219 குரங்கின் கண்ணோட்டத்தில் மனிதன்
மூன்று குரங்குகள் ஒரு தென்னை மரத்தின் மீது உட்கார்ந்து | பேசிக்கொண்டிருந்தன .
ஒரு குரங்கு மற்ற இரண்டு குரங்குகளிடம் இப்படிச்சொன்னது “ நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள் . நான் ஒரு பயங்கரமான கதை கேள்விப்பட்டேன் . அது உண்மை யாக இருக்க முடியாது . அதாவது நம்முடைய கௌரவமிக்க இனத்திலிருந்துதான் மனிதன் வந்தானாம் !
எத்தனை வெட்கக் கேடான , கேவலமான ஒரு அபிப்பிராயம் பாருங்கள் . ஒரு குரங்குகூட இதுவரை தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்ததில்லை , தன்னுடைய குழந்தைகள் எப்படியும் போகட்டுமென்று ஒரு நாளும் விட்டதில்லை . எந்த ஒரு தாய்க்குரங்கும் தன்னுடைய குட்டிகளை தனியே விட்டுவிட்டு தன்னறிவு தெரியாமல் குடித்து வெறித்ததில்லை . தன்னுடைய குட்டிகளை ஒருபோதும் மற்றவர் களிடம் கொடுத்ததில்லை . எந்தக் குட்டிக்குரங்கும் தன்னுடைய தாயார் யார் என்று அறியாமலிருந்ததில்லை .
மற்றுமொரு காரியம் , எந்த குரங்கும் தன்னுடைய பழமரத்தைச் சுற்றி வேலி அடைக்காது , பழங்கள் அழுகி கெட்டுப்போய் வீணாகப் போனாலும் மற்றவர்கள் யாரும் அதை ருசி பார்த்துவிடக்கூடாது என்று நினைப்பதே இல்லை . அப்படி நான் வேலியடைத்தால் பசியின் காரணமாக உன்னை திருடுவதற்கு தூண்டுகிறேன் என்றுதான் அர்த்தம் .
மற்றுமொரு காரியம் குரங்கு செய்வதே இல்லை . இரவு வேளையில் வெளியே சென்று துப்பாக்கியையோ , தடியையோ அல்லது கத்தியையோ கொண்டு அப்பாவி மனிதனின் உயிரைக் கொல்லுவதில்லை .
ஆமாம் . மனிதன் ஒரு கைப்பிடி மண்ணால் உண்டாக்கப்பட்டவன் . ஆகவே என் சகோதர குரங்குகளே மனிதன் நம்மிலிருந்து உண்டானவனல்ல என்பது நிச்சயம் . "
“ மாடு தன் எஜமானையும் , கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும் ; இஸ்ரவேலோ அறிவில்லாமலும் , என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது " ( ஏசாயா 1 : 3 )
220 எக்காலத்திலும் துதிப்பேன்
" கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன் ; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும் . ” ( சங் .34 : 1 ) . சில ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்காட்லாந்து நாட்டில் தேவனால் இரட்சிக்கப்பட்ட ஒரு வாலிபனிருந்தான் . அவனது நாக்கில் சில புண்கள் வந்து அவைகள் குணமாகாமல் நீண்ட நாட்களாக மிகவும் சிரமப்பட்டான் . ஆகவே மருத்துவமனை சென்று மருத்துவ ஆலோசனை பெறவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது . மருத்துவர் அவனை மிகக் கவனமாகப் பரிசோதனை செய்தார் .
முடிவில் அவனது நாக்கு புற்றுநோயால் ( Cancer ) மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கண்டறிந்தார் . மருத்துவர் பாதிக்கப்பட்ட வாலிபனிடத்திலும் அவனோடு வந்திருந்த அவனது பெற்றோர்களிடமும் மிகவும் பரிவோடு நோயைக் குறித்தான காரியங்களை விளக்கினார் . “ அவனது ஜீவனைக் காப்பாற்ற வேண்டுமானால் அவனது நாக்கை முற்றுமாய் துண்டித்து எடுப்பதைத் தவிர வேறுவழியில்லை ” என்றும் “ அப்படி எடுத்துவிடும்போது அவனால் பேசமுடியாது ” என்பதையும் அவர்களுக்குச் சொல்லவேண்டிய முறையில் சொன்னார் .
பெற்றோர் அதிர்ச்சியுள்ளவர்களாக செய்வதறியாது திகைத்துநின்றனர் . வாலிபன் பெற்றோர் முகத்தைப் பார்த்தான் . அவனுக்கு என்ன ஆறுதல் சொல்ல முடியும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை . இந்த நிலையில் மருத்துவர் “ அறுவை சிகிக்சை உடனடியாகச் செய்யப்படவேண்டும் ' என்று வலியுறுத்தினார் . அவன் இனி பேசமுடியாது என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை . அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் ஆயிற்று . அவனை அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துச் சென்றனர் . அவனது பெற்றோரும் உடன் சென்றனர் .
ஆனால் அவனது பெற்றோரை வெளியே அனுப்புவதற்கு முன்பாக அந்த வாலிபனை மருத்துவர் ஒரு கேள்விகேட்டார் . “ நீ ஏதாவது சொல்லிக் கொள்ள விரும்புகிறாயா ? ஏனெனில் நீ பேசுவது இதுவே கடைசி முறையாக இருக்கும் ” என்றார் மருத்துவர் .
சில நொடிகள் அவனது சிந்தையில் தேவனைக் குறித்து எண்ண அலைகள் உண்டாயின . தன்னை இரட்சித்து தனனைக் கருத்தாய் இம்மட்டும் காத்த , அற்புதமாய் நடத்திய தேவனை வாயினால் புகழ்ந்து பாட விரும்பினான் . எல்லோரும் அவனையே உற்று நோக்கிக் கொண்டிருந்தனர் . அவனது முகத்தில் நிறைந்த புன்முறுவல் தோன்றி அவனது முகத்தில் ஒரு பிரகாசத்தைக் காணமுடிந்தது . அவனது இருதயம் பரலோக சந்தோஷத்தால் நிறைந்து சிறப்பான ஒரு பாடலை பாட ஆரம்பித்தான் .
ஒரு ஊற்று இரத்தத்தால் நிரம்பியிருக்கிறது .
அது இம்மானுவேலரின் நாளங்களிலிருந்து பாய்ந்தவை
பாவிகள் அந்த இரத்த வெள்ளத்தில் மூழ்கி எழும்பும்போது
பாவக்கறையாவும் களைந்து போகிறது .
There is a fountain filled with blood
Drawn from Immanuel's veins ;
And sinners plunged beneath that flood , Lose all their guilty stains
உள்ளுணர்வோடு பாடலின் இரண்டாவது சரணத்தைப் பாடினான் .
மரித்துக் கொண்டிருந்த கள்ளன் களிகூர்ந்தான்
அந்த இரத்த ஊற்றைக் கண்டு கொண்டதால் ,
ஒருவேளை அவனைப்போலவே அற்பனாக இருந்தாலும்
என்னுடைய பாவங்களும் கழுவப்பட்டன .
The dying thief rejoiced to see
That fountain in that day ;
And there may I , though vile as he
Wash all my sins away .
அவனது பாடலைக்கேட்டு அங்கு நின்றவர்களின் கண்கள் கண்ணீரால் நிரம்பின . அவன் பாடிய பாங்கிலிருந்து தன்னுடைய இரட்சகர் மீது எவ்வளவு பெரிய அன்பு வைத்திருக்கிறான் என்பது மிகத் தெளிவாயிற்று .
மரித்துக் கொண்டிருக்கும் ஆட்டுக்குட்டியே ! உம்முடைய இரத்தம்
என்றும் அதன் வல்லமையை இழப்பதில்லை .
தேவனுடைய சபையை மீட்கும் பொருளைக் கொண்டு
இரட்சிக்கப்பட்டு பாவமற்ற நிலையை எட்டும் வரை ....
. Dear dying Lamb , Thy precious blood Shall never lose its power ; Till all the ransomed Church of God Be saved to sin no more .
கடைசி சரணத்திற்கும் வந்துவிட்டான் .
இந்த ஏழையின் மழலைச் சொற்களையும் தெற்று நாவையும்
கல்லறையில் மவுனமாக வைக்கும்போது
இனிமையும் மேன்மையுமான பாடல்களைப்பாடி
உம்முடைய இரட்சிப்பின் வல்லமையைப் பாடுவேன் .
When this poor lisping , stammering tongue
Lies silent in the grave ,
Then in a nobler , sweeter song ,
I'll sing Thy power to save .
அவனுக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டது ( Anasthesia ) மருத்துவர்கள் அறுவை சிகிச்சையைச் செய்தனர் . செய்து முடித்த பின்னரும் அவன் சுயநினைவுக்கு திரும்பவே இல்லை . அவன் சதாகாலமும் தன்னுடைய மீட்பரை மகிமைப்படுத்தி புகழ்ந்துபாட பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டான் .
அவன் பாடிய பாடலின் கடைசி சரணத்தில் பாடியது போல கல்லறையில் மவுனமானான் ,
ஆனாலும் மேன்மையான பாடலைப் பாடுகிறான் .
அன்பானவர்களே , நீங்கள் உங்கள் நாவை எவ்வாறு பயன்படுத்து கிறீர்கள் ? உங்களுடைய பெற்றோருக்கு , ஆசிரியர்களுக்கு விரோதமாக முறுமுறுக்கிறீர்களா ? முறையிட்டுக் கொண்டே இருக்கிறீர்களா ? பொய் பேசுகிறீர்களா ? எதிர்த்துப் பேசுகிறீர்களா ? அவதூறாகப் பேசுகிறீர்களா ? வதந்திகளைக் கிளப்புகிறீர்களா ? இப்போதே விட்டுவிடத் தீர்மானியுங்கள் .
பேசுவதற்கு இதுவே கடைசி தருணம் என்பதை அறிந்த போதும் அவன் மனம் பதறவில்லை . ஆனால் கிறிஸ்துவைப் புகழ்ந்து பாடினான் . உங்களுடைய முழு இருதயத்தோடும் அவரைப் புகழ்ந்து பாடுங்கள் . " நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார் ; அநேகர் அதைக் கண்டு , பயந்து , கர்த்தரை நம்புவார்கள் ”
( சங் .40 : 3)
221 கொடுங்கள்
பால் , தனியார் நிறுவனம் ஒன்றில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் . அவருடைய மூத்த சகோதரர் பாலுக்கு ஒரு கார் தேவை என்பதை உணர்ந்து அழகான கார் ஒன்றை வெகுமதியாக வாங்கிக்கொடுத்தார் . பால் அந்த காரில்தான் அலுவலகம் செல்வார் . ஒரு நாள் அலுவலக வேலை முடித்து வீட்டிற்கு திரும்ப காரை எடுக்க வரும்போது கார் அருகில் ஏழைப் பையன் ஒருவன் அந்தக் காரை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தான் . “
இந்தக் கார் மிகவும் பளபளப்பாக அழகாக இருக்கிறது இது உங்கள் காரா ? என்று அச்சிறுவன் கேட்டான் . பால் " ஆமாம் " என்று தலையசைத்து “ என் மூத்த சகோதரர் இதை எனக்கு வெகுமதியாக வாங்கிக்கொடுத்தார் ” என்று மகிழ்ச்சியோடு பதிலளித்தார் . உடனே “ எனக்கு ஒரு ஆசை . . . ” என்று தயக்கத்தோடு ஏதோ சொல்ல ஆரம்பித்தான் . தனக்கும் அப்படி ஒரு சகோதரன் இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணுகிறான் போலும் என்று பால் நினைத்தார் .
ஆனால் அவனுடைய பதில் பாலுக்கு மிகுந்த ஆச்சரியமளித்தது . “ நான் அப்படிப்பட்ட அண்ணனாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன் . அதுதான் என்னுடைய ஆசை " என்றான்
அச்சிறுவன் . “ நான் உங்கள் காரில் சிறிது தூரம் பயணம் செய்யலாமா ? ” என்று ஆசையோடு கேட்டான் . பால் அதை ஏற்றுக் கொண்டு “ சரி ஏறிக்கொள் ” என்று முன் கதவைத் திறந்து கொடுத்தார் . அவன் முகத்தில் மகிழ்ச்சி மலர்ந்தது . பால் காரை ஓட்ட ஆரம்பித்தார் . சிறிது தூரம் சென்றதும் காரை நிறுத்தச் சொன்னான் .
“ இந்தப் பகுதியில்தான் என் வீடு இருக்கிறது . சிறிது உள்ளே செல்லவேண்டும் . என்னை என் வீட்டு முன்னால் இறக்கிவிடுங்களேன் ” என்று அச் சிறுவன் கேட்டான் . அவன் தனது அயலகத்தார் மத்தியில் காரில் போய் இறங்குவதை பெருமையாக எண்ணி அவ்வாறு கேட்கிறான் என்று பால் நினைத்தார் .
எனினும் அவனது விருப்பப்படியே காரை அவனது வீட்டின் முன்பாகவே கொண்டுபோய் நிறுத்தினார் . இவன் இறங்கி “ ஐயா , கொஞ்சம் பொறுத்திருங்கள் " என்று சொல்லி வீட்டிற்குள் ஓடினான் . !
பால் பொறுத்திருந்தார் . வீட்டிற்குள்ளிருந்த முற்றிலும் முடமான தனது சிறிய தம்பியை முதுகில் சுமந்து வந்து வீட்டின் வாசற்படியில் உட்கார வைத்து . அவனிடத்தில் " அதோ பார் , அந்தக்கார் அவருடைய மூத்த சகோதரர் அவருக்கு வெகுமதியாகக் கொடுத்ததாம் . அதேபோல நானும் என்றாவது ஒருநாள் உனக்கு இதே போன்ற ஒரு காரை வாங்கித் தருவேன் " என்று சொன்னான் .
இதைக் கேட்ட பாலின் இருதயம் நெகிழ்ந்தது . காரை விட்டு இறங்கிவந்து முடமான அந்தப் பையனைத் தனது காரில் வைத்தார் . அவனது அண்ணனையும் ஏறிக்கொள்ளச் சொன்னார் . சிறிது தூரம் அவர்களைக் கார் பயணம் செய்ய வைத்து மீண்டும் வீட்டிற்குக் கொண்டு வந்துவிட்டார் . வீடு திரும்புபோது பாலின் சிந்தனை முழுவதும் அந்த ஏழைப் பையனின் மீதே இருந்தது . ஏழ்மையிலும் முடமான தன் தம்பியின் மீது அவனுக்குள்ள அன்பும் கரிசனையும் அவரது இருதயத்தைத் தொட்டது .
அவனது திராணிக்கும் மிஞ்சி தனது முடமான தம்பி நினைத்த இடத்திற்குச் செல்வதற்கு கார் வாங்கிக் கொடுக்க வேண்டுமென்ற ஆழ்ந்த விருப்பம் எவ்வளவு பெரியது என்பதை பால் சிந்தித்துப் பார்த்தார் . “ வாங்குவதை விட , கொடுப்பதே ஆசீர்வாதமானது " என்பதை உணர்ந்தார் . மற்றவர்களுக்காக இரங்குகிற இருதயத்தை ஆண்டவர் கனப்படுத்துகிறார் . ஆகவே தான் ஆண்டவராகிய இயேசு “ இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள் ; அவர்கள் இரக்கம் பெறு வார்கள் ” ( மத் . 5 : 7 ) என்று கூறினார் . “ கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும் ” ( லூக் 4 : 38 )
தேவனுடைய வார்த்தை 2009 ஜனவரி
222 பாவம் ஒரு பொறி
குளிர்காலத்தின் தொடக்கம் . ஒரு கூட்டம் வனவாத்துகள் ( wild ducks ) வடக்கேயிருந்து தெற்கே நோக்கி ஒரு ஒழுங்கின்படி பறந்து சென்று கொண்டிருந்தன . வடிவில் வரிசை தவறாமல் சென்று கொண்டிருந்தன . பூமியிலிருந்து அந்தக் காட்சியைக் கண்டவர்கள் வியந்தார்கள் , குளிர்காலத்தில் இடம்பெயர்ந்து தங்களுக்கு பாதுகாப்பான வெப்பநிலை உள்ள இடத்திற்குச் செல்கின்றன . காலத்தைக் குறித்த அறிவும் , எங்கு செல்லுகிறோம் என்ற அவைகளுக்கிருக்கும் தரிசனத்தையும் வியக்காமல் இருக்கமுடியாது .
சிருஷ்டி கர்த்தரின் படைப்புகளில் எவ்வளவு அற்புதங்கள் ! ஒழுங்கின் படி வரிசையில் சென்ற வாத்துகளுள் வாலி என்ற வாத்துக்கு பூமியில் அதன் கண்ணைக் கவரும் ஒரு காட்சியைக் கண்டுவிட்டது .
ஒரு களஞ்சியப்பண்ணையைச் சுற்றி ஒரு கூட்டம் பழக்கப்பட்ட வாத்துகள் ( Tamed Ducks ) " குவாக் , குவாக் " என்ற மகிழ்ச்சியின் குரலோடு அசைந்து அசைந்து நடந்துகொண்டிருந்தன . அவைகளுக்குப் பிரியமான தானியங்கள் போடப்பட்டிருந்தன . அவற்றை உண்டு மகிழ்ந்தன . இந்தக் காட்சியைக் கண்டதும் இந்தக் கூட்டத்தோடு போய் சேர்ந்து கொள்ள வேண்டும் , அந்தத் தானியங்களை ருசிக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது .
திடீரென்று அந்த ஒழுங்கு வரிசை யிலிருந்து பிரிந்து தரையை நோக்கிப் பறந்து களஞ்சியப் பண்ணையில் வந்து இறங்கிவிட்டது . மற்ற வாத்துகளெல்லாம் தெற்கே நோக்கி அதே ஒழுங்கில் பறந்துகொண்டிருந்தன .
“ சில மாதங்களுக்குள் அவைகள் வடக்கே நோக்கித் திரும்பும்போது நான் அவைகளோடு சேர்ந்து கொள்வேன் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டது .
தானியங்களை ஆசையோடு தின்றது . அதற்கு பெரிய மகிழ்ச்சி . மற்ற வாத்துகளோடு சேர்ந்து மகிழ்ச்சியாகக் களித்தது . மாதங்கள் கடந்து சென்றன . வாலி வானத்தை உற்றுநோக்க ஆரம்பித்தது . ஏனெனில் அவைகள் வடக்கே திரும்பும் காலம் நெருங்கிற்று .
தங்களது சொந்த இடத்திற்கு அவைகள் திரும்பும் . ஒரு நாள் தான் சார்ந்திருந்த வாத்துக்கூட்டம் வடக்கே நோக்கி ஒழுங்கின்படி வரிசையாகப் பறந்து வருவதைக் கண்டுகொண்டது . " என் கூட்டத்தின் அழகே தனிதான் . இந்த இடம் சுத்தமாகவே இல்லை , சகதியும் வாத்துகளின் எச்சமுமே நிறைந்து கிடக்கின்றன . இப்பொழுது என் சரீரமே அழுக்காகி விட்டது " என்று சொல்லி கொண்டு தனது கூட்டத்தோடு பறக்க ஆரம்பித்தது . தனது சிறகு அடித்து உயர எழும்பியது , அந்தோ பரிதாபம் சிறிது உயரத்திற்கு மேல் அதற்கு பறக்க முடியாமல் " தடார் " என்று களஞ்சியப் பண்ணைக்குள்ளேயே விழுந்தது . தானியத்தை உண்டு களித்து உடல் கனத்துப் போயிற்று . பறக்கும் பழக்கம் இல்லாது போய் விட்டபடியால் இறக்கைகள் பலமிழந்துபோயின . மீண்டும் தான் வெறுத்த அதே களஞ்சியத்தைச் சுற்றிய வாழ்க்கைத் தொடர்ந்தது .
“ நிச்சயமாக என் கூட்டத்தார் தெற்கே நோக்கி வரும்போது நான் அவர்களோடு சேர்ந்து கொள்ளுவேன் " என்று தன்னைத்தானே ஆறுதல் படுத்திக் கொண்டது . சில மாதங்களில் தான் சார்ந்திருந்த கூட்டம் அழகாக வானில் தெற்கே நோக்கி பறந்துசென்றன . வாலி அண்ணாந்து பார்த்து மகிழ்ச்சி யடைந்தது . ஆனால் இப்பொழுது பறக்க முயற்சித்தாலும் சிறிது உயரம் கூட பறக்க முடியவில்லை . அதன் உடல் அமைப்பே மாறிபோயிற்று . இனிமேல் வன வாத்துகளோடு வானில் பறக்கமுடியாது என்ற நிலை ஆயிற்று . குளிர்காலமும் கோடை காலமும் மாறி மாறி வந்தன . வன வாத்துகள் தெற்கே நோக்கிச் செல்வதையும் வடக்கே திரும்புவதையும் பார்க்கத்தான் முடிந்ததே தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை .
கனத்த சரீரம் , கனத்த இருதயம் இதுவே வாழ்வாயிற்று . இப்பொழுது நிரந்தரமாகவே களஞ்சியப் பண்ணை வாத்தாகவே மாறிவிட்டது ,
இயேசு கிறிஸ்துவை பின் பற்றுகிறவர்களாகிய நாமும் சில வேளைகளில் வாலி என்ற வனவாத்தைப் போல தனக்குத் தகாத காட்சியைக் கண்டு சர்க்கப்பட்டு தன்னுடைய பாதையை விட்டு விலகியதுபோல நாமும் வழிவிலகி விடுகிறோம் . இயேசுவுக்குக் கீழ்ப்படிந்து ஒரு ஒழுங்கின் படி நடந்து கொண்டிருந்த நாம் அந்த ஒழுங்கில் தொடர்வதை விட்டு சாத்தானின் கவர்ச்சிக் காட்சியின் சோதனையில் விழுந்து விடுகிறோம் .
இப்பொழுது அந்த வாலி என்ற வனவாத்தைப்போல திரும்பப்போய் தன் கூட்டத்தோடு சேர்ந்துகொள்ள வேண்டுமென்று விரும்பினாலும் சேர்ந்து கொள்ள முடியாத நிலையில் சிக்கி களஞ்சியப் பண்ணை வாத்தாக மாறியது போன்ற நிலையாயிற்று .
பாவம் இதைப் போன்றுதான் . பாவம் மனிதனை சிக்கவைக்கும் ஒரு பொறி ( Trap ) நாம் விரும்புகிறதைச் செய்யாமல் விரும்பாததைச் செய்ய வைத்துவிடும் . காலப்போக்கில் இயேசுவைக் குறித்த சிந்தையே அற்றுப்போகிறது . தொடர்பு அற்றுப் போகிறது “ உன்னதமானவரின் பிள்ளைகள் ( Children of the most high ) என்று பெயர் பெற்றிருந்த நாம் கீழ்படியாமையின் பிள்ளைகள் ( Children of Disobedience ) என்ற பெயரைப் பெற்றுக்கொண்டு சாத்தானின் பிள்ளைகளாக மாறினோம் .
வனவாத்து ( wild Quck ) களஞ்சியப் பண்ணை வாத்தாக ( Barnyard Duck ) மாறிய நிலையாயிற்று .
தேவனுடைய வார்த்தை 2009 மார்ச்
223 மேலானவைகளை நாடுங்கள்
" நான் பொன்னிலும் பசும் பொன்னிலும் அதிகமாய் உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன் ” ( சங் . 119 : 127 ) உலகம் முழுவதும் வேதாகமத்தை வினியோகிக்கும் “ கிதியோன் " ( THE GIDEONS ) உலகளாவிய தொடர்புள்ள பெரிய நிறுவனம் . இந்நிறுவனத்தின் ஒரு குழுவினர் அப்போதிருந்த பிரிக்கப்படாத சோவியத் ரஷ்யாவுக்குச் சென்றனர் .
அவர்கள் எதிர்பார்ப்புக்கும் மாறாக வேதாகமத்தை வினியோகம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது . எனினும் அரசு நிர்ணயிக்கும் பகுதியில் மட்டும் வினியோகிக்கும் அனுமதி கிடைத்தது . அதையே ஏற்றுக்கொண்டு அக்குழுவினர் குறிக்கப்பட்ட நகரங்களில் , பள்ளிகளில் வினியோகிக்க அவர்களுடைய வாகனத்தில் சென்றனர் .
இக்குழுவினருடன் காவல்துறை அதிகாரி ஒருவரும் வேதாகம வினியோகத்தை மேற்பார்வை செய்யும் பொருட்டு நியமிக்கப்பட்டிருந்தார் . வினியோகிக்க வேண்டிய ஒரு நகரிலுள்ள பள்ளியண்டை வந்த போது அங்கு நிறுத்தாமல் கடந்து சென்று வேறு ஒரு இடத்திற்குப் போகும்படி காவல்துறை அதிகாரி சொன்னார் .
தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கிதியோன் குழுவினர் கடந்து சென்றனர் . சுமார் 7 கி . மீ . க்கு அங்குள்ள குறிக்கப்படாத வேறு ஒரு பள்ளியின் முன்பாக நிறுத்தி வேதாகமத்தை வினியோகிக்கச் சொன்னார் . இந்த காவல்துறை அதிகாரி
நம்மை ஏதோ பிரச்சனையில் சிக்கவைக்கப் போகிறார் என்று எண்ணி பயந்தனர் . ஆனால் எந்த பிரச்சனையு மின்றி வேதாகமங்களை வினியோகித்து முடித்தனர் .
அதன் பின்னர் முன்பு குறிக்கப்பட்ட நகரிலுள்ள பள்ளிக்குச் சென்றனர் . கிதியோன் குழுவின் தலைவர் காவல்துறை அதிகாரியிடம் தயக்கத்தோடு “ ஏன் குறிக்கப்படாத ஒரு பள்ளியில் வேதாகமம் விநியோகிக்க சொன் னீர்கள் " என்று கேட்டார் . “
என்னுடைய இரண்டு பிள்ளைகளும் இந்தப் பள்ளியில் படிக்கின்றனர் . அவர்கள் இருவரும் வேதாகமத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினேன் . இப்படியொரு வாய்ப்பு கிடைக்குமோ , கிடைக்காதோ என்று எண்ணி இங்கே அழைத்து வந்தேன் " என்று சொன்னார் . அவருடைய பதில் அவருக்கு மிகுந்த ஆச்சரியமானதாகயிருந்தது .
தான் அறியாவிட்டாலும் தன்னுடைய பிள்ளைகள் அறிந்துகொள்ள வேண்டுமென்று நினைக்கிறாரே ! தேவனுடைய வார்த்தை பொன்னிலும் , பசும்பொன்னிலும் விலையேறப் பெற்றது ( சங் . 19 : 10 ) .
இந்தக் காவல்துறை அதிகாரி இதன் மதிப்பை அறிந்து கொண்டபடியால் தன் பிள்ளைகளுக்குப் பெற்றுத் தருவதில் கவனமாயிருந்தார் . நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவைக் கொடுக்கிறீர்களா ? மேலானதைக் கொடுங்கள் அப்பொழுது பூமியிலுள்ளவைகளையல்ல மேலானதை நாடுவார்கள் ( கொலோ . 3 : 2 ) .
224. நீங்கள் கிறிஸ்துவின் மனைவியா ?
பல ஆண்டுகளுக்கு முன்பாக நியுயார்க் நகரில் நடந்த ஒரு சம்பவம் . உடம்பையே நடுங்க வைக்கும் குளிர் எல்லோரையும் உலுக்கிக் கொண்டி ருந்தது . அந்தக் குளிரிலும் கந்தல் உடையில் , வெறுங்காலுடன் ஒரு சிறு பையன் நடுங்கிக்கொண்டே காலணிக் கடையின் ( Shoe Mart ) வெளியே நின்று ஜன்னல் வழியாக உற்று நோக்கிக் கொண்டிருந்தான் .
பெருஞ் செல்வந்தரான பெண்மணி இரண்டு குதிரைகள் பூட்டிய தன்னுடைய இரதத்தில் ( Chariot ) அந்தப் பக்கம் வந்தாள் . சிறுவனின் பரிதாப நிலை அவள் கண்ணில்பட்டது . உடனே இரதத்தை நிறுத்தச்சொன்னாள் . இரதத்தைவிட்டு இறங்கி பரிவோடு அந்தச் சிறுவனிடத்தில் சென்றாள் . "
தம்பி , ஜன்னல் வழியாக நீ என்னத்தைப் பார்த்துக் கொண்டிருக் கிறாய் ? என்று கனிவோடு அந்தப் பெண்மணி கேட்டாள் . * குளிரிலிருந்து என் கால்களைக் காத்துக்கொள்ள என் இயேசு வினிடத்தில் நான் ஒரு ஜோடி ஷூ ( Shoe ) கேட்டிருக்கிறேன் . அவர் எதை எனக்குத் தரப்போகிறார் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன் " என்று ஒரு நிச்சயத்தோடு பதிலளித்தான் .
அந்தப் பதில் அந்தப் பெண்மணியை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது . இயேவினிடத்தில் தான் கேட்டதைப் பெற்றுக்கொள்வோம் என்ற உறுதியான விசுவாசம் இந்தச் சிறுவனுக்கு இருக்கிறதே என்று ஆச்சரியப்பட்டாள் ( மாற் . 11 : 24 ) , தன்னுடைய விசு வாசத்தின் அளவை ( Level of Faith ) ஒப்பிட்டுப்பார்த்தாள் . கருணையோடு அவன் கையைப் பற்றிக்கொண்டு காலணிக் கடையின் உள்ளே அழைத்துச் சென்றாள் .
ஒரு செல்வச் சீமாட்டி கந்தலுடையிலுள்ள சிறுவனைச் கையில் பிடித்துக்கொண்டு உள்ளே வந்தக் காட்சியைக்கண்டு அங்கிருந்த விற்பனையாளர்களுக்கெல்லாம் ஆச்சரியம் . அப்பெண் மணிக்கு உதவி செய்ய விற்பனையாளர்கள் மிகுந்த மரியாதையுடன் முன்வந்தனர் . “
இச்சிறுவனுக்கு 6 ஜோடி உல்லன் சாக்ஸ் வேண்டும் என்று கேட்ட மாத்திரத்தில் அதை எடுக்க விற்பனையாளர் விரைந்தார் . இன்னொருவரிடம் “ எனக்கு உங்கள் உதவி தேவை . செய்வீர்களா ? " என்று அப்பெண்மணி கேட்டாள் . " செய்வதற்கு ஆயத்தமாயிருக்கிறோம் என்ன செய்யவேண்டும் ' ' என்று விற்பனையாளர் சொன்னார் .
ஒரு அகன்ற பாத்திரத்தில் ( Basin ) தண்ணீரும் ஒரு துண்டும் ( towel ) வேண்டும் என்று கேட்டாள் . கடையின் பிற்பகுதியிலேயே அதை ஒழுங்கு செய்துகொடுத்தனர் . அச்சிறுவனை அப்பெண்மணி ஒரு நாற்காலியில் உட்காரவைத்து , தான் அணிந்திருந்த கையுறையைக் கழட்டிவிட்டு அவனுடைய கால்களைச் சுத்தமாகக் கழுவி துண்டால் துடைத்தாள் . சிறுவனுக்குப் பெரிய வியப்பு .
இயேசுதான் தம்முடைய சீடர்களுடைய கால்களைக் கழுவித்துடைத்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ( யோவா . 13 : 4 - 9 ) . அப்படிச் செய்வதை இப்பொழுதுதான் என் கண்களால் காண்கிறேன் என்ற எண்ணங்கள் அவனுடைய சிந்தையில் ஓடின . உல்லன் சாக்ஸ் ஆயத்தமாக இருந்தது . அதை அப்பெண்மணி அச்சிறுவனின் காலில் அணிவித்தாள் . ஷூவும் ஆயத்தமாயிற்று . விற்பனையாளர் அவனது காலில் அணிவித்தார் .
முன்பின் அறிமுகமில்லாத இவர்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையிலிருக்கும் என்மீது இவ்வளவு கரிசனையுள்ளவர்களாக இருக்கிறார்களே என்று அவன் ஆச்சரியத்தில் மூழ்கிப்போனான் . அப்பெண்மணி “ இப்பொழுது உனக்குச் சந்தோஷம் தானா ? " என்று புன்சிரிப்போடு கேட்டாள் . அப்பெண்மணியை அவ்வளவு நேரமும் வியப்போடு பார்த்துக்கொண்டே இருந்த அச்சிறுவன் நீங்கள் இயேசுவின் மனைவியா ? " என்று கேட்டான் .
அந்தக் கேள்விக்கு அப்பெண்மணிக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்துப்போனாள் . " இல்லை என்றும் சொல்ல முடியவில்லை . ஏனென்றால் கிறிஸ்துவின் மணவாட்டியாகத் தன்னை ஆயத்தப் படுத்திக்கொண்டிருந்தாள் . " ஆம் என்றும் சொல்ல முடியவில்லை . ஏனென்றால் அவள் மணவாட்டியாக இன்னும் ஆயத்தமாக இல்லையே என்ற சிந்தனையிலேயே இருந்தாள் .
அதற்குள்ளாக அச்சிறுவன் " நீங்க இயேசுவுக்குச் சொந்தக்காரங்களா ? என்று கேட்டான் . " இயேசுவின் வருகையின் போது நிச்சயமாக அவருக்கு மணவாட்டியாக இருப்பேன் . இப்பொழுது நான் மணவாட்டியாக ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறேன் " என்று தைரியமாகச் சொன்னாள் .
அவன் புன்முறுவலோடு நின்றான் நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால் , உங்களுக்காகத் கேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன் " ( 2 கொரி 11 : 2 ) .
தேவனுடைய வார்த்தை 2007 ஆகஸ்ட் 64
225 சிறிதாக்கப்பட்ட சிலுவை
ஒரு மோட்சப்பயணி வாக்குத்தத்தம் செய்யப்பட்ட மகிமையான தேசத்தை நோக்கி பயணம் செய்துகொண்டிருந்தான் . தன்னுடைய எஜமானின் பாரமாக சிலுவை ஒன்றை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு சுமந்துகொண்டு சென்றான் . பயணத்தில் ஏற்பட்ட களைப்பு காரணமாக நல்ல நிழலைக் கண்டதும் களைப்பு நீங்க சிறிது இளைப்பாறிச் செல்லலாம் என நிழலில் ஓய்வெடுத்தான் . ஓய்வாகப் படுத்திருக்கும்போது
அருகிலுள்ள காட்டில் ஒருவன் மரம் வெட்டிக்கொண்டிருப்பதைக் கவனித்தான் . “ நண்பனே , உன்னுடைய கோடாரியைக் கொஞ்சம் தா . என்னுடைய பிரயாணத்தில் என்னுடைய சிலுவை மிகப் பாரமாக உள்ளது . ஆகவே அதைச்சிறிது வெட்டி பாரத்தை குறைத்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் " என்று மரம் வெட்டுகிறவனை பார்த்து கேட்டான் . அவன் எந்த தயக்கமுமின்றி தன்னுடைய கோடாரியைக் கொடுத்தான் , மோட்சப் பயணி தான் நினைத்ததுபோல சிலுவையின் நீளத்தை வெட்டிக் குறைத்து சிறிதாகி பாரத்தைக் குறைத்துக்கொண்டான் .
சிலுவையின் பாரம் குறைவாகயிருந்தபடியால் பிரயாணம் எளிதாக யிருந்தது . வெகு சீக்கிரமே வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்தின் அருகாமையில் வந்துவிட்டான் . அந்த மகிமையைக் கண்டதும் அவனது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை . என் இயேசுவை முகமுகமாக காணப் போகிறேன் என்பதை எண்ணும்போது பேரானந்தத்தை அடக்கிக்கொள்ள முடியவில்லை .
ஆனால் அவன் மிக நெருங்கிவந்தபோது , அந்த மகிமை நிறைந்த இடத்தைக் கடக்க என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்தபோது “ உன் சிலுவையை இணைப்பு பாலமாக வைத்து நிலப்பிளவைத் தாண்டிவா ” என்ற சத்தத்தைக் கேட்டான் .
இந்த யோசனை என் புத்திக்கு எட்டாது போய்விட்டதே என அவன் தன்னை நொந்து கொண்டயன் . கடக்கும் வழினைத் தெரிந்து கொண்டதில் அவனுக்கு பெரிய மகழிச்சி ,ஆனால் சிலுவையை இணைப்புப் பாலமாக வைத்தபோது சிலுவையின் நீளம் குறைவாகயிருந்தபடியால் நிலப்பரப்புகளை இணைக்க முடியவில்லை . அதிலும் மிகக் கொடூரமான காரியம் என்னவென்றால் , பாரமாக இருக்கிறது என்று எந்த அளவுக்கு சிலுவையின் நீளத்தைக் குறைத்தானோ அதே அளவுதான் நிலப்பிளவை இணைப்பதற்குத் தேவைப்பட்டது .
“ ஐயோ , என் சிலுவையை வெட்டி குறைக்காமலிருந் திருப்பேனானால் நான் மகிமையின் தேசத்திற்குள் இப்போது போயிருப்பேனே , பாரத்தைக் குறைக்க எண்ணி நீளத்தை வெட்டிக் குறைத்து இப்போது என் பிரயாணமெல்லாம் வீணாகிவிட்டதே . நான் இனி எப்படி அந்த தேசத்திற்குள் போகமுடியும் ” எனக் கதறி அழுதான் .
திடீரென கண் விழித்து எழுந்தான் . அப்போதுதான் தான் கண்டது கனவு என விளங்கிக் கொண்டான் . தன் அருகிலிருந்த பாரச்சிலுவையை மார்போடு இறுக அணைத்துக் கொண்டான் . எந்தச் சூழ்நிலையிலும் எனக்குக் கொடுக்கப்பட்ட சிலுவையை நான் குறைக்க நினைக்க மாட்டேன் என்று தீர்மானித்தான் . பயணத்தைத் தொடர்ந்தான் . சிலுவை பாரமானதாக இருந்தாலும் இப்போது மகிமையின் தேசத்தைக் குறித்ததான சரியான தரிசனம் இருந்தபடியால் அவனுக்கு அது இலகுவாகயிருந்தது . "
சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்கு பைத்தியமாயிருக்கிறது . இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவ பெலனாயிருக்கிறது " ( 1 கொரி . 1 : 18 ) .
தேவனுடைய வார்த்தை 1996 ஜூலை
226 முன் தெரிந்துகொண்டவர்
லண்டன் சாலையில் வாகனங்கள் வேகமாக சென்றுகொண்டிருந்தன. ஒரு கார் பல மணிநேரமாக பழுதடைந்து நின்று கொண்டிருந்தது. அதன் உரிமையாளர் பலவழிகளில் அதை சரிசெய்ய முயன்றார். ஆனால், ஒரு சிறிய அளவிற்கு கூட பயன் தரவில்லை. பக்கத்தில் உதவி செய்ய யாருமில்லை, ஒர்க் ஷாப் அருகே எதுவுமில்லை அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
அப்பொழுது ஒருகார் அவர் அருகே வந்து நின்றது. அதிலிருந்து வயதான முதியவர் ஒருவர் இறங்கி வந்தார். அருகில் வந்து, என்ன பிரச்சினை? என்று கேட்டார்.
ஏற்கனவே எரிச்சலோடிருந்த அவருக்கு முதியவர் அப்படி கேட்டது மேலும் எரிச்சலூட்டியது, கோபத்துடன் அவரைப் பார்த்து, நான் இந்த காரின் உரிமையாளர் மட்டுமல்ல, காரை பழுது பார்ப்பதில் நிபுணர், எனக்கே இது புரியவில்லை, நீர் வயதானவராகவும் இருக்கிறீர், உமக்கென்ன தெரியும்? என்று கேட்டார்,
ஆனாலும் இந்த முதியவர் வற்புறுத்தியதால் வேண்டாவெறுப்பாக அவரிடம் கார் சாவியை கொடுத்தார்.
முதியவர் காரை முழுவதும் நோட்டமிட்டார். கார் இஞ்சினில் ஒரே ஒரு வயரை சரி செய்தார். இப்பொழுது காரை start செய்யுங்கள் என்றார்.
என்ன ஆச்சரியம்! பல மணிநேரமாக பழுதடைந்து நின்றுகொண்டிருந்த அந்த கார் ஒரே நிமிடத்தில் சரியாகி விட்டது. அந்த காரின் உரிமையாளருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
முதியவரின் கைகளை பற்றிக்கொண்டு, ஐயா என்னை மன்னித்து விடுங்கள் உங்களை தவறாக எண்ணிவிட்டேன். ஐயா நீங்கள் யார்? என்று கேட்டார். அதற்கு அந்த முதியவர் புன்முறுவலுடன், இந்த காரை தயாரிக்கும் Henry Ford நான் தான் என்றார். கார் உரிமையாளருக்கு பேச்சே வரவில்லை.
Henry Ford தனது காரில் ஏறிக்கொண்டே, காரை உருவாக்கிய எனக்கு, அதில் ஏற்படும் பிரச்சினைகள் என்னவென்று தெரியாதா? என்று கேட்டார்.
என்னைக் குறித்து அக்கறை கொள்ள யாருமேயில்லை, என் பிரச்சினைகளை புரிந்து கொள்ளக்கூட யாருமில்லை என்று கண்ணீர் வடிக்கின்றீர்களா? உங்களை பார்த்துதான் இயேசப்பா கூறுகின்றார், "உன்னை என் உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறேன்."
ஒரு காரை உருவாக்கின ஒருவருக்கு அதன் பிரச்சினைகள் தெரியுமானால், இந்த அண்டசராசரங்களையே படைத்த நம் தேவனுக்கு, தாயின் கருவில் உருவாக்கும் முன்னே நம்மை தெரிந்துகொண்ட நம் தேவனுக்கு நம் பிரச்சினைகள் எம்மாத்திரம்?
எனவே கவலையைவிடுங்கள், கண்ணீரை துடைத்துக் கொள்ளுங்கள். உங்களை தன் உள்ளங்கைகளில் வரைந்த தேவன் ஒரு போதும் உங்களை மறக்கமாட்டார்."
*இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்* ".
*ஏசா 49:16* ஆமென்!
227 அவசரபுத்தி_அழிவைத்தரும்...
பரந்து வாசம் என்பது மிகப் பெரிய காடு. அந்தக் காட்டில் செங்குந்தன் என்ற ஒரு வேடன் இருந்தான்.
அவன் மிகவும் அவசர புத்திக்காரன். அவனுக்கு அடிக்கடி கோபமும், ஆத்திரமும் வரும். எந்த நேரமும் அவன் முகம் உர்ரென்றுதான் இருக்கும்.
அந்தக் காட்டில் ஒரு பருந்து இருந்தது. அது சாதாரணப் பருந்து போன்றதல்ல, பெரிய பறவை வானில் 'பறக்கும் போது சுமார் ஐம்பது மைல் சுற்றளவில் உள்ள பகுதிகள் அதன் கண்களுக்குத் தெரியும்.
ஒருமுறை
இரவில் அந்தப் பறவை மரத்துக்கிளை ஒன்றில் உறங்கிக் கொண்டு இருந்தது. அப்போது அம்மரத்தடியில் படுத்திருந்த செங்குந்தன் மீது அப்பறவையில் மூச்சுப்பட்டது. தனக்கு இத்தனை சுகமான காற்று வருகிறதே என நினைத்த அவன் சற்று நேரம் கண்ணயர்ந்தான்.
திடீரெனச் செங்குந்தனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. இது நிஜமான காற்று என்றால் எல்லாத் திசைகளிலும் சீராக வீச வேண்டுமே! இது நேராக இந்த மரத்தடியில படுத்திருக்கும் நமக்கு மட்டும் கிடைப்பானேன் என்று நினைத்தான்.
உடனே மரத்தில் ஏதோ ஒரு பெரிய பறவையோ மிருகமோ ஒளிந்திருக்கிறதெனக் கண்டுபிடித்து விட்டான்.
உடனே சத்தமின்றி எழுந்து மரத்தில் ஏறினான். உறங்கிக் கொண்டிருந்த பருந்தைத் தன் வலையை வீசிப் பிடித்துவிட்டான். பிடிப்பட்ட பருந்து துடித்தது. துள்ளியது.வேறு வழியின்றி, பின்பு பேசாமல் கண்ணீர் வடித்தது. வேடன் உடனே அதைத் தன் வீட்டிற்குக் கொண்டு வந்தான்.
அதை வலையிலிருந்து விடுவித்தான். பின்னர்,ஒரு கையில் அரிவாளை எடுத்து வெட்டத் துணிந்தான்.
அப்போது அந்தப் பறவை திடீரெனப் பேசத் துவங்கியது."வேடனே என்னைக் கொன்று விடாதே, என்னால் உனக்குப் பல நன்மைகள் கிடைக்கும்” என்றது. இதைக் கேட்டதும் வேடன் திடுக்கிட்டான்.
இது
ஏதோ விசித்திரமான பறவைதான். கட்டாயம் இதை உயிருடன் வைத்து இருந்தால், நமக்கு நன்மை கிடைக்கும் என்று எண்ணினான். எனவே அதனை
வெட்டாமல் "உன்னால் எனக்கு என்ன நன்மை கிடைக்கும்" என்று கேட்டான். உடனே பருந்து “வேடனே எனக்கு வானில் இருந்து பார்த்தால் காட்டின் பெரும் பகுதியை ஒரே சமயத்தில் பார்க்க முடியும்.
எந்த இடத்தில்
பறவைகளும் விலங்குகளும் நிறைய உள்ளன எனப் பார்த்து வந்து உனக்குச் சொல்வேன்."
"நீ வெயிலில், மழையில் அலையாமல் நேராக அங்கு போய் அவைகளைப் பிடித்துக் கொள்ளலாம்" என்றது.
"அதோடு நான் இப்படிச் செய்வதால் தினமும் உனக்கு நல்ல வேட்டை கிடைக்கும். உன் உயிருக்கு ஆபத்து ஏற்படாது. எப்படியென்றால் விலங்குகள் உறங்குமிடம்,பதுங்கியுள்ள இடம், அலைகின்ற இடம் என்று அவை உள்ள
நிலைகளையும் முன் கூட்டியே உனக்கு நான் சொல்வேன்.
எனவே முன்னேற்பாடுடன் சென்று அவைகளை எளிதில் பிடிக்கலாம்” என்றது. வேடனும் அதற்கு ஒப்புக் கொண்டான்.
“ஆனால் நீ என்னை ஏமாற்றிவிட்டு ஓடிவிட மாட்டாயா?என்று பருந்திடம் கேட்டான். "சத்தியம் செய்தால் அதை உயிரினும் மேலாகக் காப்போம்!' என்றது பருந்து, அதன்படி
'வேடன் மறுநாள் வேட்டைக்குப் புறப்படும் முன்னர் வானில் உயரப் பறந்தது. தன் கூரிய கண்களால் பூமியைக் கவனமாகப் பார்த்து வந்தது.
பின் வேடன் முன் இறங்கி மிருகங்கள் அதிகம் உள்ள இடம், அந்த மிருகங்கள் உள்ள சூழ்நிலை இவைகளை நன்கு விளக்கியது. அது கூறியபடி சென்ற இடத்தில் வேடனுக்கு எளிதாக மிருகங்கள் கிடைத்தன.அவைகளை வேடன் கொன்று தூக்கி வந்தான்.
நன்கு சமைத்துச் சாப்பிட்டான். பருந்து அது கண்டு மகிழ்ந்தது. இப்படியே பல காலம் சென்றது.
வேடனும் பருந்தும் நல்ல நண்பர்களானார்கள். பருந்து நாளடைவில் வேடன். தனக்குப் போடுவதைத் தின்றுவிட்டு அவனுடனேயே தங்கத் துவங்கியது.
ஒரு நாள் வேடன் பல காலமாக ஒரே இடத்தில் அமர்வதும் பின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் போய் வேட்டையாடுவதுமாய் இருந்ததால் மிகவும் சலிப்படைந்தான்,
எனவே இன்று தானே வேட்டைைையத் தேடிச் செல்வதாகக் கூறிப் புறப்பட்டான். பருந்து எவ்வளவோ மறுத்தும் அவன் கேட்காமல் புறப்பட்டான். அது நல்ல வெயில் காலம்.
எனவே! பறவைகளும் விலங்குகளும் புதர்களில் சென்று பதுங்கிக் கொண்டன. சிறிது உலாவுவதும் பதுங்குவதுமாக இருந்தன. வெகுதூரம் நடந்த வேடனுக்குப் பழக்கம் விட்டுப்
போனதில் களைப்பாக இருந்தது. தாகம் நாவை வறட்டியது.தொண்டை நீர் காய்ந்து எரிவது போல் இருந்தது. நடக்க முடியாமல் தடுமாறியபடி நடந்தான்.
ஒரு பெரிய நிழலான மரத்தடி கண்ணில் பட்டது. அந்த நிழலில் போய்ச் சுருண்டு படுத்தான். சுற்றிலும் நீர் நிலைகளே இல்லை.
எனவே தான் சாவது உறுதி என்றெண்ணிப் படுத்துவிட்டான். திடீரென அவனது முகத்தில் ஒரு துளி நீர் சொட்டியது.
மரத்தில் இருந்துதான் சொட்டுசொட்டாக நீர் சொட்டிக் கொண்டு இருந்தது. உடனே இறைவனின் கருணை அது என்று மகிழ்ந்த செங்குந்தன் ஒரு வாதா மரத்தின்
இலையை ஒடித்து அதனைக் குப்பிபோலச் சுருட்டினான்.பின் அந்தக் குப்பி போன்ற இலையால் சொட்டு சொட்டாக வடியும் நீரைப் பிடித்தான்.
அது அரைக் குப்பி ஆனதும் தொண்டையை நனைக்கவேனும் நீர் கிடைத்ததே என்றெண்ணி அதனைப் பருகத் தன் வாயருகே கொண்டு போனாள். அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த பருந்து அதனைத் தனது இறக்கைகளால் தட்டிவிட்டது.
இலை
கைதவறிக் கீழே விழ அதில் நிறைந்திருந்த நீர் எல்லாம் மண்ணில் சிந்தியது.மண் அதனை உறிஞ்சிக் கொண்டது.
வேடனுக்கு ஏற்பட்ட கோபத்திற்கும் ஆத்திரத்திற்கும் அளவேயில்லை. எதையும் யோசிக்காமல் தன் வாளை உருவினான், ஒரே வெட்டாக அந்தப் பறவையை வெட்டி இரண்டு துண்டுகளாக்கினான்.
துரோகப் பறவையே! தாகத்தால் நான் சாகும் நிலையில் இருக்கிறேன். நீ கிடைத்த சொட்டு நீரையும் தட்டிவிட்டாயே! என் கையால் நீ செத்தது சரிதான்" என்று கூறினான்.
பின்பு
நீருக்கு என்ன செய்வது என்று நினைத்தான். மீண்டும் சொட்டு சொட்டாக வடியும் நீரைப் பிடிக்க நினைத்தான். ஆனால் இன்னும்
பல மணி நேரம் அப்படிப் பொறுமையாக அந்த நீரைப் பிடித்துக் குடிக்க இயலாதெனத் தோன்றியது.
எனவே மரத்தில் அந்தச் சொட்டு நீர் எங்கிருந்து வருகிறது என்று கண்டு அங்குள்ள நீரை மொத்தமாகப் பருக நினைத்தான்,
எனவே தன் காலடியில் கிடந்த இறந்து போன பருந்தை எட்டி உதைத்துவிட்டு விறுவிறுவென மரத்தில் ஏறினான்.
அங்கு அவன் கண்ட காட்சி இரத்ததை உறையச் செய்தது. ஆமாம், அங்கு ஒரு பெரிய மலைப்பாம்பு செத்து அழுகிப் போய் ஒரு கிளையில் கிடந்தது.அதன் அழுகிய உடலில் இருந்து சொட்டிய விஷ நீர்தான் அவன் குடிக்க நினைத்தது.
அதனை உணர்ந்த செங்குந்தன் அந்த நீரைத்தான் குடித்திருந்தால் இந்நேரம் செத்து இருப்போமே என்று நடுங்கினான். தன் உயிர் காத்த தோழனைக் கொன்று விட்டோமே என்று வருந்தினான், கதறினான்.
பருந்து தன்னைக் காப்பாற்றிய உண்மையை உணர்ந்தான்.ஆத்திரத்தில் தன் உற்ற துணையை முழுமையாக இழந்தான் வேடன். அதன் பின் முன்போலக் காடு மேடெல்லாம் அலைந்தும் உணவு கிடைத்தும் கிடைக்காமலும் வாடினான். ஒவ்வொரு நிமிடமும் தன் அவசர முன்கோப் புத்தியால் பருந்தை இழந்ததை எண்ணிக் கண்ணீர் விட்டான்.
என் அன்புக்குாியவா்களே,
அவசர புத்தியும், ஆத்திர குணமும் செங்குந்தனுக்கு ஏற்படுத்திய இழப்பை பார்த்தீர்களா? எனவே சிந்தித்துச் செயல்படும் குணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள், சரியா?
பைபிளில் ஒரு சம்பவம்...
ஈசாக்கு ரெபேக்காளின் குமாரா் ஏசா, யாக்கோபு. இவா்கள் வாழ்வில் நடந்த விஷயம்..
ஒருநாள் ஏசா வெளியிலிருந்து களைத்து வந்தபோது, யாக்கோபு கூழ் சமைத்துக் கொண்டிருந்தான்.
அப்பொழுது ஏசா யாக்கோபை நோக்கி: அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன் என்றான். இதனாலே அவனுக்கு ஏதோம் என்கிற பேர் உண்டாயிற்று.
அப்பொழுது யாக்கோபு: உன் சேஷ்ட புத்திரபாகத்தை இன்று எனக்கு விற்றுப்போடு என்றான்.
அதற்கு ஏசா: இதோ, நான் சகாப்போகிறேனே, இந்தச் சேஷ்ட புத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு என்றான்.
ஆதியாகமம் 25:32
அப்பொழுது யாக்கோபு: இன்று எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவன் யாக்கோபுக்கு ஆணையிட்டு, தன் சேஷ்ட புத்திரபாகத்தை அவனுக்கு விற்றுப்போட்டான்.
அப்பொழுது யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்தான். அவன் புசித்துக் குடித்து எழுந்திருந்து போய்விட்டான். இப்படி ஏசா தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம்பண்ணினான்.
(ஆதியாகமம் 25:29-34)
அவசரப்பட்டு சேஷ்டபுத்திரபாகத்தை கூழுக்காக விற்றுப்போட்டான். சேஷ்டபுத்திரபாகத்தை அற்பமாய் நினைத்தான். அது அவனுடைய சந்ததியினர் ஆசீா்வாதத்திற்கு எவ்வளவு பிரயோஜனமானது என்று கூட நினையாமல் அற்ப கூழுக்காக எதிர்காலத்தை சூனியமாக்கிவிட்டான்.
இதைக் குறித்து எபிரேய நிருப ஆசிாியா் இவ்வாறாக எழுதுகிறார்...
ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கம் உண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்
ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஐனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.
ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளவிரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள். அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான்.
எபிரேயர் 12:15 -17)
தேவன் உங்களுக்கு தரும் எதையும் அற்பமாய்ய் நினைக்காதீா்கள். தேவன், கா்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தினாலே தந்த இரட்சிப்பு, ,அபிஷேகம், ஊழியங்கள், வரங்கள், கிருபை ஆகிய எதையும் அற்பமாக நினையாமல் அவைகளினால் தான் கிடைக்கும். பரலோகத்திற்கு போவதற்கே இவைகளர மூலமாகத்தான் என எண்ணுங்கள்.
இயேசு உங்களை அழைத்ததின் நோக்கத்தை அறிந்து அதை நினைத்து எத்தனை சோதனை பசிமயக்கம்,வேதனைகள்,நாசமோசங்கள்ஆகிய எது வந்தாலும் ஆண்டவாின் அபிஷகத்தில் நிறைந்திருங்கள்.எந்த எதிா்மறையான எண்ணங்களும், கசப்பான வேரும் உங்கள் மனதில் வராமல் ஆவியானவா் பாதுகாப்பாா்.
அ்வசரப்பட்டு வார்த்தைகளை எடுத்து எறிந்து விடாதீர்கள். மறுபடியும் சேர்க்க முடியாது. காலமெல்லாம் வாதித்துக் கொண்டேயிருக்கும். அதை மறக்கமுடியாது.
நிதானம், யோசித்து செயல்படுதல் விவேகமாய் பேசுதல் ஆகிய நற்பண்புகளை எதிரான சூழ்நிலையில் ஆவியானவா் உங்களுக்கு கற்றுக் கொடுப்பாா்.
நீங்கள் ,கிறிஸ்துவுக்குள்
தேறினவராயிருப்பீா்களென்றால் தேவன் எத்தனை அதிகமாய் உங்களை நினைத்து சந்தோஷப்படுவாார என்று எண்ணிப் பாருங்கள்.!!
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் !!!
228 கல்லில் ஒரு குதிரை
ஒரு சிறந்த சிற்பியும் அவருடைய உதவியாளரும் சிற்பம் வடிக்கத் தேவையான புதிய கற்களைத் தேடிச் சென்றனர் . ஒரு கடினமான சொர பாரப்பான ஆழகற்ற பெரிய பாறையைக் கண்டவுடன் சிற்பி சட்டென நின்றார் . “
நான் இதில் மிக அழகியதான ஒரு குதிரையைக் காணகிறேன் என்றார் அவர் . உதவியாளர் சற்று திகைப்புற்று , " ஆனால் குருவே , இவ்வகைக் கற்கள் மிகவும் கடினமானவை ஆயிற்றே . இதில் வேலை செய்வதனால் உங்கள் நேரம் முழுவதும் செலவாகிவிடுமே என்றார் .
தனது குரு இதில் தவறு செய்துவிட்டதாகவே கருதினார் அவர் . சிற்பியோ அமைதியாக அக்கல்லையே தெரிந்தெடுத்தார் . கற்பாறை பட்டரைக்கு வந்தவுடன் பணி துவங்கியது . வேலை மிகக் கடினமானதும் , மிகவும் மெதுவாகவும் நடைபெற்றது . பல நாட்களாகியும் வேலையில் முன்னேற்றத்தை உதவியாளரால் காண இயலவில்லை .
பாறையை இங்குமங்குமாக வீணாகச் செதுக்குவது போலவே காணப்பட்டது . அவர் தனது குருவின் ஞானத்தையும் , திறமையையும் சந்தேகிக்கத் தொடங்கினார் . அடிக்கடி சிற்பியிடம் இவ்வேலையை விட்டுவிட்டு வேறு ஏதாவது உருப்படியாகச் செய்யும்படி வேண்டலானார் .
அந்தக் கைதேர்ந்த சிற்பியோ சற்றும் சளைக்காமல் , “ நான் ஒரு அழகிய குதிரையை இக கல்லில் காண்கின்றேன் என்றே பதிலளித்து வந்தார் . சில நாட்களுக்குப் பின்பு உதவியாளரின் பொறுமைக்கு முடிவு ஏற்பட்டது .
அவர் தனது குருவைவிட்டு விலகிச் சென்றுவிட்டார் . சில ஆண்டுகளுக்குப் பின் தனது முன்னாள் குருவின் பட்டரையின் வழியே சென்ற அந்த உதவியாளர் , மரியாதையினிமித்தம் உள்ளே சென்றார் . நுழை வாயிலில் ஒரு அழகான குதிரையின் சிலை கெம்பீரத்தோற்றத்துடன் நின்று கொண்டிருந்ததைக் கண்டு வியந்து நின்றார் .
இதுவரை இவ்வளவு ஓர் சிலையை அவர் கண்டதில்லை . அங்குவந்த சிற்பியிடம் , " இவ்வளவு அழகிய குதிரையை உருவாக்கு வதற்கு எந்தக் கல்லை நீங்கள் உபயோகித்தீர்கள் ? " என்று அவர் வினவினார் . “ பல வருடங்களுக்கு முன்பு நீங்களும் நானும் இணைந்து பாடுபட்டு உழைத்தோமே அதே கல்தான் இது ” என்று சிற்பி பதிலளித்தார் .
அப்பொழுதுதான் உதவியாளருக்குப் புரிந்தது : ஒரு சிற்பி எந்த ஒரு கல்லிலும் ஒரு முழுமை பெற்ற சிற்பத்தையே காண்கின்றான் எனும் இரகசியம் !
நமது கர்த்தராகிய தேவனும் நம்மை இவ்வாறே காண்கிறார் என்பதை நாம் விளங்கிக்கொள்வோமாக . பாவத்தின் வஞ்சனையினாலும் , மாம்சீகக் கிரியைகளினாலும் நம் வாழ்க்கை கடினப்பட்டதாகவும் , எவ்வித சீர்திருத்தத்திற்கும் ஒத்துவராததைப் போலவும் காணப்படக்கூடும் . ஆயினும் சர்வ வல்லமையுள்ள நமது தேவன் நம்மைப் பூரணப்பட்ட ஒரு பரிசுத்தவானைப் போலவே காண்கிறார் .
நமது வாழ்க்கையின் முடிவில் நாம் எப்படிக் காணப்படுவோம் என்பது அவருக்கு முன்பே தெரியும் . நம்மில் காணப்படும் தீமையான பகுதிகளையெல்லாம் ஒரு கைதேர்ந்த சிற்பியைப்போல அவர் செதுக்கி எடுப்பதற்கு நாம் ஒத்துழைப்புத் தந்தால் போதும் .
அவரது வேலையை அவர் நம்மில் செய்து முடிக்கும் போது . நாம் முற்றிலும் இயேசுவின் சாயலில் மாற்றப்பட்டிருப்போம் ! " உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசு கிறிஸ்துவின் நாள் பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி , நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன் ” ( பிலி . 1 : 5 , 6 ) .
தேவனுடைய வார்த்தை 1997 ஏப்ரல்
229 நாளை பார்த்துக் கொள்ளலாம்
முற்காலத்தில் கிரீஸ் நாட்டை ஆண்ட மன்னர்களுள் அர்கியஸ் என்ற மன்னரும் ஒருவர் . அவர் உலகில் என்னென்ன சிற்றின்பங்கள் உண்டோ அவை எல்லாவற்றையும் அனுபவிப்பதில் பேராசையுள்ளவர் .
நாட்டின் மக்களின் நலனில் சிறிதேனும் அக்கரையின்றி இன்பத்தில் மூழ்கிக் கிடப்பதே அவரது வேலையாக இருந்தது . தான் நாட்டை ஆளவேண்டிய மன்னர் என்ற பொறுப்பற்றவராக தன் காலத்தைக் கழித்தார் .
அவரது அரண்மனையில் மட்டுமல்ல நாடு முழுவதும் பொறுப்பற்ற ஆட்சியின் விளைவாக சீர்கேடுகள் நிறைந்தது . ஒழுக்கமுள்ளவர்கள் , நியாயமற்றவர்கள் வாழ்வது கடினம் என்ற நிலை உருவாகியது . அந்நாட்டு மக்களின் பொறுமை எல்லையைத் தாண்டியது .
நாடு பேரழிவுக்குத் தப்பவேண்டுமானால் மன்னனை அழிப்பதே நலம் என்று ஒரு கூட்டத்தார் தீர்மானித்தனர் . மன்னரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டினர் . திட்டத்தை நிறைவேற்ற ஏற்றவேளையை எதிர்நோக்கிக் கொண்டிருந்தனர் . மக்களில் பெரும்பான்மையோர் தனக்கு விரோதமாக இருக்கிறார்கள் என்ற அறிவற்றவராக தன்னைக் கொலை செய்யத் திட்டமிடுகின்றனர் என்பதையும் அறியாதவராக வழக்கம்போல இன்பமான கேளிக்கை களிலேயே மன்னர் காலத்தைக் கழித்தார் .
ஏதென்ஸ் நகரில் மன்னரின் மிக நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்தார் . மன்னருக்கு விரோதமான சதித்திட்டத்தைக் குறித்து அறிந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது . உடனே மன்னருக்கு விரோதமான சதித்திட்டத்தைக் குறித்தும் , அதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வழிவகைகளைக் குறித்தும் விரிவான கடிதம் ஒன்றை எழுதி , தனது நம்பகமான உதவி யாளர் மூலமாக மன்னருக்கு அனுப்பி வைத்தார் .
நண்பரின் உதவியாளர் மன்னரின் அரண்மனை வந்து சேர்ந்த அன்றும் மன்னர் பெரிய விருந்தில் ஈடுபட்டிருந்தார் . அரண்மனை உதவி யாளர்கள் , கடிதம் யாரிடமிருந்து வந்திருக்கிறது என்பதை விளங்கிக் கொண்டு , கடிதம் கொண்டுவந்தவரை விருந்து மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர் .
மன்னர் அவர்களே , ஏதேன் சிலுள்ள உங்களது நண்பரிடமிருந்துதருக்கு ஒரு அவசரக் கடிதம் கொண்டு வந்திருக்கிறேன . இதிலுள்ள அபாயகரமான காரியத்தை நீங்கள் உடனடியாக வாசிக்குமாறு உங்களைக் கேட்டுக்கொண்டனர் " என்று சொல்லி கடிதத்தைக் கொடுத்தார் .
மன்னரோ மதுமயக்கத்தில் தள்ளாடினவராக கடிதத்தைக வாசிக்கும் மனநிலையில் இல்லை . " அபாயகரமான காரியமா ? என்ன அபாயகரமான அபாயம் . என்னுடைய நாட்டிலா ? என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டு அலட்சியமாக பேசி , “ இந்த அபாயத்தை நாளை பார்த்துக் கொல என்று அலட்சியச் சிரிப்பை ஒலித்துக்கொண்டு கடிதத்தைத் தூக்கி எறிந்தார் .
அந்த நிலையில் கடிதத்தை எடுக்கக் கூட உதவியாளாகள் அஞ்சினார்கள் . மிகுந்த அக்கறையோடும் , கரிசனையோடும் எழுதிய நண்பரின் கடிதம் விருந்து மண்டபத்தில் தரையில் கிடந்தது . விருந்தின் உல்லாசம் உச்சகட்டத்தை நெருங்கிய வேளையில் சதிகாரர்கள் விருந்து மண்டபத்திற்குள் விருந்து பரிமாறும் பணியாட்களைப்போல நுழைந்து , மன்னரின் மீது பாய்ந்து அதே இடத்தில் குத்திக்கொலை செய்தனர் .
மன்னர் இரத்த வெள்ளத்தில் பரிதாபமாகச் சாய்ந்தார் . நண்பரின் கடிதத்திலும் இரத்தம் தெறித்து தரையில் கிடந்தது . எது நடக்கக்கூடாது என்ற எச்சரிக்கையை அக்கடிதம் தாங்கி வந்ததோ அது மன்னரின் உலக இன்ப மயக்கத்தால் நடந்து முடிந்தது . அவரது அழிவில் முடிந்தது . மன்னர் சொன்ன " நாளை என்ற நாள் அவருக்கு வரவேயில்லை .
“ பாவஞ் செய்கிற ஆத்துமாவே சாகும் ” ( எசே . 18 : 14 ) “ பாவத்தின் சம்பளம் மரணம் ( ரோம் . 6 : 23 ) என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது . ஆனாலும் “ நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல் துன்மார்க்கன் தன் வழியை விட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் ( எசே . 33 : 11 ) என்று அன்புள்ள தேவன் நம்மைக் குறித்துக் கரிசனையுள்ளவராய் இருக்கிறார் . அவருடைய ( காத்தா ) கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய ( இயேசு ) இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் ( இயேசு ) நமக்கு உண்டாயிருக்கிறது ( எபே . 1 : 7 ) என்று வேகம் நாம் நமது பாவத்தில் அழிந்துவிடாதிருக்கும்படி , பாவமன்னிப் பாதிய மீட்பின் நற்செய்தியை நமக்கு ஆலோசனையாகத் தந்து அழிவுக் தப்பித்துக்கொள்ளும் வழியைக் காட்டுகிறது .
அர்கியஸ் மன்னரின் வ நமக்கு எச்சரிக்கையாக அமையட்டும் . அன்பின் கடிதத்தை அலட்சியம் செய்ததின் விளைவு மன்னரின் செய்ததின் விளைவு மன்னரின் கொடூர முடிவில் முடிந்தது . இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப் போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம் " ( எபி . 2 : 4 ) ,
230 நன்றி ஓடுகளே!
ஒரு காட்டில் ஆமையும், நத்தையும் நண்பர்களாய் இருந்தன. அவை இரண்டுக்கும் நீண்டகாலமாக, ஒரு மனக்குறை இருந்தது. தங்களால் வேகமாக நடக்கவோ, தாவிக் குதித்து ஓடவோ முடியவில்லை என்ற மனக்குறைதான் அது.
ஒருநாள், அவை இரண்டும் நடந்து சென்றுகொண்டிருந்த போது, ஓர் அழகிய வெள்ளை நிற முயல் தாவிக் குதித்து, ஓடி வருதைக் கண்டன.
"முயலே நில்!'' என்றது ஆமை. முயல் நின்றது.
"நீ எப்படி இவ்வளவு வேகமாய் தாவிக் குதித்து ஓடுகிறாய்?'' என்று கேட்டது நத்தை.
"இது என்ன கேள்வி! உங்களுக்கு இருப்பதுபோல், என் முதுகில் கனமான ஓடு இல்லை. அந்தச் சுமை இல்லாததால், வேகமாக ஓடுகிறேன்!'' என்று சொல்லி விட்டு, முயல் அந்த இரண்டையும் இளக்காரமாகப் பார்த்தது.
"ஆமாம்! நீங்கள் உங்கள் ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட்டால், என்னைப் போல் வேகமாக ஓடலாம். வேகமாக ஓடுவதில், ஓர் அலாதியான சுகம் இருக்கிறது தெரியுமா... அனுபவித்துப் பாருங்கள்!'' என்றது முயல்.
"ஓஹோ! எங்களின் வேகக் குறைவுக்கு எங்கள் ஓடுதான் காரணமா?''
"ஆமாம்! நீங்கள் உங்கள் ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட்டால், என்னைப் போல் வேகமாக ஓடலாம். வேகமாக ஓடுவதில், ஓர் அலாதியான சுகம் இருக்கிறது தெரியுமா... அனுபவித்துப் பாருங்கள்!'' என்றது முயல்.
நத்தைக்கும் ஆமைக்கும் இடத்திலேயே தங்கள் முதுகு ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. அவற்றைக் கழற்ற முயன்றபோது, திடீரென புதர் மறைவில் ஏதோ அசையும் ஓசை கேட்டது.
ஆமையும், நத்தையும் ஆபத்தை உணர்ந்து, தங்கள் ஓடுகளைக் கழற்றும் முயற்சியைக் கைவிட்டன.
சட்டென, புதர் மறைவிலிருந்து ஓரு ஓநாய் வெளிப்பட்டு, முயலை நோக்கிப் பாய்ந்தது.
ஆமையும், நத்தையும், விருட்டென்று தங்கள் உடலை ஓடுகளுக்குள் இழுத்துக் கொண்டு, உயிர் பிழைத்தன.
ஓநாய் முயலைப் பிடித்தது.
சிறிது நேரம் சென்ற பிறகு ஓடுகளை விட்டு வெளியே வந்த ஆமையும், நத்தையும் முயலின் ரத்தத்தைப் பார்த்து, உறைந்து போயின. தாங்கள் வேகமாய் ஓடுவதைவிட, உயிர் பிழைத்து வாழ்வதே முக்கியமானது என்பதை உணர்ந்தன. தங்கள் எதிரியிடமிருந்து காப்பாற்றிய தங்கள் ஓடுகளுக்கு அவை நன்றி கூறின.
என் அன்பு வாசகர்களே,
நமக்கு இருப்பதை மட்டுமே வைத்துக்கொண்டு அதில் திருப்தியாய் வாழ வேண்டும் மற்றவர்களுக்கு அது இருக்கிறது இது இருக்கிறது என்று அவர்கள் போல் வாழ விரும்பினால் நமக்கு இருப்பதும் போய்விடும் என்பதே இக்கதையின் கருத்து.
இக்கதையில் ஆமைக்கும், நத்தைக்கும் உறைவிடம், பாதுகாப்பு என் எல்லாமே அதன் மேலுள்ள ஓடுதான். அதை களைய நினைத்தபோது அதன் உயிரே பறிபோகும் நிலை உருவானது. மேலும் முயலோ அவர்கள் மேலுள்ள ஓட்டை களைய சொன்னது. இதுபோலத்தான் அநேகர் நம் வாழ்வில் வந்து அப்படி செய்தால் இப்படி ஆகலாம் இப்படி செய்தால் அப்படியாகலாம் என்று ஆசை வார்த்தை கூறி நமக்கு அரணும், கோட்டையுமாய் இருக்கிற காரியங்களை நம்மை விட்டு அகற்றி நம்மை நிர்கதியாக்கி இறுதியில் நம்மை விட்டு கடந்து சென்று விடுவர். அவர்க்ளை நம்பி நாம் செய்த எல்லா காரியங்களும் விருதாவாய் போய்விடும்.
தனக்கு ஆபத்து வரப்போகிறது என்று அறிந்ததும் அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்பவன் விவேகி. தாவீது சவுல் ராஜாவிற்கு பயந்து காட்டில் ஒளிந்துக்கொள்கிறான். ஏன் தாவீதை விட சவுல் பலசாலியா இல்லை, தாவீதின் படை சவுலின் படையை விட வலிமை குறைந்ததா இல்லை எனில் ஏன் தாவீது ஓடி ஒளிந்தான், காரணம், தேவன் சவுலை அபிஷேகம் பண்ணியிருந்தார் அது மாத்திரமல்ல தாவீது சவுலைக் கொன்றால் இஸ்ரவேல் ஜனங்கள் சிதறிப் போய் விடுவர் என்ற விவேகம் இருந்ததினால் தான் இப்படி ஓடி ஒளிந்தார்.
அதை தாவீதின் குமாரனாகிய சாலெமோன் ஞானி இவ்வாறு கூறுகிறார்
12 விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்: பேதைகளோ நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.
நீதிமொழிகள் 27:12
எனவே விவேகத்தோடு நடப்போம், ஆபத்திற்கு மறைந்து வாழ்வோம்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!
,
No comments:
Post a Comment