போன்ற பரிசுத்த தேவ ஊழியர்கள் பணிபுரிந்த அவ்வூரிலே, கிறிஸ்துவின் ரத்தத்தால் இதயக்கறை நீங்கித் தூய்மை பெற்று, மிஷனரி தரிசனத்தையும் பெற்றதால், பண்ணைவிளையைப் “பரிசுத்த பூமி” என, இன்றும் எமில் நன்றியோடு நினைவு கூறுகிறார்.


அண்ணனை தேவன் பயன்படுத்திய சரித்திர பதிவுகள்
  1. 17 வயதில் இயேசு கிறிஸ்துவை ஏற்று கொண்டார்
  2. ஏற்று கொண்ட நாள்முதல் தேவனின் கடைசி கட்டளையான சுவிசேஷத்தை திறம் பட செய்தார்
  3. வாலிப வயதில் விடுமுறை வேதாகம பள்ளியில் VBS (VacationBible School) அதிக ஈடுபாடு கொண்டவராக இருந்தார் 4. இவரின் மனைவி ஆனந்தி ஜெபசிங் மற்றும் மூன்று பிள்ளைகளும் தேவனுடைய ஊழியத்தில் அதிக பங்கு வகிக்க துணையாய் இருந்தவர்
  4. இவரை யாவரும் அன்போடு "அண்ணன்" என்று அழைப்பர்
  5. இவர் ஊழியம் செய்த மொத்த வருடம் 45
  6. இவர் ஊழியத்திற்கு ஆதாரமாக இருந்த வசனம் ரோமர் 15:20. மேலும் அவருடைய செய்தியை அறியாதிருந்தவர்கள், காண்பார்களென்றும், கேள்விப்படாதிருந்தவர்கள் உணர்ந்துகொள்வார்களென்றும் எழுதியிருக்கிறபடியே,
  7. FMPB என்ற ஓர் மாபெரும் மிஷனரி இயக்கத்தின் முதல் பொது காரியதரிசியாக இருந்தவர் (General Secretary)
  8. மே மாதம், 1980 ல் விஸ்வவாணி என்ற இயக்கத்தை ஆரம்பித்தவர்
  9. பீகார், அசாம், குஜராத், ராஜஸ்த்தான் போன்ற வடமாநிலங்களின் ரட்சிப்புக்க்காக அரும்பாடுபட்டவர்
  10. போப் கல்லூரி, ஸவயெர்புரம்த்தில் பேராசியராக பணியாற்றினார்
  11. தேவன் இவரை ஊழியத்திற்கு அழைக்க தன்னுடைய வேலையை ராஜினமா செய்து விட்டு ஊழியத்திற்கு வந்தார். அன்றில் இருந்து தேவனுடைய திட்டத்தில் இருந்து பின்வாங்க வில்லை. 13. வேதாகமத்தில் இருந்து நீங்கள் என்ன கேள்வி கேட்டாலும் தயங்காமல் பதில் சொல்லும் ஆற்றல் பெற்றிருந்தார்
  12. சுமார் 135 பாடல்கள் இவர் கைப்பட தேவனின் தெய்வீக ஞானத்தோடு எழுதியவர்
  13. FMPB என்ற பேரியக்கத்தை ஆரம்பிப்பதில் முக்கிய நபரை இருந்தவர் 16. "எனது கொள்கை கிறிஸ்து யார் என்றே தெரியாத மக்களிடம் கிறிஸ்துவை கொண்டுபோய் சேர்ப்பது.

  14. இதை இன்னொருவர் போட்ட அஸ்திவாரத்தில் கட்டமாட்டேன்" என்று கூறி 1980 மே 1 விஸ்வவாணி என்ற ஊழியத்தை ஆரம்பித்தார்.

  15. South Asia of TransWorld Radio வின் தலைமை நிர்வாகியாகவும் பதவி வகுத்தவர்
  16. இவர் வகுத்த வானொலி செய்திகள் கிராம பகுதிகளிலும், துணை கண்டங்களிலும் அதிக பாதிப்பை உருவாக்கியது. பல ஆயிரங்கள் தேவனை சந்தித்தன..
  17. இந்த ஊழியத்தில் மூலம் இரட்சிக்கப்படும் ஆத்துமாக்களுக்கு ‘India Believers Fellowship’ என்ற துணை ஊழியத்தையும் ஆரம்பித்தார்
  18. இதன் மூலம் அவரவர் கிராமங்களில் ஆலயத்தை கட்டி அங்கும் ஆலய மணி ஓசையை கேட்க செய்தார்
  19. இது மட்டும் அல்ல.. ‘The Good Samaritans’, ‘Vishwasi Sangati’ போன்ற ஊழியங்களை ஆரம்பித்து பல ஆயிரங்களை கிறிஸ்துவின் மந்தையில் இணைத்தார்
  20. இந்த ஊழியத்தில் சுமார் 2000 மிசனரிகள் இனைந்து இந்தியா முழுவதும் தேவனின் நாமத்தை பறைசாற்றி வருகின்றனர்.
  21. இந்தியாவில் பல மிஷனரி இயக்கங்கள், பல நூறு பிரிவுகளில் நடக்கும் ஊழியங்கள், பல லட்சம் சபை வேர்களை ஒன்றாக இணைப்பது இவரின் கடைசி ஆசையாக இருந்தது. அதன் காரணமாக ‘BLESS India – Vision 2020’ என்ற ஓர் ஊழியத்தையும் ஆரம்பித்து அனைத்து மிசனரி ஊழியங்களையும் இணைக்க அரும்பாடு பட்டவர்.. 24. 2000 ஆண்டு மத்தியில் இவருக்கு புற்றுநோய் (CANCER) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது
  22. தன் உடல் நிலை பலவீனமாக இருந்த போதும் அதை பொருட்படுத்தாமல் 13ன்று ஆண்டுகள் அதே பெலத்தோடு ஊழியம் செய்தார்.
  23. அண்ணன் தினம்தோறும் அதிகாலை நான்கரை மணிக்கே எழுந்து ஜெபம் செய்பவர்
  24. இவர் ஜெபம் செய்யும் பொது கண்ணீர் தானாக வரும். கண்ணீரோடு, அதிக பாரத்தோடு இந்திய தேசத்திற்காக முழங்காலில் நின்ற ஓர் மாமனிதர் . இவருடைய ஊழியபாதையில் எனக்கு கிடைத்த சில சுவடுகளை இங்கே பதிகிறேன்.

1) ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்

பாடல் பிறந்த கதை ஆண்டவரின் கரத்தில் தன்னை அர்ப்பணம் செய்த எமில், முதலில் பண்ணைவிளையில் தன் வாலிப நண்பர்களை ஆண்டவருக்காக ஆதாயம் செய்தார். அவர்கள் அனைவரும் கூடி ஜெபித்து ஐக்கியத்தில் பெலப்பட்டனர். அந்நாட்களில், 1959-ம் ஆண்டின் பெரிய வெள்ளிக்கிழமை அன்று, வழக்கம்போல ஜெபத்திற்காக இந்த வாலிபர் குழு கூடியது. அன்று சிறப்பாக தியானம் செய்த ஆண்டவரின் சிலுவைப் பாடுகளும், மரணமும் தங்கள் உள்ளத்தில் வேதனை நிறைந்த பாரமாக அழுத்த, அவர்கள் அமர்ந்திருந்தனர். சோர்ந்திருந்த அவர்கள், முதலில் ஆண்டவரைத் துதித்துப்பாடி, அதன்பின்னர் ஜெபிக்க விரும்பினர்.

அந்நிலையில் ஆவியானவர் எமிலுடன் இடைப்பட்டார். கரும்பலகை ஒன்று அந்த இடத்தில் இருந்தது. சாக்குத் துண்டை எடுத்த எமில், பரிசுத்த ஆவியானவரின் வழி நடத்துதலின்படி, இப்பாடலை நேரடியாகக் கரும்பலகையில மடமடவென்று எழுதி முடித்தார்.

அவ்வேளையில் இப்பாடலின் ராகமும் எமிலின் உள்ளத்தில் சுரந்து வந்தது. “பெரிய வெள்ளிக்கிழமையன்றும் என் இயேசு ஜீவிக்கிறார் ! பாவ வாழ்விலிருந்து என்னை மீட்டெடுக்கக் கிரயபலியாக ஈனச்சிலுவையில் அவர் மரித்தார். ஆயினும், இதோ! சதா காலங்களிலும் உயிரோடு ஜீவிக்கிறார் ! அவரை ஏற்றுக்கொண்ட என் உள்ளத்தில் இன்றும் ஜீவிக்கிறார் !” என எமில் எண்ணினார். “அவர் ஏன் என் உள்ளத்தில் ஜீவிக்கிறார்?” என்று நினைத்த எமிலுக்கு, “உன் வாழ்வில் அற்புதங்களைச் செய்வதற்கே,” என்ற ஆவியானவரின் பதில், வேதத்தின் அற்புதங்களைச் சிந்திக்கத் து}ண்டியது. செங்கடல் திறப்பு, எரிகோ கோட்டை வீழ்ச்சி, குருடரின் பார்வை, குஷ்டரோகியின் ஆரோக்கியம், என, பல அற்புதங்களை, ஒவ்வொன்றாக அவரது உள்ளம் நினைவு கூர்ந்தது. அதுவே கரும்பலகையில் பாடலாக உருவானது. இப்பாடலை, கூடி வந்த வாலிபர்கள் அனைவரும் ஒரு சில நிமிடங்களில் கற்றனர். உற்சாகமாகப் பாடினர்.

அப்பெரிய வெள்ளிக்கிழமையானது, உயிர்த்தெழுந்து, சதா காலமும் ஜீவித்தரசாளும் மகிமை நிறை ஆண்டவரை, அற்புத நாயகராய் ஆராதிக்கும் வேளையாய் மாறியது, சோர்வு நீங்கிப் புத்துணர்ச்சி பெற்ற வாலிபர்கள், உற்சாகமாய் ஜெபத்தில் தரித்து நின்றனர்.


2) கஷ்டப்படுபவர்களின் மேல் உள்ள கரிசனம்

1980ல் சாமுவேல் என்ற ஓர் ஊழியர் வாலிப நாளில் தேவனை தெரிந்து கொண்டு மிசனரியாக அர்ப்பணித்து பெரியமலை, குஜராத் போன்ற இடங்களில் பலரை எசுவண்டை சேர்த்தார். ஒருமுறை தன் கண் பரிசோதனைக்காக அளிக்ராஹ் சென்று விட்டு திரும்பும் பொது தன் வீடு திருடர்களால் கொல்லையிடப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். முழுவதையும் இழந்த நிலையிலும் தொடர்ந்து தேவ ஊழியத்தை நிறைவேற்றினார்.

குறைந்த கண் பார்வையோடு கர்நாடகாவில் உள்ள ஓர் வேதாகம கல்லூரியில் படிக்க வந்தார். அவரை ஓர் சுவிசேஷ ஊழியம் தாங்கி வந்தது. இவரை தாங்கியது வேறு யாரும் அல்ல.. நம் ஜெபசிங் அண்ணன் தான்

மாதம் ருபாய் 450 கொடுத்து குடும்பத்தை தாங்கினார். இவர் விட்டு சென்ற இவரின் மனைவி ஆனந்தி ஜெபசிங் அவர்களுக்காக ஜெபித்து கொள்ளுங்கள். இவரின் மூன்று பிள்ளைகளான Mrs. டென்னிஸா டேவிட்சன், Mrs. ஷாலினி பட்ராஸ், திரு ஆன்று ஜெபசிங் அவர்களுக்காகவும் இவர்கள் தேவனுக்கென்று குடும்பமாக செய்யும் ஊழியங்களுக்காகவும் ஜெபித்து கொள்ளுங்கள்.

அகஸ்டின் ஜெபக்குமார் வெள்ளை உடை, முகத்தில் முட்கள் போன்ற தாடி, அழகிய சிரிப்பு, கணீர் குரல், அழுத்தமான உச்சரிப்புகள், ஆழாமான கருத்துக்கள், சிறிதும் தடுமாறாத ஊழிய அழைப்பு, கண்களில் கம்பீர வைராக்கியம், எந்த ஓர் பண ஊழியத்திலும் இடுபாடில்லாமை, எதை பற்றியும் கவலைபடாமல் வேதத்தை மட்டும் போதிக்கும் அதிகாரம், 41ஆண்டுகளாக தூக்கி சுமக்கும் சுவிசேஷ பாரம் என்று இவர் இளமை பருவத்தில் ஆரம்பித்த ஓட்டம் இன்றும் தொடர்கிறது. பல இளைஞ்ஞர்களுக்கு இன்றும் இவர் ஓர் முன்னோடி. "ஊழியம் பற்றி தெரிய வேண்டுமா, பீகார் வந்துபார்" என்று தைரியமாக அழைக்கும் ஓர் வற்றாத வைராய்கியம் இவரின் ஓர் அடையாளம். உங்கள் பிள்ளைகள் படிக்கவில்லை என்று ஊழியத்திற்கு அனுப்பாதீர்கள் என்று எச்சரிக்கும் மன தைரியம்.

இவரை பற்றி தெரிந்து கொள்வோமே? சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்கள் 20 - 8 - 1946 வருடம் திருநல்வேலியில் பிறந்தவர். தூத்துக்குடியில் வளர்க்கபட்டார். பொறியியல் பட்டபடிப்பை முடித்தவுடன் சென்னை பல்லாவரத்தில் உள்ள English Electric Co ல் டூல் டிசைனர் ஆக சிறிது காலம் வேலை பார்த்தார்.

சென்னை பட்டணம் இவருக்கு தேவனை முகமுகமாய் அறிந்து கொள்ள அதிகமாய் உதவி செய்தது. ஆலயத்திற்கு போகும் சாதாரண கிறிஸ்தவனாய் இருந்த இவர் பின்பு தேவனை அதிகமாக தேட ஆரம்பித்தார். தன்னை தேவனின் அழைபிற்குள் வழிநடத்தினது சென்னை என்று சகோதரர் மகிழ்ச்சியுடன் குறிபிட்டுள்ளார்.

இவர் வேலை செய்த நிறுவனத்தின் முன் ஓர் ஆலயத்தின் சொத்து இருந்தது. அங்கு சென்று மாலை வேலையில் ஊழியம் செய்து வந்தார். இப்போது அங்கு பெரிய ஆலயம் எழுப்பப்பட்டு உள்ளது. 21ம் வயதில் மிக உற்சாகத்துடன் சுவிஷேசத்தை தெருவெங்கும் போய் அறிவித்தார்.

இவர் அதிகமாக சிறு குழந்தைகளிடம் தேவனின் அன்பை பகிர்ந்து கொள்வதில் நாட்டம் கொண்டார். சுமார் வாரத்திற்கு 800 குழந்தைகளிடம் சுவிஷேசத்தை பகிர்வது இவரின் வழக்கம்.

சிறிது சிறிதாக வாலிபர்கள் மத்தியில் ஊழியம் செய்ய ஆரம்பித்தார். பின் இவரின் நண்பரோடு சேர்ந்து காலை மாலை தெருக்களில் வசனத்தை கூவித்திரியும் காரியத்தையும் செய்து வந்தார்.

வாலிப வயதில் கிறிஸ்தவ நண்பர்களாக சுவிஷேசம் அறியபடாத இடங்களுக்காக வெள்ளிகிழமை இரவு முழுவதும், மற்றும் செவ்வாய் 7-9 மணிவரை ஜெபிப்பது வழக்கம்.

அந்நாட்களில் தேவன் பீகாரின் வரைபடத்தை கான்பித்தனின் காரணமாக 1972ம் வருடம் தேவன் கொடுத்த தரிசனத்தின் படி தேவ ஊழியம் செய்வதற்காக தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு "தேவ ஊழியர்களின் கல்லறை" என்று வர்ணிக்கப்பட்டபீகார் மாநிலத்திற்கு கடந்து வந்தார். 13-10-1972ல் சுவிஷேச வாசமே இல்லாத பீகார் மண்ணில் கால் பதித்தபோது பீகார் மக்களின் வாழ்க்கை நடைமுறை பற்றியோ, பாஷையோ, ஊரோ தெரியாது.

தேவன் கொடுத்த அநாதி அழைப்பை நம்பி வந்த இவருக்கு எதை பற்றியும் கவலையில்லை. இவர் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணிற்கும் பீகாரை பற்றி அழைப்பு இருந்ததை தெரிந்து கொண்டார்.

திருமணத்திற்கு முன் நிச்சயிக்கப்பட்ட பெண் முகத்தையோ, பேசினதோ கிடையாது. இவர்களின் பெற்றோர் இருவரின் தீர்மானத்தையும் பார்த்து தேவனின் சமூகத்தில் இணைத்து வைத்தார்கள்

இவர்களுக்கு தேவன் 4 குழந்தைகளை கொடுத்தார். இவர்கள் இணைந்து 4 குழந்தைகளை எடுத்து வளர்த்தார்கள். இவற்றில் ஓர் குழந்தையும் எடுத்து வளர்த்ததில் ஓர் குழந்தையும் இறந்து விட்டது. இப்போது மொத்தம் 6 குழந்தைகள் உண்டு. இவர்களில் 4 பேருக்கு திருமணம் ஆகி விட்டது.

குடும்பமாக ஊழியம் செய்ய ஆரம்பித்த போது பல கஷ்டங்களை அனுபவித்தாலும், சகோதரர் எப்போது வருவார் என்று அறிந்திராத போதும், சாலை ஓரத்தில் கிடக்கும் கீரைகளை சமைக்க வைக்கும் போதும் முகம் கோணாமல் இன்முகத்தோடு ஊழியத்தை தாங்கின மனைவியை தேவன் தந்த அதிசயம் என்று சகோதரர் குறிபிட்டிருகிறார்.

இவரின் சொந்த குழந்தை இறந்த போது ஊழியத்தின் நிமித்தமாக புதைக்க கூட வரவில்லை. ஆனாலும் இவரின் மனைவி மனதில் தாங்கிக்கொண்டு தேவ ஊழியத்தை நிறைவேற்றி கணவருக்கு துணையாக நிற்கிறார். தன்னந்தனியாக பீகாருக்கு கடந்து சென்றார்.

அதன் பின் 7 ஆண்டுகளுக்கு பின் GEMS ஊழியத்தின் பெயரை நிறுவினார். கால்கடுக்க நடந்து சென்று ஊழியம் செய்ய ஆரம்பித்தார். பல சோதனைகளை வேதனைகளோடு கடந்து போனாலும் அழிந்து போய் கொண்டிருக்கும் ஆத்துமாக்கள் மேல் வைராக்கியம் கொண்டவராய் வெகு சீக்கிரத்தில் எல்லாவற்றையும் கற்று கொண்டார்.

சுமார் 41 வருடமாக ஊழியத்தை நிறைவேற்றி வரும் இவருடன் 2,300 பேர் ஊழியம் செய்து வருகின்றனர். சுமார் 7 விதமான ஊழியத்தை செய்துவரும் இவரின் ஸ்தாபனம் சுவிஷேசத்தை அறிவிப்பதை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

சுமார் 20 லட்சம் பேரை ஓர் வருடத்தில் சந்தித்து வருகின்றனர். தற்போது 31000 பேருக்கு ஊழிய பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. 120 பள்ளிகூடங்களை உருவாக்கப்பட்டுள்ளது. பல கல்லூரிகளையும் இவர் இயக்கி வருகிறார். மருத்துவமனையும் உள்ளது.

ஓர் வருடத்தில் சுமார் 50,000 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தனிமனிதனாய் சென்றவர் இன்று ஆலமரமாய் நிற்கிறார். இவரின் ஆணிவேர் இயேசு கிறிஸ்துவில் இருப்பதினால் இன்றும் தனகென்று தேவன் நியமித்த ஓட்டத்தில் தெளிவாக ஓடிகொண்டிருகிறார்.

தேவன் உங்களை அழைத்துள்ளாரா? ஊழியத்தை பற்றி பயம் உண்டோ? குடும்பத்தை பற்றின பாரம் அழுத்தபடுகிறதோ? உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர். உங்களை கைவிடமாட்டார். திறப்பின் வாசலில் நிறைக்க நம்மை முழுமனதுடன் அற்ப்பநிபோமா? ஆமென்.

கிறிஸ்தவம் என்பது அரசியல் மூலமாகவோ? அதிகாரத்தின் மூலமாகவோ? பதவி மூலமாகவோ? போராட்டங்கள் மூலமாகவோ? பணத்தின் மூலமாகவோ? கட்சி மூலமாகவோ? வளர்ந்தது இல்லை.

இப்படிப்பட்ட உன்னதமான அர்பணிப்பின் மூலம் தேவன் அதிசயத்தக்க விதமாய் செயல்பட்டு இன்றும் கிறிஸ்தவம் வளர்ந்து கொண்டு இருக்கிறது. இப்படிப்பட்ட அர்ப்பணிப்புள்ள ஆணிவேர்கள் தேவனுக்கு தேவை. இவரின் ஊழியத்தை பற்றி தெரிந்துகொள்ள வலைதளங்களில் வளம்வாருங்கள்.

விரைவில் இவர் தமிழ்நாட்டின் பல இடங்களில் ஊழியம் செய்ய உள்ளார். இவரை சந்தித்து ஆலோசனை பெற உங்களை அன்போடு அழைக்கிறோம். நன்றி. தேவன் தாமே சகோதரர் குடும்பத்தையும், ஊழியத்தையும் ஆசீர்வதிபாராக.

20.02.2008, இந்த உலகம் சந்தித்த ஒரு துயரமான நாள்.

ஆம், அன்பின் அப்போஸ்தலனும், 20-ம் நூற்றாண்டின் எலியாவாவுமான சகோதரர் டி.ஜி.எஸ். தினகரன் அவர்கள் இவ்வுலகத்தை விட்டு கடந்துசென்ற நாள்.

கிராமமோ, நகரமோ இந்திய ஊழியர்களில் ஏதாவது ஒரு வகையில் சகோதரர் டி.ஜி.எஸ். தினகரன் அவர்களின் பாதிப்பு இல்லாத ஊழியர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு முன்னோடியாக வாழ்ந்தவர் நம் அருமை சகோதரர் டி.ஜி.எஸ். தினகரன் அவர்கள்.

மனதுருக்கத்தை பற்றியே அடிக்கடி பிரசங்கித்த இந்த தேவ மனிதன் வறுமை, வேலை இல்லாத திண்டாட்டம் தற்கொலை முயற்சி என்பவைகளை தன் இளமையில் அனுபவித்தது அவரது ஊழியத்தின் அடிப்படையும் சிறப்பான அம்சமாகவும் அமைந்திருந்தது.

ஆயிரக்கணக்கில் பிரச்சனைகள், நோய்களுடன் இருந்த மக்களுக்காக ஜெபகோபுரம் கண்ட இந்த ஜெபவீரன் மக்களுக்காக பரிதபிக்க கூடிய பிரசங்கியாக சுற்றி திரிந்தார். மக்களுக்காக அவரின் கண்ணீரும், மனதுருக்கமும் அவர் வாழ்வின் இறுதி மட்டும் வற்றி போகவில்லை. எளிய துவக்கம்;

சுரண்டை என்னும் கிராமத்தில் 1935-ம் ஆண்டில் பள்ளி ஆசிரியரான திரு. துரைசாமி, திருமதி. எப்சிபா தம்பதிகளுக்கு பிறந்த தினகரன், தனது தற்கொலை முயற்சி, இரட்சிப்பின் அனுபவம் இவற்றிற்கு பின் வங்கிப் பணியில் இருந்து கொண்டே தனது ஊழியத்தை செய்து வந்தார். ஊடகங்களில் ஊழியம்; பிரசங்கம் மட்டுமல்லாமல் பத்திரிக்கை, புத்தகங்கள், வானொலி, ஒலிநாடாக்கள் மற்றும் ஒளிநாடாக்கள் இவற்றுடன் தொலைக்காட்சி போன்ற அணைத்து ஊடகங்கள் வழியாகவும் தன் ஊழியத்தை நிறைவேற்றிய இந்த தேவ ஊழியர் பழைய பாடல்களை பாடும்போது கரையாத மனமும் கரையும், உருகாத மனமும் உருகும்.


முழுக் குடும்பமும் ஊழியத்தில்;

மனைவி ஸ்டெல்லா தினகரன் அவர்கள் பெண்கள் ஊழியம் மற்றும் பத்திரிக்கை ஊழியத்தில் உதவிகரமாக இருக்க, மகன் பால் தினகரனும் பலவிதங்களில் உடன் பணி செய்ய, மகள் எஞ்சல் கூட்டங்களில் பாடுவது வழக்கம். தம் அருமை மகளின் மரணத்துக்கு பின் குடும்பத்தில் இணைந்த மருமகளும், பேரப்பிள்ளைகளுமாக தனது முழுக்குடும்பத்துடன் கர்த்தரை சேவித்த பாக்கியசாலி ஊழியர்


இவர். கிளைகளுடன் செழித்த ஊழியம்;

இயேசு அழைக்கிறார் ஊழியங்கள் பகுதி நேர பிரசங்கம் மற்றும் ஜெப ஊழியமாக துவங்கி பத்திரிக்கை, புத்தகங்கள், வானொலி, தொலைகாட்சி, ஒலிஒளி நாடாக்கள், ஜெபகோபுரம், பல்கலைகழகம், சமூக சேவை, இணையத்தளம், ஜெபக்குழுக்கள், ஊழியப் பயிற்சி பள்ளி என பல பிரிவுகளுடன் சர்வதேச அளவில் விரிந்து செழித்திருக்கிறது, இந்திய தேசத்தின் பல மாநிலங்களிலும், அயல் நாடுகள் பலவற்றிலும் சகோதரர் அவர்களது நற்செய்தி கூட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் பங்குபெற்று ஆசிர்வாதங்களை பெற்றிருக்கின்றனர்.

சர்வதேச தலைவர்; தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியா முழுவதிலும் அணைத்து அரசாங்க தலைவர்களுக்காகவும் ஜெபித்து அவர்களுடன் நல்லுறவை பாதுகாத்து வந்த சிறந்த தலைவராக அனைவராலும் அறியப்பட்டவர் அருமை சகோதரர் தினகரன்.

உலக அளவில் வல்லமையான ஊழியர் என ஒப்புக்கொள்ளபட்டவர். அனைத்து சமய மக்களாலும் அறியப்பட்ட இந்நூற்றாண்டின் ஒரே தமிழ் கிறிஸ்தவ தலைவர் இவர் என்றால் அதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

பாடுகளில்லாத உலகத்திற்கு; தனது எழுபதுகளிலும் ஊழியங்களை தன்னால் இயன்றவரை செய்து கொண்டிருந்த சகோதரன், மூட்டு வலி மற்றும் மூச்சடைப்பின் காரணமாக சிறிது கால் சுகவீனத்திற்குபின் .. பிப்ரவரி ... அன்று தான் சேவித்த கர்த்தரை முகமுகமாக தரிசிக்க சென்றுவிட்டார். நித்திய வாழ்வை அடைந்து விட்ட சகோதரர் டி.ஜி.எஸ். தினகரன் அவர்களின் இழப்பு என்றன்றும் ஈடுசெய்ய இயலாதது.

அவர்தம் குடும்பதினருக்ககவும், ஊழியங்களுக்காகவும், சிறப்பு பிரார்த்தனைகளை ஏறெடுக்க வேண்டியது நமது கடமையாகும். Re: சகோதரர் டி.ஜி.எஸ். தினகரன் தாங்கொண்ணா வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும் வாழ்க்கைப் பாதைக்கு முட்டுக்கட்டையானதால், ‘உயர்வுக்கு வழி ஏதுமில்லை, ஆதரிப்பார் ஒருவருமில்லை’ எனத் தீர்மானித்து,

1955 ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 11 ம் தேதியன்று, இளைஞனாயிருந்த சகோதரர். தினகரன் தன்னுடைய வாழ்க்கையின் எல்லைக்கு வரத்தீர்மானித்தார். ‘வாழ்க்கையின் முடிவே என் துயரங்களின் முடிவு!’ என்றெண்ணி அருகிலிருக்கும் இரயில்பாதையை நோக்கிச் சென்றார். ‘எப்போது துரித இரயில் வரும்? எப்போது நான் என் உயிரை மாய்த்துக்கொள்ளுவேன்?’ என்று கண்கள் நிறைந்த கண்ணீரோடும், மனம் நிறைந்த திகிலோடும், துரித இரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக, காவல் துறையில் பணிபுரிந்துகொண்டிருந்த தன்னுடைய சித்தப்பாவைச் சந்திக்க நேர்ந்தது தேவத் தீர்மானமே!

தெய்வபக்தி நிறைந்த அவருடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும், சகோதரருடைய உள்ளத்தில் அளவில்லாத விசுவாசத்தை ஏற்படுத்தியது. சமாதானம், சந்தோஷம், நம்பிக்கை போன்றவை அவருடைய மனதில் வெள்ளமெனப் பாய்ந்தோடின. அவருடைய வாழ்க்கை முற்றிலுமாக மாற்றப்பட்டது. அகமகிழ்வுடன் வீட்டிற்குச் சென்றார். முழங்காற்படியிட்டு ஜெபித்தபோது தேவபிரசன்னத்தினால் நிரப்பப்பட்டார்.

“நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கும் முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன்” (எரேமியா 1:5). ஆம்! நம் அன்பிற்குரிய சகோதரர் பிறக்கும் முன்னரே ஆண்டவருக்கென்று உத்தம ஊழியனாகத் தெரிந்தெடுக்கப் பட்டிருந்தார். ஆகவே, தேவன் அவரைக் குறித்த நேரத்தில் மரண இருளின் பள்ளத்தாக்கினின்று தூக்கியெடுத்தார்.

பின்னாளில் திரள் கூட்ட மக்களுக்கு ஆண்டவரின் அன்பை எடுத்துரைக்கும் பேறு பெற்றார். இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் வாழ்க்கை தோல்விகளால் தடம்புரண்டு போயிருக்கலாம். கவலைபடாதீர்கள்! உங்களை நேசிக்கும் ஒரு ஆண்டவர் இருக்கிறார், உங்களை குறித்து அநாதி தீர்மானம் அவரிடம் உண்டு. உங்களை அவர் உயர்த்துவார், சமாதானத்தை அருளுவார். அவர் தான் இயேசு கிறிஸ்து.

இவர் தனது பெற்றோருக்கு கடைசி பிள்ளை. இவரது தந்தை திரு.சாலமோன் ஆசிர்வாதம் ஒரு Violinவித்வானகவும், கர்நாடக இசை ஆசிரியராகவும் இருந்தார்.தனது தந்தையிடம் இவர் முறையாக இசை பயின்றார். "நவரோஜி" என்பது கர்நாடக இசையில் ஒரு ராகம்.அதை இவரது தந்தை இவருக்கு பெயராக சூட்டினர்.

இவரது 21-வது வயதில் Mission பணிக்காக இலங்கை செல்ல வேண்டியதாக இருந்தபோது,அதற்காக தனுஷ்கோடி செல்லும் ரயிலில் ஏறி அமர்ந்திருந்தபோது,தன்னை வழியனுப்ப தனது தயார் வருவார் எனக் காத்திருந்தார்.நேரம் கடந்து போனதே தவிர,தயார் வரவில்லை இந்த சூழ்நிலையில் அவர் எழுதிய பாடல் தான் "என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும்" ஒரு தாய் தன் பிள்ளையை மறந்தாலும்,மறவாமல் நேசிக்கும் தேவனை மையபடுத்தி எழுதப்பட்ட பாடல் இது.இந்த பாடல் எழுதபட்ட வருடம் 1960.

இவர் சென்னை Electriccity board - இல் பணியாற்றி கொண்டிருந்த போது ஒரு தெய்வீக தரிசனத்தைக் கண்டு,தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர ஊழியப் பணியை தொடங்கினர்.

இவர் உயர் நிலை பள்ளியில் படித்துகொண்டிருக்கும் போது UN அமைப்பு நடத்திய ஒரு பாட்டு போட்டியில் பங்கேற்று முதல் பரிசை வென்றார். இவரது பாடல்களில் இசை,இலக்கணம் (பல்லவி,அனுபல்லவி மற்றும் சரணங்கள்) முறையாக கடைபிடிக்கப்பட்டது. இசைத்தகடு தயாரிப்பில் புகழ் பெற்ற நிறுவனமான HMV,இவரது பாடல்களை தயாரித்து வெளியிட்டு வந்தது. All India Radio இவருடைய பாடல்களை தொடர்ந்து பல ஆண்டுகள் ஒலிபரப்பிவந்தது . இவருக்கு Rhode island -இல் உள்ள ஒரு சர்வதேச பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.

இவர் கடந்த 50 ஆண்டுகளில் 365 பாடல்களை எழுதி,இராக்கம் அமைத்து,பாடி வெளியிட்டிருக்கிறார். தற்போது 74 வயதாகும் இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவரது வாழ்க்கை,மற்றும் பாடல்களை குறித்த ஒரு புத்தகம் "முட்களுக்குள் லீலி புஷ்பம்"(Lilly among the Thtons)என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. அறிவர். சாராள் நவரோஜி அவர்களின் நினைவு நாள் இன்று..

கொஞ்ச காலம் இயேசுவுக்காக, என்னை மறவா இயேசு நாதா, திருப்பாதம் நம்பி வந்தேன், போன்ற காலத்தால் அழியாத பாடல்களை தமிழ்த்திருச்சபைக்கு வழங்கிய உத்தம ஊழியர் சாராள் நவரோஜி அம்மா தனது மண்ணுலக ஓட்டத்தை நிறைவு செய்து, நித்திய வீட்டுக்கு சென்று விட்டார். புகழ்மிக்க பல மேடைகளை தவிர்த்தார், தனது புகை படங்களை எங்கேயும் பிரசுரிக்க அனுமதித்ததேயில்லை. ஜெபத்திலேயே தனது வாழ்க்கையை செலவிட்டவர், தனது பாடல்கள் முழுவதும் ஜெபநேரத்திலேயே எழுதியிருக்கிறார்.

கனல் சிந்தும் பாடல் வரிகளை எழுதி பட்டித்தொட்டியெல்லாம் பாடினவர், கிராம ஊழியங்களை இழிவாக கருதுபவர்கள் நடுவில் கிராம மக்களை உண்மையாய் நேசித்து ஊழியம் புரிந்தவர், சென்னையில் ஊழியம் என்றாலே பந்தா, படோடாபம்,விளம்பரம், சொகுசு பங்களா, ஆடம்பர வாழ்க்கை, விலையுயர்ந்த கார் என்பவர்கள் நடுவில், எளிய வாழ்க்கையுடன், கிறித்துவை மையப்படுத்தி இறுதி வரை வாழ்ந்தவர்,

வருங்கால ஊழியராக வருவோர் இவரது வாழ்க்கையை பின்பற்ற வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு மாசில்லாத சுத்தமான பக்தி கொண்டவர்.

அறிவர் எமில் ஜெபசிங் வரிசையில் பாடல் என்றாலே அன்றும் இன்றும் என்றும் அறிவர். சாராள் நவரோஜி என்று வரலாற்றில் அழுத்தமாக பதிவு செய்து விட்டார்..

இவர் கிறிஸ்துவை அறியாத ஒரு இந்து குடும்பத்தில் சாலம்பாளையம் எனும் கிராமத்தில் பிறந்தார். (தென் ஆர்க்காடு மாவட்டம்) எட்டு வருட பள்ளிப் படிப்புக்குப் பின்னர் தந்தையார் போலவே ஆசிரியராக விரும்பி, விழுப்புரம் அருகில் உள்ள கத்தோலிக்க பள்ளி ஒன்றில் ஆசிரியர் பயிற்சியை மேற்கொண்டார். வெற்றிகரமான ஆசிரியர் பயிற்சிக்கு பின்னர்,

1951 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் பணி நியமன ஆணை கிடைக்கவே, சென்னைக்கு இடம்பெயர்ந்து ஆசிரியர் பணியினை செய்து வந்தார். அந்த நாட்களில் தி.மு.க வின் மீதுள்ள அதிக பற்றால் கழகத்தின் தீவிர தொண்டனாய் பணியாற்றி வந்தார்.

1957 ஆம் ஆண்டு லேமென் சுவிஷேச ஐக்கியத்தின் மூலமாக கிறிஸ்துவை அறிந்துகொண்டு, மனமாற்றம் அடைந்து புதுவாழ்வை தொடங்கினார்.

இரட்சிக்கப்பட்ட சில நாட்களிலேயே சுவிஷேசகாராக நற்செய்தியை முழங்க ஆரம்பித்துவிட்டார். 1960 ஆம் ஆண்டு பரிசுத்த ஆவியின் அமர்வு பெற்று பகுதி நேரமாக ஊழியம் செய்து வந்தார்.

1968 இல் தனது ஆசிரியர் பணியினை ராஜினாமா செய்துவிட்டு முழுநேரமும் கர்த்தருக்கு ஊழியம் செய்ய புறப்பட்டார். இந்த நாட்களில் தான்

ஐயா அவர்களுக்கு ACA சபைகளுடனான நெருக்கும் அதிகமானது. 1975 ஆம் ஆண்டு C.P.D அருமைநாயகம் அவர்களின் முயற்சியில், முதன்முறையாக கடல் கடந்து யாழ்பாணம் பகுதிகளில் நற்செய்தியின் ஸ்தானாபதியாக ஊழியம் செய்தார்.

ஜீவானந்தம் ஐயா நடத்தி வந்த முழு இரவு ஜெபங்கள் சென்னை பட்டணத்தில் அநேகரை கிறிஸ்துவின் ஊழியத்தை செய்ய எழுப்பிவிட்டது. சகோ. டி.ஜி.எஸ் தினகரன் அவர்கள் இந்த முழு இரவு ஜெபங்களில் தவறாமல் கலந்து கொள்வார்.

1983 முதல் 1990 வரை World Missionary Evangelism, Madras என்ற ஸ்தாபனத்தை நிர்வகித்தார். 1990 ஆம் ஆண்டு தேவனுடைய தரிசனத்தை பெற்று 'மகிழ்ச்சி' திருசபையை தொடங்கினார் (Delight Christian Assembly) மகிழ்ச்சி பத்திரிக்கையின் ஆசிரியராயும், ஸ்தபகராயும் விளங்கினார். கர்த்தரால் வல்லமையாய் பயன்படுத்தப்பட்ட ஜீவானந்தம் ஐயா அவர்களின் மூலமாக தான் பாஸ்டர் D.மோகன்(NLAG) கிறிஸ்துவின் ஊழியத்திற்கு தன்னை ஒப்புக் கொடுத்தார்.

'திருக்கரத்தால் தாங்கி என்னை...' என்ற பாடலை இயற்றிய சகோ. J.V பீட்டர் அவர்களுக்கு ஐயா தான் புதுவாழ்வு கொடுத்தார் எனலாம். தான் செல்லும் இடமெல்லாம் சகோ. J.V பீட்டரை அழைத்து சென்று மக்களுக்கு அறிமுகப்படுத்தி அவரை தன கூடவே தங்கவைத்து உணவளித்தார்.

இதுபோல ஐயா அவர்கள் உருவாக்கிய தேவமனிதர்கள் அநேகர். பாஸ்டர். ஜீவானந்தம் போன்றோருக்காக கர்த்தரை துதிப்போம்.

2 comments:

  1. நல்ல திராச்சைகுழையை போன்ற தேவஊழியர்கள்

    ReplyDelete
  2. Ennudaiya name samjans enakku pana uthavi avasharamaka thevai padu kinrathu ungkalal mudintha uthaviyai seiungka please ������

    ReplyDelete